இறை வழியில் பொருள் தியாகம் பற்றி இஸ்லாமிய மஸீஹ்மார்களின் கூற்றுகள்

வல்ல இறைவனின் மேலான அருளை பெற்ற நன்மக்களாக இம்மையிலும் மறுமையிலும் திகழ ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றுகள்:

  "அல்லாஹ்வின் வழியில் உங்களது எல்லா ஆற்றல்களையும் சக்திகளையும் வாழ்நாள் இருக்கின்ற வரை அர்ப்பணித்து விடுங்கள். அதன் மூலம் அந்த தூய வாழ்வின் வாரிசாகி விட வேண்டும்." (அல் ஹகம் தொகுதி 4 எண் 29; 16 ஆகஸ்ட் 1900 பக்கம் 3; மல்ஃபூஸாத் தொகுதி 2 பக்கம் 90)

உண்மையிலேயே உணவளிப்பவன் இறைவனாக இருக்கின்றான். எந்த நபர் அவன் மீது நம்பிக்கை வைக்கின்றாரோ அவர் ஒருபோதும் ரிஸ்கிலிருந்து விலக்கி வைக்கப்பட மாட்டார். அவன் எல்லா வகையிலும் ஒவ்வோர் இடத்திலிருந்தும் தன் மீது நம்பிக்கை வைக்கின்ற நபருக்கு ரிஸ்கை எட்ட வைக்கின்றான். என் மீது நம்பிகை வைப்பதற்கு நான் வானத்திலிருந்து பொழிவேன். அவர்களது பாதங்களிலிருந்து (தேவைப்படுபவற்றை) வெளியில் வரச் செய்வேன் என்று இறைவன் கூறுகின்றான். எனவே, ஒவ்வொரு நபரும் இறைவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்." (மல்ஃபூஸாத் தொகுதி 9 பக்கம் 390)

எந்த நபர் முக்கியமான பணிகளுக்காக பொருளைச் செலவு செய்கின்றாரோ அவர் பொருளைச் செலவு செய்வதால் அவரது பொருளில் குறைவு ஏற்பட்டு விடும் என்று என்னால் நம்ப முடியாது. மாறாக, அவரது பொருளில் அபிவிருத்தி ஏற்படும். எனவே, இறைவன்

மீது நம்பிக்கை வைத்தவாறு முழுமையான நல்லொழுக்கத்துடனும், எழுச்சியுடனும், தைரியத்துடனும் இவ்வழியில் செயலாற்ற வேண்டும். இதுவே தொண்டு செய்வதற்கான நேரமாக இருக்கின்றது. இதற்குப் பிறகு அந்த நேரம் வரவிருக்கின்றது. அப்போது தங்க மலையையே இவ்வழியில் செலவு செய்தாலும் இந்த நேரத்தில் செலவு செய்யப்படும் பைசாக்களுக்கு சமமாக அது இருக்காது. எனவே, இறைவன் தொடர்ச்சியாக எனக்கு இதனை வெளிப்படுத்திக் காட்டியுள்ளான். அதாவது, உண்மையாகவும் உறுதியாகவும் தமது பிரியத்திற்குரிய பொருளை இவ்வழியில் செலவு செய்பவரே இந்த ஜமாஅத்தைச் சார்ந்தவராகக் கருதப்படுவார். நீங்கள் இரண்டு பொருள்களை நேசிக்க முடியாது என்பது வெளிப்படையான விஷயமாகும். நீங்கள் பொருளையும் நேசித்து இறைவனையும் நேசிப்பது என்பது உங்களால் சாத்தியமற்றதாகும். ஒன்றை மட்டுமே நீங்கள் நேசிக்க முடியும். எனவே, இறைவன் மீது அன்பு கொள்கின்ற அந்த நபர் நற்பாக்கியம் பெற்றவர் ஆவார். உங்களில் எவர் இறைவன் மீது நேசம் வைத்தவாறு தனது பொருளை அவனது வழியில் செலவு செய்வாரோ அவரது பொருளில் மற்றவர்களை விட அதிகம் பரக்கத் வழங்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். ஏனென்றால், செல்வம் தானாக வருவதில்லை. மாறாக, அது இறைவனின் நாட்டப்படியே வருகின்றது. எனவே, எந்த நபர் இறைவனுக்காக தனது செல்வத்தின் சில பகுதிகளை விட்டு விடுகின்றாரோ அவர் கண்டிப்பாக அதைப் பெற்றுக் கொள்வார். ஆனால், எவர் செல்வத்தின் மீது நேசம் வைத்து இறைவனின் வழியில் அவர் செய்ய வேண்டிய தொண்டை செய்யாமல் இருக்கின்றாரோ அவர் கண்டிப்பாக அந்த செல்வத்தை இழந்து விடுவார். என்று எண்ணாதீர்கள். மாறாக, உங்களை இந்த தொண்டிற்காக அழைத்திருப்பது அவனது அருளாகும். நான் மீண்டும் மீண்டும் கூறுகின்றேன். இறைவன் உங்களது தொண்டுகளுக்கு அணுவளவு கூட தேவையுடையவன் அல்ல. எனினும் உங்களுக்கு தொண்டு செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இருப்பது அவன் உங்கள் மீது செய்திருக்கும் அருளாகும்." (மஜ்மூஆ இஷ்திஹாராத் தொகுதி 3 பக்கம் 496-497)

"கருமித்தனமும் ஈமானும் ஒரே உள்ளத்தில் ஒன்று சேர முடியாது என்று நான் உறுதியாகக் கருதுகின்றேன். எந்த நபர் உண்மையான உள்ளத்துடன் இறைவன் மீது நம்பிக்கை வைக்கின்றாரோ அவர் தனது பெட்டியில் அடைப்பட்டுக் கிடக்கின்ற அந்த செல்வத்தை மட்டும் தனது செல்வமாகக் கருதுவதில்லை. மாறாக, அவர் மேலான இறைவனின் எல்லா கருவூலங்களையும் தமது கருவூலங்களாகக் கருதுகின்றார். இதனால் ஒளியினால் இருள் விலகுவது போன்று செல்வத்தை தடுத்து வைக்கும் நிலை அவரை விட்டு விலகிச் சென்று விடுகின்றது. நீங்கள் ஏதாவதொரு நன்மையான பணியைச் செய்வீர்கள் என்றால், அந்த நேரத்தில் ஏதாவது தொண்டு செய்தால் அதன் மூலம் உங்களது ஈமானில் சாட்சி முத்திரையைப் பதிக்கின்றீர்கள். உங்களது வாழ்நாள் இதனால் அதிகரிக்கும். உங்களது செல்வங்களில் அருள் வழங்கப்படும்." (மஜ்முஆ இஷ்திஹாராத் தொகுதி 3 பக்கம் 498)

"நமது பார்வையில் இன்று மிகப்பெரும் தேவையாக இருப்பது இஸ்லாத்தின் வாழ்வாகும். இஸ்லாம் எல்லா வகையான தொண்டிற்கும் தேவையுடையதாக இருக்கின்றது. அதன் தேவையை விட வேறு எந்த தேவைக்கும் நாம் முன்னுரிமை வழங்க முடியாது. இன்று மிகப்பெரும் தேவை நம்மால் இயன்ற வரை இஸ்லாத்திற்குத் தொண்டு செய்வதாகும். எந்த அளவு ரூபாய்கள் இருக்கின்றதோ அவற்றை இஸ்லாத்தை உயிர்பிப்பதற்காகச் செலவு செய்ய வேண்டும்." (மல்ஃபூஸாத் தொகுதி 2 பக்கம் 327)

"தம்மை பைஅத் செய்தவர்களில் ஒருவராகக் கருதுகின்ற ஒவ்வொரு நபரும் தமது செல்வத்தின் மூலமாகவும் இந்த இயக்கத்திற்குத் தொண்டு செய்வதற்கான நேரம் இப்போது வந்து விட்டது. பைஅத் செய்துள்ள ஒவ்வொருவரும் தனது விரிவான நிலைமைக்கு ஏற்ப உதவி செய்ய வேண்டும். அதன் மூலம் இறைவனும் அவருக்கு உதவுவான். ஒவ்வொரு நபரது உண்மையும் அவரது தொண்டின் மூலமாக அடையாளங்கண்டு கொள்ளப்படும். அன்பர்களே! இது மார்க்கத்திற்காகவும் மார்க்கத்தின் நோக்கங்களுக்காவும் தொண்டு செய்ய வேண்டிய நேரமாகும். இதனை அரிதாகக் கருதுங்கள். பிறகு ஒருபோதும் இந்த சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைக்காது." (கிஷ்தி நூஹ். ரூஹானீ கஸாயின் தொகுதி 19 பக்கம் 83)

"செல்வத்தை நேசிக்காதீர்கள். ஏனென்றால், அந்த நேரம் வந்து கொண்டிருக்கின்றது. அப்போது நீங்கள் செல்வத்தை விடாமல் இருந்தாலும் அது உங்களை விட்டு விடும்." (மஜ்மூஆ இஷ்திஹாராத் தொகுதி 3 பக்கம் 318)

பொருள் தியாகத்தை பற்றி காலத்தின் இமாம் ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகிறார்கள் :

நமது ஜமாத்தை (ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்) சேர்ந்த மக்கள் எப்போதும் இந்த அருளின் பக்கம் நினைவு கூற்ந்தவர்களாக இந்த தியாகத்தின்
அருள்களையும் பயன்களையும் புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும். எனது சகோதரர்களே நமது மறைவானவற்றை அவனை தவிர யார் அறிந்து கொள்ள முடியும்! எனவே நாம் இந்த தியாகத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்ற முழு விழிப்புணர்வு மற்றும் உண்மையான உணர்வும் நம்மிடையே உருவாக வேண்டும். நாம் உளப்பூர்வமாக நல்ல எண்ணத்தில் இந்த தியாகத்தில் ஈடுபடுத்திக் கொண்டால் அந்த ஏக இறைவனின் அருளுக்கும் அன்பிற்கும் பாத்திரமாகலாம். இதை சொற்களால் கூறுவது கடினமான விஷயமாகும். இன்னும் சில வேளைகளில் மக்கள் பிச்சைக் காரனுக்கு பிச்சை கொடுக்கும்போது நம்மை சிலர் தொந்தரவு செய்வதிலிருந்து தவிர்க்க அல்லது குழந்தைகள் அடம்பிடிப்பதை நிறுத்தும் நோக்குடன் அவர்களுக்கு ஏதாவது ஒன்றை கொடுப்பது போல பிச்சைக் காரனுக்கு பிச்சை கொடுக்கின்றனர், ஆனால், எனது அன்புக்குரியவர்களே! நீங்கள் பிறருக்கு கொடுக்கும் போது கூட மகிச்சியுடனும் உங்கள் இதயத்தை உருக செய்யும் மன உருக்கத்துடனும் மனநிறைவுடன் இந்த உலகம் நமக்கு தற்காலிகமானது என்றும் நமக்கு நிரந்தரமான மறுமை உள்ளது என்ற உண்மையை முழுவதும் உணர்ந்தவராக கொடுங்கள். இது உங்கள் மனிதாபிமானத்தை தட்டி எழுப்பக் கூடியதாக இருக்க வேண்டும். எனவே நீங்கள் இதை உளப்பூர்வமாக புரிந்து கொண்டு ஆத்மார்த்தமாக இறைவனுக்காக இவ்வகை நற்செயல்களை செய்தால் அந்த ஏக இறைவாகிய அல்லாஹ் சுபஹானஹு தாலா அதற்கு பகரமாக அந்த அடியானை அவனது தயவாளும் கருணையாலும் சிறந்த முறையில் பொருந்தி கொள்வான். அந்த வானங்களையும் பூமியையும் உங்களை படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வை தவிர உங்களை நேசிப்பவன் யார்? இன்னும் அவன் எப்படிபட்டவன் என்றால் அனைத்தும் அழிந்தாலும் அவன் ஒருவனே நம்முடன் என்றென்றும் இருப்பான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எனது அருமையானவர்களே!.

இஸ்லாம் ((ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்) என்ற இந்த உடல் ரூஹுல் குத்தூஸினாலும் உங்கள் அனைவரின் தியாகங்களாலும் ஒளிரூட்டப்பட்டு அந்த ஒளியூட்டப்பட்ட ஒளி பாய்ந்து வெளிச்சத்தை பரப்பும் போது அதன் முன்னேற்றத்தை எவராலும் தடுக்கமுடியாது இவ்வாறு செய்வதற்கு அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் நமக்கு உதவிபுரிவனாக! ஆமீன் சும்ம அமீன் யா ரப்புல் ஆலமீன்!!

ஆதாரம் : 06.4.2018 ஜும்மா குத்பா

தலைப்பு : பொருள் தியாகம்