அல்லாஹ்வின் கயிறு

"இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள். நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள். இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள். அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தனது (இறை) வெளிப்பாடுகளை உங்களுக்கு தெளிவாக்குகிறான். (ஆல இம்ரான் 3:104)

மேலே கண்ட திருக்குறான் வசனத்தை ஓதிக்காட்டியவர்களாக, ஹஸ்ரத் கலிஃபத்துல்லாஹ் முனீர் அஹமது அஜீம் (அலை) அவர்கள் இவ்வாறு விளக்கம் அளிக்கிறார்கள்.

"அல்லாஹ் திருக்குரானில் கூறுகிறான், ஒன்றுபட்ட ஓர் உடல் போன்று ஒன்றிணைந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றி பிடித்துக்கொள்ளுங்கள். ஒவ்வொருவராக அல்ல! மாறாக, அதனை கூட்டாக ஒன்றிணைந்து பற்றிப் பிடித்துக்

கொள்ளுங்கள். உண்மையில், நான் உங்கள் முன் தற்போது ஓதிக் காட்டிய இவ்வசனத்தில் அல்லாஹ் கயிற்றை வெறுமனே "பிடி அல்லது "பற்றிக் கொள்" என்று குறிப்பிடவில்லை. மாறாக கயிற்றை ஒன்றிணைந்து கூட்டாக "உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அதாவது இறுக்கமாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்று கூறுகிறான். 'நாங்கள் நல்ல முஸ்லிம்கள் ஆவோம், நாங்கள் குர்ஆனை உறுதியாகப் பற்றி பிடித்துக் கொண்டுள்ளோம். அல்லாஹ் கூறி உள்ளதையெல்லாம் செய்கிறோம். அல்லாஹ் தடை செய்துள்ள எல்லா வற்றையும் செய்யாமல் இருக்கிறோம். ஒவ்வொரு போதனையையும் பின்பற்றுகிறோம். அப்படியிருக்க, ஒரு சமூகத்தின் தேவை எதற்காக?, எதனால் நாம் நம்மை நம்பிக்கை கொண்டவர்களின் ஒரே சமூகமாக, ஒரு ஜமாத்துடன் இணைந்திருக்க வேண்டும்?’ என்று கூறி வருகின்ற பலருக்கும், திருக்குரான் ஒரே வார்த்தையில் பதில் வழங்குகிறது. திருக்குர்ஆனைத் தொட்டு பற்றிப் பிடிப்பதற்கு நீங்கள் தனித்தனியாக நின்று கையை விரித்தால் மட்டும் போதாது என்று அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் ஏகத்துவம் இந்த முழு உலகிலும் வெளிப்படும் வகையில், நீங்கள் இந்த வேதத்தை ஒன்றிணைந்து கூட்டாக, ஒரே ஜமாஅத் ஆக இருந்து பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் ஒருவனாக இருப்பது போன்றே, அவன் மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்கள் அனைவரும் கூட ஒன்றாக, ஒற்றுமையாகவே இருக்க வேண்டும்.

உங்கள் அனைவருக்காகவும், திருக்குர்ஆனை நேரடியாக நடைமுறைப் படுத்துவதற்காகவும், இந்த விஷயத்தை ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களது மேற்கோளுடன் விளக்குகிறேன். அதற்கு ஒருவர் நேரடியாக குர்ஆனைப் பற்றிய ஞானத்தைப் பெற்றால் மட்டுமே அது சாத்தியமாகும். திருகுர்ஆனும், நபி (ஸல்) அவர்களும் நமக்குக் கட்டளையிட்டுள்ள அனைத்தையும் மேற்கொள்வதற்கும், அவர்கள் தடை செய்தவற்றிலிருந்து விலகியிருப்பதற்கும், திருகுர்ஆனைப் பற்றிய ஆழமான ஞானம் அவசியமாகும். அந்த போதனைகளை அல்லாஹ் விரும்புகின்ற வழியில் நடைமுறைப்படுத்துவதற்கு, இந்த ஆழமான ஞானத்தை நாம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த ஆழமான ஞானம் உங்களிடம் இல்லையென்றால், நீங்கள் கடைபிடிப்பதற்கு அவசியமற்ற விஷயங்களையும், இன்னும் கடைபிடிக்கின்ற அவ்வாறான விஷயங்களை எவ்வாறு நிறுத்துவது, அதற்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் அவற்றை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதையெல்லாம் உங்களால் புரிந்து கொள்ள முடியாது;

அது தவிர, குர்ஆனில் ஓர் ஆன்மா உள்ளது அதாவது (குர்ஆனின் ஆன்மா). பலர் இந்த ஆன்மாவை நேரடியாகப் பெறுவதில்லை. இந்த ஆன்மாவானது ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் ஆன்மாவுடன் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே, உண்மையில், இது இரண்டு பெயர்களால் அறியப்படக் கூடிய ஒன்றும், ஒரே பொருளை, அதாவது திருக்குர்ஆனையும், மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் குறிக்கக்கூடியதுமாகும்.

நீங்கள் அன்னாரை திருக்குர்ஆன் என்று அழைத்தாலும் சரி, முஹம்மது நபி (ஸல்) என்று அழைத்தாலும் சரியே, அவை இரண்டும் ஒன்றுதான்.

உதாரணமாக, ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் "ஸீரத்" அதாவது வாழ்க்கை மற்றும் குண நலன்கள் குறித்துக்

கேட்கப்பட்டபோது, அவர்கள் அதனை ஒரு சிறிய வாக்கியத்தில் விவரித்தார்கள். அதே நேரத்தில், அவர்கள் கூறியவற்றின் உண்மையான ஆன்மாவையும் வெளிப்படுத்திக் காட்டினார்கள் அதாவது, "நிச்சயமாக, அல்லாஹ்வின் நபியின் குணநலமானது திருக்குர்ஆனாக இருந்தது." (ஆதாரம்: முஸ்லிம்) அல்லது அன்னார் ஒரு "நடமாடும் திருக்குர்ஆனா"கவே திகழ்ந்தார்கள் என்று குறிப்பிட்டார்கள்.

ஹஜ்ரத் ஆயிஷா(ரலி) அவர்கள், தங்களிடம் கேள்வி கேட்டவரிடம், அன்னாரது குணத்தை திருக்குர்ஆனில் தேடுமாறு கூறவில்லை.

மாறாக அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அன்னாரது குணநலமானது திருக்குர்ஆனாகவே இருந்தது என்று கூறினார்கள். அன்னார் திருக்குர்ஆனின் உருவகமாகவும், எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தார்கள். திருக்குர்ஆனே அன்னாராவார்கள். அதனால்தான் நபிமார்கள் வர வேண்டும் என்று நாம் கூறுகிறோம், ஏனென்றால்

திருக்குர்ஆனை, அதனைக் கற்பிப்பதற்கு எந்த ஒரு தீர்க்கதரிசியும் இல்லாமலேயே, அதனை உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூற முடியாது. நீங்கள் திருக்குர்ஆனைப் பற்றி பிடித்துக் கொண்டீர்கள் என்றும் அதன் காரணமாகவே உங்களுக்கு எந்த நபியும் அவசியமில்லை என்றும் கூறி விட முடியாது. சில சமயங்களில் நபியின் மீதான பிணைப்பு மற்றும் பந்தமானது, நபியின் மீதான உருவகமான அன்பின் மூலம் உருவாக்கப்படுகிறது. சில நேரங்களில் நீங்கள் நபியின் பெயரில் தியாகங்களை செய்கின்றீர்கள். சில சமயங்களில் நபிக்காக உங்கள் உயிரையே தியாகம் செய்கின்றீர்கள். இன்னும் சில சமயங்களில், நீங்கள் குற்றவியல் ரீதியாகக் கூட, மற்றவர்களின் உயிர்களையும் பறிக்கின்றீர்கள். நீங்கள் அதைச் செய்யும்போது, நீங்கள் எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு பிணைப்பை மற்றும் ஒரு பந்தத்தை ஏற்படுத்திவிட்டீர்கள் என்பதாகவும் நினைக்கின்றீர்கள். மேலும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்காக மட்டும் சில உற்சாகத்தையும், அன்றாட வாழ்வின் போது ஒரு மரியாதை உணர்வையும் வெளிக்காட்டுகின்றீர்கள், நீங்கள் நபியுடன் அந்த இணைப்பையோ அல்லது பந்தத்தையோ ஏற்படுத்தியிருக்கவில்லை.

ஆகவே, அந்த இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள, ஒரு குறிப்பிட்ட தொடர்பு, ஒரு குறிப்பிட்ட பாதை உள்ளது. அப்படிப்பட்ட இந்த தொடர்பின் மூலம் மட்டுமே அன்னாருடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

ஒரு நபர் அல்லது ஒரு ஜமாத் அல்லது முழு உம்மத் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுடன் அந்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அவர்களால் திருக்குர்ஆனுடனும் உண்மையான தொடர்பினை ஏற்படுத்தி கொள்ள முடியாது. அவர்களால் உண்மையில் திருக்குர்ஆனைப் புரிந்துகொள்ளவும் முடியாது. திருக்குர்ஆன் மீது அவருக்கு அல்லது அவர்களுக்கு உண்மையான நேசம் இருக்கவும் முடியாது. ஏனெனில் திருக்குர்ஆன் மீது நேசம் கொள்ள, ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் சிறந்த ஒழுக்கப் பண்புகளை பெற்றிருப்பது அவருக்கு அவசியமாகும். ஏனென்றால் அப்படிப்பட்ட அந்த சிறந்த ஒழுக்கப் பண்புகளே நேசத்தின் சுடரைப் பற்றவைக்க முடியும். அப்படிப்பட்ட இந்த நேசம் இல்லாமல், நீங்கள் திருக் குர்ஆனைப் பற்றி பேசினாலும், அந்த பேச்சுகள் வீணானதாகவே அமையும். அது யதார்த்தத்துடன் அல்லது உண்மையுடன் எந்த தொடர்பும் இல்லாத பயனற்ற பேச்சுகளாகவே இருக்கும்.

நீங்கள் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் உண்மையான இணைப்பின்றி பிரிந்திருந்தால், உங்களால் திருக்குர்ஆன் மீதும், நபி (ஸல்) அவர்கள் மீதும் உண்மையான நேசத்தை பெற்றுக் கொள்ள இயலாது. அது ஒன்றுக்கொன்று பிரிக்க இயலாத ஒரே பொருளின் இரண்டு பெயர்கள் ஆகும்.

ஆக, பொதுவாகவே மக்களுக்கு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது மட்டுமன்றி, அன்னாருடைய ஒவ்வொரு ஒழுக்கக் குணங்களின் மீதும் நேசம் கொண்டிருக்க வேண்டும். அன்னாரது ஒழுக்க குணங்களின் மீது நீங்கள் நேசம் செலுத்துகின்ற தருணத்திலிருந்தே, நீங்கள் அந்த குணங்களை ஏற்று செயல்படுத்த இயலும். அவ்வாறு இல்லையென்றால், ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் ஒழுக்கப் பண்புகளை நீங்கள் பின்பற்ற விரும்பினாலும் கூட, நீங்கள் அதனை எவ்வாறு மேற்கொள்ள இயலும்? ஆனால் இந்த ஒழுக்க குணங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும் தருணத்திலிருந்தே ஓர் இணைப்பு மற்றும் தொடர்பு நிறுவப்பட்டு விடுகிறது. அதே காரணத்தினால் தான், ஒருவர் மற்றொரு நபருடன் மகிழ்ச்சியுடன் இருந்தால், அந்த நபரின் நல்ல பழக்கவழக்கங்களையும் குணங்களையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர் அதை மேற்கொள்ளவும் வேண்டும். அதே காரணத்திற்காகவே ஒரே மாதிரியான ஒழுக்க குணங்களைக் கொண்டுள்ள அனைத்து மக்களும் ஒரு தொடர்பினை உணர்கின்றார்கள். அவர்கள் நெருக்கமாக உணர்வதால், ஒன்றாக நெருங்கி வருகின்றார்கள்.

பொய்யர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எப்போதும் தங்களைப் போன்ற பொய்யர்களுடன் நெருக்கமாக இருக்கின்றார்கள். உண்மையுடனும், உண்மையாகவும் நடப்பவர்கள் எப்போதும் உண்மையின் மீது இருப்பவர்களுக்கு நெருக்கமானவர்கள் ஆவார்கள். மனிதசமுதாயத்தை நேசிக்கக் கூடியவர்கள் அனைவரும் இயற்கையாகவே ஒன்றிணைந்து கொள்வார்கள். அவ்வாறு தான், வெவ்வேறான விஷயங்களின் அழகினை வெளிப்படுத்துபவர்கள் இருந்தால், அவர்கள் அனைவரும் அந்தந்த விஷயங்களின் ஒன்றிணைந்த குழுவாக இணைந்து கொள்வார்கள்.

உதாரணமாக, ஒரு கலை நிபுணர் தன்னைப் போன்ற மற்ற கலை நிபுணர்களுடன் நெருங்கி வருவார். பறவைகள் கூட, ஒரே இயல்புடையவையாக இருந்தால் அவை ஒன்றாகக் குழுவாகி விடும்.

எனவே ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்களுடன் ஒன்று சேர்ந்து ஒன்றாகி விடுவது என்பது ஒரு கற்பனை கதையல்ல. நீங்கள் இந்த மேன்மையான ஒழுக்கங்களை, இந்த மேன்மையான நடத்தைகளை கடைப்பிடிப்பீர்கள் என்றால், நீங்கள் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களுடனான நெருக்கத்தைப் பெற்றுக் கொள்வீர்கள், அதற்குப் பகரமாக நீங்கள் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் நேசத்தை வெல்வீர்கள். அந்த நேசமானது அல்லாஹ்விடம் இருந்து வருகின்ற நேசமாகும். அது அல்லாஹ்வின் மூலமே அனைத்து நேசமும் வெளிப்படுகிறது என்பதே இதற்கு காரணமாகும். மேலும் அதே விதத்தில், ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களுடனான உங்கள் தொடர்பும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும். இதுவே 

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ "வ'-தஸிமூ பி-ஹப்லில்-லாஹ்"

என்பதன் உண்மையாகும். இந்த உண்மையை நீங்கள் மறந்தீர்கள் என்றால், இந்தக் கயிற்றை எவ்வாறுப் பற்றி இறுக்கப் பிடித்துக் கொள்வது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். அவ்வாறு இல்லையென்றால், திருக்குர்ஆனைப் பற்றிபிடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் மட்டுமே உள்ளது. அதனால் ஒற்றுமைக்கான அவசியம் இல்லை என்று கூறுபவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். இது உண்மை அன்று! ஒற்றுமை தேவைப்படுகிறது.

எனவே, இஸ்லாம், இஸ்லாத்தின்

போதனைகள், திருக்குர்ஆனின் வசனங்கள் அதுவும் குறிப்பாக அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப்படித்துக் கொள்ளுதல் பற்றிய வசனத்தை எவ்வாறு விளக்குவது என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

இது ஒரு சமூகத்தின் ஒற்றுமையை மட்டும் குறிக்காது, மாறாக இது ஒரு உம்மத்தின் ஒற்றுமையை, அனைத்து முஸ்லிம்களின் ஒற்றுமையை, இஸ்லாத்தின் ஒற்றுமையை குறிக்கிறது. ஏனெனில் இந்த வசனத்தில் ஒரு சமுதாயம் பற்றிய-முஸ்லிம்கள் ஒரே சமுதாயமாக ஒன்றுபட்டது பற்றிய குறிப்பு உள்ளது. ஒவ்வொரு நபரும் தனித்தனியாக குர்ஆனைப் இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பது இதற்கு பொருள்படாது. மாறாக, குர்ஆன் அனைத்து மக்களையும் ஒரே கையில் அல்லாஹ்வின் கரத்தில் ஒன்று திரட்டுகிறது. அது ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் கரமாகும் அன்னார் அல்லாஹ்விடமிருந்து வந்த, அவனுடைய பிரதிநிதி ஆவார்கள்.

மேலும் அது, அதாவது திருக்குர்ஆன், ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களுடன் தொடர்புடைய, பிரிக்க முடியாத பிணைப்பைக் கொண்ட "ரூஹூல் குத்தூஸுடன் எழுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர்" ஒருவரின் கையில் மக்களை ஒன்று சேர்க்கிறது.

திருக்குர்ஆன் அழைக்கக் கூடிய சமூகம் இதுவேயாகும். ஏனெனில் அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாகவும் ஆனால் ஒற்றுமையுடன் அதாவது ஒரே உடல் போன்று பற்றி பிடித்துக்கொள்வது குறித்து இது வலியுறுத்துகிறது.

இந்தக் கயிற்றை நாம் எவ்வாறு உறுதியாகப் பற்றிப் பிடிப்பது? நான் இதை விரிவாகக் குறிப்பிடுகிறேன் அதாவது ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்களுடனான நமது பிணைப்பை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒற்றை இணைப்பு போதுமானதன்று. ஈமான் அதாவது நம்பிக்கை மூலம் பெறப்படும் பிணைப்பும் உள்ளது. நம்பிக்கையின் இணைப்பைப் பெற்ற பின்னர், அந்த நொடியில், ஒருவர் மற்ற இணைப்புகளை நிலைநிறுத்துவதற்காக மற்ற தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

உண்மையைப் பேசியவர்களில் ஹஜ்ரத் முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்களே மிகவும் உண்மையாளர் ஆவார்கள். 

எனவே, அந்த உண்மையாளரை நீங்கள் நேசிக்கின்ற, அதே வேளையில் நீங்கள் உண்மையை வெறுத்தால், பின்னர் அந்த நொடியில் நீங்கள் ஒரு பொய்யராகி விடுவீர்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொய்யர்களிடையே நிலைத்து நிற்பது என்பதும், அவ்வாறான மக்கள் சாந்தியையும் சமாதானத்தையும் பெற்றுக் கொள்வது என்பதும் சாத்தியமற்றதாகும். அல்லாஹ் அவ்வாறான மக்களுக்கு ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்களின் உண்மையான தொண்டர்களுடன் ஒன்றிணைந்து இருப்பதற்கோ அல்லது அன்னாரது உண்மையான தொண்டர்கள் ஆவதற்கோ வாய்ப்பு கூட வழங்குவதில்லை.

எனவே, ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் ஒன்றிணைவதைப் பொறுத்தவரை, அது அனைத்து சகாப்தங்களையும் விட மேலான ஒரு விஷயமாகும். இது வெறும் ஒரு சகாப்தத்தை மட்டும் குறித்ததல்ல.

ஒவ்வொரு காலகட்டத்திலும், மக்கள் தாங்களாகவே ஒன்றுகூடி ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களுடன் இணைந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அவர்கள் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் மேன்மையான நடத்தையையும், மேன்மையான ஒழுக்கங்களையும், கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் சிறியவர்களிடம் கருணை காட்டுவதை கண்டால், அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள், மேலும் அந்த மேன்மையான நடத்தையை உங்களுக்குள்ளும் மற்றவர்களிடமும் பிரதிபலித்து வெளிப்படுத்திக் காட்டுங்கள். ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுக்கு வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகிய இருதரப் பினரிடமும் மரியாதை இருந்தது. அவர்கள் எப்போதும் தியாகம் செய்யக் கூடியவர்களாகவே இருந்தார்கள். அவர்கள் ஒரு அசாதாரணமான மனிதராக இருந்தார்கள். ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் அந்த நல்ல குணங்கள் அனைத்தையும் அறிந்திருந்த பின்னரும் கூட, நீங்கள் அந்த நல்ல குணங்களை விட்டு விலகி வெகு தொலைவில் உள்ளீர்கள் என்றால் - நீங்கள் ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்களுக்கு நெருக்கமானவர் என்று நம்புகிறீர்கள் என்றால், அந்த நொடியிலேயே அது உங்களுடைய முழுமையான கற்பனையாகவே இருக்கும். அது ஒருபோதும் உண்மையல்ல!

ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களைப் பற்றி பேசும் போதோ அல்லது அன்னாரின் மீது தரூத் ஓதும் போதோ அவர்களின் நினைவாக உங்கள் கையை முத்தமிட்டு உங்கள் நெஞ்சை தொடுவது அல்லது நீங்கள் "நாரே தக்பீர்" என்று கூறி ஹஜ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் நபித்துவத்தின் மகத்துவத்தை உறுதிப்படுத்துவதே போதுமானது என்று நினைத்து விடாதீர்கள்.

இல்லை!, அது போதுமானதல்ல!. நீங்கள் அதை மட்டும் செய்து விட்டாலே ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களிடம் நெருங்கிவிடுவீர்கள் என்று நினைத்து விடாதீர்கள். இதை போன்று, நீங்கள் வெறும் "அல்லாஹு அக்பர்" என்று கூறினாலே, இது உங்களை அல்லாஹ்விற்கு அருகில் கொண்டு சென்று விடாது.

நீங்கள் உங்களுக்குள் அல்லாஹ்வின் பண்புகளை வெளிப்படுத்தும் போது, அதுவே உங்களை அல்லாஹ்விற்கு அருகில் அழைத்து சென்று விடுகிறது.

அல்லாஹ்வின் பண்புகளை தனக்குள் அதிகமாக வெளிப்படுத்திக் காட்டியவர் என்றால் அது ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா(ஸல்) அவர்களே ஆவார்கள்.

எனவே அந்த நல்ல குணங்களைத் தேடிப் பார்த்து, அவற்றை கடைப்பிடித்து, முயற்சி செய்து அந்த குணங்களின் நேசத்தை பெற்றுக் கொள்வீராக!. எது போலவென்றால் ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்களுடனான உங்கள் பிணைப்பை அல்லது தொடர்பை அதிகரிக்கும் அதாவது நன்றாக நிலைநிறுத்தும். ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் குணங்களைப் பின்பற்றுவதன் மூலம், ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுடனான தனது பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய ஒருவரால், தனது சகோதரர்களிடம் இருந்து பிரிந்து இருந்திட முடியாது; ஏனெனில் அவருடைய அதாவது இந்த நபரின் நல்ல குணங்கள் மூலம் இவர்கள் அனைவரும் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களுடன் நெருக்கத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். எனவே, அவர்களும் உங்களைப் போலவே, தங்களுக்குள்ளேயும் அந்தக் குணங்களை வெளிப்படுத்தத் தொடங்குகிறார்கள். அந்த நொடியில், நீங்கள் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடன் நெருக்கத்தைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அதே வேளையில், உங்கள் சகோதரர்கள் அனைவருடனும் கூட நீங்கள் நெருங்கிவிடுவீர்கள். 

ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் மேம்பட்ட ஒழுக்கப் பண்புகளை வெளிப்படுத்தவும், ஆன்மீகப் பண்புகளும் அதே போன்று திருக்குர்ஆனும் உங்களுக்குள் பிரதிபலிக்கவும் அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் - எனது அனைத்து ஸஹாபாக்களுக்கும் மற்றும் இந்த ஒட்டுமொத்த உம்மத்திற்கும் உதவி புரிவானாக!. 

ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் பல நடைமுறைகளிலும், அவர்களது பல நல்லொழுக்கங்களையும் நீங்கள் பின்பற்றும் போது, நீங்களும் மேன்மையுடையவர்களாக ஆகிவிடுகிறீர்கள். மேலும் அந்த நொடியில் தான் உம்மத் ஒன்றுபட்டு சிறந்து விளங்கும். மேலும் பூமியின் அனைத்து மனிதர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் மத்தியில், அல்லாஹ்வின் தூதர் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் இந்த பரிபூரணமான உதாரணத்தின் மூலம் நாம் ஒன்றுபட்டுள்ளோம் என்பதால் எதனாலும், எவராலும் நமது ஒற்றுமையை தகர்த்திட முடியாது, இன்ஷா அல்லாஹ், ஆமீன்.

ஆதாரம் : 4 ஆகஸ்ட் 2023 ஜும்மா குத்பா

தலைப்பு : அல்லாஹ்வின் கயிறு (பாகம் -1)

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020)

இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா?

அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா?

இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா? 

அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:-

63. سُنَّۃَ اللّٰهِ فِی الَّذِیۡنَ خَلَوۡا مِنۡ قَبۡلُ ۚ وَ لَنۡ تَجِدَ لِسُنَّۃِ اللّٰهِ تَبۡدِیۡلًا ﴿﴾

முன்னர் காலஞ்சென்றவர்களிடத்து அல்லாஹ்வின் செயல்முறை இதுவே. அல்லாஹ்வின் செயல்முறையில் எந்த மாற்றத்தையும் உம்மால் ஒருபோதும் காண முடியாது. ( திருக்குர்ஆன் 33: 63 )

இந்த வசனம் அல்லாஹ்வின் நடைமுறை நிலையானது என்பதை தெளிவுப்படுத்துகிறது, பிறகு இக்காலத்தில் இறை தண்டனை குறித்து முஸ்லீம் சமுதாயம் உட்பட அனைவரும் இத்தகைய அனைத்து நிகழ்வுகளையும் "இயற்கை சீற்றம்" என்று கூறுவதற்கான காரணம் தான் என்ன?

இதற்கு விடை மிக்க எளிதானதாகும் இவர்கள் காலத்தின் இமாம்களை மறுப்பதும் அந்த இறை அடியார்களுக்கு இறை புறமிருந்து கிடைக்கும் இறைவெளிப்பாடுகளுள் செய்யப்படும் முன்னறிவிப்புகளையும் மறுப்பதின் விளைவுகளாகும்.

முந்தைய சமுதாயங்களில் இறைவனின் நடைமுறை பற்றி திருக்குரான் வசனங்கள் உங்கள் பார்வைக்கு....

97. وَ لَوۡ اَنَّ اَهۡلَ الۡقُرٰۤی اٰمَنُوۡا وَ اتَّقَوۡا لَفَتَحۡنَا عَلَیۡهِمۡ بَرَکٰتٍ مِّنَ السَّمَآءِ وَ الۡاَرۡضِ وَ لٰکِنۡ کَذَّبُوۡا فَاَخَذۡنٰهُمۡ بِمَا کَانُوۡا یَکۡسِبُوۡنَ ﴿﴾

அந்த ஊர்களில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் நம்பிக்கை கொண்டு (இறை) அச்சத்தை மேற்கொண்டிருந்தால், நாம் வானங்களிலிருந்தும், பூமியிலிருந்தும் அவர்கள் மீது அருள்களின் வாயில்களைத் திறந்திருப்போம். ஆனால் அவர்கள் (நபிமார்களைப்) பொய்ப்படுத்தினர். எனவே நாம் அவர்களை அவர்களது செயல்களின் காரணமாகத் தண்டனையைக் கொண்டு பிடித்தோம். ( திருக்குர்ஆன் 7: 97)

131. وَ لَقَدۡ اَخَذۡنَاۤ اٰلَ فِرۡعَوۡنَ بِالسِّنِیۡنَ وَ نَقۡصٍ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمۡ یَذَّکَّرُوۡنَ ﴿﴾

ஃபிர்அவ்னின் இனத்தினர் அறிவுரையினைப் பெறும்பொருட்டு, (இன்னல் நிறைந்த) பல வருட வறட்சியினாலும் பழங்களின் குறைவினாலும் (குழந்தைகளின் மரணத்தினாலும்) நாம் அவர்களைப் பிடித்தோம். ( திருக்குர்ஆன் 7: 131 )

68. وَ اَخَذَ الَّذِیۡنَ ظَلَمُوا الصَّیۡحَۃُ فَاَصۡبَحُوۡا فِیۡ دِیَارِهِمۡ جٰثِمِیۡنَ ۙ﴿﴾

அநீதியிழைத்தவர்களை கொடுங்காற்று பற்றிக் கொண்டது. எனவே , அவர்கள் தங்கள் வீடுகளில் முகங்குப்புற விழுந்தனர் . ( திருக்குர்ஆன் 11: 68 )

65. فَکَذَّبُوۡهُ فَاَنۡجَیۡنٰهُ وَ الَّذِیۡنَ مَعَهٗ فِی الۡفُلۡکِ وَ اَغۡرَقۡنَا الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا ؕ اِنَّهُمۡ کَانُوۡا قَوۡمًا عَمِیۡنَ ٪﴿﴾

(ஆனால்) இதன் பிறகும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினர். எனவே நாம் அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் ஒரு கப்பலில் காப்பாற்றினோம். நம்முடைய அடையாளங்களைப் பொய்யாக்கியோரை நாம் மூழ்கடித்து விட்டோம். அவர்கள் ஒரு பார்வையற்ற சமுதாயத்தினராக இருந்தனர். ( திருக்குர்ஆன் 7: 65 )

5. وَ کَمۡ مِّنۡ قَرۡیَۃٍ اَهۡلَکۡنٰهَا فَجَآءَهَا بَاۡسُنَا بَیَاتًا اَوۡ هُمۡ قَآئِلُوۡنَ ﴿﴾

நாம் எத்தனையோ ஊர்களை அழித்து விட்டோம். அவர்கள் இரவில் தூங்கும் போதோ, நண்பகலில் ஓய்வெடுக்கும் போதோ நம் தண்டனை அவர்களிடம் வந்தது. ( திருக்குர்ஆன் 7: 5 )

இவை சில உதாரணங்கள் மட்டுமே இன்னும் ஏராளமான வசனங்கள் உள்ளன, எனவே இவை வெறும் கதைகளோ அல்லது வரலாற்று சம்பவங்கள் மட்டும் அல்ல, இது இக்காலத்திலும் உயிருள்ள முன்மாதிரிகளாகும்.

இனி இக்காலத்தின் இமாம் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் (அய்) அவர்களால் கூறப்பட்ட இறை ஆக்கினை பற்றிய முன்னறிவிப்பையும் அது நிறை வேறிய சான்றுகளையும் முன் வைக்கின்றோம்.

O humanity, the decrees of God will be inevitably executed, and you will see the coming days as the days of Noah...” (Friday Sermon of 26 January 2018---08 Jamad'ul Awwal 1439 AH).

ஓ மனிதகுலமே, இறைவனின் கட்டளைகள் தடுக்க இயலாமல் நிறைவேற்றப்படும், மேலும் வரும் நாட்களை நூஹ்வின் நாட்களாக நீங்கள் காண்பீர்கள்...” (26 ஜனவரி 2018-08 ஜமாதுல் அவ்வல் 1439 ஹிஜ்ரி ஜும்மா குத்பா).

ஏக இறைவனே எல்லாமாக இருக்கிறான்.. அவனின்று எதுவும் இல்லை

ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை)அவர்கள் கூறுகிறார்கள்:- 

இஸ்லாமிய நம்பிக்கை கொண்ட அன்பான சகோதர, சகோதரிகளே நானோ, அல்லது நீங்களோ நமது சுய விருப்பத்தின்படி தோன்றவில்லை. இந்த மிகப் பரந்த பிரபஞ்சமும் அதில் அடங்கியுள்ள அனைத்து படைப்பினங்களும் மற்றும் ஒவ்வொரு இனத்திற்கும், படைப்பிற்கும் தொகுக்கப்பட்ட ஒழுங்கு முறைகளும், சட்டங்களும் அந்த ஒரே ஒரு படைப்பாளன்

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ

வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம்.

வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52)

மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-

"அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக்


கொண்டு தனது செயல்களை கட்டுப்படுத்திக் கொள்கிறார், அதனால், குறிப்பாக ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு, அன்னாரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி குர்ஆனின் போதனைகள், கட்டளைகள் மற்றும் அன்னாரது சொந்த சுன்னத் அதாவது, நமது நேசத்திற்குரிய ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களது நடைமுறைகள் ஆகியவற்றைப் புதுப்பிப்பதற்காக வருகை தரும் இஸ்லாமிய நபிமார்கள் மற்றும் அல்லாஹ்வின் தூதர்கள் - அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி தனது மக்களுக்கும் அனைத்து மனிதகுலத்திற்கும் இறைச் செய்திகளை முறையாக பகிர்ந்து கொள்ள முடிகிறது. இறை வெளிப்பாடுகளானது, மனிதனின் ஆன்மாவை மீண்டும் வாழ வைக்கும் அத்தகைய விளக்குகளாகும். இது ஸிர்ரை அதாவது அவனது உள் இதயத்தை அல்லாஹ்வின் பக்கம் தட்டி எழுப்பி, அல்லாஹ் அவனுடன் தொடர்பு கொள்கிறான்.  

அல்லாஹ்வின் வார்த்தையே அவனது அடியானிடத்தில் ஓர் இறை வெளிப்பாட்டைத் தூண்டுகிறது, அதன் பிறகு அல்லாஹ் குன்- ஆகுக என்று கூறும்போது: அவனால் என்ன உத்தரவிடப்பட்டுள்ளதோ, அந்த வார்த்தை- கட்டளை வடிவம் பெற்று வெளிப்படுகிறது - குன் ஃபயகுன் - ஆகுக! என்றதும் அது ஆகி விடுகிறது! - அது அவ்வாறே வெளிப்பட்டு யதார்த்தத்திற்கு வந்துவிடுகிறது. அல்லாஹ்வின் வார்த்தை, அவனது கட்டளை மற்றும் அனுமதியுடன் ஒவ்வொன்றும் வெளிப்படையாக உருவாகி விடுகிறது. படைப்பு அவனைக் கொண்டே, அவனது கட்டளையால் மட்டுமே தொடங்குகிறது.

அல்லாஹ் மனித குலத்திற்கு இவ்வாறு தெரிவிக்க விரும்புகிறான் :

"“நான் உன்னைப் படைத்துள்ளேன், மனித குலமே! இந்த அற்பமான உலகில் உங்களைப் போன்றே தற்காலிகமாக மட்டும் இருக்கும் மற்றவர்களை ஏன் வணங்குகிறீர்கள்? நீங்கள் இவ் உலகின் மீது பெரிதும் ஆசை கொள்பவர்களாக இருக்கின்ற நிலையில் இருந்து கொண்டே, இரட்சிப்பையும் விரும்புகின்றீர்கள். எனது தூதர்கள் மூலம் உங்களுக்குக் கூறப்பட்டுள்ளதையேச் செய்யுங்கள்! உங்களிடம் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். என்னை உங்களிடமிருந்தும், உங்களை உங்களிடமிருந்தும் பிரிக்க முயலும் ஷைத்தான்களின் பிடியிலிருந்தும் விடுபடுங்கள். நீங்கள் இன்னும் ஆழமாக சென்று பார்த்தால், உங்களை மன்னிப்பதற்காக நான் எப்போதும் தயாராக இருப்பதை காண்பீர்கள், என்னை அடைவதற்கான வழியையும் காண்பிப்பேன். நான் உங்களது இறைவனாகவும், சிறந்த நண்பனாகவும் இருக்கிறேன். நீங்கள் எனக்குப் பிரியமானவர்களாய் இருப்பதால், என்னால் உஙகளைக் கைவிட்டு விட முடியாது. நீங்கள் என்னிடம் மன்னிப்புக் தேடிக் கொண்டிருக்கும் வரை, நானும் உங்களை தொடர்ந்து மன்னிப்பேன். நீங்கள் என்னிடமே திரும்ப வேண்டிய எனது அத்தகைய பகுதியாக உள்ளீர்கள், அது என்னுடையது, எனக்கே உரியது, அது என்னிடமே திரும்ப வேண்டி உள்ளது..…” ஏனென்றால், நீங்கள் எனக்காகவே உள்ளீர்கள், என்னிடமிருந்தே வந்துள்ளீர்கள், நீங்கள் அனைவரும் எனக்கே உரியவர்கள், என்ன நேர்ந்தாலும் என்னிடமே திரும்ப வேண்டிய எனது அமானத்தாக எனக்கே உரியவர்களாக இருக்கிறீர்கள்!.

நான் உங்களுக்காக தாகமாக இருக்கும்போது, நீங்களும் என்னிடம் தாகமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு யாரையும் இணை வைக்காமல் என்னை மட்டும் பிரத்தியேகமாக வணங்குங்கள். எனக்கான வழி எளிதானது, ஆனால் உங்களிடம் அதிகரித்து வரும் தேவைகள் மற்றும் ஆசைகளால் அதை சிக்கலாக்குகிறீர்கள், அழிந்து போகுமாறு விதிக்கப்பட்டுள்ள இவ் உலகின் இன்பங்களை விட்டும் உங்கள் கவனத்தை என் பக்கம் திருப்பி விடுங்கள். நான் உங்களுக்காக இருக்கும்போது, நீங்கள் கவலையடைய வேண்டாம். நான் அருகில் இருக்கிறேன், நான் உங்களது சொற்களை கேட்கிறேன். அதனால் எனது அழைப்பிற்கு செவிதாழ்த்தாமல் இருந்து விடாதீர்கள், ஏனெனில் இந்த அழைப்பானது உங்களை வறுமையில் இருந்தும் அகற்றி, செல்வத்தின் மிக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் மகத்தானதொரு அழைப்பாகும்.

என்னை சொந்தமாக்கிக் கொண்டவன் செல்வந்தனாகவும், என்னை இழந்து போனவன் ஏழையாகவும் இருப்பான். எனக்காக கஷ்டப்படத் தயாராக இருங்கள், இதனால் நீங்கள் எனது நேசத்தின் உலகிற்குள் அனுமதிக்கப்படுவீர்கள், அது எத்தகைய நேசமென்ன்றால், அது எனது கடுங்கோபத்தை கொண்டிராமல், எனது கருணையால் நிரம்பி இருக்கக் கூடியதும், அனைத்துத் தீமைகளிலிருந்தும் பாதுகாக்கக் கூடியதும் ஆகும். நீங்கள் தீமையை எதிர்த்துப் போராடும்போது, உங்களுக்கு உதவியாக என்னைத் தேடுங்கள், உங்களுக்கு உதவ நான் தயாராக இருப்பேன். எனது வானவர்கள், என்னால் நியமிக்கப்பட்டவர்கள், அர்ப்பணிப்புமிக்க எனது சேவகர்களின் படை உங்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருப்பார்கள்.

எனது அங்கீகாரம் மற்றும் நேசத்தின் வாசனையைக் கொண்டு நான் புனிதப் படுத்தியுள்ள எனது கலீபத்துல்லாஹ்வுக்கு அருளப்பட்ட இறைச் செய்திகளை நீங்கள் விழித்தெழுந்து செவி சாய்த்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் யாரைத் தேர்ந்தெடுத்துப் பாதுகாக்கிறேனோ, அவர்கள் எனது பாதையில் நடந்து, அவர்களுக்கு சுமத்தப்பட்டுள்ள பணியை பூர்த்தி செய்கின்ற வரையிலும், அத்தகைய அன்புடனும் பாதுகாப்புடனும் அவர்களை தொடர்ந்து சூழ்ந்திருப்பேன்."

மேலும் ஹஸ்ரத் கலீபதுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்

"அல்லாஹ் எத்தகையவன் என்றால், அவனே படைப்பாளனும், உருவாக்குபவனும், வடிவமைப்பவனும் ஆவான். அவன் வடிவமைக்கின்றவனும், உருவாக்குகின்றவனும் தீர்மானிக்கின்றவனும் ஆவான். அவன் தனது போதனைகளை, அறிவுறுத்துதல்களை கீழே இறக்குகிறான், மேலும் அந்த ஞானத்தின் முத்துக்களானது இறை வெளிப்பாடுகள் என்றும் இறைத் தூண்டுதல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. குறிப்பாக அது உங்கள் இதயத்தில் நுழைந்து விட்டால், சூரியன் இரவை ஒரு புதிய விடியலாக, மாற்றுவது போல அது உங்களுக்கு ஒரு புதிய நாளாகி விடும்.

அல்லாஹ் ஒருவரிடம் திருப்திக் கொண்டுவிடும்போது, அவன் எதனையேனும் வாக்குறுதி அளிக்கும்போது, அதனை கொடுக்கப் பட்டுள்ள நிபந்தனைகளுடன் வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு அவர் கடமைப்பட்டிருக்கிறார்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்:

لَهُ مُعَقِّبَاتٌ مِّن بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ

ஒவ்வொரு மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு அவனை கண்காணிக்கும், பாதுகாக்கின்ற மலக்குகள் உள்ளனர்.எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், நிச்சயமாக அல்லாஹ் (மோசமான நிலைக்கு) அவர்களை மாற்றுவதில்லை

(அர் ரஃது 13: 12)

إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَٰكِنَّ اللَّهَ يَهْدِي مَن يَشَاءُ ۚ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَg

நீர் விரும்புகின்றவரை நேர் வழியில் செலுத்த நிச்சயமாக உம்மால் முடியாது. மாறாக அல்லாஹ், தான் விரும்புபவருக்கே நேர் வழி காட்டுகின்றான். மேலும் நேரான வழியில் செல்லக் கூடியவர் யார் என்பதை அவன் நன்கு அறிகின்றான். (அல் கஸஸ் 28: 57)

அல்லாஹ் தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மிகப்பொருத்தமான நேரம் வரும்போதெல்லாம், அவன் அதைச் செய்வான், அவனுடைய செயல்களை எவராலும் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் அவன் மற்றவர்களின் அனைத்து செயல்களுக்கும், பழிவாங்குதலுக்கும் அப்பாற்பட்டவன் ஆவான்.

அடிப்படையில், தனது வார்த்தைகளைக் கொண்டு தூய்மைப்படுத்தி வழிநடத்துகின்ற அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதரின் வருகையின் போது அத்தகைய மாபெரும் இறை வெளிப்பாடுகளின் பகல்களும் இரவுகளும் நிகழ்கின்றன, அதன் காரணமாக, முறைப்படி அவரால் உலகை வழிநடத்திட முடியும்.

வாழ்வின் இறுதி வழிகாட்டி திருக்குர்ஆனுடன் வந்தபோதும், இறுதி ஷரீஅத்தைக் கொண்ட நபி முஹம்மது நபி (ஸல்) என்ற நபரின் மூலம் வந்த போதும் ,இறுதி மார்க்கம் இஸ்லாத்த்துடன் வந்தபோதிலும் திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், மகிமைக்குரிய இஸ்லாமிய மார்க்கமும் தீயவர்களின் தீய நோக்கங்களில் இருந்து எப்போதும் பாதுகாப்பாகவே இருக்கும் என்று இதற்கு பொருளல்ல. அதன் பொருள் என்னவென்றால், அவைகள் உண்மைதான், இருந்தபோதிலும் பொய்கள் அவற்றை நசுக்கி இல்லாமல் ஆக்கிட முயற்சிக்கும். ஆனால் அல்லாஹ் கூறுகிறான்: அது சாத்தியமற்றது! 

فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

“என்னிடமிருந்து உங்களிடம் நேர்வழி வருமாயின் எனது நேர்வழியினைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எந்த அச்சமும் இருக்காது.அவர்கள் துயரம் அடையவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 2: 39)

நபிமார்களையும், சீர்திருத்தவாதிகளையும் இந்த உலகத்திற்கு அனுப்புதல் என்பது அல்லாஹ்விடமிருந்து மனிதகுலத்திற்கான ஒரு நம்பிக்கையின் செய்தியாகும். அதன் பொருள் என்னவென்றால்:

"மனித குலமே!உனக்கு இன்னும் நேரம் இருக்கிறது! மனந்திரும்பு, மனந்திரும்பு, மனந்திரும்பு!”

தூதருக்கு பல வடிவங்களில் இறை வெளிப்பாடுகள் வழங்கப்படுகிறது. ரீங்காரம் அல்லது மணி சத்தம் போன்ற இறை வெளிப்பாடுகளின் வார்த்தைகளை அவர் செவியுறச் செய்யப்படுகிறார், அல்லது இறை வெளிப்பாடுகள் ஒளி வேகத்தில் வந்து பிறகு அவரது மனதில் பதிய வைக்கப்படுகிறது, அல்லது வானவர் வருகை தந்து, அவர் உணர்ந்து கொண்டு, சில சமயங்களில் ஒரு தோழரைப் போலவும், சில சமயங்களில் ஆசிரியரின் முன்னால் ஒரு மாணவனைப் போன்று பயத்துடனும் மரியாதையுடனும் அவருடன் பேச வைக்கப்படுகிறது. 

இறை வெளிப்பாடுகளானது அல்லாஹ்வின் நபிமார்களுக்கும்,  தூதர்களுக்கும் மிகவும் வேதனையைத் தரக் கூடியதாகும். அவர்களின் ஆன்மாக்கள் அவர்களின் உடலிலிருந்து துண்டிக்கப்படும் விதத்திலான அத்தகையதொரு உண்மையான வேதனையாகி விடுகிறது. அதனால்தான் இறை வெளிப்பாடுகள் மிகவும் விலைமதிப்பற்றவையாகும், ஏனென்றால் இது உமிழும் நெருப்பிற்கு உட்பட்டு, அணிய வேண்டிய அழகான துண்டுகளாக மாறிவிடும் தங்கம் போல், அதே போன்றே அல்லாஹ்வின் தூதர் நேரிலோ அல்லது அல்லாஹ்வின் வானவர் மூலமாகவோ அல்லாஹ்வுடனான தனது தொடர்பினால் அவனது செய்தியைப் பெறும்போது நல்ல இயல்புடையவராக ஆக்கப்படுகிறார்.

இறை செய்திகள் இறை தூண்டுதல்களின் மூலமாக இதயத்திற்கும், எழுதுவதன் மூலமும் கூட வருகிறது. நமது நேசத்திற்குரிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஓர் உம்மி அதாவது எழுத்தறிவில்லாத மனிதர் ஆவார், எழுத்து வடிவத்தைவிட, தான் கேட்ட வார்த்தைகளை அதிகம் சார்ந்திருந்தார், ஆயினும் இறை வெளிப்பாடுகளின் எழுதப்பட்ட வடிவம் நிலை பெற்றிருக்க வில்லை என்று இதற்கு அர்த்தமல்ல. அவைகளும் உள்ளன.

ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களின் மக்களுக்கு கற்பிப்பதற்கான ஒரு வழியாக பத்து கட்டளைகள் இறை கைகளால் பொறிக்கப்பட்டிருந்தன. இது போன்ற அற்புதங்கள் மனிதனின் எண்ணங்களை மாற்றவும், அவன் அல்லாஹ்வின் விருப்பத்திற்கு கட்டுப்பட் டு நடப்பதற்கும் அற்புதங்கள் தேவைப்பட்ட ஒரு காலமாகும். இன்று, பூமியின் மீதான வாழ்வின் பல சகாப்தங்களுக்குப் பிறகு, மனிதகுலமானது முந்தைய ஷரீஅத் சட்டத்தை கொண்ட அனைத்து தீர்க்கதரிசிகளின் போதனைகளையும் மரபுரிமையாகப் பெற்றுள்ளது, இதனுடன் அறிவியலின் முன்னேற்றம் போன்றவை, மனிதனுக்கு இது போன்ற அற்புதங்கள் இருப்பது சாத்தியமற்றதாகத் தோன்றுகிறது, ஆயினும் அவைகள் நிலை பெற்றுள்ளன. இத்தகைய வெளிப்பாடுகளுக்கும் அற்புதங்களுக்கும் அல்லாஹ் ஒரு காலத்தை நியமித்துள்ளான். அவன் ஒரு காலகட்டத்தில் சிலவற்றை வெளிப்படுத்தலாம், இன்னும் பிற காலகட்டங்களில் அவனுடைய அடையாளங்களின் மற்ற அம்சங்களை அவன் இருந்து கொண்டிருப்பதற்கான நற்செய்தியாகவும், அதைக் கொண்டு அதாவது அவனது இருப்பை நம் இதயங்களை மகிழ்விக்கவும், நம் அனைவருக்கும் மத்தியில் வேறு சிலவற்றை வெளிப்படுத்தலாம்.

எனவே, அல்லாஹ்வின் தூதர் உலகில் தோன்றும் போதெல்லாம், அவர் அல்லாஹ்விடமிருந்து வந்தவர் என்பதாலும் அவரை அல்லாஹ் வழிநடத்துகிறான், வழிகாட்டுகிறான். என்பதாலும். ஒருவர் அவர் மீது நம்பிக்கை கொள்வதையும், அவரது அணியில் இணைவதையும் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும், அவரது விருப்பம் என்பது அல்லாஹ்வின் விருப்பமாகும், அல்லாஹ்வின் சிறப்பிற்குரிய தூதராக அவர் நியமிக்கப்பட்டதிலிருந்து அவர் இறக்கும் வரை, அவரது மனித உணர்வுகளிலிருந்து விடுபடவும், அவரது சொந்த நஃப்ஸை துறக்கவும், அவரது உருவத்தில் தன்னை அதாவது அல்லாஹ்வை செதுக்கிக் கொள்ள கற்றுக்கொடுப்பதற்காகவும் அல்லாஹ் அவருக்கு வழிகாட்டுகிறான். இது நிகழும்போது, இந்தத் தூதருக்கு அல்லாஹ்வின் உதவி எப்போதும் இருக்கும் என்பதும், எதிரிகளின் சதித்திட்டங்கள் இருந்தபோதிலும், எது வந்தாலும் அல்லாஹ்வின் கரம் அவர் மீது எப்போதும் இருந்து கொண்டிருக்கும் என்பதும் தெளிவாகிறது. அப்படிப்பட்ட ஒரு காலம் வரும்போது, அவர் நிச்சயமாக வெற்றி பெற்று, அவருடன் இருக்கின்ற சிறுகூட்டமாகிய நம்பிக்கையாளர்களும் பெருகி, சத்தியத்தின் செய்தியைக் கொண்டு உலகை ஒளிரச் செய்யும் விளக்குகளாகப் பூமியில் பரவுவார்கள்.

இந்த உலகமானது இறை வெளிப்பாடுகளிலிருந்து என்றென்றும் பறிக்கப்பட்டிருக்குமாயின், இந்த உலகம் நீண்ட காலமாக அழிந்து, காலத்தின்


சுழற்ச்சியில் தொலைந்து போயிருக்கும். ஏனென்றால் மனிதன் திரும்பிப் பார்க்க முடியாத வகையில் தொலைந்து போயிருப்பான். ஆனால் அல்லாஹ் ஒரு கருணையுள்ள இறைவனாவான். அவன் தனது அடியார்களின் தவறான எண்ணங்கள் மற்றும் தீய செயல்களின் விளைவுகளை எச்சரிக்கும் வரை அவன் ஒருபோதும் அவர்களை தண்டிப்பதில்லை. அவர்களை எச்சரிப்பதற்காகவும், அவர்களை நேர்வழிக்குக் கொண்டு வர முயற்சி செய்வதற்காகவும் தான் தேர்ந்தெடுத்த அடியார்களை அனுப்புகிறான். அவர்களில் கட்டுப்படுபவர்கள் மகிழ்ச்சியில் இருப்பார்கள், அதே சமயம் அவர்களில் கட்டுப்படாதவர்கள், அவனுக்கும் அவனுடைய தூதருக்கும் புற முதுகு காட்டுபவர்கள், விரக்தியடைந்த ஆன்மாக்களைப் போன்றவர்கள் ஆவர், அவர்கள் இறுதி தண்டனையை அனுபவிக்கும் வரை எந்த திசையும் இல்லாமல் தவறான ஆன்மாக்களாக மாற முடிவு செய்த விரக்தியடைந்த ஆன்மாக்கள் போன்றவர்கள். ஆனால் அல்லாஹ் கூறுவது போல்:

قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே (பாவங்களினால்) தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்”... (அஸ் ஸுமர் 39:54) 

இந்த விஷயங்களை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள அல்லாஹ் எனக்கும், உங்களுக்கும் அவசியமான தவ்ஃபீக்கையும், வாய்ப்பையும், இல்ம் எனும் அறிவையும் வழங்குவானாக!,

மேலும், குறிப்பாக சீர்திருத்தத்திற்கான அனைத்து அடையாளங்களையும் வாய்ப்புகளையும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய போதிலும், அவர்கள் சீர்திருத்தம் செய்து கொள்ளாமல், மனந்திரும்புதலுடன் அல்லாஹ்வின் பக்கம் திரும்பாமல் தங்கள் மாயையில் நிலைத்திருந்த அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதையும் புரிந்து கொள்ளச் செய்வானாக!

இன்ஷாஅல்லாஹ்... ஆமீன்..,

ஆதாரம் : 5.5.2023 (ஹிஜிரி 1444 ஷவ்வால் பிறை 14) ஜும்மா குத்பா.

தலைப்பு : இறை வெளிப்பாடுகளின் மறைவான மற்றும் வியக்கத்தக்க செயல்பாட்டின் நிலையும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும் (பாகம்-2)

திருமணம் (நிக்காஹ்) மற்றும் வலிமா பற்றிய அறிவுரை

(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும்வரை - நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக (விருப்பத்திற்குரியவர்களாக) இருந்த போதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணைவைக்கும் ஆண்

மாநில அளவிலான தப்லீக் கூட்டம் 2023 கோவை

மாநில அளவிலான தப்லீக் கூட்டம் 2023 கோவை

இரண்டாம் அமர்வு 

2.15 மணியளவில்

வல்ல இறைவன் துணையுடன்...

1. ஜனாப். முக்தாருதீன் சாஹிப் கோவை, மாநில நாயிப் அமீர் அவர்கள் தலைமையில்

2. ஜனாப். கலீல் ரஹ்மான் சாஹிப் கோட்டார் அவர்கள் மாநில தப்லீக் செயலாளர் மற்றும்

3. ஜனாப். ஷா நவாஸ் சாஹிப், மாநில பொருளாளர் ஆகியோருடைய துணை தலைமையில்


ஜனாப். நூர்தீன் சாஹிப் அவர்கள் மேலப்பாளையம் திருக்குரான் திலாவத் ஓதினார்கள்

ஜனாப். அனீஸ் சாஹிப் அவர்கள் கோவை, அஹத் (உறுதிமொழி ) வாசித்தார்கள்

ஜனாப். காஜா மைதீன் சாஹிப் அவர்கள் சென்னை நஸம் (கவிதை - ஹமாரே துவா ஸுன்) மிகவும் உணர்ச்சி பொங்க வழங்கினார்கள்.

ஜனாப். நூர்தீன் சாஹிப் அவர்கள் மேலப்பாளையம் திருக்குரான் திலாவத்


ஜனாப். அனீஸ் சாஹிப் அவர்கள் கோவை, அஹத் (உறுதிமொழி)

ஜனாப். காஜா மைதீன் சாஹிப் அவர்கள் சென்னை நஸம் (கவிதை - ஹமாரே துவா ஸுன்)

வரவேற்புரை

ஜனாப். கலீல் ரஹ்மான் மாநில தப்லீக் செயலாளர் வரவேற்புரை வழங்கி நபிமார்கள் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்பியல்புகள் சிலவற்றை வழங்கினார்கள்

ஜனாப். கலீல் ரஹ்மான் மாநில தப்லீக் செயலாளர் வரவேற்புரை

உரை

ஜனாப். சதாம் உசைன் அவர்கள் கோவை

"இறைவன் பேசக்கூடியவன்" என்ற தலைப்பில் இறைவன் எப்போதும் பேசக்கூடியவன் என்பதை குரான் ஆதாரத்துடன் எடுத்து கூறி, இப்போதும் அவனது நல்லடியார்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறான் என்பதை யதார்த்தத்துடன், நமது சகோதர, சகோதரிகள் பெற்ற கனவு, கஷப் காட்சிகள் சிலவற்றை உதாரணத்துடன் நீண்டதொரு உரை நிகழ்த்தினார்கள்.

ஜனாப். சதாம் உசைன் அவர்கள் கோவை, உரை - "இறைவன் பேசக்கூடியவன்"

மதியம் 3.30 தேநீர் இடைவேளை

மதியம் 3.45

ஜனாப். சாபீர் சாஹிப் பாலக்காடு கேரளா, அவருடைய இனிமையான குரலில் சிறப்பானதொரு நஸம் வழங்கினார்கள்.

ஜனாப். சாபீர் சாஹிப் பாலக்காடு, கேரளா - நஸம் 

மாலை 4 மணி 

பிற பிரிவு ஜமாத்திலிருந்து வந்திருந்த விருந்தினர்கள் தங்கள் அனுபவங்கள், மற்றும் சந்தேகங்களை தெரிவித்தனர்.

மாலை :4.30

ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹமது அஜீம் (அலை) அவர்கள் இந்த கூட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து வழங்கிய சிறப்பான வாழ்த்துறையின் தமிழாக்கம் ஜனாப். சலீம் சாஹிப் மாநில அமீர் அவர்கள் வழங்கினார்கள்.

ஜனாப். ஸலீம் சாஹிப் மாநில அமீர் - கலீஃபதுல்லாஹ் வழங்கிய வாழ்த்துறையின் தமிழாக்கம்

மாலை 4.45

 பையத் நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சிகளின் முத்தாய்ப்பாக கோவையை சார்ந்த ஜனாப். ரஃபிக் சாஹிப் அவர்கள், இந்த நூற்றாண்டின் கலீபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜீம் (அலை) அவர்களை ஏற்று, பையத் (உடன்படிக்கை) செய்து கொண்டு, அருளுக்குறிய நூஹ் (அலை) அவர்களின் கப்பலில் பயணத்தை தொடர்ந்தார்கள். வந்திருந்த ஜமாத் சகோதரர்கள் அனைவரும் அந்த பையத் (உடன்படிக்கையை) செய்து கொண்டதின் மூலம் தங்கள் உடன்படிக்கையை புதுப்பித்து கொண்டனர்.

ஜனாப். ரஃபிக் சாஹிப், கோவை - பையத் (உடன்படிக்கை) செய்த நிகழ்ச்சி

துவா மற்றும் முஸஃபா (வாழ்த்து) உடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் தமிழ் நாட்டின் அனைத்து கிளை சகோதரர்களும், கேரளா ஜமாத்தை சார்ந்தவர்களும் இஸ்லாத்தின் பிற பிரிவை சார்ந்த சகோதரர்களும் கலந்து கொண்டனர். வல்ல இறைவனும் அவனுடைய மலக்குகளுடன் இந்த அருளுக்குறிய கூட்டத்தை ஆசீர்வதித்தான். என்ற நம்பிக்கையுடன். நிறைவு செய்தோம். அல்ஹம்துலில்லாஹ்.

இந்த மேலான இறை பணிக்காக இரவும் பகலும் அரும்பாடு பட்ட ஜமாத் சகோதர்கள் அனைவருக்கும் வல்ல இறைவன் மேலான நற்கூலியை வளங்குவானாக... குறிப்பாக மாநில அமீர் ஜனாப். சலீம் சாஹிப், கோவை ஜமாத் அமீர் ஜனாப். அப்துல் ரஹ்மான் சாஹிப், ஜனாப். அனீஸ் சாஹிப் மற்றும் ஜனாப். அலாவுதீன் சாஹிப் ஆகியோர் தங்களின் பல பணிகளுக்கு மத்தியில் இறை பணிக்காக அதிக தியாகங்களை செய்துள்ளனர். அவர்களுடைய தியாகங்களை வல்ல இறைவன் ஏற்று கொள்வானாக.. ஆமீன்...

மாலை 5.30

உலகில் எத்தனையோ கூட்டங்கள் அன்றாடம் நடைபெறுகிறது. ஆனால் எத்தனை தடைகள்..., சோதனைகள்.., வந்தாலும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனின் திருப்பொருத்தம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு உண்மை இஸ்லாத்தின் வழியில் ஒன்று கூடிய ஆன்மீக பறவைகள் இந்த செய்தியை எடுத்து கொண்டு... இதே ஆன்மீக தாகம் கொண்ட இன்னும் பல பறவைகளை ஒன்றிணைத்து... மீண்டும் விரைவில் கூட... வல்ல இறைவன் அருள் பிரிவானாக...!!! ஆமீன்...!!! சும்ம ஆமீன்...!!!யா ராப்புளாலமீன்...!!!

வஸ்ஸலாம்.. ஜஸாக்கல்லாஹ்... ஹைர்...

தப்லீக் மற்றும் தர்பியத் கூட்டம் - 2023

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம்

தப்லீக் மற்றும் தர்பியத் கூட்டம் 2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

வல்ல இறைவனின் மாபெரும் கிருபையால், ஜமாத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாம், தமிழ் நாடு சார்பாக, மாநில அளவிலான தப்லீக் மற்றும் தர்பியத் கூட்டம் 01.10.2023 ஞாயிற்று கிழமை அன்று கோயம்புத்தூரில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..