இறை புறத்தின் உண்மையான தலைவர் (கலீபா)யார்?

“அல்லாஹ் உங்களுள் நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவர்களை, அவர்களின் முன்னோர்களை கலீஃபாவாக (தலைவராக) ஆக்கியது போன்று இப்பூமியில் கலீஃபாவாக ஆக்குவதாகவும், அவன் அவர்களுக்காக விரும்பிய அவர்களின் மார்க்கத்தை அவர்களுக்கு உறுதிப் படுத்துவதாகவும், அவன், அவர்களுக்கு அவர்களது அச்சத்திற்குப் பிறகு, அதற்குப் பதிலாக அமைதியினை வழங்குவதாகவும் அவர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளான். அவர்கள் என்னை வணங்குவார்கள். எதனையும் எனக்கு இணையாக்க மாட்டார்கள். இதன்பின்னரும் நிராகரிப்பவர்கள் கட்டுப்படாதவர்களாவார்கள்.”(24: 56)

மேலே கண்ட இறை வசனத்தை ஓதி கட்டியவர்களாக..

ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் முனீர் அஹமது அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்...

"அல்லாஹ் நம்மை நல்லவர்களென தீர்ப்பளிப்பதற்காக அவனிடம் நாம் துஆ செய்ய வேண்டும். அவனுடைய அருளும் கருணையும் இல்லாமல் நாம் ஒன்றுமற்றவர்களாவோம். துரதிர்ஷ்டவசமாக மற்றவர்களின் நம்பிக்கையை தீர்மானிக்கும் உரிமம் தங்களுக்கு உள்ளதாக அறிவிக்கும் சிலர் உள்ளனர். எவ்வாறெனில் எல்லா தூதர்களையும், சீர்திருத்தவாதிகளையும் இன்னும் வாக்களிக்கப்பட்ட ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களையும் ஏற்றுக்கொண்ட  பிறகும்  கூட, தன்னை சிறந்த முஸ்லிம்களைப் போன்று  பாசாங்கு செய்கின்ற மக்கள், அல்லாஹ்  தனது மற்றொரு  மஸீஹை, மறைவானதை அவரிடம் வெளிபடுத்தி ஓதிக்காட்டவும், அவனது அடையாளங்களை காண்பிக்கவும் அவர்களுக்கு மத்தியில் அனுப்பினால், துரதிஷ்டவசமாக அவர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்கின்றார்கள்,  அவர்கள், தற்காலிகமான இவ்வுலகியல் அதிகாரம்  உடையவர்களுடன் அதிகம் தம்மைப் பிணைத்துக் கொள்வதற்கு முற்படுகின்றார்கள், இதனால் மக்கள் அவர்களை தொடர்ந்து வழிபடுகின்றனர் / இணை வைக்கின்றனர்.

இந்த வகையான மக்களும்,  தலைவர்களும் எந்தவொரு இறை அறிவிப்பையும் பெறாத நிலையிலும் கூட, அல்லாஹ்வின் அனைத்துத் தூதர்களும் செய்ததைப்போன்று,  தாங்கள் அல்லாஹ்வின் புறமிருந்து வந்துள்ளதாக

தங்களது பணியை அறிவிக்காமலேயே, அவர்களை அல்லாஹ்வின் தூதர்களாக்கிக் கொள்கிறார்கள். மக்கள் அவர்களை தேர்ந்தெடுக்கின்றனர், ஆனால்“ மக்கள், அமீர் மற்றும் ஆமிலா – நிர்வாகக் குழுவின் குரல் இறைவனின் குரலாகும் என மக்களை நம்ப வைக்கின்றார்கள். அவர்களுக்கு கிடைத்த அதிகாரம் மற்றும் பதவி அவர்களை குருடர்களாக்கி மக்கள் கூட்டம் தம்முடன் இருப்பதால் எதற்கும் கவலைபடத் தேவையில்லை எனவும், தாம் பாதுகாப்பாக இருப்பதாகவும் நினைத்துக் கொள்கின்றனர். 

ஆனால் நிச்சயமாக, அல்லாஹ் இதை வெறுக்கிறான், நிச்சயமாக இந்த வகையான மக்கள் மற்றும் தலைவர்கள் மக்களுக்கு தவறான வழிகாட்டுதல்களை வழங்குவதில் தொடர்ந்தால், அவர்களிடமிருந்து சத்தியத்தை மற்றும் உண்மையான இறைப் போதனைகளை  மறைக்க முயன்றால், பிறகு, இந்த வகையான  தலைவர்கள், தங்கள் செயல்களின் விளைவுகளை அல்லாஹ்விடம் சந்திக்க வேண்டி வரும். அவர்கள் மறுமையில் மட்டுமல்ல இவ்வுலகிலேயே, அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் உண்மைத் தன்மைக்கான ஆன்மீக வெளிப்பாடு தெளிவாகும் வரை துன்பப்படுவார்கள். அதன் பிறகு,  இறைவன் புறமிருந்து வந்த அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவர் யார்?, பரிசுத்த ஆவியால், ரூஹுல் குதுஸ்சினால்  உதவியளிக்கப்பட்டவர் அல்லது அல்லாஹ்வினால் தனது தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு மட்டுமே வழங்கும் மறைவான ஞானத்தை அறியாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? என்பது பற்றியும் மக்களிடையே எந்த ஐயமும் இல்லாமலாகிவிடும்.

அல்லாஹ் அவனது வழிகாட்டுதலுக்காக தாகத்துடன் இருக்கும் அனைத்து உள்ளங்களையும் திறந்து அவர்கள் உண்மையை கண்டு உணர்ந்ததன் பின் ஏற்றுக்கொள்வதற்கும் அவர்களுக்கு வழிகாட்டட்டுமாக! நயவஞ்சகர்கள். அல்லாஹ்வின் பாதையை கோணலாக்க விரும்புபவர் மற்றும் மக்களை தவறாக வழிநடத்தி செல்வோர் திருப்தி அடையாவிட்டாலும் உண்மையே நிச்சயம் வெற்றி கொள்ளும். இன்ஷா-அல்லாஹ். ஆமீன்."

ஆதாரம் : 31.7.2015 ஜும்மா குத்பா

தலைப்பு : பயபக்தியும் அல்லாஹ்விற்கு அடிபணிதலும்