சீர் திருத்தம் மற்றும் தாயி ஏ இலல்லாஹ்

(26/02/2021~5 முஹர்ரம் 1438 ஹி)

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்துமுஸ்லிம்களுக்கும்) தனது ஸலாத்தினைத் தெரிவித்தப் பின்னர் கலீஃபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷ்ஹது தஅவூது மற்றும் சூரா ஃபாத்திஹா ஓதிய பிறகு “சீர்திருத்தம் & தாயி-ஏ-இல்லல்லாஹ்” என்ற தலைப்பில் தனது சொற்பொழிவை வழங்கினார்கள்.

அல்லாஹ்விற்காகவும், மனித சமுதாயத்திற்காகவும் சேவை செய்யுங்கள். உங்களை சுற்றியுள்ள மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழையுங்கள். எவ்வாறு “மரணித்துப் போனவர்களுக்கும் மரணித்துக் கொண்டிருந்தவர்களுக்கும்” உயிர் கொடுத்தாரோ அத்தகைய ஹஸ்ரத் இப்ராஹீமின் உதாரணத்தை பின்பற்றுங்கள். மக்களிடத்தில் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். அவர்களதுத் தேவைகளை நிறைவேற்றுங்கள மேலும் அவர்களது துன்பம் துயரங்களில் கலந்து கொள்ளுங்கள். இதுவே ஒரு தாயி ஏ இலல்லாஹ்வாக மாறுவதற்குரிய மிகச் சிறந்த வழியாகும்.

وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَىٰ ۖ قَالَ أَوَلَمْ تُؤْمِن ۖ قَالَ بَلَىٰ وَلَـٰكِن لِّيَطْمَئِنَّ قَلْبِي ۖ قَالَ فَخُذْ أَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَىٰ كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا ۚ وَاعْلَمْ أَنَّ اللَّـهَ عَزِيزٌ حَكِيمٌ

இன்னும், இப்ராஹீம்; "என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!" எனக் கோரியபோது, அவன், நீர் (இதை) நம்ப வில்லையா?" எனக் கேட்டான்; "மெய்(யாகவே நம்புகிறேன்!) ஆயினும் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)" என்று கூறினார்; "(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர் அவற்றை ஒவ்வொரு மலையின் மீது(ம்) வைத்து விடும்; பின், அவற்றைக் அழையும்; அவை உம்மிடம் (பறந்து) வரும்;. நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கவனும், நுட்பமான ஞானம் மிக்கவனும் ஆவான் என்பதை அறிந்து கொள்ளும்" என்று (அல்லாஹ்) கூறினான். (அல் பகரா 2:261)

‘தாவத்தே இலல்லாஹ்’ அல்லது ‘தாயி ஏ இலல்லாஹ்’ என்ற பதத்தின் பொருள் "அல்லாஹ்வின் பால் மனிதர்களை அழைத்தல்." என்பதாகும். நீங்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் இந்தத் தலைப்பை எனது சொற்பொழிவின் மையக்கருத்தாக மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளேன், இதன் மூலம் மக்களை "உயிர்கொடு(ப்பதன்) ப)க்க(ம்) எவ்வாறு அழைக்க முடியும்? என்பதையும், தனது பொறுப்புகளை அறிந்த ஒரு ஸஹீஹ் அல் இஸ்லாமியன் என்ற நிலையில் நீங்கள் உங்களை எவ்வாறு அல்லாஹ்வின் சேவையிலும், அதே சமயம் மனிதர்களை [மக்களை] நம்முடைய ரப்- படைப்பாளனின் பக்கம் அழைப்பதன் மூலம் மனிதகுலத்தின் சேவையிலும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும், என்பதையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்:

وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا

“மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ, நிச்சயமாக நாம் அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நடத்துவோம்” (அல்-அன்கபூத் 29: 70)

நீங்கள் முஸ்லிம்கள் என்றும் இந்த நூற்றாண்டின் ஃகலீஃபத்துல்லாஹ்வின் மீது நீங்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளீர்கள் என்றும் கூறினால் மட்டும் போதாது. அவர்கள் நம்பிக்கைக் கொண்டு விட்டதாக வெளிப்படையாகவும், தெளிவாகவும் அறிவித்தப் பலரையும் நான் அறிவேன், ஆயினும், எல்லா இடங்களிலிருந்தும் (வந்த பல்வேறு) சோதனைகள் அவர்களை மூழ்கடித்தபோது, ​​அவர்கள் அல்லாஹ்வின் கருணையிலிருந்தும், உதவியிலிருந்தும் நம்பிக்கை
இழந்துப் போயினர். அதன் பின்னர் அவர்கள் ஸஹீஹ் அல் இஸ்லாத்தின் ஓர் உண்மையான முஸ்லீமாக (இருப்பதற்குத்) தகுதியற்ற மோசமான தீமைகளில் வீழ்ந்து விட்டனர். எனது அன்பிற்கினிய ஸஹாபிகளே, அது போன்றே எனது மற்ற முஸ்லீம் சகோதர, சகோதரிகளே மற்றும் குழந்தைகளே! மது, அது போன்று சிகரெட் மற்றும் போதைப்பொருள் போன்ற இன்னும் பிறத் தீமை(யானப் பழக்கங்)கள் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை. இது ஆரோக்கியத்திற்கும், (ஈமான்) நம்பிக்கைக்கும் ஊறுவிளைவிக்கக் கூடியதும், தீங்கு விளைவிக்கக் கூடியதுமாகும். முழுமையாக சீர்திருந்திக்கொள்ள விரும்பும் எவரும் இறைவனிடம் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது. ஆன்மீகத்தின் வெற்றிக்கு இதுவே முக்கியத் திறவுகோலாகும். ஹஸ்ரத் நபிகரீம் முஹம்மது(ஸல்) அவர்கள், இறைவனும், அவனது திருத்தூதர்(ஸல்) அவர்களும் மது பானம் அதுபோன்றே சூதாட்டம், இன்னும் பிற தீமைகளையும் எந்த அளவுக்கு வெறுக்கிறார்கள் என்பதனைப் போதித்தார்கள். ஆகவே, உங்களை அழிப்பதற்கு ஷைத்தான் (தனது) கையால் உங்களை வழிநடத்திச் செல்கின்ற இந்தப்பாதையில் விரைந்து செல்ல வேண்டாம். அது உங்களது (ஈமான்)நம்பிக்கையின் மரணமாக அமைந்து விடும். அது நிச்சயமாக உங்களுக்கு மிகவும் வருந்தத்தக்கதாகவும் அமைந்து விடும்.

மனிதன் ஒரு விசித்திரமான ஜீவியாவான். அவனது நிலை ஆச்சரியமளிக்கிறது, மேலும் அவனது உடல், ஆன்மா மற்றும் அறிவாற்றலின் அடிப்படையில் அவனது படைப்பு, மிகவும் மர்மமானதும், குழப்பம் நிறைந்ததுமாகும். உண்மையில், ஒவ்வொரு மனிதனும் ஒரு குறிப்பிட்ட வடிவத்துடனும், சிறப்பான குணாதிசயங்களுடனும் படைக்கப்பட்டுள்ளான். அது அவனை தீமை மற்றும் நல்லதை நோக்கி அழைத்துச் செல்கின்ற அத்தகைய உள்ளார்ந்த போக்குகளை அவன் கொண்டிருக்கிறான். சில சமயங்களில் மனிதன் தனது உணர்வுகள், அவனது அகங்காரம், பேராசை, அவனது கர்வம் ஆகியவற்றிற்கு அடிமையாகி விடுகிறான். இன்னும் சில சமயங்களில் செல்வ வளத்தை பெருக்கிக் கெள்ளவும், இந்த உலகில் (புகழ்)மகிமையைப் பெற்றுக் கொள்ளவும் அவன் தனது மேன்மையை(உயர்வை) மற்றவர்கள் மீது நிலைநிறுத்துவதை அவசியமானதாக உணர்கிறான்.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து என்னை தொடர்பு கொண்டு, எனது உண்மைத் தன்மையையும் ஜமாஅத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தின் உண்மைத் தன்மையையும் உறுதிப்படுத்திக் கொண்டவர்கள் உள்ளனர்; ஆயினும், அவர்கள் ஒரு படி பின்வாங்கி, அவர்களின் தீய நடத்தைகளால் உண்மையை கடைபிடிக்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் என்னிடம் கூறட்டும்: தூய்மையான ஒரு ஜமாஅத்தை தீய நடத்தைகள் நிறம்பியவர்களால் எவ்வாறு ஒருங்கிணைக்க முடியும்? எவரொருவர் உண்மையை அடையாளம் காண்கின்றாரோ, அப்போது ​​அவர் முன் வந்து அந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். (அதனால் அவர்களுக்கு) கல்வியும் சீர்திருத்தமும் கிடைக்கும். அல்லாஹ்வே அவர்களுக்கு இந்த திறனை வழங்குவான், மன்னிப்பும் கிடைத்து விடும்.

நிச்சயமாக அல்லாஹ்வே, தங்களது அன்றாட வாழ்க்கையில் தவறிழைப்பவர்களுக்கும், அன்றாடம் குற்றம் செய்பவர்களுக்கும்(கூட) உதவி செய்யக்கூடியவனாக இருக்கிறான். அவர்களது நோக்கங்களின் உண்மைத்தன்மையை அல்லாஹ் தீர்மானிக்கிறான். நீங்கள் அல்லாஹ்வின் மீதும் இந்த நூற்றாண்டின் கலீஃபத்துல்லாஹ்(அய்)வின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ள முஸ்லிம் நம்பிக்கையாளர்கள் என்று (வெறுமனே) கூறுவது மட்டும் போதாது. நீங்கள் உங்களது மூக்கைப் பிடித்துக் கொண்டு, கசப்பான மருந்தை குடித்தாக வேண்டும், இதனால் நீங்கள் குணமடைந்து விட முடியும். நம்பிக்கை கொண்டிருப்பது என்பது எளிதான ஒன்றல்ல. ஒரு முஸ்லீம் என்(று கருதப்படு)பவர், ஒரு முஸ்லீமுடைய உடலாகவும், ஆன்மாவாகவும் இருக்க வேண்டும். அவர் மற்றவர்களை சீர்திருத்தவும், இறைவனின் பக்கம் வழிகாட்டவும் முயற்சிப்பதற்கு முன்பு, அவருடைய (சொந்த) சீர்திருத்தம் மிகவும் பிரதானமானதாகும்.

இறைவனைத் தேடுவது என்பது மனிதனுள் இருக்கின்ற இயல்பான ஒன்றாகும். ஆகவே, அவனை அடைய விரும்பும் எவரொருவரும், இந்த (இயல்பான) விருப்பத்தைத் (தன்னுள்) தூண்டுவதன் மூலம் தொடங்க வேண்டும், இல்லையெனில் இறைவன் அவருடைய அழைப்புகளுக்கு தொடர்ந்து செவிமடுக்காதவனாகவே இருப்பான்.

எனது சொற்பொழிவின் ஆரம்பத்தில் நான் மேற்கோள் காட்டிய வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மிகவும் முக்கியமான கருத்து ஆன்மீக ரீதியில் மரணித்துப் போனவர்களை மீண்டும் உயிர்ப்பிப்பதாகும். இறைவனைப் பற்றியும், அவனுடனான தொடர்பினைக் குறித்தும் எவரொருவர் கவலைக் கொள்ளவில்லையோ, அவர் மரணித்தவரும், உயிரற்றவரும், மரணித்தவர்களைப் போன்றே அவரும் காது கேளாதவரும் ஆவார். (இவ்வாறாக) மரணித்துவிட்ட இந்த நபரை நீங்கள் எவ்வாறு உயிர்ப்பிக்க முடியும்?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஹஸ்ரத் இப்ராஹீம்(அலை) அவர்கள் இறைவனிடம் கேட்ட கேள்வி இதுதான். "நான் அதனை எவ்வாறு செய்ய முடியும்?" ஒரு பணிவான படைப்பாகிய (அடியானாகிய), தனது காலத்தின் சமூகத்தினரால் நிராகரிக்கப்பட்டிருந்தவரும், மரணித்துப் போனவர்களை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான இந்த பணி தன் மீது சுமத்தப்பட்டவருமாகிய அவர், இறைவனிடம் (இந்த கேள்வியையே) எழுப்பினார். அவர் மேலும் கூறினார், “எனது இறைவா! நீ எவ்வாறு மரணித்துப் போனவர்களை உயிர்ப்பிப்பாய்? நான் உன்னிடம் கெஞ்சுகிறேன், எனக்குத் தெரிவிப்பாயாக! உனது வாக்குறுதி நிறைவேறும் என்பதை நான் உண்மையாகவே அறிவேன்! ஒரு நாள் என்னைப் பின்பற்றுபவர்கள் மணல் துகள்கள் போன்றும், நட்சத்திரங்களைப் போன்றும் எண்ணற்றவர்களாக (பெருகி) இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். அவற்றையெல்லாம் நான் நம்புகிறேன், ஆயினும், மரணித்துப்போனவர்களை மீண்டும் உயிர்ப்பித்து வாழ்வு வழங்குவதை நீ எவ்வாறு செய்கின்றாய் என்பதை எனக்குக் காட்டுமாறு நான் உன்னிடம் கேட்கிறேன். ”

அல்லாஹ் அவர்களுக்கு இந்த பதிலைக் வழங்கினான்: “நான்கு பறவைகளை எடுத்து, உம்மை நேசிக்க கற்றுக்கொடுக்கத் தொடங்குங்கள். அவைகள் உம்மை நேசிக்கத் தொடங்கும்போது [உம்முடன் இணைந்திருந்து] நீர் இல்லாமல் வாழ முடியாதபோது, பின்னர் நான்கு மலைகளின் நான்கு சிகரங்களின் உச்சிக்கு சென்று ஒவ்வொரு பறவையையும் அதன் ஒவ்வொரு முகடுகளிலும் வைத்து விடும். பின்னர் அவைகளை அழைக்கவும், இதோ! அவைகள் விரைவாக உம்மிடம் வந்து விடும்."

ஹஸ்ரத் இப்ராஹீம்(அலை) அவர்களுக்கான இந்த தூதுச்செய்தியானது, அழைப்புப் பணிக்கான கலையில், “மரணித்தவர்களை” மீண்டும் உயிர்ப்பிக்கின்ற அறிவியலில் ஆழமான ஒரு போதனையாகும். கற்றுக்கொள்ள வேண்டிய முதலாவது மற்றும் மிக முக்கியமான பாடம் என்னவென்றால், ஆன்மீக ரீதியில் மரணித்துப் போனவர்களுக்கு இறைவனைப் பற்றி கவலைப்படுவதிலும், அவர்களுக்கு வழிகாட்டப்படுவதிலும் (எந்தவித) அக்கறையும் இல்லை – அவர்களது பார்வையில் குறைந்தபட்சம் நீங்கள் உயிருடன் கருதப்படவேண்டும். நீங்கள் நேர்மையுடனும் உண்மையுடனும் நேசிக்கின்ற ஓர் இறைவனின் சாயலை, அல்லாஹ்வுக்கு சொந்தமான ஒரு நபரின் உருவமாக உங்களை நீங்கள் முன்வைத்தால், ஆன்மீக ரீதியில் மரணித்துப்போனவர்கள் இறுதியில் தங்களை, உங்கள் மூலமாக அவனிடம் (அல்லாஹ்வின் பக்கம்) அழைத்துச் செல்ல அனுமதிப்பார்கள். உங்களது கனிவான குணத்தினால் உங்களை (அவர்கள்) தீர்மானிக்கின்றபோது, ​​அவர்கள் உங்களை நேசிக்கத் தொடங்கி விடுவார்கள்.

ஆகையால், நீங்கள் அவர்களது தேவைகளின் போது, உதவி செய்தால், அவர்களது சந்தோஷத்தையும், அவர்களது வேதனையையும் பகிர்ந்து கொண்டால் நீங்கள் அவர்களுக்கும் உங்களுக்கும் இடையில் வலுவான நட்பை உருவாக்கிவிடுவீர்கள். பிறருக்கு, அழகு மற்றும் ஈர்க்கின்ற ஓர் ஆதாரமாக உங்களை முன் வையுங்கள். உங்களுடைய இந்த சாயலானது (பிரதி பிம்பமானது) அவர்களில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட [ஸஹீஹ் அல் இஸ்லாத்தின் உண்மையான முஸ்லிம்களாக மாறுவதற்கானத்] தூண்டுதலைத் தூண்டிவிடுவதோடு, உங்களது ஆதரவுடன் அவர்கள் விரும்பிய இலக்கை-அதாவது ஏக இறைவன் [அல்லாஹ்வையும்] அடைந்துவிடுவார்கள்.

ஆகவே, எனது அன்பிற்குரிய ஸஹாபிகளே!, நீங்கள் எனது போதனையைப் பின்பற்றும்படி நான் உங்களை பரிந்துரைக்கிறேன், ஏனெனில் அது உங்களது நலனுக்காகவும் இஸ்லாத்தின் மகிமைக்காகவும் (இதனைப் பின்பற்ற வேண்டிய அவசியம்) உள்ளது. விட்டில் பூச்சிகளை ஈர்க்கும் மெழுகுவர்த்திகளைப் போல - மக்களை ஒன்றிணைக்கும் ஒளியின் கதிர்களாக இருந்து கொள்ளுங்கள்! அன்பிற்கு முன்னுதாரணமாக (உங்களை) ஆக்கிக் கொள்ளுங்கள்! உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் நேசியுங்கள்!; அவர்களின் சந்தோஷங்களையும் துக்கங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்!; அவர்களின் நிலைமைகளையும் வாழ்க்கை முறைகளையும் மேம்படுத்துங்கள்!. உங்கள் பக்கம் மக்களை ஈர்க்கின்ற ஒரே வழி இதுதான்!, அத்துடன் தொடர்புகளும் உருவாக்கபட்டவுடன், உங்களது பயபக்தியானது மீதமுள்ளவற்றைச் (சரி) செய்துவிடும். இந்த ஆலோசனையானது மற்றவர்களுக்கு [அதாவது முஸ்லிமல்லாதவர்கள் அல்லது ஸஹீஹ்-அல்-இஸ்லாத்தை சாராதவர்களுக்கு] மட்டுமேப்பொருந்தும் என்றல்ல. மாறாக, முஸ்லிம்கள் தங்களுக்கிடையிலும், ஸஹீஹ்-அல்-இஸ்லாத்தை சார்ந்தவர்கள் மிக்குறிப்பாகவும் (பின்பற்றவேண்டிய ஒன்றாகும்). நம்பிக்கைக் கொள்வது என்பதும், நம்பிக்கை கொண்டிருப்பது என்பதும் இரண்டு வெவ்வேறு விஷயங்களாகும். நாம் நமது உறுப்பினர்களுக்கும், முழு உம்மத்திற்கும் கல்வி கற்பிக்க வேண்டும். ஆகவே, மக்களை சரியாக வழிநடத்துவதற்காக இஸ்லாத்தில் உங்களை முழுமையாக்கிக் கொள்ளுங்கள், (அவ்வாறு) இல்லையென்றால் உங்களது முயற்சிகள் வீணாகிவிடும்.

ஜமாஅத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தின் பல உறுப்பினர்கள், அல்லாஹ்வின் ஜமாஅத்தில் நுழைந்ததற்கு, அவர்களுக்கு இஸ்லாமிய போதனைகளையும், கலீஃபத்துல்லாஹ்வின் வருகையையும் அத்துடன் அவர்களுக்கு சீர்திருத்தத்தின் இந்த உன்னத பணியைச் மேற்கோள்வதற்கு ஜமாத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தின் அடிப்படை(க் கொள்கை)ப் போன்றவற்றை உபதேசித்தவர்களது நட்பும், பயபக்தியுமே காரணமாகும்

என்பதை நினைவில் கொள்ளுங்கள்! மற்றவர்கள் அல்லாஹ்வின் இந்த எளிய அடியான் மற்றும் ஜமாத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தின் உண்மைத்தன்மையை இறைவனிடமிருந்து நேரடியாக அறிவிக்கும் அடையாளங்கள் (மூலம்) பெற்றுக் கொண்டனர். ஆகவே நீங்கள் உங்களது தனித்தன்மை (வாய்ந்த சிறப்பியல்பு)களின் மீது கவனம் கொள்ளாவிட்டால், நல்லதொரு “தாயி ஏ இல்லல்லாஹ்" வாகின்ற கனவை உங்களால் காண முடியாது. மேலும், இதனை (நீங்கள்) இறைவனோடு வாழ்வதன் மூலமும், அவனுக்கும், (இந்த நூற்றாண்டின் ஆன்மீக வெளிப்பாட்டில் இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள) அவனது கலீஃபதுல்லாஹ்வுக்கும் கீழ்ப்படிவதன் மூலமாக மட்டுமே (உங்களால்) அடைய முடியும். நீங்கள் அல்லாஹ்வின் (மிகவும்) பணிவான மற்றும் கீழ்ப்படிதலுள்ள அடியார்களாக மாறிவிட வேண்டும். முஸ்லிம்களின் மற்றும் மனிதகுலத்தின் சீர்திருத்தத்திற்கும், இஸ்லாத்தின் வெற்றியை நோக்கி நாம் முன்னேறுவதுதற்கும் இது (மிகவும்) அவசியமானதாகும். இன்ஷா அல்லாஹ்.

நீங்கள் ஓர் இந்துவிடமோ,, கிறிஸ்தவரிடமோ அல்லது புத்த(மத த்தவ)ரிடமோ இஸ்லாமிய நம்பிக்கையைத் தழுவுமாறுக் கேட்டுக்கொண்டால், அவர்களின் உடனடி எதிர்வினை உங்களை எதிர்ப்பதாகவே இருக்கும். உங்களிடம் அவர்: "நான் ஏன் அதனைச் செய்ய வேண்டும்?, ஏனென்றால் எனது மதத்திலும் தான் நல்ல விஷயங்கள் உள்ளனவே" என்று கூறுவார். (அவர்களுடனான) கலந்துரையாடல் இவ்வாறாக நீண்டு கொண்டே செல்லும். மேலும் அதில் எந்தப் பலனும் ஏற்படாது. ஆகையால், மக்களுக்கு நல்ல குணங்களை கற்பிக்கத் தொடங்குங்கள், அவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக நல்லவர்களாக இருத்தல் வேண்டும் என்பதையும் அவர்களுக்கு புரிய வைக்கத் தொடங்குங்கள். இறைவனின் பாதையில் மக்களை அழைப்பதற்காக நீங்கள் எடுக்கின்ற (உங்களது) முயற்சிகள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகிவிடும், ஏனென்றால் துன்மார்க்கர்கள் கூட நல்லவை எவை என்பதை ஆழமாக அறிவார்கள். ஆகவே, நல்லவை என்பது என்னவென்று மக்களுக்கு (நன்றாகவே) தெரியும். நீங்கள் அவர்களுக்கு சற்றுப்புரிய வைத்தல் வேண்டும், அதுவே மாற்றம் ஏற்படுத்துவதற்கான கலையாகும். வெறுமனே சொற் பொழிவாற்றுவதோடு மட்டுமல்லாமல், உங்களது உணர்வுகளையும் அவர்களிடத்தில் வெளிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதனைச் செய்ய முடியும். (உண்மையில்) இது இதயத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் மட்டுமே, (ஒருவேளை) அது உணர்ச்சிவசபபட்டுவிடக் கூடும். (ஆயினும்) நாம் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. முதலில் நீங்கள் (உங்களது) செயலிலும், நோக்கத்திலும், உங்களை உண்மையான முஸ்லிம்களாக, உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

எனவே, எனது அன்பிற்குரிய ஸஹாபாக்களும், அனைத்து முஸ்லிம்களும் உண்மையான “தாயி ஏ இல்லல்லாஹ்” வாக மாறுங்கள்! ஆனால் முதலில், உள்ளார்ந்த மற்றும் வெளிப்புற சீர்திருத்தத்தை (உங்களது) நோக்கமாகக் கொள்ளுங்கள், அது உங்களை ஓர் உண்மையான முஸ்லீமாக மாற்றி விடும். நம்பிக்கைக் கொள்வதும், நம்பிக்கைக் கொண்டிருப்பதும் வெவ்வேறாகும். நான் இதை மீண்டும் மீண்டும் (பலமுறை) கூறியுள்ளேன். அதனால் இந்த விஷயத்தில் எந்த குழப்பமும் இல்லாமல் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். முதல் படி நம்பிக்கை (யை நீங்கள் ஒப்புக்) கொள்வதாகும், அதன் பின்னர் உங்களது ஆன்மீக கல்வியினாலும், இறைவனிடம் நேர்மையான பிரார்த்தனைகளைக் கொண்டும், (திட)நம்பிக்கை - உண்மையான (திட)-நம்பிக்கை வந்துவிடும் (ஏற்பட்டு விடும்)., ஏனென்றால் உங்கள் மீது அதனை கட்டளையிடும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளது. நீங்கள் உண்மையை அங்கீகரித்து விட்டீர்கள், ஆனால் அதற்கு இணங்கி நடப்பது கடினம், என்று வெற்று சாக்குபோக்குகளைக் கூறாதீர்கள்!, அவ்வாறெனில், உங்களது வார்த்தைகள் (அனைத்தும்) வீணாகி விடும். மேற்கொள்ளப்பட்ட முயற்சி இறைவனால் மேலும் வலுவாக்கப்படுகிறது. அவனிடம் முழுமையாக தங்களை ஒப்படைப்பதற்காக, அவனை திருப்திப்படுத்தும் பொருட்டு தங்களை சீர்திருத்த முயற்சிப்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். அவன் தனது அடியார்களின் பாவங்களை மன்னிக்கிறான், ஏனென்றால் அவனே மிகவும் மன்னிப்பவன் ஆவான். எவரொருவர் தூய்மையான, மற்றும் நேர்மையான இதயத்துடன் இஸ்லாத்தை முழுமைப்படுத்துவாரோ அவர் தனது கடந்த கால பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டதை காண்பார்.

ஆனால் பகுத்தறிந்து முடிவெடுப்பதில் மனிதனின் உலக ஆசைகளினால் நன்மையிலிருந்து தீமையை பிரித்தரிவதற்கான திறனை இழக்க நேரிடும் போது, ​​நாம் ஒவ்வொருவரும், அதனை நாம் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக் கொள்ளாவிட்டாலும், தனது முட்டாள்தனத்திற்கு பலியாகிவிடுகின்றோம், மேலும் அல்லாஹ் (ஸுப்ஹான) பயபக்தியுள்ளவராகவும் தவறிழைக்காதவராகவும் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தவர்கள் [அதாவது தூய்மையானவர்கள் மற்றும் நேரான வழியில் நடத்தப்படுபவர்கள்] மட்டுமே தங்களின் உணர்ச்சிகளையும், மனத்தூண்டுதல்களையும் (முறையாகக்) கையாண்டு சிறப்பினை பெறுவர்.

ஷைத்தானின் தூண்டுதல்கள் மற்றும் இவ் உலகத்தின் சோதனைளுக்கு எதிராக இறைவன் பாதுகாக்கின்ற அத்தகைய மக்களாக ஆகிவிடுங்கள். இவ் உலகமும், அதில் உள்ள ஒவ்வொருப் பொருளும் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தித் தராது. உண்மையான மகிழ்ச்சி என்பது அல்லாஹ்விடத்தில், அவனுடனான உங்களது பிணைப்பை வலுப்படுத்திக் கொள்வதிலுமே காணக் கிடைக்கின்றது.

ஒரு புறம் ஆன்மீக பலம் இருக்கிறது, மறுபுறம் ஷைத்தானிய பலமும் இருக்கிறது. மனித ஆன்மாவுக்குள் இந்த இரண்டு எதிரெதிரான [ஆன்மீக மற்றும் ஷைத்தானிய] சக்திகளுக்கு இடையே மோதல் (தொடர்ந்து) நடைபெறுகின்றது. ஒருவரது (பகுத்தறியும்) அறிவு அவரது (சுய) விருப்பத்தைக் காட்டிலும் மேலோங்கியிருந்தால் அவ(ர் அந்த இரு சக்தி)களுக்கிடையே உயர்ந்த நிலையில் இருப்பவராகவும், அவர்களது மானிடர்களுக்கிடயே சிறந்த முறையில் வழி நடத்தப்பட்டவராகவும், அவர்களது ஆன்மீகத்தில் முழு நிறைவானவராகவும் இருப்பார். மாறாக ஒருவரது அதிக விருப்பம் (மனோ இச்சை), அவரது (பகுத்தறியும்)அறிவை மிகைத்து விட்டால், அம்மனிதர் (அவர்கள் மனிதர்களாக இருந்த போதிலும்). மனித தரத்திலிருந்து மிருக நிலைக்கு சீர்கெட்டு மிகத் தாழ்ந்த நிலைக்கு சென்று விடுவார். ஆக, மனிதன் தனது (மன) விருப்பங்களுக்கு அடிபணிவதன் விளைவு அவனை நேரான பாதைக்கான வழிகாட்டலை கைவிட வைத்து வழி தவறிச் செல்ல வைத்து விடுகிறது.

அதிர்ஷ்டவசமாக, அல்லாஹ் (சுப்ஹான) மனிதகுலத்தை கைவிடமாட்டான். [ஷைத்தானிய ஈர்ப்புக்கள் போன்றவற்றால்] முட்டாளாக்கப்பட்டவர்கள் அறிவுறுத்துப்படுவதற்காக ஒரு சிறு கூட்டத்தினர் எல்லாக் காலத்திலும் பூமிக்கு நிரந்தரமாக வழங்கப்படுகிறது. மேலும் அவர்களிடம் கூறுங்கள் “எச்சரிக்கை - உங்கள் சொந்த விருப்பங்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவதை நிறுத்துங்கள்! நீங்கள் நரகத்தின் மக்களைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள்! அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்து விட மாட்டீர்கள்!.” இயற்கையான மற்றும் உண்மையான இறைபக்திக்கான சீர்திருத்தத்தை மேலும் தாமதமின்றி நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இஸ்லாத்தால் மட்டுமே மனிதகுலத்தின் காயங்களை குணப்படுத்திட முடியும். இஸ்லாத்தின், ஸஹிஹ் அல் இஸ்லாத்தின் நோக்கம், தெளிவாக விளக்கப்பட வேண்டும். அனைவருக்கும் அவர்களது பொறுப்புகள் தங்கள்முன் உள்ளன. இந்த உலகத்திலும், மறுமையிலும் (அதன்) மகிழ்ச்சிக்குரிய அல்லது மகிழ்ச்சியற்ற விளைவுகள் நம்மிடமே உள்ளன. நாம் விரைந்து செயல் பட வேண்டும்!

சிறிய இப்ராஹீம்களாக மாறி விடுங்கள்!, அன்னார் என்ன நடந்தாலும் இறைவன்மீது வைத்திருந்த நம்பிக்கையை ஒருபோதும் கைவிட்டு விடவில்லை. அவனுடைய கோபத்தை பெற்று விடாமல், அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே தன் மீது ஈர்த்துக் கொள்ள அவர்கள் எதையும் செய்வதற்குத் தயாராக இருந்தார்கள். மேலும் (அதில்) அவர்கள் வெற்றி பெற்றார்கள்! ஆகவே, “தாவத் ஏ இல்லல்லாஹ்” பணிக்கு உங்களை அர்ப்பணிப்பதற்கு முன், அல்லாஹ்வின் இன்பமும் அன்பும் நிறைந்த சீர்திருத்தப்பட்ட முஸ்லிம்களாக மாறுங்கள்!

எவருடைய இதயமும், ஆன்மாவும் உண்மையுள்ளதாக இருக்குமோ அவர்களிடத்து சிறு தவறுகள் இருப்பினும் அவர்கள் மகத்தான முன்னேற்றத்தை அடைவார்கள்! மேலும் அல்லாஹ் அவருக்கு அருள் புரிவதையும் அவரின் குறைகளை மன்னிப்பதையும் தானே கையிலெடுத்துக் கொண்டு, இறை நேசத்தில் நிரந்தர நல்வாழ்வின் நன்மைக்காக அவற்றை (குறைபாடுகளை) கைவிட அவரை ஊக்குவிக்கவும் செய்வான்.

அல்லாஹ்வுடன் எந்தளவிற்கு நீங்கள் தொடர்பு வைத்திருப்பீர்களோ அந்த அளவிற்க்கு இவ்வுலகின் தீமைகளும் மாயைகளும் உங்களிடத்து எந்த விளைவையும் ஏற்படுத்தி விட முடியாது.

என் அன்பார்ந்த ஸஹாபிகளே!, இதுவே உங்களுக்கும், நம் நேசத்திற்கினிய தலைவர் ஹஸ்ரத் முஹம்மத்(ஸல்) அவர்களின் உம்மத்திற்கும் மற்றும் முழு மனித குலத்திற்குமான என்னுடைய வேண்டுதலாகும். இன்ஷா அல்லாஹ், ஆமீன்.