உண்மையான நம்பிக்கையாளர்கள்

ஹஸ்ரத் கலிஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்.

"உண்மையான நம்பிக்கையாளர்கள், தாங்கள் ஒரு நாள் தங்கள் எஜமானனான அல்லாஹ்விடம் திரும்ப வேண்டி உள்ளது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வார்கள்; மேலும் அவர்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரம்புகளை மீறிச் செல்லாமல் தங்களின் சக்திக்கும் திறனுக்கும் உட்பட்ட அனைத்தையும் அவர்கள் செய்கின்றனர்; அதனால் அவர்கள் பூமியில் தங்களின் மீதான அனைத்து சோதனைகள் மற்றும் தேர்வுகள் அதாவது பரீட்சைகள் ஆகியவற்றில் பறக்கும் வர்ணங்களுடன் தேர்ச்சி அடைகின்றனர். மேலும், அவர்கள் அல்லாஹ்வின் அனைத்து கட்டளைகளையும் அவன் விதித்துள்ள வரம்புகளுக்கு உட்பட்டு அவர்கள் நடைமுறைப்படுத்தப் பார்க்கின்றனர். மேலும் அவர்களின் நம்பிக்கையானது முஸ்லிம்கள் என்ற நிலையில், அல்லாஹ் அவர்களுக்கு புனிதமாக்கியுள்ள அனைத்திலும் தங்களின் மரணத்தை சந்திக்கின்ற வரை உறுதியாக நிலைத்திருக்கும் நம்பிக்கையுடன் வாழ்ந்து, ஓர் ஆன்மீக வாழ்வையும் அவர்கள் பெற்றுக்கொள்கின்றார்கள். அது அவர்களுக்கு அல்லாஹ்வின் திருப்தியில் நிலை பெற்ற - நிரந்தர வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

அவர்கள் நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள் மற்றும் அவர்கள் ஒரு ஆன்மீக வாழ்க்கையைப் பெறுகிறார்கள், அது அவர்களுக்கு அல்லாஹ்வின் திருப்தியில் நித்திய வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

ஆகவே, அவர்கள் அல்லாஹ்வினால் பிரத்தியேகமாக நம்பிக்கையாளர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளார்கள். தாங்களாகவே தங்களுக்கு நம்பிக்கை உள்ளதென கூறிக்கொள்ள முடியாது; ஏனெனில் அல்லாஹ்வே நம்பிக்கையின் சரியான அளவை
அறிந்தவனாவான் என்பது அவர்களுக்குத் தெரியும்; மேலும் மக்களின் நம்பிக்கையை தீர்மானிப்பதற்கான உரிமம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. ஆனால் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி, அவர்களின் நம்பிக்கையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதையும், அதனை ஒரு நிச்சயமற்ற மற்றும் பலவீனமான நிலையில் இருந்து ஒரு திடமான மற்றும் உறுதியான நிலைக்கு கொண்டு செல்லவும் அவர்கள் அறிவார்கள். இந்த மக்கள் அல்லாஹ்வின் திருப்தியை அடையும் வரை ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு கட்டத்திற்கு அவர்கள் முன்னேறிச் செல்வார்கள். இவ்வுலகமே அவர்களை எதிர்த்துநின்றாலும் கூட அவர்களது நோக்கம்,தேவை மற்றும் விருப்பம் அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே பெறுவதாகும். அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் வேண்டுவது அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே; ஏனெனில் அல்லாஹ் மட்டுமே ஒரு நாள் அவர்களுக்கு தீர்ப்பளிப்பான், மக்கள் அவர்களுக்கு தீர்ப்பளிக்கப்போவதில்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றார்கள். எனவே, இந்த எண்ணம் அவர்களுக்கு மிகுந்த ஆறுதலளித்தது, மேலும் அவர்களின் இதயத்தை மிகவும் இலேசானாதாக அதாவது எந்த கவலைகளும் அற்றதாக உணர்கின்றார்கள், மற்றும் ஓர் அமைதி அதாவது ஸகீனா அவர்களின் இதயங்களை வலுப்படுத்தி அனைத்து கவலைகளையும் மங்கச் செய்துவிடுகின்றது. இந்த வகையான நம்பிக்கையாளர்கள்தான் உண்மையில் வெற்றி பெறுவார்கள்."

ஆதாரம் : 31.7.2015 ஜும்மா குத்பா
தலைப்பு : பயபக்தியும் அல்லாஹ்விற்கு அடிபணிதலும்