கேள்வி இஸ்லாமிய கடமைகள் யாவை? பதில் தொடர் -5

தொடர்ச்சியாக மஸீஹ் (அலை) அவர்கள் நமக்கு இது தொடர்பாக போதிப்பதை பார்ப்போம்:-

சகோதரர்களே! நான் எந்த புதிய மார்க்கத்தையும் புதிய போதனையையும் கொண்டு வரவில்லை. இன்னும் சொல்வதென்றால் நான் உங்களிடம் இருந்து வந்துள்ள உங்களைப் போன்ற ஒரு முஸ்லிமாக இருக்கின்றேன். முஸ்லிம்களாகிய நாம் செயல்படுத்துவதற்கு அல்லது செயல்படுத்துவதற்காக பிறருக்கு வழிகாட்டுவதற்கு திருக்குர்ஆனைத் தவிர வேறு எந்த வேதமும் இல்லை. *ஜனாப் காத்தமுல் முர்சலீன் அஹ்மதே அரபி* ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை தவிர நாம் பின்பற்றி நடப்பதற்கும் அல்லது மற்றவர்களை பின்பற்ற வைப்பதற்கும் வேறு எந்த ஒரு வழிகாட்டியும் பின்பற்றத் தகுந்தவரும் இல்லை. இதை நான் கூறும் நிலையில் ஒரு மார்க்கப்பற்றுள்ள முஸ்லிமுக்கு இறை அறிவிப்பின்(இறைவஹீ) அடிப்படையில் உள்ள எனது இந்த வாதத்தின் மீது நம்பிக்கை வைப்பதில் அபாயத்திற்குறிய என்ன இடம் இருக்கின்றது? எனது இந்த கஷ்ஃபும் இல்ஹாமும் தவறானது என்றும் எனக்கு எதுவெல்லாம் கட்டளையிடப்பட்டுள்ளது அதை புரிந்து கொள்வதில் எனக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கற்பனையாக வைத்துக் கொண்டாலும் இதில் ஏற்றுக் கொள்பவர்கள் மீது என்ன குற்றம் இருக்க முடியும்?

மேலும், அவர் கூறும் போது வானத்தில் இருந்து உங்களுக்கு ஒரு புதிய இறை வெளிப்பட்டு இறங்கவில்லையென்றால் "உங்கள் தொழுகை வெறும் சடங்காகவும் உங்கள் நோன்பு பட்டினியாகவும் தான் இருக்கும்" என்று நமக்கு போதித்துள்ளார்கள்.

மேலும், அவர்கள் கூறும்போது புதிய ஷரியத் சட்டத்தை கொண்டுள்ள வஹி இனி அவசியம் இல்லை அது முடிவடைந்து விட்டது. ஆனால், "ஹஸ்ரத் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உண்மையான தொண்டர்களுக்கு அந்த "இல்ஹாம்" கிடைக்கின்றது." அது ஒரு போதும் நிற்காது நமக்கு கிடைக்கும் இந்த "இல்ஹாம்" நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உண்மை நபி என்பதற்கு மிகப் பெரிய சான்றாகும். இந்த மிகப்பெரிய சான்றுக்கு முன்னால் இஸ்லாத்தை மறுப்பவர்களும் எதிர்ப்பவர்களும் இழிவடைந்து அவமானமும் அடைவார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

மக்கள் அனைவரும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறகு அல்லது மஸீஹ் மஊது அலைஹிஸ்ஸலாத்து வஸல்லம் அவர்களுக்குப் பிறகு ஒரு நபியின் தேவை என்ன உள்ளது? என்று வினவுகின்றார்கள்.

இதற்கு பதில் மிகவும் எளிமையானது, எப்பொழுதெல்லாம் "இறைவனின் இந்த தொன்மையான சட்டம் தாக்கப்படும்மோ அப்போதெல்லாம் இறைவன் தன் வல்லமையால் தனது இருப்பை தனது நபிமார்கள் மூலம் தனது அடியார்களுக்கு தனது இருப்பை வெளிப்படுத்துகின்றான்".

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகு தோன்றும் நபிமார்களைப் பற்றி மஸீஹ் மவூது (அலை) அவர்கள் கூறும் பொழுது:- இறைவனுடன் உரையாடுதல் என்று பெயர் வைக்கின்றீர்களோ அதுவே அதிக அளவில் கிடைக்கும் போது அதற்கு இறை கட்டளைக்கு ஏற்ப நான் அதற்கு நுபுவ்வத் என்று பெயர் வைக்கின்றேன்.

மேலும், ஒருவர் தமக்கு "நபிமார்கள் மற்றும் ரசூல்மார்களின் தேவையில்லைஎன்று கூறுவது மிகவும் ஆணவமான எண்ணமாகும். இது ஈமானின் இழப்பிற்கு வழிவகுக்கின்றது இப்படிப்பட்ட எண்ணம் உள்ள ஒரு மனிதர், "நான் தொழுகின்றேன்", "நோன்பு வைக்கின்றேன்", நான் "கலிமா சொல்கின்றேன்" என்று கூறுவதால் அவர் தன்னைத்தானே ஏமாற்றி கொள்கின்றாரே தவிர வேறு ஒன்றும் இல்லை. உண்மையான ஈமான் பற்றிய ஞானம் அவருக்கு இல்லாததே இதற்கு காரணம்.

என் சகோதரர்களே இந்த கூற்றை ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

மேலும் அன்னார் தொடர்ச்சியாக கூறும் இந்தக் கருத்தையும் உங்கள் கருத்தில் கொள்ளுங்கள்.

ஒரு மனிதனைப் படைத்தவன் இறைவன் என்றாலும் அதற்கு ஒரு தந்தை தேவைப்படுகின்றார் உடல் சம்பந்தமான ஒரு பிறப்பிற்கு ஒரு தந்தை இருப்பது அவசியமானதாக இருப்பதைப் போன்று ஆன்மீக தொடரில் ஆன்மீகத்தில் பிறப்பிற்கும் ஒரு தந்தை அவசியமானதாகும். ஆகவே, விழித்தெழுவீர்! இஸ்லாத்தை வெளித்தோற்றத்தில் மட்டுமே வைத்துக்கொண்டு உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள் நம் இறைவன் என்ன எதிர்பார்க்கின்றான் என்பதை அவனுடைய திருமறை வசனங்களில் படித்து ஆழ்ந்து சிந்தியுங்கள் என்று கூறுகின்றார்கள்.

எனவே சகோதரர்களே! "இறைவனுடன் உரையாடுதல்" என்ற இந்த அருளை எப்பொழுதெல்லாம் தாக்கப்படும்மோ அல்லது ஏதாவது ஒரு சாக்கு போக்கு கூறி அதை தற்காலிகமாக நிறுத்தப்படுமோ அப்போது நமது இறைவன் தனது இருப்பை வெளிப்படுத்தாவிட்டால் உயிருள்ள இறைவன் என்று எவ்வாறு கூறஇயலும்?

இன்ஷாஅல்லாஹ் தொடரும்...