கேள்வி: இஸ்லாமிய கடமைகள் யாவை தொடர் -3

மேலும் மஸீஹ்(அலை) அவர்கள் கூறுவதை பாருங்கள் சகோதர்களே!

நான் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே படைத்துள்ளேன். (திருகுரான் 51:57)

மனித வாழ்வின் உண்மையான நோக்கம் இறைவனை அறிந்து அவனை வணங்கி அவனுக்காகவே வாழ்வதாகும் தனது வாழ்வின் நோக்கத்தை தானே சுயமான நிர்ணயிப்பதற்கான அதிகாரமோ உரிமையோ மனிதனுக்கு இல்லை. ஏனென்றால், மனிதன் தனது சுய விருப்பப்படி உலகத்திற்கு வருவதுமில்லை, போவதுமில்லை. அவன் அடைக்கப்பட்ட பொருளே ஆவான்.

நபித்துவம் என்பது வெறும் புரட்டு என்றும் இறை புறத்திலிருந்து விடும் தூது செய்தி மற்றும் தெய்வீக சட்டங்களும் இதை வேதங்களும் ஏமாற்றும் வஞ்சகமே என்றும் இவை யாவும் மனிதர்களின் சுயநலத்துக்காகவே என்றும் எவ்வாறு கூற இயலும்.?

31. اِنَّ الَّذِیۡنَ قَالُوۡا رَبُّنَا اللّٰہُ ثُمَّ اسۡتَقَامُوۡا تَتَنَزَّلُ عَلَیۡہِمُ الۡمَلٰٓئِکَۃُ اَلَّا تَخَافُوۡا وَ لَا تَحۡزَنُوۡا وَ اَبۡشِرُوۡا بِالۡجَنَّۃِ الَّتِیۡ کُنۡتُمۡ تُوۡعَدُوۡنَ ﴿ ﴾

எங்கள் இறைவன் அல்லாஹ் எனக் கூறி, இக்கொள்கையில் நிலைத்திருப்பவர்களிடம், நீங்கள் அஞ்சவும் வேண்டாம்; கவலையடையவும் வேண்டாம்; உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைப் பற்றிய நற்செய்திகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று (கூறியவாறு) வானவர்கள் இறங்குவர். (41:31)

இத்திருவசனத்தில் இறைவனின் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட நல்லடியார்களுக்கு பயமும் துயரமும் ஏற்படும் போது இறைவன் புறத்திலிருந்து அவர்களுக்கு *இல்ஹாம்* கிடைக்கின்றது என்றும் வானவர்கள் இறங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறுவார்கள் என்றும் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

இவ்வாறு இறைவனின் தெளிவான குரலை (இல்ஹாம்) கொண்டே நாம் முழு அளவில் இறை ஞானத்தை பெற முடியும். இந்த முழுமையான இறை ஞானம் கிடைப்பதற்காகவே நம்முடைய உள்ளத்தில் ஆன்மிக பசியையும் தாகத்தையும் அனுபவித்து வருகின்றோம்.

அந்த இறை ஞான அமுதம் நமக்கு ஈட்டுவதற்கான வழிகளை எவற்றையும் இறைவன் செய்து வைக்கவில்லை என்றால் அவன் அந்த ஆன்மீக தாகத்தை நம் உள்ளத்தில் ஏற்படுத்துவதன் அவசியம் என்ன? வெறும் புராணக் கதைகளைப் போன்று அடிப்படையற்ற "ஈமான்" இருந்தால் போதுமா? அல்லது முழுமை பெறாத பலவீனமான மனித மூளையின் பிறக்கும் அறிவு மட்டும் இருந்தால் போதுமா?

எனவே நாம் இறை ஒளி வெளிப்படும் இடத்திற்கே ஓடிச்சென்று அந்த உயிர் நண்பனுடைய அடையாளம் வெளிப்படையாகத் தெரியும் வழியைத் தேடிக் கொடுத்தது தான் எல்லா விதமான அருளும் அடைந்திருக்கின்றன. ஒளியானது வானத்திலிருந்து பூமியின் மீது எவ்வாறு பரவுகின்றதோ அது போன்றே "ஹிதாயத் " என்ற நேரான மார்க்கதின் உண்மையான ஒளியும் வானத்திலிருந்துதே இறங்குகின்றது.

இதைப் பற்றி தெளிவான நற்செய்தி கூறும் ஒரே மார்க்கம் "இஸ்லாம்" மட்டுமே! இன்று சத்தியத்தைத் தேடி திரிவோருக்கு நான் உறுதியாக கூறுகின்றேன் "ஏனைய மார்க்கத்தில் இறைவசனம் என்னும் அருட்பேரு அழித்துவிட்டு அதாவது இறைவனுடன் அடியார்களுடன் உரையாடுதல் என்ற வாசலானது நீண்ட காலமாகவே முத்திரையிடப்பட்டு விட்டது. ஆனால் இந்த முத்திரை இறைவனால் போடப்பட்டது அல்ல மாறாக இந்த அருள் பேறு கிடைக்கப் பெறாததால் நிராசையடைந்து தாமாகவே ஒரு சாக்கு உருவாக்கிக் கொள்கிறார்கள் என்பதை நாம் உங்களுக்கு உறுதியாக எடுத்து கூறுகின்றேன்."

"இறைவனுடைய நோக்கத்திற்கு எதிராக எவராலும் போரிட முடியாது, இறைவனின் தூய தூதர்களும், இறை புறத்தில் இருந்து கிட்டும் "இல்ஹாம்"தான் முழுமையான இறை ஞானத்தின் வழியாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே இறைவன் தனது "இல்ஹாம்" என்னும் அருளை அடைத்து வைத்து உலகத்தை ஒருபோதும் அழிவுக்குள்ளாக்க நாடவில்லை மாறாக தனது அருள் என்னும் இறை அறிவிப்பு எனும் வாசலை என்றென்றும் திறந்தே வைத்திருக்கின்றான். ஆனால், அவற்றை அவற்றின் சரியான வழிமுறை மூலமே பெற வேண்டும். அப்போது தான் அவற்றை எளிதில் பெற முடியும். இந்த ஜீவநீர் வானத்திலிருந்து இறங்கி அதற்கேற்ற இடத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது அந்த ஜீவ நீரை அருந்துவதற்கு நீங்கள் எப்படியாவது அந்த அந்நீர் ஊற்றை அறிந்து அணுகி உங்கள் உதடுகளை பதித்து அந்த ஜீவ நீரை மனநிறைவோடு பருகுங்கள். இன்ஷாஅல்லாஹ். ஆமீன்.