தாவத்-ஏ-இலல்லாஹ்: முஸ்லிம்கள் & உண்மை

04 மார்ச் 2022 / 30 ரஜப் 1443 AH

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹது, தவூத் மற்றும் ஸூரா அல் ஃபாத்திஹா ஓதியப் பிறகு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள், தாவத்-இ-இலல்லாஹ்: முஸ்லிம்கள் & உண்மை என்ற தலைப்பில் தனது ஜும்ஆ பேருரை நிகழ்த்தினார்கள்.

திருக்குர்ஆன், குஃப்ரை மிகப்பெரிய பொய்யாகக் கருதினாலும் கூட, இஸ்லாத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிலைப்பாடாக உண்மையை உறுதியுடன் பின்பற்றுவதை (அது) முன்வைக்கிறது. பொய்யைக் கொண்டு உண்மையை மறைக்கவோ அல்லது தெரிந்துக் கொண்டே உண்மையை முழுவதுமாக மூடிமறைக்கவோ கூடாது என்பதன் பக்கம் நம்பிக்கையாளரை அழைக்கிறது.

உண்மைத்தன்மை என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முதல் தகுதியாக இருந்தது. மேலும் அது அவர்களைப் பின்பற்றுபவர்களின் இறுதி இரட்சிப்பாகும். பொய்யராக இருக்கிற எந்த மனிதனும் தன்னை முஸ்லிம் என்று கூறிக்கொள்ள முடியாது.

பொய் சொல்பவர்கள், பொய் சாட்சி கூறுபவர்கள், நம்பிக்கைக்கு மாறு செய்பவர்கள், விபச்சாரம் செய்பவர்கள் என நான்கு வகையான ஆண்களும் பெண்களும் இஸ்லாத்தின் கொள்கையில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக பதிவாகியுள்ளது. பொய்த் தன்மை என்ற சொல்லில் குர்ஆன் உட்படுத்துகின்ற குற்றங்களில் அனைவரும் குற்றவாளிகள் ஆவார்கள். இஸ்லாத்தின் இந்த முதல் அளவுகோலின் ஒளியில் இன்றைய நம்பிக்கையாளர்களாகிய நாம் எவ்வாறு செயல்படுகிறோம்?

இப்போது முஸ்லிம்கள் எவ்வளவு எளிதாகப் பொய் சொல்கிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள் ; எவ்வளவு முறை, எவ்வளவு பரவலாக தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொதுப் பரிவர்த்தனைகளிலும், சிறு வியாபாரிகள் முதல் உயர் பதவியில் இருப்பவர்கள் வரை எல்லா வழிகளிலும் பொய் சொல்கிறார்கள். முகஸ்துதி செய்வது என்பது பொய்யாகும், மேலும் முஸ்லிம்கள் இப்போது தங்களின் தற்காலிக மேலதிகாரிகளின் முகஸ்துதியில் சிறந்து விளங்குகிறார்கள். உண்மையை மூடி மறைப்பது அல்லது நேர்மையை மறைப்பது என்பது பொய் கூறுவதாகும், மேலும் அவர்கள் முதலாளிகளிடம் வளைந்தோ அல்லது வஞ்சகத்துடனோ நன்றாகப் பழகுகிறார்கள். பழிவாங்கும் பயத்தில் மக்கள் பெரும்பாலும் பொய் சொல்வதைப் போல, சில நன்மைகளைப் பெறுவதற்கும் அவர்கள் பொய் சொல்கிறார்கள். பொய்யின் தீவிரத் தன்மையின் விளைவு என்னவென்றால்: தேர்வுகளில் ஏமாற்றும் மாணவர்கள்; ஆதாயம் மற்றும் கடத்தல் மூலம் பணம் சம்பாதிக்கும் வியாபாரிகள், பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் அரசியல்வாதிகள், ஊழல் மூலம் தங்களின் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் அதிகாரிகள் இன்னும் பல இருக்கின்றன.. முஸ்லீம்கள் மற்றும் உலகம் முழுவதையும் ஒரு புற்றுநோய் போல ஆட்டிப்படைத்துள்ள இந்த நோயைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இதுவேயாகும்.

அநேகமாக தனிநபர் ஆன்மாவின் இரட்சிப்பு மற்றும் பாதுகாப்பு என்பது பல்வேறு மத அமைப்புகளின் முக்கிய கவலையாக இருக்கலாம். சிலருக்கு, முடிவில்லாத பிறப்பு மற்றும் மறுபிறவிக் கொள்கையில் (கர்மா அல்லது தர்மா) இருந்து தனிப்பட்ட ஆன்மாவை (மோட்சம்) விடுவிப்பது என்பது இறுதியான வாழ்க்கையின் குறிக்கோளாகும். மற்றவர்களுக்கு வலியை நிறுத்துவது (துக்ஹா) என்பது ஆன்மீகப் பயணத்தின் (நிர்வாணம்) உச்சகட்டமாகும். இருப்பினும் இஸ்லாம் தனிமனித சாதனைகளை சமூகப் பொறுப்புடன், தொடர்புப்படுத்துகிறது (அதனை) ஒருவர் இப்போதும் எப்போதும் கவனிக்க வேண்டும்.

இந்த சமூகப் பொறுப்பானது நன்றியுணர்வின் கலாச்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. குர்ஆனின் முதல் சூராவான (அத்தியாயம்) சூரா அல்-ஃபாத்திஹாவில் செய்யப்பட்ட உணர்வுப்பூர்வமான அர்த்தமுள்ள உண்மை அறிக்கையின் மூலம் இஸ்லாம் நம்பிக்கை கொண்டவர்கள் மற்றும் பிறரிடையே புகுத்துகிறது. இதைத் தொடர்ந்து குர்ஆனின் மிக நீளமான அல்லது மிக நீண்ட சூரா உள்ளது. அதைக் கூறுவதென்றால் (அது) சூரா அல்-பகராவாகும். இந்த சூரா உலகளாவிய சமூகப் பொறுப்பின் கருப்பொருளைச் சுற்றி நகர்கிறது அது மனித குலத்தின் மீது அதன் படைப்பாளனான அல்லாஹ்வால் (தபாரக) சுமத்தப்பட்ட பொறுப்பாகும்.

சூரா அல்-பகரா அதன் பெயரை வசனம் 68ல் இருந்து எடுக்கிறது அது கூறுவதாகும்:

இது 287 வசனங்களைக் கொண்டது. அதில் பெரும்பாலானவை மதீனா அல்-முனவ்வராஹ்வில் இறங்கிய வஹீயாகும். இது அகிதா (கோட்பாடுகள்) பற்றிய அறிக்கைகள் மற்றும் சட்ட, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிய அறிவுறுத்தல்களை கொண்டுள்ளது.

சமூகப் பொறுப்புணர்வுடன் கையாளும் அதன் போதனைகள் எவ்வாறாயினும் மற்ற அம்சங்களின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த சமூக பொறுப்புணர்வு [முஸ்லிம்களுக்கு] மட்டும் உரியவை அல்ல. இது உலகளாவிய, நீதிநெறிக்குரிய மற்றும் விருப்பமான முறையில் செயலாற்றுதல் ஆகும்

சரியான பாதையையும் (ஸிராத் அல்-முஸ்தகிம்) உண்மையான வழிகாட்டுதலையும் (ஹிதாயா) ஒருவர் அல்லாஹ்விடம் எவ்வளவு விரைவில் கோருகிறார் என்பதற்கு குர்ஆன் இவ்வாறு கூறி பதிலளிக்கிறது, “அலிஃப் லாம் மீம், இதுவே முழுமையான வேத நூல் இதில் எவ்வித ஐயமும் இல்லை இறையச்சம் உடையோருக்கு இது நேர்வழி காட்டக் கூடியது (அல்-பகரா 2:2-3). “பக்தியுள்ளவர்களுக்கு இது ஒரு வழிகாட்டல்” என்ற இந்த கூற்று ஒருவரை அடிக்கடி குழப்பமடையச் செய்கிறது மேலும் ஒரு நபர் ஏற்கனவே பக்தியுடன் இருந்தால் அவருக்கு ஏன் வழிகாட்டல் தேவை என்று ஒருவர் சிந்திக்கிறார். பிந்தைய வசனத்தின் விமர்சன மறுஆய்வானது, வேதத்தின் மக்களுடன் (குறிப்பாக யூதர்களுடன்) ஒரு உரையாடலுக்காக இந்த சூரா அழைப்பதால் குறிப்பாக மதீனாவின் யூதர்களில் பக்தியுடன் இருந்தவர்களை முதன்மையாக இந்த சொல் குறிக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

மக்காவில் உள்ள குர்ஆனிய வெளிப்பாடுகள் (வஹீ) முதன்மையாக முஷ்ரிகீன்களை (பலதெய்வவாதிகள்) குறித்தது எனவே, அல்லாஹ்வின் (தபாரக) ஏகத்துவம் மற்றும் தனித்துவத்திற்கான வாதங்கள் உருவாயின. இப்போது நபி(ஸல்) அவர்கள் ஒரு நல்ல எண்ணிக்கையிலான யூதர்கள் வாழ்ந்த இடமான மதீனாவிற்கு ஹிஜ்ரத் (இடம் பெயர்தல்) செய்த பிறகு, இஸ்லாத்தின் உலகளாவிய செய்தி அவர்களிடம் உரையாற்றப்பட்டது. காய்ப் விஷயங்களில் (அதாவது கண்ணுக்குத் தெரியாத, இந்த பௌதிக தற்காலிக உலகத்தால் காண்பதற்கு அப்பால் உள்ள, அனுபவத்திற்கு அப்பாற்பட்ட நிகழ்வு, எ.கா. எல்லாவற்றின் மீதும் உயிரோடிருப்பவனான அல்லாஹ்வின் இருப்பில்) நம்பிக்கை கொண்டு, அவர்களின் பிரார்த்தனைகளை (தொழுகையை) கடைப்பிடித்தல், அவர்களுக்கு உரிய பங்களிப்பை வழங்குதல் போன்ற யூதர்களின் அந்த நல்ல ஆன்மாக்களை அணுகின

இஸ்லாத்தின் பக்கம், (ஹிதாயத்) நேர்வழியின் பக்கம் அழைப்பது ஒரு சமூக கடைமையாகும். இதுவே வெற்றி, மகிழ்ச்சி மற்றும் அல்லாஹ்வின் கருணையை அடைவதற்குரிய ஒரு முன் நிபந்தனை ஆகும். (திருக் குர்ஆன்) அத்தியாத்தின் முதல் பகுதி (வசனங்கள் 1-21) இறைவேதமாகிய திருக்குர்ஆனிலிருந்து பயனடையத் தேவையான மனப்பான்மையை அதனை வாசிக்கின்ற ஒருவருக்கு எடுத்துரைக்கின்றது.

இறுதி உண்மை மற்றும் உண்மையான ஞானத்தின் மூல ஆதாரம் இறைவெளிப்பாட்டிலேயே உள்ளது என்று உறுதியாக நம்பிக்கைக் கொள்ளும் உண்மையாளர்களையும், காரண காரியம், தொடர்பு அல்லது செயலறிவு சார்ந்த அனுபவமும் மட்டுமே எல்லாவிதத்திலும் வழிநடத்திட முடியாது என்பதையும் இது குறிக்கிறது. கைப் - மறைவான ஞானத்தைப்பற்றி அறிந்த ஒருவரால் மட்டுமே அதைப் பற்றி மற்றவர்களுக்கு உறுதியாகத் தெரிவிக்க இயலும்.

சர்வவல்லமையுள்ள இறைவன் எவரை தேர்ந்தெடுத்து, எவரிடம் அல்லாஹ் திரைகளை அகற்றி மறைவான சில ரகசியங்களை தெரியப்படுத்துகின்றானோ அப்படிப்பட்ட ஒருவரைத் தவிர, எல்லைக்குட்பட்ட அறிவைக் கொண்டுள்ள ஒரு மனிதனால் மறைவானவற்றை பற்றிய ஞானத்துடன் தனக்குத் தொடர்புள்ளதாக வாதிட முடியாது,

உதாரணமாக, அல்லாஹ்வின் இரகசியங்களின் ஒரு பகுதியாக எதிர்காலத்தில் நிகழும் நிகழ்வுகளை தான் தேர்ந்தடுத்த தனது தூதரிடமோ அல்லது உலகத்தின் மற்றும் இஸ்லாத்தின் சீர்திருத்தத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தனது அடியாரிடமோ பகிர்ந்து கொள்கிறான்.

அது ஒரு நற்செய்தியாக இருந்தாலும் அல்லது மிகக் கடுமையான இறைத் தண்டனைக்கான எச்சரிக்கையாக இருந்தாலும் சரி சர்வவல்லமையுள்ள இறைவன் அவர்கள் மீதானத் தனது வாக்குறுதியை அவர் மூலமாக அவருடைய உண்மைத்தன்மையின் அடையாளமாக அதனை வெளிப்படுத்துகிறான்.

அல்லாஹ்வின் மகத்துவத்தை அங்கீகரிப்பது என்பது ஒரு நபரை தவ்ஹீத் - ஏகத்துவத்தின் பக்கம் அழைத்துச் செல்கிறது. அதே சமயம் அவனது தூதர்களை மனிதகுலத்திற்குத் தெரிவிக்கப்படும் செய்தி மற்றும் (ஹிதாயத்) வழிகாட்டுதலை வெளிப்படுத்தும் ஊடகமாக அங்கீகரிப்பது என்பதானது. அவர் ஒருவேளை இந்த உண்மையை அறிந்தாலும் அல்லது அறியாமல் இருப்பினும் சரி அந்த நபரை ஒரு முஸ்லிமாக ஆக்கி விடுகிறது.

மூஸா நபி (அலை) அவர்கள் அறிவித்த போது “இஸ்ரவேலரே, கேளுங்கள் நம் தேவனாகிய இறைவன் கர்த்தர் ஒருவரே." (உபாகமம் 6:4),

திருக் குர்ஆனின் கூற்றின்படி அனைத்து இஸ்ரேவேலர்களும் எவரெல்லாம் யஹாவோ( அல்லாஹ்வை) தங்கள் இறைவன் என்றும் மூஸா (அலை) அவர்களை இறைவனின் உண்மையான தூதர் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவர்கள் முஸ்லிம்களாகி விடுகின்றார்கள்.

"அல்-பக்ரா" அத்தியாயத்தின் ஆரம்பத்தில் அவர்களை முத்தகீன் - அல்லாஹ்வை அறிந்து கொண்டவர்கள், இறையச்சம் கொண்டவர்கள் மற்றும் நல்லொழுக்கமுள்ளவர்கள் என்று அழைக்கின்றது.

அல்-பகராவின் "பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் ஹிர் ரஹீம்" வசனத்திற்கு அடுத்து வரும் முதல் ஏழு வசனங்கள் இரண்டு வகையான மனிதர்களை குறித்து கூறுகின்றது, ஒரு வகையினர் அல்லாஹ் தான் வழிகாட்டுபவன் என்றும் ஞானத்தின் ஊற்று என்பதையும் உணர்ந்து ஏற்றுக்கொள்பவர்கள். மற்றவர்கள் அல்லாஹ்விடமிருந்து வருகின்ற வழிகாட்டுதலுக்கான அவர்களின் கருத்துக் கதவுகளை அடைப்பதன் மூலம் உண்மையை ஏளனமாக நிராகரிக்கின்றார்கள். அவர்கள் குருடர்களைப் போன்று செயல்படுகின்றார்கள். அவர்களிடம் சத்தியம் ஒருபோதும் வந்ததில்லை என்பதைப் போன்று அவர்கள் உண்மையிலிருந்து ஒதுங்கிக் கொள்வதன் மூலம் பாசாங்கு செய்கிறார்கள். திருக்குர்ஆன் இந்த மனப்பான்மையுள்ள பிரச்சனையை அவர்களின் இதயங்களில் உள்ள ஒரு நோய் என்று அழைக்கின்றது. ஆனால் அத்தகைய நபர்களை அவர்களது நிலையிலேயே விட்டுவிட வேண்டுமா? அல்லது அல்லாஹ்விடமிருந்து வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்கள் அத்தகைய நபர்களை அணுக வேண்டுமா?

குர்ஆன் இவ்விஷயத்தில் தெளிவாக பதில் அளிக்கின்றது. நேர்வழியைக் கண்டறிந்து, அல்லாஹ்விடமிருந்து வழிகாட்டுதலைப் பெற்றவர்கள் மீது சமூகப் பொறுப்பின் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

அடிப்படையில், சூரா அல்-பகரா அது, அடிப்படையில் யூதர்களை நோக்கியே உரையாற்றுகிறது, வாழ்க்கையின் நெறிமுறை மற்றும் நீதமான அணுகுமுறைக்கு மற்ற மனிதகுலத்தை வழிநடத்த அல்லாஹ் அவர்கள் மீது சுமத்தியுள்ள மகத்தான பொறுப்பை அவர்களுக்கு நினைவூட்டுகிறது. இருப்பினும், அவர்கள் உலகளாவிய உண்மையையும் வழிகாட்டுதலையும் ஒரு குறிப்பிட்ட இனம் மற்றும் மதத்திற்குரியதாக குறைத்துக் கொண்டு, தங்களுக்கும் தங்கள் இறைவனுக்கும் இடையே செய்யப்பட்ட உடன்படிக்கையானது தங்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக ஆக்கியது என்றும் அவர்கள் அந்த உடன்படிக்கையை மீறுகின்ற போதும் கூட தங்கள் இறைவனின் ஆதரவைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருப்பார்கள் என்றும். அவன் எப்பொழுதும் அவர்களின் பக்கமே இருப்பான், ஏனென்றால் அவன் தனது உடன்படிக்கைக்கு மாறு செய்யமாட்டான் என்றும் எண்ணினர்.

இந்த சூராவானது யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தெளிவுபடுத்துவது என்னவென்றால், சமூகப் பொறுப்பு என்பது அடிப்படையில் நன்னடத்தை நெறியாகும், அது (வெறும் ஒரு குறிப்பிட்ட) இனம் சார்ந்த ஒன்றல்ல. எவர் அதனை நிறைவேற்றுவாரோ அவர் மனிதகுலத்தின் தலைவராக நியமிக்கப்படுவார்.

யூதர்கள் (தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட) தங்களது பொறுப்பை (அமானிதத்தை - கிலாஃபத்தை)நிரூபிக்கும் வரை மற்றவர்களை வழிநடத்தினர். இருப்பினும், அவர்கள் அல்லாஹ் (தபாரக்)வுடன் தந்திரமாக விளையாட முயற்சித்தபோது தலைமைத்துவம் மற்றும் சமூக பொறுப்பு இரண்டும் முஸ்லிம்களுக்கு மாற்றப்பட்டது. இந்தச் சூழலில்தான் இந்த சூராவானது, பசுவை அறுத்த சம்பவத்தை அல்லாஹ் (தபாரக்)வை மிஞ்சும் (அவர்களது) முயற்சிக்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறது. ஜெருசலேமில் இருந்து மக்காவிற்கு கிப்லாவின் திசை மாற்றப்படுவதும் கூட, யூதர்களிடமிருந்து முஸ்லிம்களுக்கு தலைமைத்துவம் மாற்றப்படுவதை அடையாளப்படுத்துகின்றது.

யூதர்கள் தாங்கள் அல்லாஹ்வின் அருளைப் புரிந்து கொண்டாலும், அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளையும் வழிகாட்டுதலையும் பின்பற்றினாலும் பின்பற்றாவிட்டாலும் அந்த அருளானது தங்களோடு இருக்கும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள் என்பதை இந்த சூரா(அல் - பகரா வின்) முதல் பகுதியானது தெளிவுபடுத்துகிறது. இந்த பிணைப்பு மீற முடியாதது என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அல்லாஹ் தன் தூதரான ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களை உயர்த்தி, அவர்கள் மூலம் தனது தீனை முழுமைப்படுத்தி, இஸ்லாத்தையும் உண்மையான முஸ்லிம்களையும், உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிந்து அவர்களுக்கு வெற்றியை வாக்களித்தான். அவர்களின் சொந்த நடத்தையின் மூலம் உண்மையையும் வழிகாட்டுதலையும் முன்வைக்க உலகின் நான்கு மூலைகளையும் அடைய வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது.

சூரா அல்-பகராவின் இந்த ஆரம்ப வசனங்களை கவனமாக ஆய்வு செய்வதன் மூலம் பெறப்படுவது என்னவென்றால், இன்று உம்மத் ஏன் கடுமையான அறிவுசார்ந்த நெருக்கடி, கலாச்சார நெருக்கடி, சமூக நெருக்கடி, அரசியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி மற்றும் சட்ட நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பது பற்றிய சில சிந்தனைகளை வழங்குகிறது. ஒருமுறை மக்கள் தங்கள் சமூகப் பொறுப்பை கைவிட்டுவிட்டால் அவர்கள் மனிதகுலத்தின் தலைவர்களாக இருக்க மாட்டார்கள் என்று சூரா அல்-பகரா பரிந்துரைக்கிறது. அப்போது அவர்கள் (மற்றவர்களின்) யோசனைகள், பொருட்கள் மற்றும் அமைப்புகளின் நுகர்வோர்களாக மாறி விடுகின்றார்கள் (என்பதை உணர்த்துகின்றது.)

ஒரு முற்போக்கான மற்றும் வளரும் சமுதாயத்தின் இந்த தலைமைத்துவத் தன்மையை குறிப்பிடுகையில் யூதர்கள் யோசனைகளை பயன்படுத்தும் நபர்கள் ஆனபோது, ​​அவர்கள் மனிதகுலத்தின் தலைமைத்துவ தன்மையில் இருந்து நீக்கப்பட்டனர் என்பதை இந்த வசனங்கள் வெளிப்படுத்தி காட்டுகின்றன. அல்லாஹ் ஒருபோதும் அநீதி இழைப்பவன் அல்ல. யூதர்களுக்கு எது உண்மையாக இருந்ததோ அதுவே முஸ்லிம்களுக்கும் உண்மையானதாக இருந்தது ஏனென்றால் (முஸ்லிம்களாகிய) அவர்கள் இப்போது இப்ராஹிம், மூஸா, ஈஸா மற்றும் அனைத்து இஸ்ரேலிய தூதர்கள் மேலும் காலத்தின் தொடக்கத்தில் இருந்தே பொதுவாக அல்லாஹ்வின் அனைத்து தூதர்களுடைய சட்டங்களின் உண்மையான பாதுகாவலர்களாகக் கருதப்படுகிறார்கள்.

எனவே, அவர்கள் இஸ்லாத்தின் நேர்மையான தன்மையை அவர்களுக்குள் வெளிப்படுத்த வேண்டும் ஏனெனில் அவ்வாறு செய்யாவிட்டால் அவர்கள் முஸ்லீம்களாகவும் மார்கத்தைச் சார்ந்தவர்களாகவும் கைவிடப்படுவார்கள். இவ்வாறு, சூரா அல்-பகரா யூதர்கள் தங்கள் தவறை உணர்வதன் பக்கம் அழைக்கிறது. மேலும் புலம்பெயர் இஸ்ரேல் குழந்தைகளின் வரலாற்று அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள [அவர்கள் செய்த அதே தவறை மீண்டும் செய்யாமல் இருக்க] முஸ்லிம்களை அழைக்கிறது. அவர்களின் சமூகப் பொறுப்பு அம்ர் பில் மரூஃப் [நேர்மையை ஊக்குவித்தல்] பக்கம் மட்டும் வரையறுக்கப்பட்டது அல்ல. இது ஒரு நியாயமான மற்றும் நெறிமுறையான உலக ஒழுங்கை உணர்தலும் இதில் உட்படும்.

இஸ்லாம் முஸ்லிம்களின் தனியுரிமை உரிமை என்று கூறவில்லை. குர்ஆன் முழு மனிதகுலத்திற்குமான வழிகாட்டி (ஹிதாயா) ஆகும். அதன் நெறிமுறைக் கோட்பாடுகள் உலகளாவியவை ஆகும் மற்றும் (யூத மதம் ஒரு இனவாத மதம் என்று கூறியது போல) பார்ப்பனியம் ஒரு குறுகிய பகுதியைச் சார்ந்ததும் (பார்ப்பனியம்) மற்றும் பழங்குடி பண்பைக் கொண்டதும் அல்ல. இதன் விளைவாக, இஸ்லாத்தை மற்றவர்களுக்கு முன்வைக்கவும் எடுத்துரைக்கவும் வேண்டிய கடமை முஸ்லிம்களுக்கு உள்ளது.

அல்லாஹ் முஸ்லீம் உலகில் இருந்து குஃப்ர் [அவநம்பிக்கை] மற்றும் நயவஞ்சகத்தனத்தின் திரைகளை அகற்றி, முஸ்லிம்களின் இதயங்களில் இருந்து ஷைத்தானை விரட்டியடிப்பானாக, இதனால் அவர்கள் மீண்டும் ஒருமுறை தெளிவாகக் காணவும், முஸ்லிம்கள் என்ற முறையில் அவர்களின் பொறுப்பில் இருந்து ஓடிவிடாமலும் இருப்பார்களாக! சத்தியத்தின் மீது தங்களை நிலை நிறுத்தவும் மற்றும் நல்லொழுக்கத்தின் முன்மாதிரிகளாக மாறுங்கள், அதனால் உலகத்தை நம் மூலமாக அல்லாஹ் வழிநடத்துத்துவான். இன்ஷா அல்லாஹ், ஆமீன்.