உம்மத்தின் பரிபூரண முன்னேற்றத்திற்கான செயல்முறையும் புரட்சியும்

ஜூம்ஆ குத்பா நாள் 10-09-21-02 - ஸஃபர்-1443

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபிகளுக்கும், அனைத்து முஸ்லீம்களுக்கும் தனது ஸலாத்தினை தெரிவித்தப் பிறகு ஹஸ்ரத் ஃகலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷ்ஹத் தஅவூது மற்றும் சூரா ஃபாத்திஹா ஓதியப் பின் “உம்மத்தின் பரிபூரண முன்னேற்றத்திற்கான செயல்முறையும் புரட்சியும்” என்ற  தலைப்பில் தனது ஜுமுஆப் பேருரையை வழங்கினார்கள்,

நமது  நேசத்திற்க்குரிய இறைத்தூதர் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு ஒரு கவலை இருந்தது. இ(க்கவலையான)து அல்லாஹ்(தபார)விடம் இரவுகளின் போது பிரார்த்தனை செய்யுமாறு அன்னாரை விழித்திருக்க வைத்தது. அன்னார் தமது (உம்மத்)சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் பண்பு-நலனிற்காகவும் அதிகம் கவலையடைந்தார்கள். "அல்லாஹ்வே! எனது உம்மத்தே, எனது உம்மத்தே!" [யா ரப்பி உம்மத்தி! (என்று கூறி!], மன்றாடுவது அன்னாரது வழக்கமாகும். இது உண்மையில் நமது பாசத்திற்குரிய இறைத்தூதர்(ஸல்) அவர்களது நேசத்தின் அழைப்பும் முழக்கமுமாகும்; அன்னாரது உம்மத் மீதான அன்னாருக்கிருந்த ஆழமான நேசமானது அன்னாரை எப்போதும் அல்லாஹ்விடம் "உம்மத்தி, உம்மத்தி" என்று கூறி பிரார்த்திக்கச் செய்தது.

அவநம்பிக்கை மற்றும் அறியாமையின் வெறுப்பிலிருந்து, இந்த உன்னத திருத்தூதர்(ஸல்) அவர்கள் அம்மக்களை ஒரு பரிபூரணமான நம்பிக்கையை நோக்கி வழிநடத்திச் சென்றார்கள். அதற்காக அம்மக்கள் பல சோதனைகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது, அது அம்மக்களை உறுதியான [நிலையான] நம்பிக்கையாளர்களாக மாற்றியது. 

இஸ்லாமிய அடிப்படையில் நாம் உம்மத்(சமுதாயத்)தின் பரிணாமம் மற்றும் புரட்சியைப் பற்றி பேசும்போது, உலகத்திற்கு எதிராக போராடுவதற்கு ஆயுதங்களை உயர்த்தி(கையிலெடுத்து) அதாவது, வாள்கள், அல்லது துப்பாக்கிகள் அல்லது வேறு எந்த கொலைகார ஆயுதத்தின் பயத்தினைக் கொண்டு அல்லாஹ்வின் ஏகத்துவத்தின் பக்கம் மீட்டுக் கொண்டு வருவது போல் அல்ல.. இந்த புரட்சியை உலக வழியில் அல்லாமல் ஆன்மீக வழியிலேயே அதிகம் புரிந்து கொள்ள வேண்டும். 

இக்காலத்தின் ஒரு முஸ்லீமாகவும் கலீஃபத்துல்லாஹ்வாகவும் , அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியான் மற்றும் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களைப் பின்பற்றும் பணிவுள்ள அடியான் என்ற முறையிலும், உங்களது நஃப்ஸ்-ஏ-அம்மாரா (என்ற விலங்கின்) நிலையிலிருந்து உங்களை வெளியே கொண்டுவந்து படிப்படியாக உங்களை (நீங்கள் அல்லாஹ்விடம் முற்றிலும் திருப்தியடைந்தவாறும் அல்லாஹ் உங்களிடம் முழுமையாக திருப்தியும் அடைகின்ற]. முத்மயின்னா (என்ற) நிலைக்கு படிப்படியாகக் கொண்டு வருவது(உயர்த்துவது) இந்த சகாப்தத்தில் எனது கடமையாகும். 

இதற்காக, "ஓ, எங்களிடையே ஒரு கலீஃபாத்துல்லாஹ்     (தான்) இருக்கிறாரே, நான் அவரிடம் பிரார்த்திக்கச் சொல்வேன். அவருடைய பிரார்த்தனையே (எங்களுக்குப்) போதுமானதாகும்." (என்று கூறுவதுப்) போதுமானதாகாது:  இல்லை! இவ்வாறு ஒருபோதும் சிந்திக்க வேண்டாம். அல்லாஹ் உங்களது இதயத்தையும் அவனது வழியில் (நீங்கள்) செய்கின்ற முயற்சிகளையும் பார்க்கிறான். மிருகத்தனமான (நஃப்ஸ்-ஏ-அம்மாராவின்) நிலையிலிருந்து உங்களை அகற்றுவதற்காக அல்லாஹ் உங்களில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்,அதில் அவனுடன் இணங்கி இருக்கவும், உங்களது நம்பிக்கையுடனும்  அல்லாஹ் உங்களுக்கு பரிந்துரைத்த்திலிருந்தும் மற்றும் வழங்கியவற்றிலிருந்தும் நீங்கள் திருப்தி அடைவீர்கள். உங்கள் நம்பிக்கையுடன் இணக்கத்தில் ஆகுவதற்கு உங்களை வழிநடத்த உங்களில் ஒரு பெரும் மாற்றம் இருக்க வேண்டும் அங்கு அல்லாஹ் உங்களுக்கு பரிந்துரைத்த வழங்கியதை கொண்டு நீங்கள் திருப்தி அடைவீர்கள்.

உங்களுக்காக பிரார்த்தனை செய்ய கலீபாத்துல்லாஹ்விடம் கேட்பது உண்மையில் ஒரு பெரிய நல்லொழுக்கம், ஆயினும் நீங்களும் அல்லாஹ்வின் பாதையை ஒருபோதும் கைவிட்டுவிடக்கூடாது. இந்த பிரபஞ்சத்தின் ரப்பின் [இறைவனின்] கதவிற்கு முன் நீங்கள் ஒரு பிச்சைக்காரராக இருக்க வேண்டும். 

ஹஜ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத் இன்று (பல) பிரிவுகளாகவும், உட்பிரிவுகளாகவும் பிரிந்துபோய்விட்டது ஏனென்றால் அதற்கு காரணம் அவர்கள் நம்பிக்கையின் சாராம்சத்தின் அந்த சாவியை இழந்துபோய்விட்டார்கள், அதனால் அவர்கள் அல்லாஹ் மற்றும் அவனது தூதர்(ஸல்) அவர்களின் மீதான நம்பிக்கைக்கு உண்மையுடன் நடந்து கொள்ளவில்லை.அல்லாஹ் தனது படைப்புகள் அவனை வழிபடவும்,அவனை மட்டுமே வணங்கவும், ஒரு நல்ல எதிர்காலத்திற்காக அவனது வழிகாட்டுதலைத் தேடிக்கொள்ளவும் அவன் விரும்புகிறான்.

ஷைத்தானிடமிருந்து எவருமே விடுபட்டவர்களாகவோ அல்லது பாதுகாக்கப்பட்டவர்களாகவோ இல்லை. ஷைத்தான் எப்போதும் ஆஜராகி நம்பிக்கையாளர்களை தவறாக வழிநடத்திடவும் அவரை தீமையை செய்திடவும் தூண்டிவிடுகிறான், அதன் பின்னர் நம்பிக்கையாளர் (அதற்காக) மனம்வருந்தி அல்லாஹ்விடம் திரும்பி அவனிடம் பாவமன்னிப்பைத் தேடுகிறார். உண்மையில், அல்லாஹ்வே மாபெரும் மன்னிப்பாளனாவான். அவன் மன்னிப்பளிப்பதைப் போன்று எவரும் மன்னிக்க மாட்டார்கள். ஒருவர் அவனுக்கு மட்டுமே அஞ்சி தீமையை விடிடும் விலகிக் கொள்ள வேண்டும்.. அதன் காரணமாக சுவர்க்கத்தின் தோட்டங்கள் அவருக்கு வழங்கப்பட்டு விடலாம்.

இன்று, ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத் தன்னை மிகவும் சிரமத்தில் இருப்பதை காண்கிறது, ஏனென்றால் அது அல்லாஹ்வின் கயிற்றை விட்டுச் சென்று, உலக செல்வம், இன்பம் மற்றும் ஈர்ப்புகளின் கைகளில் ஆறுதலைப் பெறுகிறது. ஆனால் அதற்காக நாம் செயலற்று போய் இருக்க வேண்டும் சூழ்நிலை சீர்கெட்டு போய்விடட்டும் என்பதுதான் அர்த்தமா? இல்லை!

தீமை யாரை வேண்டுமானாலும் தீண்டலாம். எவரும் குறைபாடற்றவர்களாக இல்லை, ஆயினும் (உங்களில்) மிகவும் கண்ணியத்திர்க்குரிய நபர் யாரென்றால், எவர் தனது தவறை ஒப்புக்கொண்டவராகவும், ஷைத்தான் அவரைப் பார்க்கும்போது, அவரிடமிருந்து தப்பி ஓடுகின்ற அத்தகைய ஒரு வழியில் தனது வாழ்க்கையை மாற்ற கடும்முயற்சி மேற்கொள்பவரே ஆவார், ஏனென்றால் அவன்(ஷைத்தான்) சர்வவல்லமையின் அடையாளத்தை-முத்திரையை அந்த மனிதரில் காண்கிறன். ஒரு நபரோ,(அல்லது) ஒரு உம்மத் ஒட்டுமொத்தமாகவோ அல்லாஹ்வின் அடையாளம் அவர்கள் மீது, (அதாவது)தம்மீது பதிந்திருப்பதற்கு  கடுமையாக முயற்சி செய்தால், பிறகு எவரும் ஷைத்தானின் அடிச்சுவட்டைப் பின்பற்றிச் செல்ல  மாட்டார்கள். நினைவில் கொள்ளுங்கள்! ஒரு சோதனைவரும்போது, நம்பிக்கையாளர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்,அதன் பின்னர் அல்லாஹ்வின் கண்களில் குற்றவாளிகள் என்று கருதப்பட்டவர்கள் எதிர்காலத்தை மேம்படுத்திட அல்லாஹ் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்துகிறான். அந்த மக்களின் நம்பிக்கையின் எதிர்காலத்தை சிறப்பாக்கிடவும், அவர்களின் தவறுகளையும் பாவங்களையும் உணரச் செய்திடவும், வாழ்க்கையில் நேர்மறையைத் தழுவ அனைத்து எதிர்மறைகளை விட்டுவிடவும் இத்தகைய சூழ்நிலையை அவன் பயன்படுத்துகிறான். இதற்கு காரணம் இஸ்லாம் என்பது அனைத்து  நேர்மறைகளையும் பற்றியதாகும். அனைத்து முஸ்லிம்களும் தனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை இழிவாகப் பார்ப்பதை விட்டு விட்டு ஒரே நோக்கத்திற்காக ஒன்று சேரும் போது தான் உம்மத் செழித்தோங்கும். - அந்த நோக்கமானது மற்ற நம்பிக்கையாளர்களின் குழுக்களை நசுக்க வேண்டும் என்று அர்த்தத்தில் அல்லாமல், அதற்கு மாறாக உலகில் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை நிலைநாட்டவும், மக்களை அவனை நோக்கி மட்டுமே வழிநடத்திடவும் மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதாகும். இஸ்லாம் என்பது அனைத்தையும் கொடுப்பது மற்றும் பகிர்வது, அன்பைக் கொடுப்பதும் மற்றும் அன்பைப் பகிர்ந்து கொள்வதுமாகும்.

அந்த நிலையில் நமது உன்னத நபி ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்கள் பரிபூரணமான முன்மாதிரியாவார்கள். அவர்களது கருணையானது பல இதயங்களையும் வெற்றிகொண்டது. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளும் மாறினார்கள். அவர்களிடம் ஆன்மீகம் மலர்ந்தது. அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் சுவர்க்கத்தை இன்று ஒரு தட்டில் வழங்கும் போது பிறகு எதற்காக, நீங்கள்  விலகிச் சென்று உங்கள் முதுகுகளை திருப்பிக் கொள்கிறீர்கள்?

சகோதரர்களும் சகோதரர்களும் ஏன் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்? அங்கு ஏன் புறம்பேசுதல் இருக்கிறது? ஒரு முஸ்லீம் தனது சகோதரரின்  கௌரவத்தையும் கண்ணியத்தையும் எதனால் மிதித்துத் தள்ளுகிறார்? உண்மையில் ஒரு நம்பிக்கையாளர் மற்றொரு நம்பிக்கையாளரின் கண்ணாடி ஆவார் (முஸ்லிம்). ஒரு நம்பிக்கையாளர் தவறு ஏதேனும் செய்தால், பின்னர் அவரது மற்ற முஸ்லீம் சகோதரர் அவரது தவறுகளை அமைதியாக ஒரு கண்ணாடியைப் போன்று எந்த ஒரு பொதுவான கேலியும் அவமதிப்பும் இன்றி அவருக்கு அதனை சுட்டிக் காட்டிட வேண்டும்.

அந்த சகோதரரும் தான் செய்த தவறை புரிந்து கொண்டு தன்னை சீர்திருத்திக் கொண்டால், அது உண்மையில் அவருக்கு நல்லதாக இருக்கும், இல்லையென்றால், தனது அடிச்சுவட்டிலிருந்து, அல்லாஹ்வின் கட்சியில் இருந்து நீக்கி, அத்தகைய நபரை அல்லாஹ் கையாளுவான், [ஹிஸ்ப் அல்லாஹ்].

அது ஒரு நபராக இருந்தாலும், அல்லது முழு உம்மத்தாக  இருந்தாலும் சரி, ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்கள் அவர்களைப் பின்பற்றுபவர்களுடன் தொடர்புடைய எல்லாவற்றிற்கும் மிகவும் கவலைப்படுபவர்களாகவே இருந்தார்கள். அவர்கள் நேரான பாதையில் நிலைத்திருக்கவும், ஷைத்தானால் தூண்டப்(பட்டு வழிகெடுக்கப்)படாமல் இருக்கவும், மேலும் அல்லாஹ் அவர்களிடத்தில் நம்பி ஒப்படைத்துள்ள நம்பிக்கைகளுக்கு எப்போதும் (அவர்கள்) உண்மையுடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்) அவர்கள் இரவும் பகலும் அவர்களுக்காக (மக்களுக்காக)  பிரார்த்தனை செய்துவந்தார்கள். ஒரு மனிதனுக்கான இந்த கடமையில் அவனது நம்பிக்கை என்பது அல்லாஹ் மற்றும் இஸ்லாத்தின் அனைத்து கோட்பாடுகளின் மீது நம்பிக்கை கொள்வதும், அது போன்றே அவரது குடும்பத்திற்கும் அவருக்குமான அவரது கடமைகளில் அவர் தன் எண்ணங்களையும் செயல்களையும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும். எண்ணங்கள் மற்றும் செயல்களில் தங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள கடும்முயற்சி செய்யும் அத்தகைய நம்பிக்கையாளர்கள், அல்லாஹ்வின் வாசலில் தங்களின் நிலைநிறுத்துதல் மூலம் அல்லாஹ்வின் கதவில் ஒட்டப்பட்டு(ஒன்றியவர்களாக) அவனது இரட்சிப்பிற்காக அவனிடம் தொடர்ந்து மன்றாடுபவர்கள், இறுதியில் வெற்றி பெறுவர்கள். அவர்களே வெற்றியாளர்களும் ஆவர். இந்த மக்களைத்தான் அல்லாஹ் கருணையுடன் பார்க்கிறான், மேலும் அவர்களின் வாழ்க்கையை எத்தகைய வழியில் மாற்றுகிறான் என்றால் அவர்கள் மீண்டும் பிறந்ததைப் போன்று அவர்களின் எண்ணங்கள் மற்றும் செயல்களில் தூய்மையாக இருக்கிறார்கள்.அவர்களின் சிந்தையில் இருந்த தீமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு இந்த வாழ்விலும் மறுமையிலும் ஒரு நல்ல எதிர்காலத்திற்காக இப்போது நல்ல விஷயங்கள் மட்டுமே அவர்களின் சிந்தனைகளில் பதியப்பட முடியும் என்பதைப் போன்றதாகும்.

எனவே, ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களே அந்த ரஹ்மத்துல்-லில்- ஆலமீன் ஆவார்கள் [அனைத்து உலகங்களுக்கும் அருட்கொடை ஆவார்கள்.] அன்னாரது மக்களின் இதயங்கள் மற்றும் (அவர்களது)மிருக நிலையை அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்காகவும் தங்களின் வாழ்வை எப்போதும் தியாகம் செய்யத் தயாராக இருந்த  நம்பிக்கை கொண்டவர்களாக‌ மாற்றுவதில் வெற்றி பெற்றார்கள்.

எனவே, இஸ்லாத்தின் தீன் என்பது  பாவத்தில் உள்ள தங்களின் கடந்த கால சோகமான வாழ்க்கைகளை புறந்தள்ளி விட்டு,  மனந்திரும்பியும்,   அல்லாஹ்வின் உலகின் பக்கம் அழைப்பதற்கு தங்களை நல்லொழுக்கத்தின் முன்மாதிரியாக மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கும் அந்த பக்தர்களை நாடுகிறது. பாவங்களையும் தவறுகளையும் செய்த போதிலும் தங்களின் குற்றங்களை உணர்ந்து தங்களின் வாழ்வை சிறந்தவையாக மாற்ற கடும் முயற்சி செய்பவர்களின் இதயங்களின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். ஆன்மீக விஷயங்களில் முன்னேற்றம் என்று கருதப்படுவது, ஒரு நம்பிக்கையாளரோ அல்லது நம்பிக்கையற்றவரோ கூட அல்லாஹ்வின் உண்மையான தீனில் நம்பிக்கையையும் இறை பக்தியையும் பெறுகின்றார், மேலும் அல்லாஹ்வின் வழியில் உதவுவதற்கு சிறந்த நடத்தையின் மூலம் இஸ்லாத்தில் தன்னை பரிபூரணமாக்கிட (முழுமைப்படுத்திட) கடும்முயற்சி மேற்கொள்கின்றார்.

உண்மையில் நல்ல நடத்தை பெரும் வெகுமதிகளைப் பெறுகிறது. நல்ல நடத்தை மற்றவர்களை உங்களிடம் ஈர்க்கச் செய்கிறது மேலும் அவர்கள் உங்களிடம் ஈர்க்கப்படும் போது,அவர்கள் இஸ்லாத்தின் பக்கம்  ஈர்க்கப்படுகிறார்கள். இஸ்லாம் நிலைநாட்டுவதன் பக்கம் அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்..  ஏனென்றால் நீங்கள் உங்கள் நல்ல நடத்தையின் மூலம் இஸ்லாம் எதற்காக நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை செயல்படுத்துகின்றீர்கள். ஆனால் நம்பிக்கையாளர் அல்லாஹ்வின் கட்டளைகளை விட்டு விலகினால், ஷைத்தான் அவருடன் நட்புக் கொண்டு அவரை சரியான பாதையிலிருந்தும் விலகிச் செல்ல வைத்துவிடுவான். அந்த நேரத்தில், அவர் மீதுள்ள அல்லாஹ்வின் அருட்களை  அவர் இழந்துவிடுகின்றார்.

எனவே, ஜமாத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தில் உள்ள எனது ஸஹாபாக்களும் மற்றும் முஹம்மதிய உம்மத்தின் அனைத்து முஸ்லிம்களும் அல்லாஹ்வுக்கும் இஸ்லாத்திற்கும் செய்யவேண்டிய உங்களது கடமைகளை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. 

இஸ்லாம் உங்களது குறிக்கோளாக இருக்க வேண்டும்,அதாவது அல்லாஹ்விடத்தில் எல்லையற்ற அடிபணிதலையும், உங்களது சுற்றுப்புறங்களில் உள்ள அனைத்து சகப்பிரிவினர்கள் மற்றும் குழுக்களுக்கிடையே அமைதியையும் புரிதலையும் பரப்புதல் வேண்டும். உங்களது அன்றாட வாழ்வில் இஸ்லாம் செயல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்போது மட்டும்தான், இஸ்லாத்தின் விளைவு, பல்வேறு திசைகளில் ஒளியின் கதிர்களை பிரதிபலிக்கின்ற ஒரு (Prism)முக்கோண கண்ணாடியைப் போன்று அனைவரின் மீதும் பிரதிபலிக்கமுடியும். அனைத்து நம்பிக்கையாளர்களும் உண்மையில் ஒரே மாதிரியல்ல, ஆயினும் அனைவரும் நம்பிக்கையாளர்களே. நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பார்வையில் அவனுடைய திருப்திக்கும், மகிழ்ச்சிக்கும் மிக நெருங்கிய நிலைக்கு உங்களை உயர்த்திட கடும்முயற்சி(களை) மேற்கொள்ளுங்கள்.

இதுவே (உம்மத்தின்)முழுமையான வளர்ச்சிக்காக நீங்கள் அனைவரும் செய்ய வேண்டிய (உண்மையான)முயற்சியாகும், அதன் காரணமாக அனைத்து தூதர்களிலும் பரிபூரணமானவரும்,  முத்திரையானவருமாகிய (எம்பெருமானார்) ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் பரிபூரண உம்மத்தாக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.

இஸ்லாத்தின் திருத்தூதர் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் ஸஹாபாக்களுக்கு [அருளுக்குரிய தோழர்கள்] அல்லாஹ்விடமிருந்து பல சோதனைகளுக்கும் எச்சரிக்கைகளுக்கும் பிறகு, அவர்களால் அதனை செய்ய முடிந்தது என்ற போதிலும், அவர்களில் பலர் இறை இன்பத்தின் நிலைகளை அடைவதில் வெற்றி பெற்றனர். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் அல்லாஹ்வின் தூய்மையான மார்க்கத்திற்கும் அதாவது இஸ்லாத்திற்கும் தங்கள் உயிரை கொடுக்க அவர்கள் தயாராக இருந்தனர்.

அல்லாஹ்வின் மீதும் அவனது தூதரின் மீதும் கவனம் செலுத்த தங்களின் இம்மை வாழ்விற்குரிய ஆசைகளை\இச்சைகளை பின்தள்ளி விட்டபோதும், ஓர் உண்மையான இறை பக்தியுள்ள ஆன்மீக புரட்சியை அரேபியாவிலும் அதன் விளைவாக உலகிலும் கொண்டு வருவதிலும் அவர்கள் முழுமையாக ஆன்மீகத்தின் வேறொரு நிலையை அடைந்திருந்தார்கள்.

இதன் பக்கமே இறை நம்பிக்கை (ஈமான் நம்மை) அழைக்கின்றது. இது இறைபற்றுக்காக\முழுமையான ஈடுபாட்டிற்காக உங்களை அழைக்கின்றது. ஓர் உண்மையான இறைவனின் மீதுள்ள உங்களது நேசத்திற்க்காக இது உங்களை அழைக்கின்றது.அவனுடைய வழிபாட்டில் அவனுக்கு எந்த இணையும் இல்லை. இது தியாகத்திற்காக (உங்களை) அழைக்கின்றது.இது கருணைக்காக (உங்களை) அழைக்கின்றது. இது ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்காக (உங்களை) அழைக்கின்றது. அது மனித குலத்தை மனிதாபிமானத்தோடும், உங்கள் சக மனிதர்களிடம் உண்மையுடன் நடந்து கொள்வதற்கும் (உங்களை) அழைக்கின்றது. அது சமத்துவம், நேர்மை மற்றும் நீதிக்காக (உங்களை) அழைக்கின்றது. அது (உங்களை) நேர்வழியின் பக்கம் அழைக்கின்றது. நீங்கள் அறிந்திருப்பீர்களேயானால், (அதற்கு) ஈடாக நீங்கள் அல்லாஹ்விடமிருந்து (அவனது)நேசத்தைப் பெற்றுக் கொள்வது  அதற்குத் தகுந்ததாக இருக்கும். இஸ்லாத்தின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொண்டவர்கள் அதன் நிறைவேற்றத்தை நோக்கி அணிவகுப்பவர்களாக இருப்பார்கள். அதனைப் புரிந்து கொள்கின்ற (பாக்கியத்)தை இழப்பவர்களைப் பொருத்த வரையில், அவர்கள் எல்லா அருட்களையும் இழந்து போய்விடுகின்றனர். நம்பிக்கையின் சாராம்சம் எப்போதும் இருந்து கொண்டிருக்க வேண்டும். அனைத்து சோகங்களும்\துயரங்களும் மகிழ்ச்சியாக மாற்றப்பட வேண்டும்.

நீங்கள் அல்லாஹ்வின் வழியில் (அவனுக்காக) ஏதாவது செய்யும்போது, அது உங்கள் இதயங்களில் மகிழ்ச்சியை வளரச்செய்கின்றது. அல்லாஹ்வின் (வழியில் அவனது) நோக்கத்திற்கான (உங்களது) இந்த பணியானது அதிகமான மகிழ்ச்சியைப் பெற்றுத்தரும்.

இந்த உலகமும், அது உங்களுக்கு பெற்றுத்தருவதுமே சந்தோஷம் என்று நினைத்து விடாதீர்கள். அவ்வாறல்ல! மகிழ்ச்சி என்பது உங்களிடம், உள்ளதை இந்த உலகிற்கு (நீங்கள்) வழங்குவதிலேயே உள்ளது, அதன் காரணமாக நீங்கள் அல்லாஹ்வின் கருணையிலும் திருப்தியிலும் அனுமதிக்கப்படுவீர்கள். நமது உன்னத  திருநபி ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத் இன்று இதை உணர்ந்துகொண்டால், அது முன்னேற்றத்திற்கு மேல்  முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும்.

ஆயினும் அனைத்து முஸ்லீம்களும் தங்களை ஒரே சகோதரத்துவத்தின் அடிப்படையிலேயே சிந்திக்க வேண்டும். ’உம்மத்’ என்பது இதனையே குறிக்கின்றது. நீங்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். நாம்

ஒன்றாக இருக்க வேண்டும். ஒரே உம்மத் (உம்மத்-ஏ-வாஹிதா(வாக இருக்க வேண்டும்)). அனைத்து மனித குலத்தையும் அவர்கள் அனைவரும் ஒரே சமூகம், ஒரே வர்க்கம், ஒரே இனம், அதாவது தனித்துவமான இறைவனாகிய அல்லாஹ்வின் சமூகம், அல்லாஹ்வின் உம்மத், அல்லாஹ்வின் மக்கள் என்பதை உணரச் செய்வதே உம்மத்-ஏ-முஹம்மதிய்யாவின் உண்மையான நோக்கமாகும்.

ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு வெடிகுண்டுகளையும் வைரஸ்களையும் ஏவுவதற்கான நேரமல்ல இது!. இது நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடத்தில் மாய்த்துக் கொள்ள வேண்டிய நேரமாகும்!. நீங்கள் அல்லாஹ்விடத்தில் உங்களை இழந்துவிட வேண்டும், அதன் காரணமாக (நீங்கள்) விருப்பப்பட்டு அவனது விருப்பத்திற்கு (உங்களை) அர்ப்பணித்துக் கொள்ளமுடியும், மேலும் இந்த அர்ப்பணித்தலில் இருந்து (அவனது)திருப்தியையும் உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி, ஒருவர் மற்றவர் மீது புழுதியை அள்ளி வீசும் நேரம் அல்ல இது. இது மனந்திரும்புதல் மற்றும் பாவமன்னிப்பிற்க்கான நேரமாகும்; எழுந்து ஓர் புதிய உலகத்தை, ஓர் ஆன்மீக உலகத்தை உருவாக்க வேண்டிய நேரமாகும் இது இந்த ஆன்மீக புரட்சி என்பது உண்மையான இறை நம்பிக்கையின் வெற்றியை நோக்கி இவ்வுலகில் உங்களது பங்களிப்பைச் சார்ந்தே  பல வழிகளிலும் ஏற்பட முடியும்.

தங்களது உடைமையின் ஒவ்வொரு இழை\நாருடனும் அல்லாஹ்வின் நோக்கத்திற்காக (அவனது வழியில்) உதவி செய்பவர்கள் (மிகவும்) அதிர்ஷ்டசாலிகள் ஆவார்கள். வானவர்கள் அவர்கள் மீது இறங்கி அவர்கள் மீது அருள் புரிவார்கள்,மேலும் அவர்களால்(தான்) உலகை வழிநடத்திட முடியும், ஏனென்றால் அவர்கள் நன்மையைக் கொண்டு தீமையை தடுத்திட கடும்முயற்சியை மேற்கொள்கின்றார்கள். அவர்கள் நல்லதைப் பார்க்கவும், நல்லதை செய்யவும், அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மகிழ்ச்சியை பரப்பிட கடும் முயற்சியை மேற்கொள்கின்றார்கள். அவர்களே இவ்வுலகில் ‘இறை ஒளி’யும் ‘நம்பிக்கையின் கதிர்’களும் ஆவார்கள்.

இஸ்லாம் என்பது நம்பிக்கை, மன்னிப்பது மற்றும் சிறப்பாக இருப்பதற்காக கடும்முயற்சி மேற்கொள்வதைப் பற்றியதாகும். இஸ்லாத்தின் சாராம்சத்தை உங்களுக்கு வழங்குவதற்காவே  இவ்வுலகில் கலீஃபத்துல்லாஹ் வந்திருக்கின்றார். அதன் காரணமாக இஸ்லாம் உங்கள் மீது ஒரு   சுமையாக இருக்காது, மாறாக இறை நேசத்தின் சிறகுகளைக் கொண்ட அது உங்களை பறக்க வைக்கின்றது. நீங்கள் இஸ்லாத்தை உண்மையாகவும் முழுமையாகவும் ஏற்றுக்கொண்டால், நீங்கள் தான் இந்த உலகை வெல்பவர்களாவீர்கள். நீங்களே உண்மையான ஆட்சியாளர்களாகவும் இருப்பீர்கள். ஆனால் பேராசை,ஆணவம் மற்றும் அனைத்து வகையான தீமைகள் (போன்றவை) உங்களிடமிருந்து இஸ்லாத்தின் மூச்சைப் பறித்துக் கொண்டால்,நீங்கள் தோற்றுப்போவீர்கள். ஆகவே, அல்லாஹ்வின் திருப்தியைப் பெற கடும்முயற்சி மேற்கொள்ளுங்கள், உங்களைச் சீர்திருத்திக் கொள்ள கடும்முயற்சி மேற்கொள்ளுங்கள். இதனால் உங்களைச் சுற்றியுள்ள உலகத்தையும் உங்களால் சீர்திருத்தி விட முடியும்.மற்றவர்களை சீர்திருத்த முற்படுவதற்கு முன்பு நீங்கள் உண்மையான முஸ்லிம்களாக மாற வேண்டும்; இல்லையென்றால் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு எதையும் கற்பிக்க இயலாது.

கலீஃபாத்துல்லாஹ்வைப் பொறுத்தவரை, அவருடைய ஒரே எஜமானர் அல்லாஹ் ஆவான் மற்றும் அவர் அல்லாஹ்வால் ஆளப்படுகின்றார். ஆகவே, நான் உங்களுக்கு நல்ல உபதேசங்களை வழங்குவதற்கும், சரியான முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவுவதற்குமே நான் இங்கு இருக்கிறேன். அதனால் நீங்கள் உங்கள் ஈமானையும் இஸ்லாத்தையும் நல் வழிப்படுத்த முடியும். மேலும் ஒவ்வொரு வகையிலும்  உண்மையான முஸ்லிம்களாகவும் இருக்க முடியும்.

நாம் சிந்திக்கும் போது, நாம் ஒரு சகோதரத்துவத்தின் அடிப்படையிலேயே சிந்திக்க வேண்டும். இஸ்லாத்தில் நாம் ஒன்றாக இருந்துகொண்டு நம்பிக்கையை சிதைக்கின்ற அனைத்து தீமைகளையும் அகற்றிட வேண்டும். உண்மையான வெற்றியாளர் யார் என்றால் ஷைத்தானை வெற்றிகொண்டு, அவரிடத்தில்  அவனுக்கு (ஷைத்தானுக்கு) எந்தவொருப் பங்குமே இல்லாதபடி செய்பவரே. அவரது இதயம், ஆன்மா, மனம் மற்றும் உடல் ஆகியவை அல்லாஹ்வின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பின் கீழ் வந்துவிடுகின்றன. அதனால்தான் அல்லாஹ்வுடன் தொடர்பை வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும். அல்லாஹ் அனைத்தையும் கேட்கக்கூடியவனும், அனைத்தையும் பார்க்கக்கூடியவனும் ஆவான். அவன் அனைத்தையும் அறிகிறான், மேலும் அவனால் ஒரு சூழ்நிலையை சிறந்ததாக மாற்றிவிட முடியும்.

நமது நேசத்திற்குரிய தூதர் ஹஸ்ரத் முஹம்மத்(ஸல்) அவர்களின் பிரார்த்தனையானது, அன்னாரது உம்மத் அதாவது நாம், கடந்தகால, இன்றைய மற்றும் நாளைய முஸ்லிம்கள் நமது வாழ்வின் ஒவ்வொரு பிரதிபலித்தலிலும் அல்லது நிலையிலும் இஸ்லாத்தை பிரதிபலிக்கக் கூடிய அப்படிப்பட்ட வார்க்கப்பட்ட வாழ்வை பூமியில் சமநிலைப்படுத்த கடுமுயற்சி மேற்கொள்ளவேண்டும் என்பதாக இருந்தது. முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் நல்ல கண்ணாடிகளாகி, சீர்திருத்தத்தை தொடர்ந்து செய்து, உலகில் மாபெரும் ஆன்மீக புரட்சியை கொண்டு வர வேண்டும். ஒரு பொதுவான இலக்கை நோக்கி அனைத்து மக்களையும் நம்பிக்கையுடனும் அன்புடனும் அல்லாஹ்வின் பக்கம் உண்மை மற்றும் நேர்மையுடன் வழிநடத்த, அனைத்து எதிர்மறைகளும் ஒரு பொதுவான இலக்கை நோக்கி மனம் மற்றும் ஆன்மாவின் நேர்மறையால் மாற்றப்படும் போது இது நிகழும்.

இந்த உன்னத பணிக்காக, நீங்கள் அனைவரும் உங்களது குறிக்கோளில்-பணித்திட்டத்தில் எப்போதும் இணைந்திருக்கவும், கவனம் செலுத்தவும் வேண்டும். மேலும் ஷைத்தான் உங்களது சகோதரத்துவத்தை உடைத்திட அனுமதிக்காதீர்கள். இஸ்லாமிய சகோதரத்துவமானது புனிதமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஹஜ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் பிரார்த்தனை உணரப்பட முடியும், அதில்  அவர்களது உம்மத் அல்லாஹ்வின் அதிருப்தியில் இருந்தும், நரகத்தில் இருந்தும் பாதுகாக்கப்பட்டு அல்லாஹ்வின் திருப்தியின் சுவர்க்கங்களில் வரவேற்கப்பட முடியும். இன்ஷா அல்லாஹ். ஆமீன், ஸும்ம ஆமீன், யா ரப்புல் ஆலமீன்.