அரபு நாடுகளின் துயரமும், மேற்கு நாடுகளில் இஸ்லாத்தின் எழுச்சியும்

17 மே 2024~ துல் கஃதா, ஹிஜ்ரி 1445

அரபு வசந்தம்(அல்லது எழுச்சி) என்பது 2010 டிசம்பரில் துனிசியாவில் தெருவோர வியாபாரியான முஹம்மது பொய்ஸீஸி என்பவர் அனுமதி பெற்று (வியாபாரம் செய்யும் நடைமுறையை) அமல்படுத்துவதில் தோல்வியடைந்ததை அடுத்து, அவரது (தெருவோர) காய்கறிக் கடையை போலீஸார் கைப்பற்ற வந்தபோது தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டபோது அரபு உலகத்தை அலைக்கழித்த போராட்டங்கள் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை(யின் போராட்ட) அலைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலதிகமாக, அவர் ஒரு நகராட்சி அதிகாரி மற்றும் அவரது உதவியாளர்களால் துன்புறுத்தலையும் அவமானத்தையும் எதிர்கொண்டார்.

அவர் துரதிர்ஷ்டவசமாக எதேச்சதிகார ஆட்சிக்கு எதிரான வெளிப்படையான எதிர்ப்பை காட்டுவதற்காக தன்னைத் தானே தீக்குளித்துக்கொண்டார், மேலும் அவரது இந்தச் செயலை அரபு நாடுகளில் ஜனநாயகத்திற்கான மாபெரும் தியாகம் என்று மேற்குலகம் பாராட்டியது.அவரும் அவரது முன்மாதிரியைப் பின்பற்றி தம்மைத் தாமே தீக்குளித்துக் கொண்ட எகிப்து, அல்ஜீரியா மற்றும் மொரிட்டானியாவை சார்ந்தவர்களில் கிட்டத்தட்ட ஒரு டஜன் நபர்களுக்கும்- "வட ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு புதிய புரட்சியின் வீரத் தியாகிகள்" என்பது போன்ற பாராட்டுக்குரிய பட்டங்கள் வழங்கப்பட்டன.இது நியூயார்க் டைம்ஸில், 21 ஜனவரி 2011 அன்று ராபர்ட் எஃப். வொர்த் வெளியிட்ட "ஒற்றை தீக்குச்சி எவ்வாறு ஒரு புரட்சியை பற்ற வைக்கும்" என்ற கட்டுரையில் வெளியிடப்பட்டது.

ஜனநாயகத்திற்கான தியாகம் என்று உலகத்தால் கருதப்பட்ட இந்தச் செயல் உண்மையில் ஒரு தற்கொலையாகும், இது இஸ்லாத்தில் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். மனிதனுக்கு எவ்வளவு கடினமான சூழ்நிலை வந்தாலும் (சரியே), தனக்குச் சொந்தமில்லாத உயிரைப் பறித்திட அவனுக்கு (எந்த) உரிமை(யும்) இல்லை. இந்த தற்கொலைச் செயலை மேற்குலகம் ஒரு வீரத்திற்குரியச் செயலாகக் கருதலாம், ஆயினும் துரதிஷ்டவசமாக (உண்மையில்) அது வீரச் செயல் அல்ல.! ஒருவர் அனுபவிக்கும் அதே அளவு சித்திரவதைக்கு ஏற்ப பழிவாங்குவதையே இஸ்லாம் ஊக்குவிக்கிறது, "கண்ணுக்குக் கண்" என்ற மூஸா - மோஸேயின் சட்டத்தையே (இஸ்லாம்) மீண்டும் உறுதிப்படுத்துகிறது, ஆயினும், அதன் பயன்பாட்டில் மிகவும் நியாயமுடனும், கனிவுடனும் நடந்து கொள்ளுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது. இஸ்லாம் என்பது கடுமையாக நடந்து கொள்வதற்கும் (மக்களின் சொந்த விருப்பப்படி) விரும்பியவாறே செயல்படுவதற்கும் இடையே இருக்கின்ற‌ சிறந்த முன்மாதிரியும், நடுநிலையான வழிமுறையுமாகும். இஸ்லாமிய அரசுகள் என்று தங்களது நாடுகளைப் பிரகடனப்படுத்திக் கொண்டு இஸ்லாத்தின் கொள்கைகளை பின்பற்றாமல் அல்லது செயல்படுத்தாமல் இருக்கின்ற (அந்தந்த நாட்டின்) தலைவர்களே உலக நீதி மன்றத்திலும் அத்துடன் இறைவனின் நீதி மன்றத்திலும் அவர்களே அதற்கு பொறுப்பேர்வர்களாக இருக்கிறார்களேத் தவிர (அந்நாடுகளில் வாழும்) முஸ்லிம்கள் அல்ல. ஆனால், (ஒன்றை) நான் தெளிவாகவும் உறுதியாகவும் கூறிக் கொள்கிறேன்: எந்த முஸ்லிமும் - எந்த முஸ்லிமும் தமது சொந்த உயிரை ஒருபோதும் (மாய்த்துத்) தற்கொலை செய்து கொள்ளக் கூடாது! எவ்வளவு கடினமான சூழ்நிலை வந்தாலும் சரி, தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் இந்த ஷைத்தானிய செயலாகிய - தற்கொலை செய்து கொள்வதை அல்லாஹ் தனது அடியானுக்குத் தடை செய்துள்ளான். (அனுமதிக்க வில்லை!)

2001 இல் உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குப் பிறகு, பெயர் தாங்கிய ஜிஹாதிகள், தற்கொலை குண்டுதாரிகளை "ஷஹீத்கள் அல்லது உயிர் தியாகிகள்" என்று போற்றினர். தற்போது, 27 டிசம்பர் 2010 அன்று முஹமது பொய்ஸீஸியின் தீக்குளிப்பு மூலம், முஸ்லீமல்லாத உலகமானது, (அந் நாடுகளின்) அரசியல் சூழலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, தங்களைத் தாங்களே தீயிட்டுக் கொளுத்திக் கொள்வதன் மூலமோ அல்லது தங்களது உயிரை மாய்த்துக் கொள்வதன் மூலமோ, அநீதிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யுமாறு முஸ்லீம்களைப் பாராட்டி ஊக்குவிக்கிறது.(எவ்வாறிருப்பினும்) தற்கொலை எப்போதும் தற்கொலையாகவே கருதப்படும். அன்றைய முஸ்லீம் உலகின் கடின இதயம் கொண்ட தலைவர்கள் தமது மக்களுக்கு எதிராக பெரும் அநீதி இழைத்தார்கள் என்பது உண்மைதான், ஆனால் அதன் காரணமாக, ஒருவர் தனக்குத்தானே தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று பொருள் அல்ல.

இஸ்லாம் மற்றும் இஸ்லாமியத் தீர்ப்புகளை தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் சரியாகச் செயல்படுத்தியிருந்தால், மக்கள் கிளர்ச்சி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. மக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்புகளில் வரம்பு மீறாத வரையில் இஸ்லாமிய நடத்தை நெறிமுறைகளால் கறைபடுத்தப்படாத புரட்சிகள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் தற்கொலைகள் போன்ற அனுமதிக்கப்பட்ட வரம்புகளையும் தாண்டி செய்யப்படும் இவ்வாறான எதிர்ப்புகள் அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் கண்டிக்கத்தக்கவையாகும்.

அரபு வசந்தம் என்றழைக்கப்படும் (போராட்டமானது) அநீதியை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு புரட்சியை ஏற்படுத்தியிருக்கலாம், இருந்தபோதிலும், அது மேற்கின் ஜனநாயகமே உண்மையான ஜனநாயகம் என்றும், (தீன்-ஏ-இஸ்லாம் மாகிய) இஸ்லாமிய வாழ்க்கை முறையோ ஒரு சிறைச்சாலையாகவே இருந்தது என்ற கருத்தையும் மக்களுக்கு வழங்கியுள்ளது. இன்று, ஜனநாயகம் பற்றிய அந்த எண்ணம் முழு முஸ்லீம் உலகிலும் ஊடுருவியுள்ளது, இதன் மூலம் மேற்கத்திய செல்வாக்கை வரவேற்ப்பதற்காக இஸ்லாம் ராஜ மரியாதையுடன் எட்டி உதைக்கப்படுகிறது, (அதாவது புறந்தள்ளப் படுகிறது).மிகவும் துல்லியமாக இவ்வாறு நடைபெற வேண்டும் என்பதையே மேற்குலகம் விரும்புகிறது.

இஸ்லாமிய ஜனநாயகமானது மேற்கத்திய நாடுகளின் ஜனநாயகத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். இஸ்லாம் பரப்புகின்ற - ஊக்குவிக்கின்ற உண்மையான ஜனநாயகமானது நியாயத்தையும், நீதியையும், ஒவ்வொருவருக்கும் அவரவர் மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமையையும், திருக்குர்ஆனில் அல்லாஹ்வால் அனைத்து முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளை பெறுவதற்கான உரிமைகளையும் பிரதிபலிக்கிறது. ஆனால் மேற்கத்திய நாடுகளோ, முஸ்லிம் உலகத்தை மேற்கத்தியமயமாக்கிட வேண்டும் என்று விரும்புகின்றன, அதனை, ஒழுக்கக்கேடு என்ற தனது சொந்த உருவத்தை முஸ்லிம் உலகத்தின் மீது செதுக்க விரும்புகின்றன, மேலும் அவற்றில் பெரும்பகுதி வெற்றியும் கண்டு விட்டது. தற்போது, துருக்கி போன்ற இஸ்லாமிய நாடுகள் வெளிப்படையாகவே மேற்கத்தியமயமாக்கப்பட்டு, பர்தாவைக் கைவிட்டு, அங்கு முஸ்லீம் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள் என்ற எந்த வேறுபாடும் இல்லை. அநாகரீகமான திரைப்படங்கள், அநாகரீகமான ஆடைகள், மது அருந்துதல் போன்ற தடுக்கப்பட்ட ஒவ்வொன்றும் அனுமதிக்கப்பட்டவைகளாக மாறிவிட்டன. மேலும் பலர் நாத்திகர்களாகவும் கூட மாறிவிட்டனர்.

இன்று, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இன்னும் பல அரபு நாடுகளும் கூட மேற்கத்திய நாடுகளுடன் கைகோர்த்துக் கொண்டு தத்தமது நாடுகளை மேற்கத்தியமயமாக்க வேண்டும் என்பதற்காக சுற்றுலாவை ஊக்குவிக்கவும், அயல் நாட்டு நாணயத்தை வரவேற்கவும் செய்கின்றன. அரேபியாவிற்கு ஹஜ், உம்ரா மற்றும் பெட்ரோல் மூலம் அல்லாஹ் பெரும் வருமானத்தை வழங்கியுள்ளான், ஆயினும், இந்நாட்டின் பெயர் தாங்கிய ஆட்சியாளர்கள், பெரும் பணத்திற்கும் அதிகாரத்திற்கும் எப்போதும் பசி கொண்டு, தங்கள் மனசாட்சியை ஷைத்தானிடம் விற்பனை செய்து, புனித பூமியிலும், இன்ன பிற இஸ்லாமிய மாநிலங்களிலும் கூட டிஸ்கோ கிளப்புகள், மதுபானக் கடைகள் மற்றும் சினிமா அரங்குகள் மற்றும் சூதாட்ட விடுதிகளை வரவேற்கவும்‌ செய்கின்றனர்! அரபு வசந்த(ம் என்ற வைக்கப்படும் போராட்ட)மானது இதைத்தான் முஸ்லிம்களுக்குக் கற்றுக் கொடுத்ததா? தங்கள் மார்க்கத்தை விட்டு வெளியேறி முஸ்லீம் அல்லாதவர்களின் - அதாவது யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறையைத் தழுவுவது தான் அரபு வசந்தமா?

நமது நேசத்திற்குரிய நபி முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்கள் நம்மிடம் கூறியதை (முன்னறிவித்ததை) நினைவில் கொள்ளுங்கள்:

உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாணுக்குச் சாண், முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்து விட்டால் கூட, நீங்களும் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?’ என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘வேறு யாரை?’ என்று (திருப்பிக்) கேட்டார்கள். (புஹாரி 3456)

துல்லியமாக இதுவே நடந்தேறி‌யுள்ளது! முஸ்லிம்கள் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்களாக இருக்கின்றனர். இஸ்லாத்தின் நறுமணம் அவர்களை விட்டும் சென்றுவிட்டது. இன்று, கவர்ச்சிகரமான அறிவிப்புகள், விளையாட்டுகள், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகத்தின் தாக்கங்கள் ஆகியவைகளுடன் மேற்குலகின் ஈர்ப்புகள் முஸ்லிம்களை - அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர் மீது - தவறான முறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இஸ்லாத்தில் அதன் பெயரைத் தவிர வேறு எதுவும் எஞ்சியிருக்கவில்லை.

துரதிர்ஷ்டவசமாக, இது (மறுமலர்ச்சியை உருவாக்கும்) அரபு வசந்தம் அல்ல, மாறாக குளிரும், ஈவிரக்கமற்ற குளிர்காலமும் ஆகும். (அவ்வாறான குளிர்காலத்தின் சூழலின் போது - இதயம் வேகமாக துடிக்கிறது, சுவாச விகிதம் மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது மற்றும் நடுக்கத்தால் தசைகள் பதற்றமடைகின்றன. இவை அனைத்தும் உடலில் வெப்பத்தை உருவாக்குகின்றன. உடல் இரத்தத்தை சிறுநீரகங்களுக்கு திருப்பி விடுவதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கலாம். குழப்பமும் குறைந்த அளவிலான ஒருங்கிணைப்பும் கூட நிகழலாம்)

முஸ்லிம்களை, அவர்களது அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மேற்கத்தியம்தான் தீர்வு என்று நம்ப வைத்தனர். இறை விருப்பம், இறை கட்டளைகள் மற்றும் அல்லாஹ்வுக்கு (சர்வவல்லமையுள்ள இறைவனுக்கு) கீழ்ப்படிவதற்கான மனிதனின் கடமைகள் ஆகியவற்றுடன் அவை தடையாக இல்லாத வரையில் மட்டுமே முன்னேற்றமானது சிறந்ததாக இருக்கும்.

தற்போது, பல ஆண்டுகளாக முஸ்லீம் உலகின் உணர்வு நிலையை ஹிப்னாடிசம் - அதாவது மனவசியம் செய்ய முயற்சித்தப் பிறகு, மேற்குலகத்தை இஸ்லாமியமயமாக்குவதில் அல்லாஹ்வின் திட்டமானது ஒரு புதிய வழியை ஏற்படுத்தி உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! தற்போது, அரேபிய முஸ்லீம்களும், அதேப் போன்று மற்ற இஸ்லாமிய அரசுகளும் தங்களது அடிப்படை அம்சங்களை (ஆதாரத்தை) இழந்து நிற்கின்ற அதே வேளையில், அல்லாஹ்வின் ஏகத்துவம் என்ற கோட்பாட்டின் பக்கம் ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்களது மதமாற்றங்களின் மூலம் மேற்குலகில் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. இன்று, மேற்குலகின் இதயத்தில் இஸ்லாத்தின் சூரியன் ஒளிர்கிறது. பிறப்பு முஸ்லீம்களைக் காட்டிலும் அவர்கள் தற்போது இஸ்லாத்தை நன்கு புரிந்து கொண்டுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்! மனித குலத்தின் இதயத்தில் இஸ்லாத்தின் மீதான அச்சத்தை ஏற்படுத்துவதற்கு சர்வாதிகாரிகளும், இஸ்லாமிய வெறுப்பாளர்களும் (பல்வேறு) முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் கூட, இன்னமும், நம்பிக்கையின் கதிர் ஒரு புதிய சூரியனைப் போல உதயமாகிறது. மேலும் இதைத்தான் நான் மேற்குலகின் உண்மையான விழிப்புணர்ச்சி (அல்லது தூக்கத்திருந்து எழுந்து கொள்ளும் திடீர் தருணம்) என்று அழைக்கிறேன். திறந்த மனம் கொண்ட பலரும் மற்றும் இஸ்லாத்திற்கு எதிரான ஊடகங்களின் பொய்யான கணக்குகளை (வதந்திகளை) நம்பாதவர்களும் அல்லாஹ்வால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுத்திறனைக் கொண்டு அவர்கள் சுயமாகவே சிந்திக்கின்றார்கள். இன்று, அத்தகைய இதயங்கள் இஸ்லாத்தை அடைந்து விட்டன, மேலும் இன்ஷா அல்லாஹ், அவர்கள் சிறந்த முஸ்லிம்களாகிவிடுவார்கள். அல்லாஹ் உண்மை முஸ்லிம்களின் தலைமுறைகளை அவர்களிலிருந்து எழுச் செய்வானாக!. திரித்துவம் (அதாவது கிறிஸ்தவத்தின் முக்கடவுள் கொள்கைப்) பற்றிய தவறான கோட்பாடு மற்றும் பொய் தெய்வங்களின் இருப்பு ஆகியவற்றை அல்லாஹ் அழித்து விடுவானாக! , மேலும் உண்மையான தனித்துவமான, அறிந்தவை மற்றும் அறியாதவை ஆகிய அனைத்தையும் படைத்த அந்த ஏக இறைவனை மட்டுமே வழிபடுவதாகிய- மனிதகுலத்தின் அசலான வாழ்க்கை முறையாகிய இஸ்லாத்தை மீண்டும் நிலைநாட்டுவானாக!

இன்று முஸ்லிம்கள் தங்களது சொந்த நாடுகளிலேயே ஒடுக்கப்படுகின்றனர்; அவர்கள் அந்நியர்கள் என்றும் கிளர்ச்சியாளர்கள் என்றும் முத்திரை குத்தப்படுகின்றனர். அதேசமயம் அவர்களிடத்தில் வந்து அடைக்கலம் நாடியதும் அடக்குமுறையாளர்களே.

மேலும் முஸ்லிம்கள் அவர்களுக்கு தங்களது உதவிகளையும் தாராளமாக வழங்கினர். ஆனால் அதன்பிறகு என்ன நடந்தது?, (நிலத்தின்) அந்த உரிமையாளர்கள் தங்களின் தாராளமான மனப்பான்மையின் காரணமாக கூரையற்றவர்களாகவே ஆகிவிட்டனர். தாராள மனப்பான்மை நல்லதல்ல என்பது இங்கு நாம் பெறவேண்டியப் படிப்பினை அல்ல. மாறாக தாராள மனப்பான்மை அனைத்து முஸ்லிம்களுக்கும் தேவைப்படுகிறது. ஆனால் எதிரிகள் முஸ்லிம்களின் தாராள மனப்பான்மையைப் பயன்படுத்திக் கொள்வதற்காக- (துஷ்பிரயோகம் செய்வதற்காக) அவர்களின் ஆதரவற்ற நிலைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தனர்! இன்றைக்கு பாலஸ்தீன மக்கள் துன்பப்படுகின்றனர். அவர்கள் எல்லா விதத்திலும் தீவிரமாக சோதிக்கப்பட்டனர். தற்கொலைக்கு முயற்சிக்காமல் அல்லாஹ்வின் பாதையில் உறுதியாக நிலைத்து நின்றவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் சிறந்த நற்கூலி இருக்கிறது. அல்லாஹ், அவனே தனது புனித இடங்களையும், இறை இல்லங்களையும் பாதுகாப்பான்!. அவர்களால் இயன்ற வரை முயற்சி செய்யபட்டும் , அல்லாஹ்வின் வானவர்களின் படைகள் இறங்கும்போது, அல்லாஹ்வின் எதிரிகள் - மோசமானதொரு மரணத்தை சந்தித்து அழிந்து போவது உறுதி! இந்த இக்கட்டான நேரத்தில் அல்லாஹ் தனது வல்லமையை வெளிப்படுத்துவானாக! அப்பாவிகளின் உயிர்களையும், அவர்களின் உரிமைகளையும் காப்பாற்றுவதற்கான இந்த அருளுக்குரிய பாதையில் உதவுவதற்காக உலகெங்கிலும் உள்ள உண்மையான சமாதானம் மேற்கொள்பவர்களின் மனசாட்சியை

அல்லாஹ் விழித்தெழச் செய்வானாக!

அல்லாஹ் அவர்களின் உரிமைகளை மீண்டும் நிலைநாட்டுவானாக!

அது பாலஸ்தீனம், சீனா, பர்மா, சிரியா, ஏமன் மற்றும் பிற அரேபிய நாடுகள் எதுவாக இருந்தாலும் சரயே, முஸ்லிம்கள் வேறு எங்கெல்லாம் துன்பப்படுகிறார்களோ அங்கெல்லாம் அல்லாஹ் உண்மையும் நேர்மையும் கொண்ட மக்களை, நீதியை நேசிப்பவர்களாக, உண்மையிலேயே அமைதிமை விரும்பியவாறு. ஒடுக்கப்பட்டவர்களுக்காக எழுந்து நின்று உலக அமைதியை நிலைபெறச் செய்வானாக!. இன்ஷா அல்லாஹ்.

அரபு வசந்தத்தின் எழுச்சிகள் மற்றும் புரட்சிகள் ஆரம்பம் மானதிலிருந்து மத்திய கிழக்கு கொந்தளிப்பையும், அதற்கு முன்பிருந்ததை விட அதிகமாக மக்களின் உள்ளார்ந்த துன்பங்களையும் அனுபவித்து வருகிறது. ஏனெனில் அவர்களின் தலைவர்கள் தங்களது சொந்த தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்துகொள்வதோடு, தமது மக்களின் பெரும் நலன்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, தங்களுக்கு விருப்பமானதை மட்டுமேத் தேடுகிறார்கள். இன்றைய தலைவர்கள் தங்களைத் தாங்களே சீர்திருத்திக் கொண்டு தங்கள் நடத்தையை சீர்படுத்திக்கொள்ளவில்லை என்றால், ஏரியல் ஷரோனைப் போன்ற கொடூரமான முடிவு அவர்களுக்கும் வந்துவிடும் என்று நான் அஞ்சுகிறேன்!. நாம் அனைவரும் சர்வவல்லமையுள்ள இறைவனுக்கு அஞ்சி, அனைத்து மனிதகுலத்தின் உலகளாவிய நலனுக்காக - முஸ்லிம்களும், முஸ்லிமல்லாதவர்களும், ஒற்றுமையுடன் இணைந்து வாழ்வோம். இன்ஷா அல்லாஹ்.

இந்த இக்கட்டான நேரத்தில் அல்லாஹ் இஸ்லாத்தின் அழகை மக்களுக்கு வெளிப்படுத்திக் காட்டட்டும்!, உண்மை பொய்யை வெல்லட்டுமாக!, அல்லாஹ்வின் ஒளி தீமையின் இருளைப் போக்கட்டுமாக!. ஆமீன்.