இஸ்லாமிய கடமைகள் - கேள்வி தொடர் - 2

நபிமார்களின் வருகை தொடர்பான இறைவசனம் 3:82 பற்றி மஸீஹ் மவூது (அலை) அவர்கள் கூறும்போது :-

நபிமார்கள் தத்தமது காலத்தில் மரணித்து விட்டனர். இந்தக் கட்டளை ஒவ்வொரு நபியின் சமுதாயத்துக்கும் கூறப்படுகின்றது அதாவது அத்தூதர் தோன்றும் போது அவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் அவ்வாறு செய்யாமல் இருந்தால் நீங்கள் பிடிக்கப்படுவீர்கள் என்று அவர்களுக்கு கூறப்படுகின்றது.

2:7. صِرَاطَ الَّذِیۡنَ اَنۡعَمۡتَ عَلَیۡہِمۡ ۬ۙ غَیۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَیۡہِمۡ وَ لَا الضَّآلِّیۡنَ ٪﴿ ﴾

நீ அருள் புரிந்தவர்களின் வழியில் (உனது தூதர்கள் மற்றும் நபிமார்களின்)

இப்போது ஐவேளைத் தொழுகையிலும் ஓதப்படுகின்ற இந்த வசனத்தில் இறைவனின் ஆன்மீக அருட்கொடையாக இறைஞானமும் இறைவன் மீதுள்ள அன்பும் "தூதர்கள் மற்றும் நபிமார்கள் மூலமாக மட்டுமே கிடைக்கின்றது". மேலும், தொழுகையை பற்றியும், இவர் தூதரை பின்பற்றி நடப்பது பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் இருந்தாரோ அவர் தொழுகையின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? அவரது பார்வையில் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட பிராமணர் கூட இரட்சிப்பை பெறக்கூடியவராக இருக்கின்றார். மேலும், ஒரு நபர் இஸ்லாத்தை விட்டு விட்டு முற்தத் ஆகிவிட்டாலும் கூட அவரும் காய்ந்துபோன தவ்ஹீத் காரணமாக இறை இரட்சிப்பை பெற முடியும். இன்னும் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ அல்லது ஆரியராகவோ இருக்கின்ற ஒரு மனிதர் இஸ்லாத்தை பொய்படுத்தி வந்தாலும் ஹஸ்ரத் "நபி (ஸல்)" அவர்களின் பகைவராக இருந்தாலும் கூட அவர் ஏகத்துவவாதி ஆக இருந்தால் அவருக்கு கூட இறை இரட்சிப்பை பெற முடியும் என்று கருதலாம். பிறகு தொழுகையினால் எதுவும் கிடைக்காது நோன்புகள் வீணானதாகும். ஆனால் நம்பிக்கை கொண்ட ஒருவருக்கு இந்த வசனம் மட்டுமே போதுமானதாகும் இதன் மூலமாக ஆன்மீக செல்வத்தின் எஜமானராக நபிமார்களும் தூதர்களும் மட்டுமே இருக்கின்றனர் ஒவ்வொருவருக்கும் அவர்களைப் பின்பற்றி செல்வதன் மூலமாக அதிலிருந்து பங்கு கிடைக்கின்றது பிறகு சூறாவின் ஆரம்பத்தில் உள்ள வசனத்தில் இவ்வாறு வருகின்றது..

திருக்குர்ஆன் 7: 35 க்கு முஸ்லிஹ் மவுத்(ரலி) அவர்களின் விளக்கம் தருவதையும் சற்று சிந்திப்போம் :-

இந்த வசனமும் இம்முந்தைய வசனங்களைப் போன்றே முக்கியமாக கவனிக்கப்பட தகுந்ததாக இருக்கிறது (உ.ம் 7:27,28,32). "ஆதமுடைய மக்களே" என்று இங்கு கூறப்பட்டிருக்கும் வார்த்தைகள், நபி(ஸல்) அவர்களின் காலத்திற்குரிய மக்களுக்கும், அதன் பிறகு தோன்றும் தலைமுறைகளுக்குமே பொருந்துமே தவிர கடந்த காலங்களில் வாழ்ந்த மக்களுக்கோ, ஆதமுடைய மக்களுக்கோ பொருந்தாது. இது என்ன கண்ணோட்டத்தில் இங்கு கூறப்பட்டிருக்கிறது என்றால், மனிதகுலத்தின் எதிர்கால தலைமுறையினருக்கு தெரிவிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் பலனாக, ஆதமுடைய மக்கள் இவ்வுலகில் இருக்கும் வரை, அல்லாஹ்வின் புறமிருந்து தூதர்கள் இவ்வுலகில் தோன்றிக்கொன்டே தான் இருப்பார்கள். இதனால், ஸல் (அலை) அவர்களை எதிர்ப்பவர்களாலும், அவர்களுக்கு எந்த வீழ்ச்சியும் வரப்போவது இல்லை, நபித்துவமும் இதனால் நிற்கப்போவதில்லை. ஆதமின் காலத்தில், ஆதமின் சந்ததிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட பெரிய வாக்குறுதி என்னவென்றால், அல்லாஹ்வின் தூதர்கள் எல்லா காலகட்டங்களிலும் பல்வேறு நாடுகளில் உள்ள வெவ்வேறு சமுதாயங்களுக்கும் யுகமுடிவு நாள் வரை தோன்றிக்கொண்டேதான் இருப்பார்கள் (2:39). இவ்வசனம், "உங்களிடமிருந்து தூதர்கள் உங்களிடம் வந்தால்" என்பதற்கு, அல்லாஹ்விடமிருந்து தூதர்கள் வரலாம் அல்லது வரமாட்டார்கள் என்று பொருளல்ல. அதேப்போன்ற ஒரு வசனம், "என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வந்தால்" (2:39) என்ற வசனத்திற்கும், என்னிடமிருந்து நேர்வழி வரலாம் அல்லது வராமலும் இருக்கலாம் என்று பொருளல்ல. நிச்சயமாக, இந்த திரு குர்ஆன் வசனத்தில் உள்ள 'اما' (இருந்தால்) பொருள் என்னவென்றால், ஒரு தூதருடைய காலத்தில் நீங்கள் வாழ நேர்ந்தால், "நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ள தவறிவிடாதீர்கள்" என்பதேயாகும். எனவே, இவ்வார்த்தையின் மூலம், காலத்தை நாம் நிர்ணயிக்கக்கூடாது என்பது புலப்படுகிறது. அதாவது, அல்லாஹ்வின் புறமிருந்து ஒரு தலைமுறையிலோ, அல்லது மற்றொரு தலைமுறையிலோ எந்த ஒரு நபி தோன்றினாலும், அவர் எப்பொழுது தோன்றினாலும் அவரை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

"என்னுடைய அடையாளங்களை உங்களுக்கு விளக்கினால்" என்ற வசனம் உணர்த்துகின்றன உண்மை என்னவென்றால், நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு வரும் தூதர்கள் யாவரும் எந்த புதிய ஷரியத்தையும் கொண்டு வரப்போவதில்லை என்பதே தவிர இஸ்லாமின் சட்டத்தை முழுமையாக பின்பற்றி நடக்கச் செய்வதற்கும், ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும் அல்குர்ஆனின் வசனங்களை விளக்கி கூறவதற்கும், ஓதிக்காட்டுவதற்கும் அவர்கள் வருவார்கள்.

இவ்வசனம் முஸ்லிம்களுக்கு எச்சரிப்பது என்னவென்றால், அவர்களுக்கு மத்தியில் தோன்றும் தூதர்களை இவர்கள் நிராகரிக்கவோ, அல்லது அவர்களின் ஒளியினை அணைக்கவோ கூடாது என்பது தெளிவாக விளங்குகிறது. நிச்சயமாக, இச்சட்டம் அல்குர்ஆனில் சிறந்த முறையில் கூறப்பட்டிருக்கிறது. அதாவது, பின்னாட்களில் இறைவன் புறமிருந்து வரும் தூதர்களை தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக அவர்கள் நிராகரித்திருக்கலாம் என்று பொருள் கொள்ளக்கூடாது. இன்ஷாஅல்லாஹ் (தொடரும்)