இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020)

இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா?

அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா?

இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா? 

அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:-

63. سُنَّۃَ اللّٰهِ فِی الَّذِیۡنَ خَلَوۡا مِنۡ قَبۡلُ ۚ وَ لَنۡ تَجِدَ لِسُنَّۃِ اللّٰهِ تَبۡدِیۡلًا ﴿﴾

முன்னர் காலஞ்சென்றவர்களிடத்து அல்லாஹ்வின் செயல்முறை இதுவே. அல்லாஹ்வின் செயல்முறையில் எந்த மாற்றத்தையும் உம்மால் ஒருபோதும் காண முடியாது. ( திருக்குர்ஆன் 33: 63 )

இந்த வசனம் அல்லாஹ்வின் நடைமுறை நிலையானது என்பதை தெளிவுப்படுத்துகிறது, பிறகு இக்காலத்தில் இறை தண்டனை குறித்து முஸ்லீம் சமுதாயம் உட்பட அனைவரும் இத்தகைய அனைத்து நிகழ்வுகளையும் "இயற்கை சீற்றம்" என்று கூறுவதற்கான காரணம் தான் என்ன?

இதற்கு விடை மிக்க எளிதானதாகும் இவர்கள் காலத்தின் இமாம்களை மறுப்பதும் அந்த இறை அடியார்களுக்கு இறை புறமிருந்து கிடைக்கும் இறைவெளிப்பாடுகளுள் செய்யப்படும் முன்னறிவிப்புகளையும் மறுப்பதின் விளைவுகளாகும்.

முந்தைய சமுதாயங்களில் இறைவனின் நடைமுறை பற்றி திருக்குரான் வசனங்கள் உங்கள் பார்வைக்கு....

97. وَ لَوۡ اَنَّ اَهۡلَ الۡقُرٰۤی اٰمَنُوۡا وَ اتَّقَوۡا لَفَتَحۡنَا عَلَیۡهِمۡ بَرَکٰتٍ مِّنَ السَّمَآءِ وَ الۡاَرۡضِ وَ لٰکِنۡ کَذَّبُوۡا فَاَخَذۡنٰهُمۡ بِمَا کَانُوۡا یَکۡسِبُوۡنَ ﴿﴾

அந்த ஊர்களில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் நம்பிக்கை கொண்டு (இறை) அச்சத்தை மேற்கொண்டிருந்தால், நாம் வானங்களிலிருந்தும், பூமியிலிருந்தும் அவர்கள் மீது அருள்களின் வாயில்களைத் திறந்திருப்போம். ஆனால் அவர்கள் (நபிமார்களைப்) பொய்ப்படுத்தினர். எனவே நாம் அவர்களை அவர்களது செயல்களின் காரணமாகத் தண்டனையைக் கொண்டு பிடித்தோம். ( திருக்குர்ஆன் 7: 97)

131. وَ لَقَدۡ اَخَذۡنَاۤ اٰلَ فِرۡعَوۡنَ بِالسِّنِیۡنَ وَ نَقۡصٍ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمۡ یَذَّکَّرُوۡنَ ﴿﴾

ஃபிர்அவ்னின் இனத்தினர் அறிவுரையினைப் பெறும்பொருட்டு, (இன்னல் நிறைந்த) பல வருட வறட்சியினாலும் பழங்களின் குறைவினாலும் (குழந்தைகளின் மரணத்தினாலும்) நாம் அவர்களைப் பிடித்தோம். ( திருக்குர்ஆன் 7: 131 )

68. وَ اَخَذَ الَّذِیۡنَ ظَلَمُوا الصَّیۡحَۃُ فَاَصۡبَحُوۡا فِیۡ دِیَارِهِمۡ جٰثِمِیۡنَ ۙ﴿﴾

அநீதியிழைத்தவர்களை கொடுங்காற்று பற்றிக் கொண்டது. எனவே , அவர்கள் தங்கள் வீடுகளில் முகங்குப்புற விழுந்தனர் . ( திருக்குர்ஆன் 11: 68 )

65. فَکَذَّبُوۡهُ فَاَنۡجَیۡنٰهُ وَ الَّذِیۡنَ مَعَهٗ فِی الۡفُلۡکِ وَ اَغۡرَقۡنَا الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا ؕ اِنَّهُمۡ کَانُوۡا قَوۡمًا عَمِیۡنَ ٪﴿﴾

(ஆனால்) இதன் பிறகும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினர். எனவே நாம் அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் ஒரு கப்பலில் காப்பாற்றினோம். நம்முடைய அடையாளங்களைப் பொய்யாக்கியோரை நாம் மூழ்கடித்து விட்டோம். அவர்கள் ஒரு பார்வையற்ற சமுதாயத்தினராக இருந்தனர். ( திருக்குர்ஆன் 7: 65 )

5. وَ کَمۡ مِّنۡ قَرۡیَۃٍ اَهۡلَکۡنٰهَا فَجَآءَهَا بَاۡسُنَا بَیَاتًا اَوۡ هُمۡ قَآئِلُوۡنَ ﴿﴾

நாம் எத்தனையோ ஊர்களை அழித்து விட்டோம். அவர்கள் இரவில் தூங்கும் போதோ, நண்பகலில் ஓய்வெடுக்கும் போதோ நம் தண்டனை அவர்களிடம் வந்தது. ( திருக்குர்ஆன் 7: 5 )

இவை சில உதாரணங்கள் மட்டுமே இன்னும் ஏராளமான வசனங்கள் உள்ளன, எனவே இவை வெறும் கதைகளோ அல்லது வரலாற்று சம்பவங்கள் மட்டும் அல்ல, இது இக்காலத்திலும் உயிருள்ள முன்மாதிரிகளாகும்.

இனி இக்காலத்தின் இமாம் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் (அய்) அவர்களால் கூறப்பட்ட இறை ஆக்கினை பற்றிய முன்னறிவிப்பையும் அது நிறை வேறிய சான்றுகளையும் முன் வைக்கின்றோம்.

O humanity, the decrees of God will be inevitably executed, and you will see the coming days as the days of Noah...” (Friday Sermon of 26 January 2018---08 Jamad'ul Awwal 1439 AH).

ஓ மனிதகுலமே, இறைவனின் கட்டளைகள் தடுக்க இயலாமல் நிறைவேற்றப்படும், மேலும் வரும் நாட்களை நூஹ்வின் நாட்களாக நீங்கள் காண்பீர்கள்...” (26 ஜனவரி 2018-08 ஜமாதுல் அவ்வல் 1439 ஹிஜ்ரி ஜும்மா குத்பா).