அல் ஹுஜூராத் (புறங்கூறுதல்) எச்சரிக்கை!

“நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள்‌ அதிகமான யூகங்களிலிருந்து விலகிக்‌ கொள்ளுங்கள்‌. ஏனெனில்‌ சில யூகங்கள்‌ பாவமாகும்‌. பிறர் குற்றங்களைத்‌ தேடியலையாதீரகள்‌. உங்களுள்‌ ஒருவருக்கொருவர்‌ புறங்கூறாதீர்கள்‌. உங்களுள்‌ எவராது மரணமடைந்து விட்ட தமது சகோதரரின்‌ மாமிசத்தை உண்ண விரும்புவாரா? (உங்களைக்‌ குறித்து இவ்வாறு கூறப்பட்டால்‌) நீங்கள்‌ நிச்சயமா அதனை வெறுப்பீர்கள்‌ மேலும்‌ அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்‌. அல்லாஹ்‌ அதிகமாகக்‌ கழிவிரக்கத்தை ஏற்றுக்கொள்பவனும்‌, மேன்மேலும்‌ கருணை காட்டுபவனுமாவான்‌. (49:13).

மேலே கூறப்பட்ட திருக்குரான் வசனத்தை மேற்கோள்காட்டிய வர்களாக. ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகிறார்கள் 

இந்த அத்தியாயத்தின் மூலமாக அல்லாஹ்‌ நம்பிக்கையாளர்களின்‌ சமூகத்தை அழைத்து, கிப்பத்துக்கு எதிராக

எச்சரிக்கையாக இருக்கும்படி கவனமூட்டுகிறான்‌. நீங்கள் அறிந்தது போலவே, கிப்பத்து என்பதன்‌ அர்த்தம்‌ புறங்கூறுதல்‌, ஒரு நபருக்கு எதிராகப் பேசுதல்‌, அவரது முதுகுக்குப்‌ பின்னால்‌ அதாவது அவர்‌ இல்லாதபோது அவரை மோசமாக சித்தரித்தல்‌ போன்றவையாகும்‌. இத்தகைய நடைமுறையை அல்லாஹ்‌ கடுமையான வார்த்தைகளில்‌ கண்டித்துள்ளான்‌. மக்கள்‌ அவற்றை பற்றி நன்கு உணர்ந்து கொண்டால்‌, அவர்கள்‌ ஒரு போதும்‌ இத்தகைய செயல்களில்‌ ஈடுபட துணியமாட்டார்கள்‌. கிப்பத்‌ என்ற தீமையானது அதாவது பாவமானது, அது உங்களை அதன்பால்‌ ஈர்த்துக்‌ கொள்கிறது. நீங்கள்‌ பலவீனமடைந்து அதில்‌ வீழ்ந்து விடுகின்றீர்கள்‌. அல்‌ ஹுஜுராத்‌ என்ற அத்தியாயத்தைப்‌ பற்றி நீங்கள்‌ நுட்பமாக படித்துக்கொண்டால்‌, அதன்‌ உள்ளடக்கங்களை கண்டு நீங்கள்‌ அஞ்சி நடுங்கிவிடுவீர்கள்‌. அதாவது அல்லாஹ்‌ இறை நம்பிக்கையாளர்களுக்கு எதிராக எதனைக்‌ கொண்டு எச்சரித்துள்ளானோ அதன்‌ காரணமாக நீங்கள்‌ பயந்து விடுவீர்கள்‌

நீங்கள்‌ சூரா ஹூஜுராத்‌தை படிக்கும்‌ போது, அதில்‌ அல்லாஹ்‌ கூறுகிறான்‌.

நம்பிக்கை கொண்டவர்களே!, (யார்‌ மீது ஈமான்‌ கொள்ள வேண்டும்?) அல்லாஹ்வின்‌ மீது நம்பிக்கை, அவனது கட்டளைகள்‌ மீது நம்பிக்கை மற்றும்‌ அவனது அறிவுறுத்தல்கள்‌ மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.

நம்பிக்கை கொண்டவர்கள்‌ யார்‌? அல்லாஹ்‌ உங்களிடம்‌ கூறுகிறான்‌. சந்தேகங்களை தவிர்த்துவிடுங்கள்‌, இதுபோன்ற சந்தேகங்கள்‌, ஐய உணர்வுகள்‌ போன்றவை அதிக பட்சமும்‌ உங்களை பாவங்களின் பக்கம் அழைத்துச் செல்கிறது. இது மிகவும்‌ மோசமான பழக்கமாகும்‌. இதிலிருந்து நீங்கள்‌ விடுபட வேண்டும்‌. உண்மையில்‌ சந்தேகங்களில்‌ சில பாவமாகிறது.

மக்களை மிகவும்‌ சந்தேகிக்கும்‌ தீய பழக்கத்தைக்‌ கொண்டவர்களும்‌ உள்ளனர்‌. இது மிகவும்‌ ஆபத்தானது. பிறரின்‌ தனிப்பட்ட விஷயங்களை அறிந்து கொள்ள அவர்கள்‌ அநேக கேள்விகளை முன்வைக்கின்றார்கள்‌. பிறரின்‌ எல்லாவற்றையும்‌ விரிவாக அவர்களுக்கு அறிந்து கொள்ள வேண்டும்‌. அவர்களின்‌ அச்செய்கையானது மிகவும்‌ வேதனை விளைவிப்பதாகும்‌. மேலும்‌ அவர்களின்‌ சொந்த விஷயங்களைப்பற்றி யாருக்கும்‌ தெரியப்படுத்தாமல்‌ கவனித்துக்‌ கொள்கின்றனர்‌. அதே சமயம் மற்றவர்களின்‌ அனைத்து காரியங்களைக்‌ குறித்தும்‌ தெரிந்து கொள்ள அவர்கள்‌ விரும்புகின்றனர்‌.

இவ்வாறு, அவர்கள்‌ மற்றவர்களை உளவுபார்கின்றனர்‌. உளவு பார்த்ததிலிருந்து கிடைத்த தகவல்களை அவர்கள்‌ தங்களுக்கு வேண்டியவர்களிடம்‌ பரப்புகின்றனர்‌. மேலும்‌ அவர்கள்‌ அவ்விஷயங்களை மிகைப்படுத்தி மோசமாக்கி விடுகின்றனர்‌. அதிகாரப்பூர்வமற்ற வழிகளில்‌ தெரிந்து கொண்டதைப்‌ பரப்புவதில்‌ மும்முரமாக பங்கேற்கின்றனர்‌. இவ்வழியில்‌ அவர்கள்‌ மக்களை வெறுப்பு மற்றும் சண்டை சச்சரவுகளின்‌ பக்கம்‌ தூண்டுகின்றனர்‌. சந்தேகம்‌ கொள்வது, உளவு பார்ப்பதோடு ஓர்‌ ஆழமான தொடர்பைக்‌ கொண்டிருப்பதால்‌ இது மிகவும்‌ கொடிய பாவமாகும்‌. மேலும்‌ இத்தகைய மக்கள்‌, சந்தேகம்‌ என்னும்‌ நோய் கொண்ட நபர்கள்‌, உளவுபார்ப்பவர்கள்‌ மிகவும்‌ ஆபத்தானவர்கள்‌.

மற்றொரு புறம்‌, பாருங்கள்‌ ஒரு நல்ல நபர்‌ குளித்து விட்டு சுத்தமான ஆடைகளை அணிந்து கொள்வார்‌. அவர்‌ எல்லா வகையான அசுத்தங்கள்‌, தூசி மற்றும்‌ தவறான தீய பரிவத்தனைகளிலிருந்து வெகு தொலைவில்‌ இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும்‌

செய்வார்‌. சுத்தமாக இருப்பதன்‌ மதிப்பை அவா்‌ உணர்ந்திருப்பதால்‌ தன்னை அவர்‌ சுத்தமாக வைத்திருக்கிறார்‌. ஆகவே அது போன்றே நீங்களும் உங்களின்‌ நம்பிக்கையையும்‌ சுத்தமாக வைத்திருக்க வேண்டும்‌. சந்தேகம்‌, உளவுப்பார்வை மற்றும்‌ புறங்கூறுதல்களிலிருந்து நீங்கள்‌ வெகு தொலைவில்‌ இருக்கவேண்டும்‌. உங்களின்‌ முன் ஓதிய சூரா ; ஹுஜுராதின்‌ இவ்வசனம்‌ குறிப்பாக, யாரையும்‌ நீங்கள்‌ புறங்கூறாதீரகள்‌, எவரையும்‌ மோசமாக பேசாதீர்கள்‌ என்பதை நினைவூட்டுகிறது. அதாவது அவர்‌ இல்லாத நேரத்தில்‌ அவருக்கு எதிராகப் பேசாதீர்கள்‌. சந்தேகம்‌, அவநம்பிக்கைப்‌ போன்ற பழக்கங்களை கொண்டுள்ள மக்களும்‌ இருக்கின்றனர்‌. உளவு பார்க்க பழகியவர்கள்‌ மிக விரைவில்‌ ஒரு முடிவுக்கு வருகின்றனர்‌. அதாவது இன்னின்ன விஷயங்கள்‌ நடந்திருக்கலாம்‌ என்று அவர்கள்‌ விரைவான முடிவுக்கு வந்துவிடுகின்றனர்‌.

மேலும்‌ உளவு பார்த்து பழகிய, அந்த வகையான நபர்‌ தனது எல்லா அவநம்பிக்கைகளுடனும்‌, சந்தேகங்களுடனும்‌ தன்னைப் பாவங்களில்‌ மிக ஆழமாக புதைத்துக்‌ கொள்கின்றார்‌. இது மிகவும்‌ ஆபத்தானது. அதனால்தான்‌ தஜஸ்ஸுஸ்‌ (உளவுபார்த்தல்‌) போன்ற தீமைகளுக்கு எதிராக சூரா: அல்‌ ஹுஜுராத்தில்‌ [49 - ம்‌ அத்தியாயம்‌] அல்லாஹ்‌ நமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளான்‌.

இத்தகைய தீமைகளுக்கு எதிராக அல்லாஹ்‌ நம்‌ அனைவரையும்‌ பாதுகாப்பானாக! ஆமீன்‌. அல்லாஹ்‌ உங்களை நேரான பாதையில்‌ நீதியுடனும்‌, தக்வாவுடனும்‌ வழிநடத்திச் செல்வானாக! கிப்பத் மற்றும்‌ அதைப்‌ போன்று இவ்வசனத்தில்‌ குறிப்பிடப்பட்டுள்ள மற்றுமுள்ள அனைத்து தீமைகளிலிருந்தும்‌, திருக்‌குர்ஆனில்‌ குறிப்பிடப்படுள்ள ஒட்டுமொத்த தீமைகளிலிருந்தும்‌ வெகு தொலைவில்‌ இருப்பதற்கு அல்லாஹ்‌ நமக்கு உதவிபுரிவானாக!

இன்ஷா அல்லாஹ்‌ ஆமீன்‌.

ஆதாரம் : 13.9.2019 ஜும்மா குத்பா

தலைப்பு : அல் ஹுஜூராத் (புரங்கூறுதல் )