ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தின் நோக்கங்கள்- பாகம் 1

ஆட்சிமுறையில் புரட்சி என்பதே இந்த உலகில் ஜமாஅத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தின் குறிக்கோளாகும். (‘எழுந்து புதிய உலகத்தை உருவாக்குவீராக’ என்பது இதன் அர்த்தங்களில் ஒன்றாகும்').

இன்று நாம் அல்லாஹ்(ஸுப்ஹா)வின் கட்டளைகளுக்கும், அவனது தூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கும் (மாற்றமான) எதிர்ப்புணர்வு கொண்டுள்ள

மற்றும், அதனால் மனிதகுலத்தின் துன்பத்திற்கு காரணமாகியுள்ள (அத்தகைய) ஆட்சி(களை) கண்டுவருகிறோம்.

மனிதனின் துன்பங்களுக்கு காரணமானதும், அல்லாஹ் (சுப்ஹான)வின் கட்டளைகளுக்கும், அவனது தூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள ஆட்சி(களை) இன்று நாம் கண்டுவருகிறோம். ஆகவே, இந்த மோசமான ஆட்சி(கள்) அனைத்தும் சர்வவல்லமையுள்ள இறைவனின் (ஒரு) மனிதரைக் கொண்டு மாற்றப்பட வேண்டும். (வரக்கூடிய) அவர் இறை அறிவுறுத்தலின்படி [அல்லாஹ் (சுப்ஹான)] வின் கீழ் [இந்த உலகத்தை] நீதியுடன் ஆட்சி செய்ய வருவதோடு, அவர் இறைவனால், தன்புறமிருந்து தேர்வு செய்யப்பட்டவர்[உயர்த்தப்பட்டவர்/ தேர்ந்தெடுக்கப்பட்டவர்] ஆவார். அவர் இறை


வழிகாட்டுதல்களை மட்டுமேப் பின்பற்றுவார் (அதல்லாமல் வேறெதெனையும் பின்பற்றமாட்டார்). குறிப்பாக நாம் வாழும் இக்காலத்தில், மனிதன் [தற்காலிக-இவ்வுலக] அதிகாரத்துடன் மிகவும் ஒன்றிணைந்திருக்கிறான். அதிகாரத்தில் இருப்பவர்களோ அந்த அதிகாரத்தை விட்டுவிட விரும்பவில்லை. அதே வேளையில் மற்றவர்களோ இந்த தற்காலிக உலகின் இன்பங்களுடன் ஒன்றிணைந்திருக்கிறார்கள். ஷைத்தான் அவர்களை கவர்ந்துள்ள காரியங்களுக்கு அதிக நேரம் கொடுப்பதற்காக அவர்கள் இறைப் போதனைகளை (தமது)கால்களால் மிதித்து, துச்சமாக்கி விட்டார்கள்.

ஆகவே இது அறிவுசார், ஒழுக்கம், தொழில்நுட்ப, சமூக, பொருளாதார, அரசியல், ஆன்மீக மற்றும் மனித வாழ்வை மறுசீரமைத்தல் ஆகிய வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் தலைமைத்துவ மாற்றத்தை குறிக்கிறது. அதனால் இது மனிதகுலத்தின் வழிகாட்டுதலுக்காக அல்லாஹ் (சுப்ஹா)வால் அருளப்பட்ட இலட்சியங்களுக்கும் மதிப்புகளுக்கும் பொருந்துமாறு உள்ளது. அல்லாஹ்‌(சுப்ஹா) வின் தயவை ஈர்க்கும் அத்தகையதோர் உன்னதமான இலக்கை அடைய நாம் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். [இறை தயவு என்பது மின்சாதன உபகரணங்கள் போன்ற பௌதீக அனுகூலம் (வசதிகள்) அல்ல: குக்கர்கள், குளிர்சாதன பெட்டிகள் - அல்லது 5 முதல் 6 கார்கள் போன்றவைகளல்ல, இவ்வுலக உதவிகளல்ல என்பதை நீங்கள் இங்கே புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இந்த உலகத்திலும் மறுமையிலும் [அல்லாஹ் (சுப்ஹான) வின்] இறை தயவுகள் உங்களுக்கு கிடைக்கும்; மிகவும் சக்திவாய்ந்த அத்தகைய தயவுகள் உங்கள் நரம்புகளிலும் உங்கள் இரத்தத்திலும் சுற்றிக் கொண்டிருக்கும் ஷைத்தான் என்று அழைக்கப்படும் வைரஸ் (கிருமியை) அவை கொன்றுவிடும். அதே நேரத்தில், தூய்மையான, சுத்தமான மற்றொரு இரத்தம் உங்கள் நரம்புகளில் சுற்றிக்கொண்டிருக்கும், பின்னர் ஷைத்தானால் நிரப்பப்பட்ட துளைகள் அனைத்தும் திறக்கப்படும் அளவிற்கு உங்கள் இதயங்கள் மாறிவிடும். உங்கள் இருதயங்களை கறுப்பாக்கியதும், அதிகமான பொருட்களையும், பணத்தையும் அடைய பொறாமை, வெறுப்பு, உணவின் மீதான பேரவா ஆகியவற்றால் அதை தூண்டச் செய்ததும் நிச்சயமாக ஷைத்தானாவான். எனவேதான் தூய்மையற்ற அவ்வகையான இரத்தத்தை உங்கள் இதயம் உந்தித்தள்ளும்போது உங்கள் மூளை வழியாக அந்த இரத்தம் சுழன்று நீங்கள் உலக சக்திக்காக போராடத் தொடங்குகிறீர்கள், அதன் பின்னர் மோசடி, ஊழல், தூய்மையற்ற செல்வம், போதைப்பொருளைக் கையாளுதல் – (அதாவது) உங்களை செல்வந்தராக்கிக் கொள்ள அப்பாவி இளைஞர்களை இந்த போதைமருந்து மூலம் கொல்வது போன்றவை- பொதுவான செய்தியாகிவிட்டது.

மேலும் போதைப்பொருள் மாஃபியாக்கள் மீதான பெயரளவிலானப் போர் அவர்களுக்கு எதிரான ஒரு “கசப்பான சண்டை” அதிகளவில் நடைபெறுகின்றன - – (ஆயினும்)எல்லா திசைகளிலிருந்தும் போதை மருந்துகள் வந்து கொண்டிருப்பதையும் நீங்கள் அதிகளவில் காண்கிறீர்கள். அதிகாரப் பசியுள்ள இந்த மக்கள் வேடிக்கைக்காகவும் துஷ்பிரயோகம் செய்யவும் அதிகாரத்தில் இருக்கவும் எதையும் செய்யலாம், துரதிர்ஷ்டவசமானவர்கள் மீது அடக்குமுறையைப் பயன்படுத்தி, அவர்களிடம் தவறான வாக்குறுதிகளை அளிக்கின்றனர்.

எனவே, அவர்கள் அதிகாரத்தில் இருக்க இவை அனைத்தையும் செய்கிறார்கள், பின்னர் ஒருசில நாட்களுக்குப் பிறகு [இந்த பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்ட பிறகு] மக்கள் தங்கள் துன்பங்களை மறந்துவிடுவதையும் ஐந்து ஆண்டுகளுக்கு அவர்களுக்கு எதிரான அநீதிகளையும் அடக்குமுறைகளையும் நீங்கள் காண்பீர்கள் அதிகாரத் தாகமாகமுடைய (இந்த மக்கள்) இவர்கள் மீண்டும் அதிகளவில் பொய்யான வாக்குறுதிகளுடன் அவர்களிடம் வரும்போது,பின்னர் இந்த வகையான மக்கள்[தேசம்] இந்த தகுதியற்ற [மக்களை / தலைவர்களை] மற்றும் திருடர்களை - அலி பாபா மற்றும் 40 திருடர்களின் கதையைப் போலவே - அதிகாரத்தில் அமர்த்திவிடுகிறார்கள். இது உலகம் முழுவதும் [எல்லா நாடுகளிலும்] என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதன் ஒரு சிறு பகுதியே.

எனவே, இந்த உலகம் முழுவதையும், மறந்திடாதவாறு இஸ்லாமிய நாடுகளையும் மாசுபடுத்துகின்ற இந்த அனைத்து அசுத்தத்தையும் எழுந்து கழுகித் தூய்மைப் படுத்த வேண்டிய அலைக்கான நேரம் வந்துவிட்டது, இதனால் நாம் இறுதியாக சுத்தமான காற்றை சுவாசிக்கின்றோம், ஆன்மீக ரீதியில் கூறுவதனால் நம்முடைய படைப்பாளன் நம்மைப் படைத்தபோது நமக்கு வழங்கிய தூய்மைக்கு ஒப்பானது. ஆகவே, இறைவன் நம்மைத் தூய்மையாகப் படைத்து, இந்த உலகத்திற்கு நம்மை அனுப்பினான். நாம் அனைவரும் நம்முடைய படைப்பாளனிடம் திரும்பிச் செல்லக்கூடிய ஒரு நாள் வரும் இன்ஷா அல்லாஹ் - பின்னர் அவனிடமிருந்து - நம்முடைய படைப்பாளனிடமிருந்து நாம் பெறப்போகும் மாபெரும் நித்திய வெகுமதியுடன் நாம் அவனிடம் ஒரு தூய்மையான நிலையில் திரும்ப வேண்டும், அங்கு அவன் நம்மீது மகிழ்ச்சி அடைவான் நாமும் அவனிடம் மகிழ்ச்சி அடைவோம்.

எனவே ஜமாஅத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தின் நோக்கம் அல்லாஹ் (சுப்ஹான) வின் அனைத்து தூதர்களின் அதே நோக்கமாகும்:

هُوَ ٱلَّذِىٓ أَرۡسَلَ رَسُولَهُ ۥ بِٱلۡهُدَىٰ وَدِينِ ٱلۡحَقِّ لِيُظۡهِرَهُ ۥ عَلَى ٱلدِّينِ ڪُلِّهِۦ وَلَوۡ ڪَرِهَ ٱلۡمُشۡرِكُونَ

அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான். (அத்தவ்பா 9:34)

لَقَدۡ أَرۡسَلۡنَا رُسُلَنَا بِٱلۡبَيِّنَـٰتِ وَأَنزَلۡنَا مَعَهُمُ ٱلۡكِتَـٰبَ وَٱلۡمِيزَانَ لِيَقُومَ ٱلنَّاسُ بِٱلۡقِسۡطِ‌ۖ وَأَنزَلۡنَا ٱلۡحَدِيدَ فِيهِ بَأۡسٌ۬ شَدِيدٌ۬ وَمَنَـٰفِعُ لِلنَّاسِ وَلِيَعۡلَمَ ٱللَّهُ مَن يَنصُرُهُ ۥ وَرُسُلَهُ ۥ بِٱلۡغَيۡبِ‌ۚ إِنَّ ٱللَّهَ قَوِىٌّ عَزِيزٌ۬ ()

وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحً۬ا وَإِبۡرَٲهِيمَ وَجَعَلۡنَا فِى ذُرِّيَّتِهِمَا ٱلنُّبُوَّةَ وَٱلۡڪِتَـٰبَ‌ۖ فَمِنۡہُم مُّهۡتَدٍ۬‌ۖ وَڪَثِيرٌ۬ مِّنۡہُمۡ فَـٰسِقُونَ ()

நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம், அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம், இன்னும், இரும்பையும் படைத்தோம், அதில் கடும் அபாயமுமிருக்கிறது, எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்து) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன். அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம், இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம், (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு, எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர். (அல் ஹதீத்:25&26)

இந்த வசனங்களில், அல்லாஹ் தனது தூதர்களை நேரான பாதையுடனும், நல்ல சித்தாந்தத்துடனும் அனுப்புகிறான் என்பதை மக்களுக்கு அவன் புரிய வைக்கின்றான், இது மக்கள் தங்கள் படைப்பாளனை அறிந்து கொள்ள உதவுவதோடு அல்லாஹ்வுக்காக தூய்மையாக இருப்பதற்கான பாதையை எடுத்துச் செல்ல அவர்களுக்கு உதவுகிறது. இவ்வாறு, அனைத்து தூதர்களின் அடிப்படை குறிக்கோள் (பணி), ஏக இறைவனாகிய அல்லாஹ் (சுப்ஹான)வின் ஆட்சிக்கு அடிபணிதலின் பக்கம் அனைத்து மக்களையும், அவர்களது காலத்தின் மக்கள் ஒவ்வொருவரையும் கொண்டு வருவதாகும் என்று குர்ஆன் நமக்கு காட்டித்தருகிறது. அனைத்து நபிமார்களின், தூதர்களின் முத்திரையான ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களூக்குப் பிறகு, அந்த மாபெரும் தூதர் செய்த அந்த மாபெரும் பணியை தொடர பரிசுத்த ஆவியுடன் வரக்கூடிய இறைவனின் தூதர் மூலமாக இந்த பணி அவர்களின் உம்மத்தில் தொடர வேண்டும்,நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உதவியுடன் அரேபியாவில் ஒரு மாபெரும் ஆன்மீக புரட்சியைக் கொண்டு வந்தார்கள்.

அதைச் செய்வது நிச்சயமாக எளிதானதல்ல, ஆனால் பெரும் சோதனைகள், துன்புறுத்தல்கள், புறக்கணிப்புகள், அதேப் போன்று நபி(ஸல்) அவர்களை படுகொலை செய்வதற்கான திட்டங்கள் இருந்தபோதிலும், எதிரிகள் அவர்களது உறவினர்களையும் (அவர்களின் குடும்பத்தினரையும்), அவர்கள் மீது நம்பிக்கைக் கொண்ட (அவர்களுடைய சீடர்கள் / தோழர்களை)யும் கொன்ற போதிலும் கூட நபி(ஸல்) அவர்கள் விட்டு கொடுக்கவும் இல்லை, தைரியத்தை இழந்துவிடவு மில்லை.

ஆனால், அல்லாஹ்வின் அருளால், நபி(ஸல்) அவர்கள், அதில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சிலைக்கு பிரார்த்தனை செய்த காட்டுமிராண்டித்தனமான மக்களை கொண்டிருந்த இந்த அரேபியாவை மாற்றியமைப்பதில் வெற்றி பெற்றார்கள் ஏனென்றால் புனித கஅபாவின் எல்லைப் பகுதிக்குள் 365 சிலைகள் இருந்தன. அவர்களின் வாழ்க்கை விலங்குகளின் வாழ்க்கையை விட மோசமாக இருந்தது. அவர்கள் தங்கள் பெண் குழந்தைகளை கொன்றார்கள் [அவர்களை உயிருடன் புதைத்தார்கள்], பெண்களுக்கு கண்ணியமும் மதிப்பும் இல்லாமல் இருந்தது. மது பானம் பரவலாகி பாழாக்கியது; இன்றைய நிலையைப் போன்று போதைப்பொருளும் அதேபோன்று மதுபானமும் விளையாட்டுப் பகடைகளாய் இருந்தன. எனவே இந்த தீமைகள் அனைத்தும் அவர்களை விலங்குகளாக [விலங்குகளை விட மோசமாக] மாற்றின! அவர்களிடம் இருக்க வேண்டிய அனைத்து மனிதனின் மதிப்புக்களையும் அவர்கள் இழந்துபோனார்கள். ஆனால் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உதவியுடன் இந்த காட்டுமிராண்டித்தனமான அரேபியாவை- காட்டுமிராண்டிகளை -அவர்களில் பெரும்பாலோரை- அவர்களை மனித உணர்வுகளைக் கொண்ட மனிதர்களாக மாற்றிக்காட்டினார்கள்.

எனவே, நமது இன்றைய நாளில், நமது பணியும் எளிதானதல்ல; நமது எஜமானரான ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் காலத்தைப் போலவே நமக்குக் காத்திருக்கும் இந்த மாபெரும் சோதனைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் அல்லாஹ்வின் உதவியுடன், பொறுமையுடன்,நமது (ரப்) இறைவன் மீது நம்பிக்கையுடன் (முயலும்போது) எதுவும் சாத்தியமற்றதல்ல. இன்ஷா-அல்லாஹு தஆலா அல்-அஜீஸ், எது சாத்தியமற்றதோ அதுவும் சாத்தியமாகிவிடும். நம்முடைய படைப்பாளனிடம் இந்த முழுமையான நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும், மேலும் அவனிடம் மட்டுமே - அல்லாஹ் (தபாரக)விடம் மட்டுமேத் திரும்ப வேண்டும். (அப்போது) நீங்கள் வேறொரு உலகத்தைக் காண்பீர்கள், ஒரு வாள், ஆயுதம் அல்லது அணு குண்டை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்க மாட்டோம்.

நம்முடைய சொந்த போர்த் தளவாடங்கள் என்பது நேர்மையான பிரார்த்தனையும், வானிலிருந்து மழையைப் போல் கீழே இறங்கிக் கொண்டிருக்கும் இறை கட்டளைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படிதலை மெய்ப்பித்துக் காட்டுவதுமாகும். நாம் நமது படைப்பாளனுக்கு ஒரு கருவியாக மட்டுமே (செயல்பட்டுக் கொண்டு) இருப்போம், ஏனென்றால் நமக்கு [நம்மிடம் சுயமாக] எந்த சக்தியும் இல்லை.

அவனே [அல்லாஹ் -இவை] அனைத்தையும் செய்யக் கூடியவன் ஆவான்,

ஆயினும் (அது) நாம் அவனிடம் அதிகமாக பிரார்த்தனை செய்து நமது நம்பிக்கையை அவன்மீது வைத்து அவனுடைய கட்டளைகளையும், அதேபோன்று இந்த நூற்றாண்டில் ஆன்மீக புரட்சியை கொண்டுவருவதற்காக அவன் தேர்ந்தெடுத்த ஒருவருக்கு அவன் அனுப்புகின்ற (இறை)அறிவுறுத்தல்களையும் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆகும்.

எனவே இந்த ஆன்மீகப் புரட்சியுடன், இப்போது அதிகாரத்தில் உள்ள அனைவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை - ஏனென்றால் அவர்கள் அதிகாரத்தின் நாற்காலியில் அவர்களால் அமர முடியும் என்பதற்காக அதிகமான மக்களை தவறாக [நேர்மையின்மை-பொய்மையின் பக்கம்] மட்டுமே வழிநடத்தியுள்ளனர்.

இவ்வகையான வஞ்சகக்காரர்கள் - இந்த பொய்யர்கள் / மோசடி செய்பவர்கள் - அல்லாஹ் (சுப்ஹான)வின் படைப்பின் செலவில் அதிகாரத்தை பிடித்திருக்க எந்தவொரு உரிமையுமில்லை - மேலும் அனைத்து மனிதகுலத்தின் தலைமையும் அல்லாஹ்(சுப்ஹான)வால் நியமிக்கப்பட்ட வழிகாட்டுதலைக் கொண்டும் வாழ்க்கை முறையைக் கொண்டும் ஆட்சி செய்வோருடன் எஞ்சியிருக்க வேண்டும். இன்ஷா-அல்லாஹ்.

முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் இத்தகைய புரட்சியின் முக்கியத்துவத்தை மறந்துவிட்டார்கள் என்பது வருந்தத்தக்கது. அவர்களில் பெரும்பாலோர் இறைவனின் போதனைகளை ஓரத்தில் (ஒதுக்கி) வைத்துவிட்டார்கள், கெட்ட காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், அவர்கள் தங்கள் வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும் என்றும் இந்த இன்பமானது வேடிக்கை, வீண் விளையாட்டுக்கள், மது பானங்கள், போதை மருந்துகள் போன்றவற்றில் காணப்படுகிறது என்றும் கூறுகிறார்கள், முஸ்லிம்களும் கூட தங்களின் சுய இலாபங்களைப் பெற வேண்டும் என்பதற்காக அவர்களும் இந்த உலகத்தை பௌதீக ரீதியான கண்ணோட்டத்திலேயே காண்கிறார்கள், அது தனிப்பட்ட ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ இருந்தாலும் சரி,தங்களை ஷைத்தானிடத்தில் மாட்டிக்கொள்ள அனுமதித்துள்ளனர், ஆனால் உண்மையில் இவை அனைத்தும் யதார்த்தமானவை அல்ல. இஸ்லாம், முஸ்லிம்கள், நாம் அனைவரும் ஒரே உடல் என்பதையும், ஒவ்வொரு முஸ்லிமின் மையப்பகுதி என்பது அவனது / அவளது தீனில்-மார்க்கத்தில் தான் உள்ளது என்பதையும், தற்காலிகமான –இவ்வுலக\பௌதீக விஷயங்களைப் பின்தொடர்வதில் இல்லை என்பதையும் அவர்கள் உணரவில்லை. நமக்கு பௌதீக விஷயங்கள் தேவையில்லை என்று நான் கூறவில்லை. மாறாக, பூமியில் நம்முடைய சொந்த நிலைத்து நிற்றலுக்கும், நமது குடும்பங்களுக்கு உணவளிக்கவும் அடைக்கலம் வழங்கவும், இஸ்லாத்தை இன்னும் வலுவூட்ட அல்லாஹ்வின் பாதையில் பங்களிப்பு செய்வதற்கும் இது ஒரு குறிப்பிட்ட அளவிலேயேத் தேவையானதும் போதுமானதாகவும் இருக்கும்.

ஆனால் ஒரு குறிக்கோள்\ நோக்கமானது குர்ஆனில் தெளிவாக வறையறுக்கப்பட்டும், ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களால் தவறாமல் பின்பற்றப்பட்டு, அத்துடன் இப்பணியைத் தொடரும் பொறுப்பை உம்மத் பரம்பரையாக பெற்றுக்கொண்டபோதிலும், (அதற்கு மாற்றமாக) துரதிர்ஷ்டவசமாக, படிப்படியாக, முஸ்லிம்கள் (இன்று) தங்களது அசல் நோக்கத்தை ஒன்று நீர்க்கச்செய்துவிட்டனர் அல்லது உருமாற்றிவிட்டனர்; முஹம்மது(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத்-குடிபெயர்ந்ததையும், அரேபியாவில் குஃப்ர் தலைவர்களுக்கு எதிரான அவர்களின் போர்களையும் தவிர்த்து, மக்காவில் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கையின் ஆராம்பக் காலம் தொட்டு அதாவது தொடக்கதிலிருந்தே நபி(ஸல்) அவர்களின் உண்மையான குறிக்கோள்- உண்மையான நோக்கம்-குறித்து அது ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களாக இருப்பினும், அல்லது அவர்களது தோழர்களாக இருப்பினும், இன்னும் அவர்களது எதிரிகளாகவே இருந்தபோதிலும் எவருக்கும் (இந்த நோக்கத்தில்) எந்த சந்தேகமும் இருந்ததில்லை என்ற உண்மைக்கு சாட்சியம் அளிக்கின்ற பல சம்பவங்கள் உள்ளன. இது குறித்து, நான் உங்களுக்கு ஒரு சிறிய உதாரணத்தை (சம்பவத்தை) கூறுகிறேன்:

ஒரு சந்தர்ப்பத்தில், மக்காவின் இணைவைப்பு ஆட்சியாளர்களில் ஒருவரான உத்பா இப்னு ரபியா, நபி(ஸல்) அவர்கள் தனது பணியைக் கைவிடும்படி அவர்களை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றபோது, ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்கள் குர்ஆனின் ஒரு பகுதியை ஓதுவதைக் கேட்டார்.அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய பணியின் தன்மையை-நோக்கத்தை புரிந்து கொள்ள அவருக்கு இதுப் போதுமானதாக இருந்தது. [பின்னர் ஒருபோதும் அவர் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களை நம்பவில்லை என்றாலும், அந்த நேரத்தில்] ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களை குறைஷியர்கள் எதிர்த்தால் ஏற்படும் விளைவுகள் குறித்ததொரு சிந்தனை அவருக்கு இருந்தது.

உத்பா இப்னு ரபியா மற்ற குறைஷிய தலைவர்களிடம் திரும்பியபோது, ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களுக்கும், அவர்களது பிரச்சாரப்பணிக்கும் இடையில் ஒரு தடையாகிடக் கூடாது என்று அவர்களை (குறைஷ்யரை) சமாதானப்படுத்த முயன்றார், ஏனென்றால் நபி(ஸல்) அவர்களது செய்தி விரைவாக பரவும் என்பதை அந்த ஓதுதலைக் கேட்டதிலிருந்து, அவர் (உத்பா) புரிந்துக்கொண்டார் - இவ்வாறு இருந்தபோதிலும், அவருக்கு [உத்பா இப்னு ரபியா] அல்லாஹ்வின் நபி [ஹஸ்ரத் முஹம்மது] (ஸல்) அவர்கள் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால் அதற்குப் பிறகு, அவர் [உத்பா] என்ன செய்தார்? குறைஷியர்கள் நபி(ஸல்) அவர்களுக்கும் அவர்களது பிரச்சாரப்பணிக்கும் இடையில் வருவதைத் தடுக்க அவர் (உத்பா) முயன்றார், [நபி(ஸல்) அவர்களுடன் சண்டையிடுவதிலிருந்தும் அவர்களைத் (குறைஷியர்களைத்) தடுத்தார்]. ஆனால் மற்ற அரேபியர்கள் நபி(ஸல்) அவர்களைக் கொல்ல முற்பட்டால் பின்னர் குறைஷிய தலைவர்களின் மனதில் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் மரணத்தை (குறித்து எதையும்) வைத்திருக்க தேவையில்லை. ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் பிரச்சாரப்பணி பரவி, நபி(ஸல்) அவர்கள் அரேபியர்களை விட மேன்மையைப் பெற்றால், பின்னர் நபி(ஸல்) அவர்களுடைய ஆட்சி அரேபியர்களுக்கும் [குறைஷியர்களுக்கும்] கூட உரியதாகிவிடும் என்றும் அவர் (உத்பா) அவர்களிடம் (குறைஷிய தலைவர்களிடம்) கூறினார்.

வேறு வார்த்தைகளில் கூறினால், அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின் தூதராக ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் மீதும் (அவர்) நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்ற உண்மை இருந்த போதிலும், (மனதின்) அடி ஆழத்தில் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் சமயச் சொற்பொழிவு தனித்துவமானது என்பதையும், விரைவில் அரேபியாவின் அனைத்தும் அவர்களுடைய செய்தியால், வேறுவிதமாகக் கூறினால், அல்லாஹ்வின் செய்தியால் பலனடையும் என்பதையும் அவர் ஏற்கனவே (நன்றாக) அறிந்திருந்தார்.

அதேபோன்று, இன்று நம் எதிரிகள் நம்மை தாழ்ந்தவர்களாக கருதிக் கொள்கிறார்கள். ஆனால் நாளை அல்லாஹ் தனது ஒளியை, உண்மையின் வெளிச்சத்தையும், அவனது கலீஃபத்துல்லாஹ்வின் உண்மைத் தன்மையையும் பரவச்செய்யும்போது, இறை வெளிப்பாட்டை ஏளனம் செய்தவர்களின் [கண்களில் இருந்து] வழிவது [சாதாரண] கண்ணீராக இருக்காது, மாறாக இரத்தத்தின் கண்ணீராக இருக்கும். மக்களுக்கு தாமதமாகிப்போகும் முன்பே அல்லாஹ் அவர்களின் இதயங்களைத் திறப்பானாக!. 

இறை கருணை அவர்கள் மீது பொழிந்து, அவர்கள் மனந்திரும்பி தங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றிக் கொள்ளட்டுமாக!, மேலும் அவர்களின் நம்பிக்கை [ஈமான்] மற்றும் இஸ்லாம் பலப்படுத்தப் படட்டுமாக! இன்ஷா-அல்லாஹ், ஆமீன்.