ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் நீடித்த மரபு!

பிஸ்மில்லா ஹிர் ரஹ்மான் நிர்ரஹீம்

நபித்துவத்தின் முத்திரை

இமாம் புஹாரி அவர்கள் பதிவு செய்துள்ள ஒரு ஹதீஸில், ‘ஹஸ்ரத் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கின்றார்கள். எம்பெருமானார்(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். ‘எனக்கும் எனக்கு முன்னர் தோன்றிய நபிமார்களுக்கும் இடையிலுள்ள நிலைமை ஒரு கட்டிடத்திற்கொப்பானதாகும். அதன் அமைப்பு மிகவும் அழகுள்ளதாக இருக்கிறது. ஆனால் அதில் ஒரு செங்களுக்கான இடம் விடப் பட்டிருக்கிறது. மக்கள் இந்தக் கட்டிடத்தைச் சுற்றிப்பார்த்து அதன் அழகைக்கண்டு வியப்படைகின்றனர்.