திருமணம் (நிக்காஹ்) மற்றும் வலிமா பற்றிய அறிவுரை

(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும்வரை - நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக (விருப்பத்திற்குரியவர்களாக) இருந்த போதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணைவைக்கும் ஆண்

உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன் ஆவான்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (திருக்குரான்: 2:222)

“மேலும், லுக்மான் தன் மகனுக்கு அறிவுரை கூறிய பொழுது, என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே! நிச்சயமாக அவனுக்கு இணைவைப்பது மாபெரும் அநீதியாகும் என்றுக் கூறினார்” (அதிகாரம் 31 வசனம் 14).

“நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை விலக்கிவிடுகிறான், மேலும் அவருடைய தங்குமிடம் நரகமாகும்........”. (அதிகாரம் 5 வசனம் 73)

மேற் கூறிய திருக்குரான் வசனங்களை மேற்கோள் காட்டி...

ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:-

திருக்குர்ஆனின் மூலம் நாம் புரிந்துகொள்வது என்னவென்றால், என்ன நேரிட்டாலும் ஒரு நபர் இஸ்லாத்தை, உண்மையான நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளும்வரை அதாவது நம்பிக்கையை இழந்த ஒருவரை திருமணம் செய்ய முஸ்லிமுக்கு அனுமதி இல்லை

என்பதாகும். 
இப்போதெல்லாம் வாக்களிக்கப்பட்ட மஸீஹின் ஜமாஅத்திற்கு உறுப்பினர் எண்ணிக்கையில் பல பைஅத்துக்கள் செய்யப்படுவதாக, அதாவது மக்கள் அதனுள் அதிகமாக இணைந்து கொண்டிருப்பதாகவும் அல்லது மற்ற முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில்
புதிதாக இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களை வரவேற்றுக் கொண்டிருப்பதாகவும் நாம் கேள்விப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். ஆனால் இந்த உறுதிமொழிகள் அதாவது பைஅத்துக்கள் மற்றும் புதிதாக மதம் மாறியவர்களை பற்றியும் நீங்கள் ஆராயும்போது, அவர்களில் பெரும்பாலோரின் உறுதிமொழி வெறும் தாளில் அதாவது படிவத்தில் மட்டுமே உள்ளது, இதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியும், பைஅத்திற்கான படிவங்களில் கையொப்பம் இட்டு பிறகு, அவர்கள் காணாமல்போய், தங்களது பண்டைய மதத்தை பின்பற்றுவதற்கு சென்றுவிடுகின்றார்கள். மேலும் அவர்கள் குழந்தைகளைப் பெற்றுவிட்டால், இந்த குழந்தைகளும் கூட பிறமதத்தைப் பின்பற்றுகின்றார்கள், இன்னும் கூறுவதென்றால் அவர்களுக்கு முஸ்லிம் பெயர்கள் கூட இருப்பதில்லை.

ஒரு ஹதீஸில்: ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

“பள்ளிவாசல்களில் தங்களது திருமணத்தை நடத்துபவர்களின் மீது அல்லாஹ்வின் அருட்கள் நிறைய இருக்கும், மேலும் அவர்களின் திருமணத்திலும் அதிகமாக அருள்செய்யப்படும்.” (நூல் : பைஹகி)

புனித திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்: “மேலும் பள்ளிகள் (அனைத்தும்) அல்லாஹ்விற்கே உரியவையாகும். எனவே நீங்கள் அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் அழைக்காதீர்கள்” (அதிகாரம் 72 வசனம் 19).

“எந்த வீடுகள் உயர்த்தப்பட வேண்டுமென்றும் அவற்றில் அவனது பெயர் நினைவு கூறப்பட வேண்டுமென்றும் இறைவன் கட்டளையிட்டுள்ளானோ அவற்றில் (அவனுடைய நினைவுகூறல்) உள்ளது. அவற்றில் அவனது தூய்மை, காலை நேரங்களிலும் மாலை வேளைகளிலும் எடுத்துரைக்கப்படுகின்றது”. (அதிகாரம் 24 வசனம் 37).

புனித குர்ஆனின் இந்த வசனங்களின் மூலம், பூமியில் சிறந்த இடம் பள்ளிவாசல் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம், மாறாகப் பலவிதமான அலங்காரங்களைக் கொண்ட ஹோட்டல்கள் அல்ல. பள்ளிவாசல்கள் என்பது அல்லாஹ்வின் பெயர் அடிக்கடி எடுத்துரைக்கப் படுகின்றதும், அவனது வழிபாடுகள் செய்யப்படுகின்ற இடங்களாகும். ஒரு நபர் தனது எல்லா கவலைகளிலிருந்தும் தன்னைப் விடுவித்துக் கொள்ளும் ஒரே இடம் இதுதான், எனவே அல்லாஹ்விடத்தில் அவர் பாதுகாப்பையும் அமைதியையும் காண்கின்றார். மேலும் உண்மையான விசுவாசிகளை ஒன்றிணைக்கக் கூடியதும், இரவும் பகலும் அல்லாஹ்வின் அருள்களை ஏராளமாக அவர்கள் பெறுக்கூடியதுமான சிறந்த இடங்களே பள்ளிவாசல்களாகும். அதனால்தான் புனித நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு மிகச் சிறந்த இடம் பள்ளிவாசலில் உள்ளது என்று கூறியுள்ளார்கள். புது தம்பதியினர் மீது அருள்புரியுமாறு அல்லாஹ்விடம் ஒருவர் நேர்மையுடன் அங்குக் கேட்கும்போது, அல்லாஹ்வின் அருட்களை புதுமணத் தம்பதிகள் மீது அவ்வாறுக் கேட்பது அங்கிருக்கின்ற முஸ்லிம்கள் மட்டுமல்ல மாறாக மலக்குகளும் கூட கேட்கின்றார்கள். இப்போதெல்லாம் முஸ்லிம்கள், பள்ளிவாசலில் அல்லாமல் திருமணம் அதாவது மார்க்க நிகழ்ச்சி நடத்துவதைப் பார்ப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது; அவர்களது ஆடம்பரத்தின் தாக்கத்தினால், பெரிய ஹோட்டல்களில் தங்களது திருமணத்தை நடத்துவதினால், அவ்விடங்கள் பள்ளிவாசலுடன் ஒருபோதும் ஒப்பிட முடியாது. புனித திருக்குர்ஆனின் வசனங்களும் புனிதமான சொற்களும் உச்சரிக்கப்படுகின்ற, திருமணத்தில் மார்க்கவைபவம் என்பது ஒரு வழிபாட்டு முறை என்று நாம் கருதுகின்ற போது, அதுவும் இதுபோன்ற திருமணங்கள் பள்ளிவாசல்களில் செய்யப்படும்போது, அவற்றில் அதிகமான அருள்கள் உள்ளன. இன்று இளைஞர்கள் பள்ளிவாசல்களில் திருமணம் செய்து கொள்ள கவலைப்படுகின்றனர், அவர்கள் காலணிகளை அகற்ற வேண்டும், அவர்கள் தரையில் உட்கார வேண்டும் என்று அஞ்சுகின்றார்கள், மேலும் தங்கள் புத்தம் புதிய ஆடைகள் வீணாகிவிடும் என்றெல்லாம் அவர்கள் அஞ்சுகின்றார்கள்.

வலிமா

மணமகனின் தரப்பிலிருந்து வலிமா நடத்தாத ஏராளமான முஸ்லிம்கள் உள்ளனர்; அவர்கள் திருமண நாளிலேயே உணவைக்
கொடுக்கிறார்கள், ஆனால் இது இஸ்லாமிய வழிமுறை அல்ல; இது தூய முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நடைமுறையும் அல்ல. வலிமா என்பது தம்பதியர்கள் ஒன்றிணையும் முதல் இரவுக்குப் பிறகு அதாவது பாலியல் உறவுக்குப் பிறகு வழங்கப்படும் ஓர் உணவு விருந்தாகும். வலிமாவை நடத்துவதற்கான நபியவர்களின் நடைமுறை என்னவென்றால் மணமகள் தனது கணவருடன் வாழவந்து 3 நாட்களுக்குப் பிறகாகும். தூய நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: “அழைப்பைப் பெற்று அதை ஏற்றுக் கொள்ளாத ஒருவர், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியவில்லை என்பதில் சந்தேகமில்லை.”

மற்றொரு ஹதீஸில் (புகாரி): புனித நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதாக, அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்: “மிக மோசமான உணவு(விருந்து) எதுவென்றால் பணக்காரர் மட்டுமே கலந்து கொண்டு ஏழைகள் அழைக்கப்படாத வலிமாவின் உணவாகும்”.

அத்தகைய (விருந்து)அழைப்பினை மறுப்பவர் அதன் மூலம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியாமல் இருக்கின்றார். தங்களை சிறந்த மார்க்க அறிஞர்களாகவும், ஜமாஅத்தின் பாதுகாவலர்களாகவும் காட்டிக் கொள்பவர்கள், தங்கள் மகனின் வலிமாவை சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனர்கள், மைத்துனிகள், மருமகன், சகோதரன்/சகோதரயின் மகன், மருமகள், சகோதரன்/ சகோதரியின் மகள் மற்றும் மணமகளின் தரப்பில் சில குடும்பங்கள் ஆகியோரிடையே மட்டும் கொண்டாடுகிறார்கள் என்று ஒருவர் கேள்விப்படுகிறார், குறைந்த வருமானம் கொண்ட ஏழைகளைக் கூட அழைக்காமல், அவர்களின் வலிமா விருந்து "பார்பிக்யூ"வைக் கொண்டுள்ளது!

இத்தகைய ஊதாரித்தனத்திற்கான இடம் அல்லாஹ்வின் வார்த்தைகளிலும் அவனது நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகளிலும் இல்லை. ஒரு வலிமாவில் ஏழை மக்களை அழைக்காமல் புதிதாக திருமணமானவர்களுக்காக அவர்களின் பிரார்த்தனைகளைப் பெற்றுக் கொள்ளுதல் அல்லது அவர்கள் அழைக்கப்பட்டு, ஒருவர் அவர்களை நன்றாக நடத்தவில்லை என்றாலோ அல்லது அவர்களை புறக்கணித்தாலோ, புனித நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: “மோசமான உணவு ஏழைகள் அழைக்கப்படாத வலிமாவாகும்!”

சகோதர சகோதரிகளாகிய நீங்கள், ஒரு திருமணம் நிகழும் போதெல்லாம், இவ்வாறான சாபங்களை ஒருபோதும் தேடிக்கொள்ளாதீர்கள். இந்த மக்கள் அனைவரும் முறையான இஸ்லாமிய கல்வி இல்லாமல், திருமணம் மற்றும் அதன் விதிகளின் மீது முறையான செயலாக்கம் இல்லாமல், திருமண வாழ்க்கைக்குப் பிறகு எவ்வாறு வாழப்போகின்றார்கள் போன்றவை மிகவும்


வருத்தமளிக்கிறது. சில சமயங்களில் திருமணங்களில், நாம் சில விஷயங்களை அறியாமையில் செய்கிறோம், சில சமயங்களில் முழு அறிவுடன் நாம் அறிந்து கொண்டே செய்கிறோம், இதனால் இது அல்லாஹ்வின் கடுங்கோபத்திற்கு ஆளாகி விடுகிறது. அல்லாஹ் நம்மீது கோபப்படும்போது, நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. நம்மை அழைக்கக்கூடாது என்பதற்காக புறக்கணிப்பை நம் மீது நிலைநாட்ட வேண்டும் என்று இந்த மக்கள் உத்தரவிட்டனர், ஆனால் இப்போது நான் என்ன பார்க்கிறேன்? தங்கள் சொந்த ஜமாஅத்தில் இருக்கும் மக்கள் தங்களுக்குள்ளேயே யாரை அழைக்க வேண்டும் அழைக்கக் கூடாது என்று வேறுபடுத்திப்பார்க்கின்றார்கள். 

தூய முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ள ஹதீஸ். "இறையச்சத்திற்கும், அல்லாஹ்வின் ஆதரவிற்கும் பிறகு,ஓர் இறையச்சமுள்ள மனிதன் கவனத்தில் கொள்ள வேண்டியது (தேடிக் கொள்வது) ஓர் இறையச்சமுள்ள மனைவியாகும், மற்றும் அதுபோன்றே (பெண்ணிற்கும்). இதனால்,கணவனும் மனைவியும் அமைதியான மற்றும் சீரான (அல்லாஹ்விற்கு தலைவணங்கிய) ஓர் வாழ்க்கையை வாழ முடியும். (நூல்: முஸ்லிம்)

இந்த பேருரையை புரிந்து கொள்ளவும், இந்த அறிவுரைகளையும் நடைமுறைகளையும் செயல்படுத்தவும் அல்லாஹ் நமக்கு அதற்குரிய அறிவாற்றலை வழங்குவானாக. இன்ஷா அல்லாஹ்.

ஆதாரம் : 6.8.2010 ஜும்மா குத்பா

தலைப்பு : நிக்காஹ் (திருமணம்)