சீரத்துன் நபி சிறப்புச் சொற்பொழிவு - ஹஸ்ரத் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மது அஸீம்(அலை)
(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்
அரபு நாடுகளின் துயரமும், மேற்கு நாடுகளில் இஸ்லாத்தின் எழுச்சியும்
மேற்கத்தியமயமாகும் (இஸ்லாமிய) உம்மத்
அல்லாஹ்வும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்
அல்லாஹ்வின் கயிறு (பாகம் 2)
அல்லாஹ்வின் கயிறு (பாகம்-1)
"இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள். நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள். இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள். அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தனது (இறை) வெளிப்பாடுகளை உங்களுக்கு தெளிவாக்குகிறான். (ஆல இம்ரான் 3:104)
இக்காலமும் இறை தண்டனையும்
மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020)
ஏக இறைவனே எல்லாமாக இருக்கிறான்.. அவனின்று எதுவும் இல்லை
ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை)அவர்கள் கூறுகிறார்கள்:-
இஸ்லாமிய நம்பிக்கை கொண்ட அன்பான சகோதர, சகோதரிகளே நானோ, அல்லது நீங்களோ நமது சுய விருப்பத்தின்படி தோன்றவில்லை. இந்த மிகப் பரந்த பிரபஞ்சமும் அதில் அடங்கியுள்ள அனைத்து படைப்பினங்களும் மற்றும் ஒவ்வொரு இனத்திற்கும், படைப்பிற்கும் தொகுக்கப்பட்ட ஒழுங்கு முறைகளும், சட்டங்களும் அந்த ஒரே ஒரு படைப்பாளன்
இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்
وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ
வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன் அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன் ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம்.
திருமணம் (நிக்காஹ்) மற்றும் வலிமா பற்றிய அறிவுரை
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும்வரை - நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக (விருப்பத்திற்குரியவர்களாக) இருந்த போதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணைவைக்கும் ஆண்
மாநில அளவிலான தப்லீக் கூட்டம் 2023 கோவை
மாநில அளவிலான தப்லீக் கூட்டம் 2023 கோவை
இரண்டாம் அமர்வு
2.15 மணியளவில்
வல்ல இறைவன் துணையுடன்...
1. ஜனாப். முக்தாருதீன் சாஹிப் கோவை, மாநில நாயிப் அமீர் அவர்கள் தலைமையில்
2. ஜனாப். கலீல் ரஹ்மான் சாஹிப் கோட்டார் அவர்கள் மாநில தப்லீக் செயலாளர் மற்றும்
3. ஜனாப். ஷா நவாஸ் சாஹிப், மாநில பொருளாளர் ஆகியோருடைய துணை தலைமையில்
ஜனாப். நூர்தீன் சாஹிப் அவர்கள் மேலப்பாளையம் திருக்குரான் திலாவத் ஓதினார்கள்
ஜனாப். அனீஸ் சாஹிப் அவர்கள் கோவை, அஹத் (உறுதிமொழி ) வாசித்தார்கள்
ஜனாப். காஜா மைதீன் சாஹிப் அவர்கள் சென்னை நஸம் (கவிதை - ஹமாரே துவா ஸுன்) மிகவும் உணர்ச்சி பொங்க வழங்கினார்கள்.
ஜனாப். நூர்தீன் சாஹிப் அவர்கள் மேலப்பாளையம் திருக்குரான் திலாவத்
வரவேற்புரை
ஜனாப். கலீல் ரஹ்மான் மாநில தப்லீக் செயலாளர் வரவேற்புரை வழங்கி நபிமார்கள் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்பியல்புகள் சிலவற்றை வழங்கினார்கள்
உரை
ஜனாப். சதாம் உசைன் அவர்கள் கோவை
"இறைவன் பேசக்கூடியவன்" என்ற தலைப்பில் இறைவன் எப்போதும் பேசக்கூடியவன் என்பதை குரான் ஆதாரத்துடன் எடுத்து கூறி, இப்போதும் அவனது நல்லடியார்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறான் என்பதை யதார்த்தத்துடன், நமது சகோதர, சகோதரிகள் பெற்ற கனவு, கஷப் காட்சிகள் சிலவற்றை உதாரணத்துடன் நீண்டதொரு உரை நிகழ்த்தினார்கள்.
மதியம் 3.30 தேநீர் இடைவேளை
மதியம் 3.45
ஜனாப். சாபீர் சாஹிப் பாலக்காடு கேரளா, அவருடைய இனிமையான குரலில் சிறப்பானதொரு நஸம் வழங்கினார்கள்.
மாலை 4 மணி
பிற பிரிவு ஜமாத்திலிருந்து வந்திருந்த விருந்தினர்கள் தங்கள் அனுபவங்கள், மற்றும் சந்தேகங்களை தெரிவித்தனர்.
மாலை :4.30
ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹமது அஜீம் (அலை) அவர்கள் இந்த கூட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து வழங்கிய சிறப்பான வாழ்த்துறையின் தமிழாக்கம் ஜனாப். சலீம் சாஹிப் மாநில அமீர் அவர்கள் வழங்கினார்கள்.
மாலை 4.45
பையத் நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சிகளின் முத்தாய்ப்பாக கோவையை சார்ந்த ஜனாப். ரஃபிக் சாஹிப் அவர்கள், இந்த நூற்றாண்டின் கலீபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜீம் (அலை) அவர்களை ஏற்று, பையத் (உடன்படிக்கை) செய்து கொண்டு, அருளுக்குறிய நூஹ் (அலை) அவர்களின் கப்பலில் பயணத்தை தொடர்ந்தார்கள். வந்திருந்த ஜமாத் சகோதரர்கள் அனைவரும் அந்த பையத் (உடன்படிக்கையை) செய்து கொண்டதின் மூலம் தங்கள் உடன்படிக்கையை புதுப்பித்து கொண்டனர்.
துவா மற்றும் முஸஃபா (வாழ்த்து) உடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் தமிழ் நாட்டின் அனைத்து கிளை சகோதரர்களும், கேரளா ஜமாத்தை சார்ந்தவர்களும் இஸ்லாத்தின் பிற பிரிவை சார்ந்த சகோதரர்களும் கலந்து கொண்டனர். வல்ல இறைவனும் அவனுடைய மலக்குகளுடன் இந்த அருளுக்குறிய கூட்டத்தை ஆசீர்வதித்தான். என்ற நம்பிக்கையுடன். நிறைவு செய்தோம். அல்ஹம்துலில்லாஹ்.
இந்த மேலான இறை பணிக்காக இரவும் பகலும் அரும்பாடு பட்ட ஜமாத் சகோதர்கள் அனைவருக்கும் வல்ல இறைவன் மேலான நற்கூலியை வளங்குவானாக... குறிப்பாக மாநில அமீர் ஜனாப். சலீம் சாஹிப், கோவை ஜமாத் அமீர் ஜனாப். அப்துல் ரஹ்மான் சாஹிப், ஜனாப். அனீஸ் சாஹிப் மற்றும் ஜனாப். அலாவுதீன் சாஹிப் ஆகியோர் தங்களின் பல பணிகளுக்கு மத்தியில் இறை பணிக்காக அதிக தியாகங்களை செய்துள்ளனர். அவர்களுடைய தியாகங்களை வல்ல இறைவன் ஏற்று கொள்வானாக.. ஆமீன்...
மாலை 5.30
உலகில் எத்தனையோ கூட்டங்கள் அன்றாடம் நடைபெறுகிறது. ஆனால் எத்தனை தடைகள்..., சோதனைகள்.., வந்தாலும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனின் திருப்பொருத்தம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு உண்மை இஸ்லாத்தின் வழியில் ஒன்று கூடிய ஆன்மீக பறவைகள் இந்த செய்தியை எடுத்து கொண்டு... இதே ஆன்மீக தாகம் கொண்ட இன்னும் பல பறவைகளை ஒன்றிணைத்து... மீண்டும் விரைவில் கூட... வல்ல இறைவன் அருள் பிரிவானாக...!!! ஆமீன்...!!! சும்ம ஆமீன்...!!!யா ராப்புளாலமீன்...!!!
வஸ்ஸலாம்.. ஜஸாக்கல்லாஹ்... ஹைர்...
தப்லீக் மற்றும் தர்பியத் கூட்டம் - 2023
பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம்
தப்லீக் மற்றும் தர்பியத் கூட்டம் 2023
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
வல்ல இறைவனின் மாபெரும் கிருபையால், ஜமாத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாம், தமிழ் நாடு சார்பாக, மாநில அளவிலான தப்லீக் மற்றும் தர்பியத் கூட்டம் 01.10.2023 ஞாயிற்று கிழமை அன்று கோயம்புத்தூரில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..
வைரமே வைரத்தை வெட்டும்
ஹிஜ்ரி 1443 முஹர்ரம் மாதம் பிறை 4, 2021 ஆகஸ்ட் 12 வியாழக்கிழமை மாலை 6.05 மணியளவில் இறை புறத்திலிருந்து பெற்று இறைச் செய்தியை வழங்கிய படி...
ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஜீம் (அலை) அவர்கள் அறிவிக்கிறார்கள்..
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானுர் ரஹீம்
சைத்தானின் திட்டம் மற்றும் அவனது படைக்கு எதிரான இறைவனின் அருள்
“இறை நம்பிக்கை கொண்டவர்களே! முழுமையான உள்ளத்துடன் இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள். மேலும் ஷைத்தானின் அடிச்சுவட்டை பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான எதிரி ஆவான்.”
மேற்கூறிய திருக் குர்ஆன்- அல் பகரா வசனம் 209 ஐ ஓதிக் காட்டியவர்களாக
அல் ஹுஜூராத் (புறங்கூறுதல்) எச்சரிக்கை!
“நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அதிகமான யூகங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் சில யூகங்கள் பாவமாகும். பிறர் குற்றங்களைத் தேடியலையாதீரகள். உங்களுள் ஒருவருக்கொருவர் புறங்கூறாதீர்கள். உங்களுள் எவராது மரணமடைந்து விட்ட தமது சகோதரரின் மாமிசத்தை உண்ண விரும்புவாரா? (உங்களைக் குறித்து இவ்வாறு கூறப்பட்டால்) நீங்கள் நிச்சயமா அதனை வெறுப்பீர்கள் மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அல்லாஹ் அதிகமாகக் கழிவிரக்கத்தை ஏற்றுக்கொள்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். (49:13).
இறை வழியில் பொருள் தியாகம் பற்றி இஸ்லாமிய மஸீஹ்மார்களின் கூற்றுகள்
வல்ல இறைவனின் மேலான அருளை பெற்ற நன்மக்களாக இம்மையிலும் மறுமையிலும் திகழ ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றுகள்:
"அல்லாஹ்வின் வழியில் உங்களது எல்லா ஆற்றல்களையும் சக்திகளையும் வாழ்நாள் இருக்கின்ற வரை அர்ப்பணித்து விடுங்கள். அதன் மூலம் அந்த தூய வாழ்வின் வாரிசாகி விட வேண்டும்." (அல் ஹகம் தொகுதி 4 எண் 29; 16 ஆகஸ்ட் 1900 பக்கம் 3; மல்ஃபூஸாத் தொகுதி 2 பக்கம் 90)
உண்மையான நம்பிக்கையாளர்கள்
இறை புறத்தின் உண்மையான தலைவர் (கலீபா)யார்?
“அல்லாஹ் உங்களுள் நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவர்களை, அவர்களின் முன்னோர்களை கலீஃபாவாக (தலைவராக) ஆக்கியது போன்று இப்பூமியில் கலீஃபாவாக ஆக்குவதாகவும், அவன் அவர்களுக்காக விரும்பிய அவர்களின் மார்க்கத்தை அவர்களுக்கு உறுதிப் படுத்துவதாகவும், அவன், அவர்களுக்கு அவர்களது அச்சத்திற்குப் பிறகு, அதற்குப் பதிலாக அமைதியினை வழங்குவதாகவும் அவர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளான். அவர்கள் என்னை வணங்குவார்கள். எதனையும் எனக்கு இணையாக்க மாட்டார்கள். இதன்பின்னரும் நிராகரிப்பவர்கள் கட்டுப்படாதவர்களாவார்கள்.”(24: 56)











