இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இமாம் மற்றும் உண்மையான வழிகாட்டல் பகுதி -2

(02 ஜூன் 2023 ~12 துல்கஹ்தா - ஹிஜிரி 1444 )

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ் (அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றைப் ஓதிய பிறகு,

இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இமாம் மற்றும் உண்மையான வழிகாட்டல்- பகுதி -2

என்ற தலைப்பில், இறை வெளிப்பாட்டின் மூலம் பெறப்பட்ட தனது குத்பாவின் பக்கம் கவனம் செலுத்தினார்கள்.

يَوْمَ نَدْعُو كُلَّ أُنَاسٍ بِإِمَامِهِمْ ۖ فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَٰئِكَ يَقْرَءُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا

நாம் எல்லா மக்களையும் அவர்களது (அவரவர்களுடைய) இமாம்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அவர்கள் தம் ஏடுகளை (மனமகிழ்ச்சியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (17:72)

அல்ஹம்துலில்லாஹ் ஸும்ம அல்ஹம்துலில்லாஹ், நான் உங்களுக்கு முன் தற்போது ஓதியக் காட்டிய வசனத்தின் விளக்கம் குறித்த எனது தலைப்பின் இரண்டாம் பகுதியை இன்றும் தொடர்கிறேன்.

அல்லாஹ் கூறுகிறான்: "எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அவர்கள் தம் ஏடுகளை (மனமகிழ்ச்சியுடன்) படிப்பார்கள்" - நம்பிக்கை கொள்வதன் பரீட்சையில் அதாவது சோதனையில் வெற்றியடைவதற்கும், அனைத்து சோதனைகளையும் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும் குர்ஆன் கூறும் உருவகம் இதுவாகும். வலது கையில் பெறுவது இறையருளின் சின்னத்தைக் குறிக்கின்ற அதே சமயம், இடது கையில் பெறுவது தண்டனையைக் குறிக்கிறது. மேலும் மனித உடலில், வலது பக்கமானது இடதுபுறத்தை விடவும் மேன்மையை அனுபவிக்கிறது, ஏனெனில் வலது பக்க திசுக்கள் பொதுவாகவே இடதுபுறத்தை விடவும் வலிமையானவையாகும்.

இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி ஒருவரது செயல்களின் பதிவேட்டை ஒருவரது வலது கையில் கொடுப்பது என்பதானது, அது அவரது செயல்களுக்கு ஒப்புதல் தெரிவிக்கின்ற, ஒரு சாதகமான மற்றும் அருள் பாலிக்கப்பட்ட பதிவேடாக இருக்கும், என்பதனைக் குறிக்கின்றது. மேற்கொண்டு வலது கை வலிமை மற்றும் சக்தியைக் குறிக்கிறது. சர்வவல்லமையுள்ள அல்லாஹ் திருக்குர்ஆனில் சூரா அல்-ஹாக்காவில், இறைத் தூதர் தனது இறை வெளிப்பாடுகள் குறித்து பொய் கூறியிருந்தால், நிச்சயமாக அவன் வலது கையால் அவரைப் பிடித்திருப்பான், அவரது நாடி நரம்பை அறுத்திருப்பான் என்று தெளிவாகக் கூறியுள்ளான்.

ஆகவே, இது அல்லாஹ்வின் தீர்க்கதரிசியாகிய ஒருவரது உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான தெளிவான வாதமாகும், ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் பொய்களைப்
பரப்புபவர்களாக இருந்திருந்தால், அல்லாஹ்வின் வலிமைமிக்க கரமானது அவரதுத் தொண்டையைப் பிடித்துத் தரித்திருக்கும், அதனால் அவர் நிச்சயமாக ஒரு பலவந்தமான மரணத்தைச் சந்தித்திருப்பார், மேலும் அவரது அனைத்து வேலைகளும், குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மேற்கொண்ட அவரது முக்கியமான பணிகளும் ஒரு பொய் நபியின் தலைவிதியில் ஒன்று மற்றதாக துண்டு துண்டாகப் போயிருக்கும். மேலும், நபித்துவத்திற்கு உரிமை கோரும் அனைவருக்கும் இது பொருந்தும். இன்னும் (அல்லாஹ்வின் பெயரால்) பொய்யை புனைந்து கூறுகின்ற, பொய்யாக வாதம் செய்பவர்கள் அனைவருக்கும் இறைவனின் அதேத் தண்டனை காத்திருக்கிறது.

ஆகவே, நம்பிக்கை கொண்டவர்கள் தங்களது பதிவேடுகளை வலது கைகளில் கொண்டிருப்பது என்பதானது, அவர்கள் நல்லொழுக்கத்தை உறுதியுடனும், தீர்மானத்துடனும் பற்றி பிடித்திருப்பதைக் குறிக்கின்ற அதே வேளையில், நிராகரிப்பவர்கள் தங்களது பதிவேடுகளை இடது கைகளில் கொண்டிருப்பது என்பதானது, அவர்கள் தேவையான வலிமையுடனும், மிகுந்த ஆர்வம் மற்றும் வைராக்கியத்துடன் நல்லொழுக்கத்திற்காகப் பாடுபடவில்லை என்பதைக் குறிக்கின்றது. அடுத்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்:

وَمَن كَانَ فِي هَٰذِهِ أَعْمَىٰ فَهُوَ فِي الْآخِرَةِ أَعْمَىٰ وَأَضَلُّ سَبِيلًا

" எவர் இவ்வுலகில் குருடராக இருக்கிறாரோ, அவர் மறுமையிலும் குருடராகவே இருப்பார். இன்னும் அவர் நேரிய பாதையை விட்டு மிகவும் வழிதவறியவராகவும் இருப்பார்."

அதாவது, அல்லாஹ்வின் அத்தாட்சிகளை கண்டு கொள்ளாமல், அவனையும், அவன் தேர்ந்தெடுத்து அனுப்பும் தூதரையும் நம்ப மறுப்பவர்கள் மறுமையில் குருடர்களாகவே இருப்பார்கள், மேலும் இந்தக் குருட்டுத்தன்மையானது அவர்களை இஸ்லாமாகிய அல்லாஹ்வின் பாதையிலிருந்தும், உண்மையான நேர்வழியில் இருந்தும் வெகு தூரம் வழிதவறச் செய்து விடுகிறது.

ஆகவே, நியாயத்தீர்ப்பு நாளில், ஒளியைப் பெற்ற மக்கள் தங்களது பதிவேட்டைப் பெற்றுக்கொண்டு , அவற்றைப் படித்துப் பார்ப்பார்கள். பிறகு, அல்லாஹ்வின் அருள்களுக்காக மகிழ்ச்சியுடன் நன்றி செலுத்துவார்கள். ஒளியை இழந்து, அறியாமை எனும் இருளை அடைந்த மக்களின் நிலை என்ன? அவர்கள் ஏற்கனவே இவ்வுலக வாழ்வில் குருடர்களாகவே இருந்தார்கள், அதனால் மறுமை நாளின் போதும் அவர்கள் இறைவனது முகத்தின் ஒளியைப் பெற மாட்டார்கள். அதற்கு மாறாக, அவர்கள் எவ்வளவு காலம் பயணித்திருக்கின்றார்களோ, அவ்வளவு தூரம் அவர்கள் இறைப் பாதையிலிருந்தும் விலகிச் சென்றிருப்பதைக் கண்டுகொள்வார்கள்.

அல்லாஹ்வின் அத்தாட்சிகளைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்காமல், அவற்றால் பயனடையாதவர்களை குறித்து "குருடர்கள்" என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அத்தகைய மக்கள், மறுமை வாழ்விலும் கூட ஆன்மீக குருடர்களாகவே இருப்பார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் தெளிவுபடுத்தியுள்ளதாவது, எவனொருவன் அவனது நினைவு கூறுதலை விட்டும் விலகிக் கொள்கிறானோ, அதாவது அவனுடைய திருக்குர்ஆனின் மீது நம்பிக்கைக் கொள்ளாமலோ அல்லது அதன் போதனையின்படி செயல்படாமலோ இருப்பானோ, அப்படிப்பட்டவன் வழிதவறிச் செல்வான். எவர் அல்லாஹ்வை நினைவுகூருவதை விட்டும் விலகிச் செல்கிறாரோ அவர், வருந்துகின்ற கடினமானதொரு வாழ்வை பெற்றுக் கொள்வார். மேலும் மறுமை நாளில் அல்லாஹ் அவர்களைக் குருடர்களாகவே எழுப்புவான்.

இவ்வுலக வாழ்வில் அல்லாஹ்வை புறக்கணித்து, மறந்து போன நிலைக்கு சென்று, தனது ஆன்மீக வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துகின்ற அல்லது தடை செய்யக் கூடிய வாழ்க்கையை மேற்கொள்பவன், அதன் காரணமாக வானத்தின் ஒளியை தாமாகவே இழந்து போய், மறுமையில் அவரது இரண்டாவது பிறப்பின் போது - அதாவது உயிர்த்தெழுதலின் போது குருடராகவேப் பிறப்பார்.

இது ஏனென்றால், அடுத்த உலகில் அதாவது மறுமையில் மிகவும் ஆன்மீக வளர்ச்சியடைந்த ஆன்மாவிற்கு ஓர் உடலாக செயல்படும் அவரது இந்த வாழ்வின் அவரது ஆன்மாவானது, குருடாகி விட்டது; அவர் இவ்வுலகில் பாவகாரமான ஒரு வாழ்க்கையை நடத்தியதே இதற்குக் காரணமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தை தெளிவானப் பார்வையில் வழங்கும் அந்த நாளில் - இறைவனின் நினைவூட்டல் அதாவது திருக் குர்ஆன் வந்த போது, அதன் பக்கம் தமது கண்கள் மூடியிருந்தவர்களுக்கு, அதனை செவி மடுப்பதை சகித்துக் கொள்ள முடியாதவர்களுக்கு, அவ்வாறான மக்கள் நிச்சயமாக பெரும் வேதனையில் இருப்பார்கள். ஒரு நபி அல்லது தீர்க்கதரிசி கொண்டு வருகின்ற ஒவ்வொரு செய்தியும் வடிவத்தில் புதியதாக இருந்தாலும், அதன் பொருளிலும், அதன் சாராம்சத்திலும் அதேப் பழைய செய்தியை தான் கொண்டு வருகிறார்.

இறைவனிடம் இருந்து வருகைத் தருகின்ற இறை நேசர்கள், மறைந்திருக்கும் பொக்கிஷங்களை வெளிப்படுத்தக் கூடிய அல்லது எதிர்காலத்தை வெளிப்படுத்தக் கூடிய அல்லது ஆண்களிடம் இருந்து வேறுபட்ட இயல்புடைய எதையேனும் வாதம் செய்பவர்களை போன்று பாசாங்கு செய்யக் கூடிய இழிவான ஜோதிடர்களைப் போன்றல்ல. அவர்கள் சத்தியத்தின் இறைவனது மாபெரும் பொக்கிஷங்களைக் கையாளுகிறார்கள், அத்தகையப் பொக்கிஷங்கள் அவர்களுடையதல்ல, மாறாக அல்லாஹ்வுக்கே உரியதாகும்.

அவர்கள் உயர்ந்த விஷயங்களில் அதிக நுண்ணறிவைக் கொண்டுள்ளனர், ஆனால் அந்த நுண்ணறிவு அவர்களின் சொந்த ஞானத்தால் கிடைத்தது அல்ல, மாறாக, இறைவனின் தூண்டுதலாலேயே கிடைத்ததாகும்; அவர்கள் மற்ற மனிதர்கள் கொண்டிருப்பதைப் போன்றே சதையையும் இரத்தத்தையும் கொண்டவர்கள். மேலும் அவர்களின் வார்த்தைகள் மற்றும் போதனைகளின் உன்னதத் தன்மையானது இறைவனின் கிருபையின் மூலம் அவர்களிடமும், அவற்றைக் கேட்பவர்களிடமும் தோன்றி விடுகிறது. ஆகவே, இறைவனிடம் இருந்து வருகைத் தருகின்ற இறை நேசர்களை சாதாரண மனிதர்களுடன் ஒப்பிட்டு விடாதீர்கள்.

மனிதகுலத்தின் இரத்தத்தையே அவர்கள் பகிர்ந்து கொண்டபோதிலும், அவர்களின் ஆன்மீக இயல்பானது மிகவும் வேறுபட்டதாகும். இறைவனே தனது தூதர்களைத் தேர்ந்தெடுக்கிறான். ஆகவே குருட்டுத்தன்மையானது அவர்களது பண்பின் ஒரு பகுதியாக இருப்பதில்லை, ஏனென்றால் ஷைத்தான்களுக்கு அவர்கள் இரையாகி விடாதவாறு அல்லாஹ் அவர்களை பாதுகாக்கின்றான். ஆகவே, "பார்வைகொண்டவர்களின்" கருத்து மற்றும் பகுப்பாய்வு என்பது "குருடர்களில்" இருந்தும் மிகவும் வேறுபட்டதாகும். இறைநேசர்கள், மனிதர்களாகவே இருந்தபோதிலும் கூட சாமானியர்களிடம் இல்லாத ஓர் உயர்ந்த ஒளியை தம்முடன் சுமந்து செல்கிறார்கள். அவர்கள் மனிதர்களாகவே இருந்தபோதிலும் கூட , அவர்கள் மற்ற மனிதர்களைப் போல் அல்லாமல், அவர்கள் பெரும் மதிப்பிற்க்குத் தகுதியானவர்கள். ஆயினும், அவர்கள் வணக்கத்திற்குரியவர்கள் அல்ல, ஏனென்றால் அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன் ஆவான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிராகரிப்பாளர்களுக்கு முன்னால் ஓதிய இறை வெளிப்பாடுகளின் மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளாமல், நபி(ஸல்) அவர்கள் அதன்மூலம் அவ்வாறான வார்த்தைகளை சேகரித்து, அவற்றை ஒவ்வொரு வார்த்தையாக உருவாக்கி இறை வெளிப்பாடுகளாக வெளியிடுகிறார் என்று கூறி, அவர்கள் நபி(ஸல்) அவர்களை தொந்தரவு செய்து வந்தார்கள், திருக்குர்ஆன் போன்ற வார்த்தைகளின் தொகுப்பை எவராலும் ஒருபோதும் உருவாக்கிவிடமுடியாது; மனிதனின் வேறு எந்த ஒரு தொகுப்பும் குர்ஆனின் அழகு, ஆற்றல் மற்றும் ஆன்மீக நுண்ணறிவுக்கு சமமாக இருக்கவே முடியாது. இறைத் தூண்டுதல் இல்லாமல், ஒரு நபர், தனது சொந்த இலக்கிய மற்றும் தத்துவப் பயிற்சியைக் கொண்டு, திருக் குர்ஆன் போன்ற ஒரு வேதத்தை உருவாக்கிட முடியும் என்று கருதுவது முற்றிலும் சாத்தியமற்றதாகும்.

ஆகவே அல்லாஹ்விடமிருந்து ஓர் இமாம் வரும்போது, அவர் ஒரு ஒளியுடன் வருகை தருகின்றார். அதனைக் கொண்டு உண்மையான நம்பிக்கையாளர்கள் தங்களது அறிவைக் கொண்டு கருத்தூன்றி சிந்திக்க வேண்டும். இன்னும் அல்லாஹ்வின் பக்கம் திரும்ப வேண்டும். அதன் காரணமாக அல்லாஹ் அவர்களுக்கு அவனுடைய தூதரின் உண்மைத்தன்மையை அடையாளம் கண்டு கொள்ளும் ஆன்மீக நுண்ணறிவை வழங்குவான். இந்த தூதர் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இமாம் ஆவார். (இந்த) பூமியில் அவனுடைய கலீஃபா ஆவார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கலீஃபா(தலைவர்) அல்ல. மாறாக, அல்லாஹ்வால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கலீஃபாவும், அல்லாஹ் தனது ரூஹுல் குத்தூஸ் ஐக் கொண்டு அனுப்பப்பட்டவரும் ஆவார்.

ஆகவே, ஒரு நபர், குறிப்பாக உண்மையை நேர்மையுடன் தேடக் கூடிய மற்றும், ஓர் உண்மையான நம்பிக்கை கொண்டவராக ஆக வேண்டும் என்று விரும்பக் கூடிய(ஒரு)வர், தூதரை அடையாளம் கண்டு கொள்வதற்காகவும், அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அருளையும் பெறவேண்டும் என்பதற்காகவும் தனது ஆன்மீக நுண்ணறிவை (ஆழ்ந்த அறிவுத் திறனை) பயன்படுத்த வேண்டும். அல்லாஹ்வின் அத்தாட்சிகள் மற்றும் அவனது இறைவெளிப்பாடுகள் ஆகியவற்றின் முன் குருடராகிவிடாதவாறு அவர் (தன்னை) பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேலும், நம்பிக்கை கொண்டதற்கு பிறகும் கூட அல்லாஹ்விடமிருந்து வரக் கூடிய உண்மையின் மீது ஷைத்தானிடமிருந்து வரக் கூடிய சந்தேகங்கள் அவரது யக்கீன் -நிச்சய உறுதியில் / உறுதிப்பாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது.

நாம் பௌதீக பார்வையை இழந்த பார்வையற்ற நபர் ஒருவர் - அறுவைசிகிச்சை செய்துக் கொண்டு பார்க்கும் திறனை மீண்டும் அவர் பெற்றுக் கொள்கிறார் என்பதை பார்க்கும் போது, அவ்விஷயமானது ஓர் அறிவுபூர்வமாக சிந்தனையை தன்னகத்தேக் கொண்டுள்ளது, அதாவது ஒரு நபர் தனது (ஆரம்ப) கால நம்பிக்கை குறைபாட்டிற்கு பிறகு, எந்த சமயத்திலும் நம்பிக்கை மற்றும் ஆன்மீக தெளிவைப் பெற முடியும். அது போன்றே, வேறொருவர் நம்பிக்கை கொண்ட பிறகும் (கூட), ஈமானை இழந்து குருடராகி நேர் வழியை இழக்க நேரிடும் என்பதும் உண்மையாகும்.

ஆகவே நேர்மையான நம்பிக்கையாளர்கள் ஷைத்தானுக்கு பலியாகி விடாமல் (தங்களை) பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் உண்மையின் மீது உங்களை நிலைநிறுத்திக் கொண்டு, உங்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்வதற்காக அல்லாஹ் உங்களுக்கு அனுப்பியுள்ள இறைச் செய்திகள் மற்றும் தூதருடன் இணைந்திருக்க வேண்டும்.

ஒரு நம்பிக்கையாளர், ஒரு நம்பிக்கை கொண்டவருக்கு அவசியமான அனைத்து சீர்திருத்தங்களுடனும் சோதனைகளின் நெருப்பைக் கடந்து செல்லாத வரை அவர் ஒரு உண்மையான நம்பிக்கையாளர் ஆகமுடியாது. அல்லாஹ் அவரை சோதிப்பான், மேலும் உண்மையில் நேர்மையாளர்கள் (ஆக இருப்பவர்கள்), அவர்கள் ஒருபோதும் உண்மையைக் கைவிட்டுவிட மாட்டார்கள், எப்போதும் நேரான பாதையின் மீதே இருப்பார்கள். அல்லாஹ் நம்பிக்கையாளர்களை எல்லா வகையிலும் சோதிக்கிறான். ஆரம்பத்தில் தெளிவினை [ஆன்மீக நுண்ணறிவினை] கண்டவர்களும் இருக்கிறார்கள், ஆயினும் அவர்கள், பிறகு குருடர்களாக மாறி விடுகிறார்கள், அதே சமயம், குருடர்களும் இருக்கிறார்கள், ஆயினும் அவர்கள், பிறகு தெளிவினைப் பெற்று, அல்லாஹ்வின் பாதையை கைவிட்டு விடுவதில்லை. உண்மையின் பாதையில் அவர்கள் பல சிரமங்களை சந்தித்த போதிலும், அல்லாஹ்வின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக அல்லாஹ் அவர்களை அவர்களின் சோதனைகளில் வெற்றி பெறச்செய்கிறான். அல்லாஹ் அவர்களிடம் அனுப்பிய இமாமை அவர்கள் அடையாளம் கண்டுகொண்டு, அவரைப் பின்பற்றியவர்களாய் இம்மையிலும் மறுமையிலும் இரட்சிப்பை அடைகிறார்கள்.

ஆகவே, இன்று அல்லாஹ் தனது தூதராகிய கலீஃபத்துல்லாஹ்வை உங்கள் மத்தியில் அனுப்பியிருக்கும் போது, ஷைத்தான் உங்களைக் குருடாக்கி உங்களை இந்தப் பாதையில் இருந்தும் விலகிவிடாமல் இருக்கச் செய்வது உங்கள் ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். அல்லாஹ்விடம் உண்மையுடன் இருப்பவருக்கு அல்லாஹ் நிச்சயமாக வழிகாட்டி, தீய துன்பங்களிலிருந்தும் அவரைப் பாதுகாத்து, அவனிடமிருந்து வருகின்ற உள்ளார்ந்த அமைதியை அதாவது ஸகீனாவை வழங்குவான்,

இது அல்லாஹ் மீதான அவரது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. இன்னும், எந்த சந்தேகமும் இல்லாமல் அவருக்கு உறுதியையும் வழங்குகிறது. ஏனென்றால், அல்லாஹ் அவருக்காக ஒதுக்கியிருப்பது என்பதானது உலகம் கொண்டிருக்கும் அனைத்துப் பொக்கிஷங்களையும் விட சிறந்ததாகும். இன்ஷா அல்லாஹ்.

ஆகவே, என்னைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் - அதைப் போன்று, மற்ற முஸ்லிம்களும், உண்மையைத் தேடக்கூடிய மற்றவர்களும் - அல்லாஹ் தனது வழிகாட்டிகளின் வருகையைப் பற்றிய நற்செய்தியை- திருக்குர்ஆனில் அவர்களுக்கு வழங்கியுள்ள உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். அல்லாஹ்வே அந்த வழிகாட்டிகளை, அந்த இமாம்களை அனுப்புகிறான், ஏனெனில் அவர்களே இஸ்லாத்தின் மகிமையை அதன் சிகரத்திற்கு உயர்த்தக் கூடிய அத்தகைய சீர்திருத்தவாதிகளாக இருக்கின்றார்கள். இன்ஷா அல்லாஹ், ஆமீன்.