11 ஆகஸ்ட் 2023~23 முஹர்ரம் 1445ஹி
உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அல்லாஹ்வின் கயிறு பாகம்-2 என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் -நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தனது (இறை) வெளிப்பாடுகளை உங்களுக்கு தெளிவாக்குகிறான். (ஆலு இம்ரான் 3:104)
இந்த திருக்குர்ஆன் வசனமானது ஒவ்வொரு முறையும் உங்களை அழைக்கிறது. மேலும் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் ஊடாக (கடந்து) செல்லாமல் நீங்கள் அதனை அடைய முடியாது. அதனால்தான் திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும் முஹப்பத் (நேசம்) வைப்பதற்கு அதிகஅறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் பிறகு, வரும் பொருள் என்னவென்றால், இருவருக்கிடையில் [அதாவது ஒருவருக்கொருவர்] உறவு இருக்க வேண்டும். இது தனியொரு விஷயமல்ல. அவை முதன்மையான ஒரேத் தலைப்பின் பிரிவுகள் ஆகும். இந்த விஷயத்தில் நீங்கள் மேற்கொண்டு முன்னேறும்போது, இன்னும் பல திறந்த பாதைகளும், பல அழகான காட்சிகளும் முன் வரும். பூமியில் வேர்களை நன்கு ஊன்றி, கிளைகள் படர்ந்து, ஒவ்வொரு கிளையும் தன் அழகை, பசுமையை வெளிப்படுத்தும் மரத்தைப் போன்றது. ஆயினும்,அவைகளின் அழகை தனித்தனியாக காட்டுவதாக இருந்தாலும், எப்போதும் அவைகள் ஒரே மரத்தின் பகுதியாகும், இன்னும் மரத்திலிருந்தும் அவைகளைப் பிரிக்க இயலாது.ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத்துக்கும் இது (மிகச்)சரியாகவே உள்ளது.
மேலும் இவ்வாறு தான் உம்மத் பரவுகிறது. இது மலர்கிறது,, விரிவாகப் பரவுகிறது இன்னும் வளர்ச்சியடைகிறது. நாம் அனைவரும் - அனைத்து முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து ஒரே உடலின் கிளைகளாக இருக்கிறோம். இந்த ஒற்றுமையைக் கொண்டு வருவதற்காக , இஸ்லாத்தை மீண்டும் நிலை நிறுத்துவதற்காக அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ள ஜமாத்தாகிய ஜமாத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி,நான் இந்த தலைப்பை தெளிவுபடுத்த முயற்சிக்கிறேன். நீங்கள் ஒரே உடலாவீர்கள் - அதாவது எனது ஒரு பகுதியாவீர்கள்.ஆகவே எனது சொந்த உடலின் பசுங்கிளைகளே! நான் ஹஜ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து தண்ணீரையும் உணவையும் பெற்று மீண்டும் உயிர் பெற்ற மரமாக உள்ளேன்! மேலும் நான் ஒரு புதிய நீர் ஊற்றைக் கண்டேன், என்னுடன் இணைந்துள்ள ஜமாத்தின் மக்களே! நீங்களே எனது மரத்தின் வளரும் கிளைகளாக இருக்கின்றீர்கள்!.
(இது) உம்மத்தை ஒன்றிணைப்பதற்காக ஹஸ்ரத் மஸீஹே மவூத்(அலை) அவர்கள் பெற்றுக் கொண்ட பணியைப் போன்றது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆயினும் இன்று எனது சொந்த ஜமாத்தைப் போலவே (அன்றும் மஸீஹ் மவூது(அலை)) அவர்களது சொந்த ஜமாத்தைக் கொண்டே அது ஆரம்பமானது. அல்லாஹ்வின் ஜமாத்தாகிய இந்த ஜமாத் முழு உம்மத்தையும் வெற்றிக் கொள்ளச் செய்வதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் இந்த ஜமாத்தில் இருக்கின்றீர்கள் என்பதே உங்களுக்குப் போதுமானதாகும் என்று நீங்கள் கூறாதீர்கள்! அவ்வாறல்ல! நீங்கள் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடிய (அத்தகைய) ஒற்றுமையுடன் கூடிய உம்மத்தை உருவாக்கும் ஒரு முயற்சியை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உங்களுக்கு உள்ளது.மேலும் இந்த ஒற்றுமையானது வெறும் வார்த்தைகளில் மட்டுமே மொழி பெயர்க்கக் கூடியதாக இல்லாமல், செயல்பாட்டிலும் கூட அவ்வாறே வெளிப்பட வேண்டும்.
கலீஃபதுல்லாஹ்வைப் பின்பற்றக் கூடியவர்களாக இருப்பதே உங்களுக்குப் போதுமானதாகும் என்றும் உம்மத்தின் ஒற்றுமைக்கான பணிகளில் ஈடுபடாமேலேயே நீங்கள் எங்கு இருக்கின்றீ்ர்களோ அங்கு திருப்தியுடன் இருப்பதாகவும் உங்களது மனதில் நினைத்து விடாதீர்கள்!
உம்மத் என்பது மேன்மை பொருந்திய நபி கரீம் (ஸல்) அவர்களது உடலாகும். அன்னாரது உடல் கூறுபட்டு, மோசமானதொரு நிலையில் துண்டு துண்டாகிப் போவதை நீங்கள் அனுமதிக்கப் போகின்றீர்களா? நீங்கள் இந்த அருளுக்குரிய உடலை புத்துயிரூட்டப் போகின்றீர்களா? அல்லது (இஸ்லாமிய நெறிமுறைகளின் படி) அடக்கம் செய்வதற்குரிய எந்த ஒரு கிரியைகளையும் செய்யாது கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஓர் அழுகிக் கொண்டிருக்கும் உடலைப் போன்று அதனை விட்டு விடப் போகின்றீர்களா?
ஹஜ்ரத் நபியே கரீம் முஹம்மது (ஸல்) அவர்களது உடலை (அதாவது உம்மத்தை இவ்வாறு கேட்பாரற்ற நிலையில்) மரணித்துப் போகுமாறு விட்டு விடாமல் கவனமாக இருந்து கொள்ளுங்கள்!ஒரே உடலைப் போன்று எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல், நாம் அனைவரும் ஒன்றிணைதல் வேண்டும், ஏனென்றால் நாம் அனைவரும் ஹஜ்ரத் நபியே கரீம் முஹம்மது(ஸல்) அவர்களது இன்றியமையாதத் தரத்திலிருந்து / சாராம்சத்தில் இருந்து வந்தவர்கள் ஆவோம். இது உலகம் முழுவதிலும் உள்ள உண்மையான முஸ்லிம்கள் அனைவருக்கும், அந்த முஸ்லிம்கள் தங்களது மார்க்கத்தை இழந்து விடக் கூடாது என்பதற்காகவும், அவர்கள் இந்த தற்காலிக உலகின் பௌதீகவாழ்வைப் பெற்றுக் கொள்வதற்காக, தங்களது மார்க்கத்தை குறைந்த விலைக்கு விற்று விடக் கூடாது என்பதற்கும் இது உண்மையானதாகும்.
ஆகவே, மரத்துடன் நேரடித் தொடர்பு இல்லாத வரையில், எந்த கிளைகளும் இல்லை. அந்த மரங்கள் என்பவை நபிமார்கள் ஆவர். அவர்கள் தங்களைப் பின்பற்றுபவர்களை ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கிறார்கள். (நபிமார்களாகிய) அவர்கள், (நம்பிக்கை கொண்டவர்களாகிய) உங்களை ஒன்றாக இணைக்கிறார்கள்..ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இமாமின் வருகையைப் பற்றி நற்செய்தியை வழங்கி உள்ளார்கள். இந்த இமாமுடைய வருகையின் முதன்மையான நோக்கம் என்னவென்றால், ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் கையை (பற்றிப் பிடிப்பதை) கைவிட்டு வழி தவறிச் சென்று விட்ட மக்களை மீண்டும் ஒரு முறை ஒன்று சேர்ப்பதாகும். அதனால் உலகில் [இன்று] மறைந்து போய் கொண்டிருக்கும் அதன் பலப்படுத்தப்பட்ட ஒற்றுமையை மீண்டும் இஸ்லாம் திரும்பப் பெறும் வகையில் அவர்கள் அனைவரையும் மீண்டும் ஓர் உடலாக ஒன்றிணைப்பதே அந்த இமாமின் நோக்கமாகும்;
நான் இந்த விஷயத்தை மிகச் சிறந்த நற்குணங்களுடன் மேற்கோள்காட்டி அழுத்தமாக குறிப்பிட்டு கூறினேன். இந்த விஷயத்தை நான் இந்த வகையில் அவ்வாறு விளக்கவில்லை என்றால், அதை ஓர் ஆன்மீக சொகுசாக அனுபவிப்பட்தோடு, அ(வ்விஷயத்)தை மறந்து விடுவார்கள். இந்த விஷயங்கள் நற்குணங்களோடு தொடர்புடையது என்பதை உங்களுக்கு புரிய வைக்க விரும்புகிறேன். உங்களிடம் நல்லொழுக்கங்கள் இல்லாமல், நீங்கள் நபி (ஸல்) அவர்களுடனோ அல்லது உங்களுக்கு மத்தியிலும் சரி, ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாது. மேலும், அல்லாஹ்வின் அருளால் நமது ஜமாத்தின் தூதுச் செய்தி வேகமாக பரவிவரும் நிலையில், நம்மிடையே ஒழுக்கமும், நற்குணங்களும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். ஜமாத்தின் தூதுச் செய்தி வேகமாக பரவுவது எதிரிகளை அதிக அளவு அச்சமடையச் செய்கிறது. அவர்கள் பல தீய திட்டங்களை தீட்டுகின்றனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய இயலாதக் காரணத்தினால், அவர்கள் பொறாமையில் எரிந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் அவர்கள் அரசாங்க அளவிலும் கூட தீய திட்டுங்களைத் தீட்டுகின்றனர், அல்லாஹ்வின் அருளால் அது குறித்த செய்திகளை நாம் பெறுகிறோம்.
ஆகையால், அவர்கள் ஜமாத்தில் குழப்பம் விளைவிக்க முயற்சிக்கிறார்கள் என்பதாகத் தோன்றுகிறது.அவர்களின் (பல்வேறு) முயற்சிகளில் ஒன்று நான் உங்களிடம் தற்போது கூறியது போலவே, (ஜமாத் மக்கள் மத்தியில்), திருகுர்ஆன் வசனங்களுக்குத் தவறான கருத்து கொள்ளும் பொருள் கூறுவதன் மூலம் ஜமாத்தில் பிளவை ஏற்படுத்துவது. ஹஜ்ரத் மஸீஹ் மவூத் (அலை) அவர்களின் ஜமாஅத்தை மட்டும் நாம் பார்த்தோமேயானால், நுபுவ்வத்- நபித்துவத்தின் வாசல் எப்போதும் திறந்தே இருக்கும் என்று எப்பொழுதும் நாம் [ அஹ்மதி முஸ்லிம்கள் அனைவரும்] பிரச்சாரம் செய்து வருகிறோம். (நான்) அஹ்மதியா ஜமாத்தின் மிஷனரி என்ற நிலையில், அச்சமயத்தில், ஹஜ்ரத் மஸீஹே மவூத் (அலை) அவர்களைப் பொய்யர் என்று கருதும் மற்ற முஸ்லிம்களுக்கு எதிராக நாம் வைக்கும் அதே முக்கிய வாதமும் இதுவே.ஆனால்,(அஹமதிகளாகிய) உங்களுக்கு இன்று நிலை என்ன நேர்ந்து விட்டது? மஸீஹ் (அலை) அவர்களின் கிலாஃபத் (கிலாஃபத்தே-மஸீஹ்) 1000 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும், அதனால் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு இமாம் ரூஹில் குத்தூஸுடன் வர வேண்டிய அவசியமில்லை என்று கூறுவதற்கு முந்தைய (அஹ்மதியா) கலீஃபாக்களின் சொந்தக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கூற்றுக்களை மட்டுமே நீங்கள் அடிப்படையாக அமைத்துக் கொண்டீர்கள்.
ஆக (அஹமதி முஸ்லிம்களாகிய) நீங்கள் கூறும் கூற்று, திருக்குரானில் அல்லாஹ் என்ன கூறி உள்ளானோ அதற்கு முற்றிலும் மாற்றமானதாகும்.அத்தகைய கூற்றுக்கள் ஹஜ்ரத் முஹமது நபி (ஸல்) அவர்கள் ஹதீஸ்களில் கூறி உள்ளவற்றிற்கும், ஏன் மஸீஹே மவூத் (அலை) அவர்கள் கூறியதற்கும், தனது புத்தகங்களில் எழுதியுள்ளவற்றிற்கும் கூட மாற்றமானதாகும். அவற்றில் அன்னார், தான் கலீஃபாக்களில் முத்திரையானவர் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். ஆனால் அதற்கு அன்னார்தான் அல்லாஹ்வின் இறுதி கலீஃபா என்றோ அல்லது இறுதி மஸீஹ் என்றோ பொருள் இல்லை. மாறாக அன்னார், இது அல்லாஹ்வின் விருப்பமாக இருந்தால், வானங்களும் பூமியும் இருக்கும் காலம் வரை, பல மஸீஹ்மார்களை எழுப்புவதற்கு அல்லாஹ் ஆற்றல் கொண்டவன் ஆவான் என்றே கூறி உள்ளார்கள்.
(ஆனால்) இன்று அஹமதி முஸ்லீம்கள் என்ன செய்கிறார்கள்? மற்றுமுள்ள முஸ்லீம்களைப் போலவே, நபிமார்கள் மற்றும் மஸீஹ்மார்களின் கதவை மூடிவிட்டு, ஹஜ்ரத் மஸீஹ் (அலை) அவர்கள் தான் இறுதி மஸீஹ் என்றும் அதனால் அன்னாருக்குப் பிறகு எந்த ஒரு மஸீஹும் ஒருபோதும் வரப்போவதில்லை என்றும் கூறுகின்றனர்.என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாம் என்ன காண்கிறோம்? வரலாறுதான் மீண்டும் மீண்டும் திரும்புகிறது! இது திருக்குர்ஆனிலும் குறிப்பிடப்பட்டுள்ளது, அதாவது யூசுஃப் (அலை) அவர்களின் காலத்திலும் கூட, (அன்னாரது) சமுதாயம், அவர்தான் இறுதித்தூதர் என்றும் அவருக்குப் பிறகு எந்த தூதரும் வரப் போவதில்லை என்றும் கூறியது. ஆனால், அது உண்மையானதா? அவ்வாறு தான் நிகழ்ந்ததா? மக்களின் சொந்த நம்பிக்கைகளை கருத்தில் கொண்டால், (அது தான் உண்மை என்றால்) ஹஜ்ரத் மூஸா (அலை), ஹஜ்ரத் தாவூத் (அலை), ஹஜ்ரத் சுலைமான் (அலை), ஹஜ்ரத் ஈஸா (அலை), இவ்வளவு ஏன் ஹஜ்ரத் முஹமது நபி (ஸல்) ஆவர்களின் வருகைக் கூட நிகழ வேண்டிய அவசியம் இருந்திருக்காது. (பிறகு,) அவர்கள் இறைப் போதனைகளை அடிப்படையாகக் கொள்வதற்கு பதிலாக, தங்களது சொந்த கருத்துகளையே நம்பியிருப்பார்கள்.
ஆக இன்றைய காலக்கட்டத்தில் நாம் எதனைக் காண்கிறோம்? இறை வழிகாட்டுதல்களை மறந்து, மனிதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட, கலீஃபாக்கள் தான் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்வார்கள் என்று கூறும் மக்களைத் தான் நாம் காண்கிறோம். அப்படிப்பட்ட மக்கள், இறைப் போதனைகளை மறந்துவிட்டு, சில நபிமார்கள் மற்றும் மஸீஹ்மார்களது பிரதிநிதிகளின் குறிப்பிட்ட சில வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, மனிதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட கலீஃபாக்களே 1000 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்வார்கள் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.உண்மை என்னவென்றால், அவர்கள் மஸீஹ் (அலை) அவர்களின் ஜமாத் மக்களை ஏமாற்றுகின்றனர்.இந்த நூற்றாண்டின் கலீஃபத்துல்லாஹ்வாகிய நானும் அன்னாரது ஜமாத்தில் ஓர் அங்கமாவேன். ஏனென்றால் அல்லாஹ்வின் மீதும், கழிந்த சகாப்தத்தின் மஸீஹின் மீதும் நம்பிக்கைக் கொள்ளாமல் அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனாக என்னால் ஆகி இருக்க முடியாது என்பது தான் உண்மை. ஹஸ்ரத் மஸீஹ் மவூத் (அலை) அவர்களின் ஜமாத்தின் உறுப்பினர்களுக்கிடையிலும், ஏன் ஒட்டுமொத்த உம்மத்துக்கிடையிலும் சரி பிளவுகளை ஏற்படுத்துவதற்குப் பயன்படும் திருக்குர்ஆனின் எந்த ஒரு வசனமும் இல்லை என்ற போதிலும், அல்லாஹ் என்னைப் போன்ற ஓர் எளிய, ஒழுக்கம் மிக்க அடியானை, மட்டுமல்லாமல் உன்னதமான மற்றும் மரியாதைக்குரிய ஒரு குடும்பத்திலிருந்து ஒருவரை அல்லாஹ் எழுப்பியுள்ளான் என்ற கருத்தை நிராகரிப்பதில் அந்த மக்கள் பிடிவாதமாக உள்ளனர், அவ்வாறு (எந்த ஒரு வசனமும்) இருக்குமேயானால், உங்கள் முன் வைக்கப்படுவது திருக்குர்ஆன் (வசனம்) அல்ல என்று அதற்கு பொருள். அவைகள் திருக்குர்ஆனுக்கு முரணான வார்த்தைகளாகிய, ஷைத்தானிய வார்த்தைகள் ஆகும். ஏனென்றால் திருக்குர்ஆன் ஒன்றிணைப்பதற்காக வந்துள்ளதேத் தவிர, பிரிவினையை ஏற்படுத்த வரவில்லை.
ஆக, (உங்களிடம்) கொடுக்கப்பட்ட மேற்கோள்கள் அனைத்தும் உங்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதாக இருக்கின்ற அதே வேளையில், இவைகள் திருக்குர்ஆனின் வார்த்தைகள் ஆகும் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால், நீங்கள் உங்களது சொந்த யோசனைகளையும், கருத்துக்களையும் இறை போதனைகளாக எடுத்துக் காட்ட முயற்சித்து கொண்டிருக்கும் ஷைத்தானின் தூண்டுதலுக்கு இரையாகிட உங்களைத் அனுமதிக்கின்றீர்கள் என்பதே உண்மையாகும். மேலும், ஷைத்தான் எதையாவது உங்களிடம் மேற்கோள் காட்டுவதற்கும், ஒரு நல்ல மனிதர் எதையாவது உங்களிடம் மேற்கோள் காட்டுவதற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் ஷைத்தான் உங்களை தீய ஷைத்தானிய முடிவுகளின் பக்கம் அழைத்துச் செல்கிறான், அதே வேளையில் ஒரு நல்ல மனிதனோ உங்களை நல்ல முடிவுகளின் பக்கம் அழைத்துச் செல்கிறான்.இது ஒரு மரத்தை அதன் பழங்களைக் கொண்டு அடையாளம் காண்பது என்பது போன்றே சுலபமானதாகும்..
ஆகவே திருக் குர்ஆனின் மேற்கோள்கள் அனைத்தும் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவரகள் மீதான நேசத்தை உங்களது இதயத்தில் உருவாக்குகின்றன, அந்த மேற்கோள்கள் திருக்குர்ஆனை ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களிடமிருந்தும் பிரிப்பதில்லை, ஆனால், அதற்கெதிரில், எவ்வாறு அவைகள் (வேறுபாடின்றி) ஒன்றாகும் என்பதை வெளிப்படுத்துகின்றன. மேலும் அதன் மூலம் அல்லாஹ்வின் கயிற்றை வேகமாகப் பிடித்துக் கொள்ள, அதாவது உறுதியாக பற்றிக் கொள்வதற்கு உங்களை அவைகள் ஊக்குவிக்கின்றன. அதற்கும் மேல், அல்லாஹ் ஒரே இறைவனாக இருக்கும் பட்சத்தில், அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொள்ளும் மக்களும் கூட ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பதையும் அது வெளிப்படுத்துகிறது. இதுவே அதன் ஆன்மீகப் பொருளாகும். இதுவே திருக்குர்ஆனின் நோக்கமும் ஆகும்.இதற்கு ஷைத்தானுடன் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இது ஒரு மிக பெரிய பணியாகும், இதற்கு அதிக முயற்சி தேவைப்படுகிறது.
நீங்கள் இதைக் கேட்கும் போது, உங்களது தலையை மட்டும் அசைத்து விட்டால், அது பிரச்சனையைத் தீர்த்துவிடாது. ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் சிறந்த பண்புகளை ஒவ்வொன்றாக உங்களிடம் பிரதிபலிப்பதுடன், அவர்களது அறிவுரைகளையும் ஒவ்வொன்றாக உங்களிடம் பிரதிபலித்துக் காட்டுவதும் அவசியமாகும்.பிறகு, அவை எந்த அளவு உங்கள் மீது பொருந்திப் போகிறது என்பதையும், அது உங்களுக்கு எங்கெல்லாம் பொருந்திப் போகிறது என்பதையும் நீங்கள் கண்டறிய வேண்டும், அப்போதுதான் நீங்கள் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களுடன் பிணைப்பை ஏற்படுத்தியிருக்கின்றீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இயலும். அவை உங்களுக்குப் பொருந்திப் போகாத இடங்களிலெல்லாம் ஏதோ தவறு உள்ளது, [அதாவது நபி (ஸல்) அவர்களது அந்த பண்பு உங்களிடம் விடுபட்டுள்ளது என்று பொருள், அவ்வாறு, எது பொருந்திப் போகவில்லையோ அல்லது விடுபட்டுள்ளதோ, அது சரி செய்யப்பட வேண்டும்]
(இவ்வாறாக) நீங்கள் முழுமையான வலிமையுடனும் திறமையுடனும் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள, அதிக முயற்சிகளை மேற்கொண்டால் -நீங்கள் எவ்வளவு அதிகமான முயற்சிகளை மேற்கொள்கின்றீர்களோ, அந்த அளவு (நபி(ஸல்) அவர்களுடன்) உறுதியான பிணைப்பாக அது அமையும். இந்த பிணைப்பு எந்த இடத்தில் வலுவிழந்து, வேரோடு பிடுங்கப்படுகிறதோ, அங்கேயே அது ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது, ஏற்கனவே உள்ள பிணைப்புகளிலும் கூட இது (வெற்றிடத்தை) ஏற்படுத்திவிடுகிறது. இதன் உதாரணம் கண்ணைப் போன்றது. கண்ணின் ஒரு பகுதி காட்சியை உருவாக்குகிறது இது கண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது, மறுபுறம், இது மூளை மற்றும் நினைவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது திரைப் போன்றது. அதனால்தான் சில நோய்களால் கண்களின் திரை பாதிக்கப்படும் போது சில சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக நெருப்பில் வேலை செய்யும் கொல்லர்களின் நிலை இதுதான். அவர்கள் தீச்சுடருக்கு மிக அருகில் இருக்கிறார்கள், அதைத் திறந்தக் கண்களால் பார்க்கின்றார்கள். மேலும் சூரியனை நேரடியாகப் பார்ப்பவர்களும் கூட உள்ளனர்; அவர்களும் கூட இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக கண்கள், நேரடி சூரிய ஒளியைத் தாங்கும் வகையில் உருவாக்கப்படவில்லை என்பதே இதற்குக் காரணம். இதனால் மனிதர்கள் குருடர்களாகி விடக்கூடும்!
ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தார்மீக குணங்கள்/ நல்ல நடத்தைகள் உங்களது (வாழ்வின்) ஒவ்வொரு பாகத்திலும் எவற்றிலெல்லாம் பிரதிபலிக்கவில்லையோ, அவ்வாறான உங்களின் அந்த பகுதிகளையெல்லாம் நீங்கள் கண்காணிக்கவில்லை என்றால் [அல்லாஹ், அவனது நபி மற்றும் இஸ்லாத்துடனான] உங்களதுக் பிணைப்புகள் மற்றும் தொடர்புகள் முற்றிலுமாக இல்லாமல் ஆகிவிடுதல் ஆரம்பமாகி விடும். அதனால், உங்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடைக்கப் போவதில்லை. இரண்டு வகையான பயணங்கள் உள்ளன, ஒன்று ((நபி(ஸல்) அவர்களுடனான) உங்களதுப் பிணைப்பை அதிகரிக்கும் பயணம் அல்லது உங்களது பிணைப்பைக் குறைத்திடும் பயணம். (இவ்விரண்டிற்கும்) இடையில் வேறு ஒரு பயணம் இல்லை. ஆகவே உங்களது தார்மீக குணங்களை/ நல்ல நடத்தைகளை நீங்கள் மிகவும் கவனத்துடன் கண்காணிக்கவில்லை என்றால், பிறகு நபி (ஸல்) அவர்களுடன் உங்களுக்கு இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் தொடர்பும் கூட இல்லாமல் ஆகி விடும். அது மெதுவாக உங்களை விட்டும் விலகிச் சென்றுவிடும்.
ஆகவே, நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களை ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நெருக்கமாக அழைத்துச் செல்கிறது என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பலவீனராக இருந்தால், சிறிய அடிகளாக எடுத்துவையுங்கள். உங்களால் நடக்க இயலவில்லை என்றால், முன்னோக்கிச் செல்ல நீங்கள் எப்பொழுதும் தவழ்ந்தே செல்லலாம்.உங்களால் ஒவ்வொரு அடியாக முன்னேற இயலாவிட்டால், அங்குலம் அங்குலமாக முன்னேறுங்கள். அதை நீங்கள் எவ்வாறாக செய்யப் போகின்றீர்கள்? என்பது முக்கியமல்ல, முன்னேறிச் செல்ல ஒரு வழி (திறந்தே) இருக்கிறது. நீங்கள் முன்னோக்கிச் சென்றால், உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அப்போது உங்கள் பலகீனங்கள் தாமாகவே இல்லாமல் போய்விடும்; மேலும் உங்கள் வழியில் தடைகள், இடையூறுகள் ஏற்படுகின்ற போதிலும், நீங்கள் அவற்றைக் கடந்து செல்வதில் வெற்றி பெறுவீர்கள்; ஏனெனில் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தை பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்: ஒரு காலத்தில், பல பாவங்களையும் செய்த ஒருவர் இருந்தார். மேலும் அவர் பல குற்றங்களையும் செய்தார். பிறகு பெரிய அறிஞர்களிடம் சென்று, என் பாவங்களுக்கு பரிகாரம் உண்டா? என்றும் வினவினார். மேலும் தான் செய்த குற்றங்களையும் அவர்களிடம் கூறினார். ஆனால் அந்த பெரிய அறிஞர்கள் அனைவரும் பாவங்களில் அவர் வரம்பு மீறிவிட்டதாகவும், அவருக்கு எந்த மீட்பும் தீர்வும் இல்லை என்றும் கூறினார்கள். ஒவ்வொரு முறையும் தனக்குத் தீர்வு ஏதும் இல்லை என்று அவர்கள் அவரிடம் கூறியபோது, அவர் அவர்களை ஒவ்வொருவராகக் கொலை செய்தார். தனக்குப் பரிகாரமோ, தீர்வோ இல்லை என்றால், (பிறகு) தனது பாவத்தில் தொடர்ந்தால் தனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், மேலும் மேலும் பலரைக் கொன்றாலும் பரவாயில்லை என்றும் நினைத்தார். கடைசியாக அவர் ஒரு ஆரிஃப் பில்லாஹ் - அதாவது அல்லாஹ்வுக்கு நெருக்கமான ஒரு நபரிடம் வரும் வரையில், இது இவ்வாறேத் தொடர்ந்தது. அந்த நபர் அவரிடம், "உங்களுக்கு சரியான எண்ணம் இருந்தால், நீங்கள் உறுதியாக இருந்தால், கெட்ட செயல்களிலிருந்து நல்ல செயல்களின் பக்கம் முன்னேறத் துவங்கினால், எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடும்" என்று கூறி முடிக்கிறார்.
ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்கள், மிகவும் உவமை வடிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்கள். அந்த நபர் அனைத்துப் பாவங்களையும் விட்டுவிட ஆரம்பித்தார் என்று ஓர் உவமை வார்த்தையில் கூறுகிறார்கள். [அதாவது. பேச்சு வழக்கில், அவர் பாவங்களால் நிறைந்திருந்த இடத்திலிருந்து] அவர் பாவச் செயல்கள்புரிந்த இடத்தை விட்டும் வெளியேறத் தொடங்கினார், இறுதியாக நற்ச்செயல்களைச் செய்வதன் மூலம் நன்மையை பெற்றுக்கொண்டார். அதனால் அவர் மரணிக்கும்வரை நற்செயல்கள் செய்ய கடுமையாக முயற்சித்தார். மேலும் அவர் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்பட்டார். அல்லாஹ் வானவர்களிடம், பாருங்கள்! அந்த நபர் பாவத்தின் தேசத்திலிருந்தும் (ஹிஜ்ரத்) புலம்பெயரத் துவங்கி, அவர் நற்செயல்களின் பூமியை நோக்கி நகர ஆரம்பித்தார். ஆகவே அவருக்கு மன்னிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று கூறினான். ஆகவே, அவர்கள் [அதாவது வானவர்கள்], அவர் பாவங்களின் தேசத்திலிருந்து நற்செயல்களுக்காக தனது வழியைத் துவங்க மட்டுமே செய்துள்ளார் என்று கூறினார்கள். அவர் நன்மைக்கான பாதையில் ஒரு சிறிய தூரம் மட்டுமே நடந்துள்ள அதே வேளையில்,அவர் உண்மையில் நன்மையை முழுவதுமாக நிறைவேற்றுவதற்கு முன் அவர் அடைய வேண்டிய தூரம் அதிகமாகயிருந்தது. ஆக, நற்செயல்களின் நிலத்தை அடைவதற்கு அவர் வெகு தொலைவில் இருந்தார். ஆகவே அல்லாஹ் அவர்களிடம், அவர் மரணித்த இடத்திற்கும் அவர் பாவம் செய்த பூமிக்கும் இடையே உள்ள தூரத்தை அதிகப்படுத்தி, அவருக்கும் அவரது நற்செயல்களுக்கும் இடையிலான தூரத்தைக் குறைத்து விடுங்கள் என்று கூறினான். இவ்வாறான வழியிலேயே அல்லாஹ் மன்னிப்பை வழங்குகிறான்!
மேலும் இவ்விடத்தில் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு மாபெரும் ஞானத்தை விளக்குகிறார்கள். (தூரத்தை அளக்கும்) அளவீடானது உண்மையில் அடி(அல்லது அங்குலம்) போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பது இதற்கு அர்த்தமல்ல. இது ஓர் அழகான உவமை மட்டுமே. அவர் மரணித்த இடத்திற்கும் அவர் பாவம் செய்த நிலத்திற்கும் இடையிலான தூரத்தை வானவர்கள் படிப்படியாக அளந்து கொண்டிருந்த போது, அல்லாஹ் அந்த தூரத்தை நீட்டிக்கிறான் [பிறகு, அவர் நற்செயல்களின் நிலத்தை நோக்கி நெருங்கி வரும்படி செய்கிறான்]. அல்லாஹ் அதை எத்தகைய விதத்தில் செய்தான் என்றால், அவர் அந்த பாவங்கள் நிறைந்த தேசத்திலிருந்து வெகுதூரம் முன்னோக்கி சென்றுவிட்டதை அவர்கள் (வானவர்கள்) இறுதியாகக் கண்டு கொண்டனர். மேலும் (அவருக்கும்) அவரது நற்செயல்களின் நிலத்திற்கும் (இடையே) அளந்த பிறகு, அல்லாஹ் அந்த தூரத்தை குறைத்து விடுகிறான், அதனால் அவர்கள் (வானவர்கள்) அவரை நற்செயல்களின் நிலத்திற்கு மிக அருகில் (இருப்பதைக்) கண்டார்கள்.
அதாவது, நீங்கள் உங்களது வாழ்வில் மனப்பூர்வமாக தீமையிலிருந்தும் (விலகி) நன்மையை நோக்கி நகரத் தொடங்கினால், நீங்கள் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களை நோக்கி நகரத் தொடங்கினால், நீங்கள் (அவ்வழியில்) ஒரு சிறிய பயணத்தை (மட்டுமே) கடந்து சென்று மரணித்திருந்தாலும் கூட, அல்லாஹ் உங்களுக்காக (நன்மையை நோக்கிய) இந்தப் பயணத்தை நீட்டித்து விடுகிறான் என்பதே இதன் பொருளாகும். நீங்கள் தீமையிலிருந்து நன்மையை நோக்கி ஒரு சிறிய தூரம் மட்டுமே நடந்தீர்கள், ஆயினும் அல்லாஹ் உங்கள் பயணத்தை நீட்டித்து விடுகிறான், அதன் காரணமாக, நீங்கள் நற்செயல்களின் நிலத்தை விரைவாக அடைந்திட இயலும்.அவன் உங்களுக்கு அத்தகைய மன்னிப்பைக் கொண்டு அருள்புரிகிறான், உனக்கு மிகவும் மன்னிப்பை வழங்குகிறேன் என்று கூறுவது போல், உங்களை ஊக்குவிப்பதற்காக, நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து, தீமையிலிருந்து நன்மைக்கான உங்கள் நிலையான பயணத்தைத் தொடர்ந்திருந்தால், உங்களது இலக்கை அடைவதற்கான- உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்றிருப்பீர்கள்.நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா இல்லையா என்பதை நீங்கள் கூற இயலும், அல்லது நீங்கள் நிச்சயமாகவே இலக்கை அடைய இயலும்,அப்படிப்பட்டதொரு மன்னிப்பின் அருளை வழங்குகிறான்,
இதனையே இறைக் கருணை என்று அழைக்கிறோம். எனவே, உண்மையில் மன்னிப்பு என்பது அல்லாஹ்வின் ஃபஸ்ல் (கருணையினால், அவனது) அருள்களின் மூலம் வருகிறது.மேலும் ஃபஸ்ல்- கருணையின் விஷயமும் அடிப்படை முக்கியத்துவத்தைப் பெறுகிறது.அல்லாஹ்வின் பார்வையில் மன்னிப்பும் கூட ஓரளவு நீதியை பெறத் தகுதி உடையது. மேலும் அல்லாஹ்வின் எந்த ஒரு செயலும் - அது அவனுடைய அசாதாரணமான அனுகூலங்களைப் பற்றியதாக இருந்தாலும் - எந்த நீதியும் இல்லாமல் நிலைபெற முடியாது! அது எப்போதும் நீதியை அடிப்படையாகக் கொண்டது. என் அடியார்களில் ஒருவருக்கு நல்ல எண்ணம் இருந்தால், அவர்களை நற்செயல்களின் பக்கம் செலுத்தினால், அதற்காக நான் அவரை மன்னிக்க வேண்டும், ஏனென்றால் அவருடைய வாழ்வு என் கையில் உள்ளது, மேலும் அவர் இன்னும் உயிருடன் இருந்திருந்தால், அதே பாதையிலேயேத் தொடர்ந்தார் என்று ஒருவர் கருத வேண்டும். அவர் நிச்சயமாக தனது அனைத்து நற்செயல்களின் நிறைவேற்றத்தை நோக்கி முழுமையாக வர முடியும்.
எனவே இதுவே அன்னாரது ஹதீஸில் நமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள விஷயமாகும்.
இதைக் கருத்தில் கொண்டு,நீங்கள் உங்கள் ஒழுக்கத்தை சீர் செய்திட முயற்சி மேற்கொள்ள இயலும், மேலும் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் -புலம்பெயரத் தொடங்கலாம். மேலும் நீங்கள் எவ்வளவு அதிகமாக நபியை நோக்கி நெருங்குவீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் மற்ற சகோதரர்களையும் கூட நெருங்கத் தொடங்குவீர்கள்.ஏனெனில் உம்மத்தின் மீது ஆழ்ந்த நேசத்தைக் கொண்டிருந்தவர் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களே.அன்னார் மற்ற எவரைக் காட்டிலும் [உம்மத்தின் மீது அதிகமான] நேசம் கொண்டிருந்தார்கள். அன்னார் ரஹ்மத்துல்-லில்-ஆலமீன் [அனைத்து உலகங்களுக்கும் ஓர் அருள்கொடை ஆவார்கள்].ஆனால் இங்கு நம்பிக்கையாளர்களைப் பற்றி எங்கெல்லாம் குறிப்பிடப்படுகிறதோ, அங்கேயே அல்லாஹ்வின் "ரவூஃபுர்-ரஹீம்" என்ற பண்புகளும் குறிப்பிடப்படுகின்றன, ஏனென்றால் சந்தேகத்திற்கிடமின்றி இறைப் பண்புகளை மிக உயர்ந்த நிலையில் வெளிப்படுத்தியவராக இருந்தவர் நபி(ஸல்) அவர்களே..
ஆகவே, ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நெருக்கமானவர் எவரோ, அவர் தானாகவே உம்மத்துக்கும் நெருக்கமானவராகிவிடுகிறார்.ஆகவே, இந்த தார்மீக / நல்லொழுக்க குணங்களானது சிமெண்டைப் போன்றது, அது ஒரு பக்கம் அவரை நபி(ஸல்) அவர்களுடன் இணைக்கிறது, மறுபுறமோ அனைத்து முஸ்லீம்களையும் ஒன்றாக இணைக்கிறது - இதன் மூலம் நீங்கள் ஒன்றாக - ஒரே உம்மத்தாக, இறுதியில், மனிதகுலம் அனைத்தும், இன்ஷா-அல்லாஹ் அங்கே, நீங்களும் .(மனிதகுலமானது ஒரே சமுதாயமாக, நம்பிக்கையாளர்களின் ஒரே உடலாக). உம்மத்-ஏ-வாஹிதாவை நோக்கி குடிபெயர்வீர்கள்.நீங்கள் மிகவும் உறுதியான பிணைப்புகளை வளர்த்துக் கொள்கிறீர்கள்.
ஆகவே, ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களது அறிவுரைகளானது, நல்லொழுக்கங்களை , சிறந்த நடத்தைகளைக் கொண்டுள்ளது, அவற்றைக் குறித்து கண்ணியத்துடன் நன்கு பகுப்பாய்வு செய்யுங்கள்! இவ்வாறாக ஒவ்வொரு அறிவுரையும் ஒரு கயிறைப் போல் மாறும் போது தான் பிணைப்புகள் ஏற்படுத்தப்படும்.இந்த அறிவுரையை நீங்கள் பின்பற்றும்போது, நபி(ஸல்) அவர்களுடன் இணைவதற்கான ஒரு புதிய வழியைப் பெற்றுக் கொள்வீர்கள்.நீங்கள் இதனை அலட்சியமாகப் பார்த்தால் (இவ்விஷயத்தில் உதாசீனமாக இருந்தால்) நபி(ஸல்) அவர்களுடனான உங்களது பந்தம் அறுந்து போய்விடும்.
ஆகவே, நாம் சிறு அடிகளை எடுத்து வைத்து நபி(ஸல்) அவர்களை நெருங்குவதற்கு அல்லாஹ் நமக்கு வாய்ப்பளிப்பானாக!மேலும் நாம் அவ்வாறு செய்யும்போது, நாம் தானாகவே ஒருவரையொருவர் அணுகவும் அத்துடன் ஒருவருக்கொருவர் மிகவும் நெருங்கி வரவும் இயலும்.
அப்போதுதான், மனிதகுலம் அனைவரையும் ஒரே உம்மத்தாக ஒன்றிணைக்கும் திறன் கொண்ட ஒன்றுபட்ட ஒரு சமுதாயம் உருவாகும். அப்போதுதான் நீங்கள் பரவி எண்ணிக்கையில் பல்கிப் பெருகுவீர்கள், மேலும் ஏற்றுக்கொண்ட நாடு அல்லது நாடுகளிலிருந்து புதிதாக வருபவர்களையும் கையாள்வதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது.
நான் உங்களுக்கு வழங்கியுள்ள பரிகாரத்தை, நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் ஒருவருக்கொருவர் எந்த அளவு மிக நெருக்கமாக இருப்பீர்கள் என்பதைக் கவனிப்பதில் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்!
மேலும் அதே நல்ல ஒழுக்கம்தான் உங்களை ஒன்றாக இணைக்க இயலும். நல்ல ஒழுக்கம் இல்லாமல் எந்த தொடர்பும் இல்லை, (ஏன் முறையான தரம் இல்லாமல்) சிமெண்டும் கூட இல்லை. நல்லொழுக்க குணங்களே நாடுகளை ஒன்றாக இணைக்கிறது. அதுவே இறுதிப் புள்ளியாகும். ஒழுக்க நெறிகள் உடைந்துப் போனால், மக்கள் ஒற்றுமையாக - ஒன்றாக இணைய இயலாது.அதற்கெதிரில்,நல்ல குணங்களுக்குப் பதிலாக, கெட்ட நடத்தையை நீங்கள் பின்பற்றத் தொடங்குவீர்கள்.ஒவ்வொரு கெட்ட நடத்தையும் மக்களைப் பிரிக்கிறது; அவர்கள் ஒருபோதும் ஒற்றுமையாக இணையப் போவதில்லை.
எனவே, தார்மீக ஒழுக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குங்கள். ஆனால், அதனை ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடன் தொடர்புபடுத்துங்கள், (பின்பற்றுங்கள்). அதனால், உங்களது மார்க்கம் முழுமையடையவும், ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களுடனான அன்பின் பந்தம்- பிணைப்பு அதிகரிக்கவும், உங்களது சகோதரர்களுடனான பிணைப்பு இயல்பாகவே அதிகரிக்கவும் செய்யும்.ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றி நீங்கள் தார்மீகக் பண்புகளைக் கற்றுக் கொண்டு வளர்த்துக் கொண்டால், ஏற்படும் பெரிய நன்மை என்னவென்றால், அதனால், அது அல்லாஹ்வுக்கு ஏதோ ஒரு வகையில் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் அத்தகைய மக்கள் மீது தரூத் (பேரருட்களை) இறக்குகின்றார்கள். மேலும் அந்த அருட்கள் வானத்திலிருந்து உங்கள் மீது தொடர்ந்து அருளப்படுகின்றது.
ஆதலால், ஒழுக்க நெறிகளை முடிந்த அளவுக்கு உயர்த்துவதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். சிலர் நல்ல ஒழுக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள், ஆனால் அதே நேரம் அவர்களின் குணத்தின் சில பலவீனத்தின் காரணத்தால், அவர்கள் சில ஒழுக்கக்கேடுகளையும் வேறு சில சமயங்களில் வெளிப்படுத்துகிறார்கள். இந்த பலவீனத்தின் காரணமாக, நீங்கள் வெளிப்படுத்திடும் இந்த ஒழுக்கங்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகின்றன. இது ஒரு உளவியல் பலவீனமாகும். சில மக்கள் பழிவாங்க விரும்புவதில்லை. "சரி, நான் உன்னை மன்னிக்கிறேன்" என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அல்லாஹ் பழிவாங்குவதை முற்றிலும் ஆகுமானதாகவும், அனுமதிக்கக்கூடியதாகவும் ஆக்கியுள்ளான்; அது எந்த சந்தர்பத்தில் என்றால் ஒருவர் மற்றொரு நபருக்கு எதிராக, அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறிவிடும்போது அனுமதிக்கப்பட்டதாகும். அப்போது, அந்த சந்தர்பத்தில் நடக்கும் பழிவாங்கல் என்பது அல்லாஹ் அவனாலேயே பிரகடப்படுத்தப்பட்டதாகும்.
சிலர், தங்களுக்குள் இருக்கும் பலவீனத்தானால், பழிவாங்குவதற்குப் பதிலாக, மற்றவர்களை மன்னித்து, அந்த விஷயத்தை முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். அத்தகையோருக்கு மத்தியில் மன்னிக்க வேண்டும் என்ற ஆசையால் இதைச் சொல்லாமல், பயத்தின் காரணமாகக் கூறுபவர்களும் உள்ளனர்; அவர்கள் பழிவாங்குவதற்காக முன்னோக்கிச் செல்லும் போதெல்லாம் சிறு சில தண்டனைகளுக்கு அஞ்சுகிறார்கள். நான் கூறும் பழிவாங்குதல் என்பது அல்லாஹ் (தபாரக்) அனுமதிக்கும் எல்லைக்குள், (இறைநியதிகளுக்கு வெளியே அல்லாமல்) ஆன்மீக சட்டங்களின்படி மேற்கொள்ள வேண்டிய பழிவாங்குதலாகும்.
நாம் பனி இஸ்ராயீலின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.அவர்களுக்கும் அதேப் போன்று தான் இருந்ததது. அவர்கள் ஃபிர்அவ்ன் மற்றும் ஃபிர்அவ்னை பின்பற்றியவர்கள் மீது பயங்கரமான அச்சம் கொண்டிருந்தனர். இதன் காரணமாகவே, தங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அடக்குமுறைகளை எளிதில் மன்னிப்பார்கள். அவர்களுக்கு எந்த அளவுக்கு அச்சம் இருந்தது என்றால், ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள் வந்த போது, (அவர்களுக்கு) நடத்தப்பட்ட அடக்குமுறைகளுக்குப் பழிவாங்குவதை அன்னாரின் போதனைகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். இஸ்ரவேல் சந்ததியினருக்கு ஃபிர்அவுன் மீது அதிகமான பயம் இருந்ததால் அன்னாருக்கு அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் அன்னார் அந்த பயத்திலிருந்தும் அவர்களை விடுவிக்க வேண்டியிருந்தது [மேலும், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் போன்றவற்றை அன்னார் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்]. எப்போது அவர்களின் இதயங்களில் கடுமைத்தனம் முழுமையாக நுழைந்து, எவ்வாறு மன்னிக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டார்களோ, அப்போதுதான் மஸீஹ் [ஈஸா (அலை)] அவர்கள் அவர்களிடத்து தோன்றி, மற்றவர்களை மன்னிக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தினார்கள் - எனவே, பழிவாங்க வேண்டாம் என்றார்கள். யாராவது அவர்களை கன்னத்தில் அடித்தால் [அவர்களுக்கு ஒரு அறை கொடுத்தால்], பின்னர் அவர்கள் மற்ற கன்னத்தையும் காட்டிட வேண்டும் என்று அன்னார் கற்பித்தார்கள். [சகிப்புத்தன்மையையும் பழிவாங்கும் போக்கை விட்டு வெளியேறவும் அவர்களுக்கு அன்னார் கற்றுக் கொடுத்தார்கள்].
இது வெவ்வேறு காலகட்டங்களுக்கான ஒரு தீர்வாகும். ஆனால் இது ஒரு உளவியல் பலவீனமாகும், சில சமயங்களில் இது சமுதாய பலவீனமாக மாறிவிடுகின்றது. அவர்களின் தீர்விலும் கூட, சில சமயங்களில் குணமடைய அதிகப்படியான நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது, ஒரு பலவீனம் சீர்திருத்தப்படும் போது, இதற்கிடையில் மற்ற வியாதிகள் வெளிப்படலாம். ஆனால் நான் குறிப்பிடுவது என்னவென்றால், நீங்கள் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடத்திலிருந்து ஒழுக்கங்களைக் கற்றுக் கொண்டால், பின்னர் நீங்கள் அந்த ஒழுக்கங்களில் ஒருபோதும் வரம்புமீற மாட்டீர்கள் [எப்போது, எப்படி பழிவாங்க வேண்டும் அல்லது எப்போது மன்னிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள்], ஏனென்றால் அன்னாருடைய ஒளி நடுத்தரமான சமநிலையான ஒளியாகும். அன்னாருக்கு "சஸிராத்தல் முஸ்தகீம்" (நேரான பாதை) வழங்கப்பட்டுள்ளது.
எனவே ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களிடம் நீங்கள் கற்றுக் கொள்ளும் நல்லொழுக்கப்பண்பில், ஒவ்வொரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்ப உங்களுக்கு மன்னித்தலும் உண்டு, நீங்கள் பழியும் வாங்கலாம். எனவே, மன்னிப்பதோ அல்லது பழிவாங்குவதோ ஒரு மோசமான விஷயமாக இருக்காது. உண்மை என்னவென்றால், மன்னித்தல் வரம்பு மீறும்போது, அதன் விளைவாக அது தீங்கு விளைவிக்கும், மன்னித்தல் ஒரு நல்ல செயலுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் இந்த சந்தர்ப்பத்தில் அது மோசமான ஒழுக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பழிவாங்க வேண்டிய அவசியம் இருந்தால், (அப்போது) நீங்கள் பழிவாங்கவில்லை என்றால், அந்த நேரத்தில் அது ஒரு நல்ல செயல் அல்ல; அது ஒரு பாவமாக, தீமையாக மாறிவிடும்.
ஆகவே, ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் மூலமாகவே அன்றி எந்த முன்னுதாரணத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுக் கொள்ள இயலாது.மேலும் எல்லா ஒழுக்க நெறிகளிலும், எல்லா நல்ல நடத்தைகளிலும், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நடுநிலையான வழியைக் கடைப்பிடித்தார்கள். சில சமயங்களில் நீங்கள் மன்னிப்பின் நிலையில் அல்லது மற்றொரு சமயம் பழிவாங்குதலின் நிலையாக இருந்தாலும் சரி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதில் எந்த ஒரு ஆபத்தும் இல்லை (ஒருபோதும்) இல்லை. அதன் பிறகு நீங்கள், உங்களுக்கிடையில் உங்களது இணைப்புகள் / பிணைப்புகளை நீங்கள் ஏற்படுத்தும்போது, அந்த நேரத்தில் இது உங்களது பிணைப்பை/ தொடர்பினை அதிகரிக்க உதவும், மேலும் இது மற்ற மக்களுடனும் (உலகின் பிற நாடுகளுடனும்) உங்களது பிணைப்பினை நிலைநிறுத்துவதற்கான வழிமுறையாக இருக்கும். இன்ஷா அல்லாஹ். ஆமீன்.