விதியின் மீதான நம்பிக்கையும், ஒருவரது அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை வைத்தலும்

22 ஜூலை 2022|22 துல் ஹஜ் 1443 ஹி

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹது, தவூத் மற்றும் சூரா அல் ஃபாத்திஹா ஓதியப் பிறகு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் "விதியின் மீதான நம்பிக்கையும், ஒருவரது அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை வைத்தலும்" என்ற தலைப்பில் ஜும்ஆ பேருரையை நிகழ்த்தினார்கள்.

எது நடந்தாலும், நடப்பதும், நடக்கப் போவதும் அவை அனைத்தும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் ஞானத்தின் படியும், விருப்பத்தின் படியும் அவனுடைய கட்டளையின் படியுமே நடக்கிறது என்று நம்பிக்கைக் கொள்வது 'தக்தீர்'(விதி) என்றழைக்கப்படும். தக்தீரின் மீது நம்பிக்கை வைப்பது கட்டாயமானதாகும்.

தக்தீர்(விதி) மற்றும் தவக்குல் (அல்லாஹ்வை மீது நம்பிக்கை வைத்தல்) இவற்றின் மீதான நம்பிக்கையினால் ஏற்படும் நன்மைகள் பின்வருமாறு:

தக்தீரை(விதியை) நம்பும் ஒருவருக்கு எந்த கஷ்டமோ அல்லது துன்பமோ ஏற்பட்டாலும், அதனை எந்த பயமுமின்றி ஏற்றுக் கொள்ளும், மேலும் அத்தகைய கஷ்டங்களை எதிர்கொண்டாலும் இதயம் உறுதியாக இருக்கும். தக்தீர்-விதியின் மீதான வலுவான நம்பிக்கை என்பது அல்லாஹ்வின் விருப்பப்படியே நடை பெறுகிறது என்பதையும், அதை எதிர்க்க முடியாது என்பதையும் குறிக்கும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நாடினால் மட்டுமே கஷ்டங்கள் மறைந்து போகும். இவ்வாறு தக்தீரை(விதியை) நம்பக்கூடிய மனிதர் [ அதாவது தக்தீரில் உண்மையாக நம்பிக்கை கொண்டவர் ] அவரது வழியில் எது வந்தாலும் (அதனை) குறைகூறாது பொறுமையான மனநிறைவுடன் ஏற்றுக்கொள்கிறார் .

இந்த தக்தீரின் கருத்தைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டுள்ள ஒருவர், கஷ்டத்தைக் கடந்து செல்வதில் தாமதம் ஏற்படுவதைக் கண்டு விரக்தியடையமாட்டார். துரதிர்ஷ்டம் எத்தனைக் காலத்திற்கு நீடித்திருந்தாலும் அவர் மனமுடைந்து நம்பிக்கையிழந்துவிட மாட்டார். பலவீனத்தையும் உள்ளத்திலிருந்து அப்புறப்படுத்தி விடுவார்.

தக்தீரைக் கடைப்பிடிப்பவர் சிரமத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அனுமதிக்கப் படாத (ஹராமான) வழிமுறைகளையும் பின்பற்ற மாட்டார், ஏனெனில் துன்பம் அல்லாஹ்(தபார)வால் கொண்டு
வரப்பட்டது என்பதை அவர் அறிந்து கொள்கிறார். அல்லாஹ் (தபார)வின் நாட்டமின்றி துன்பம் நீக்கப்படுவது சாத்தியமில்லை என்பதை அவர் நன்கு புரிந்து கொள்கிறார். ஆகவே, அல்லாஹ் (தபார) நாடியதை அகற்ற முயற்சிப்பதில் தனது முயற்சிகளின் பயனற்றத் தன்மையை அவர் உணர்கிறார். இவ்வாறு அவர் தேவையில்லாமல் அனுமதிக்கப்படாத செயல்முறைகளை மேற்கொள்வதன் மூலம் அல்லாஹ்வின் அதிருப்தியை ஏற்படுத்திக் கொள்ள மாட்டார். அல்லாஹ்வை கோபமூட்டியப் பிறகும் ஒருவரது நோக்கத்தை அடைய முடியாத நிலையில், அல்லாஹ்வின் கோபத்தை ஏன் சந்திக்க வேண்டும்?

தக்தீர் மற்றும் தவக்கல் மீதும் நம்பிக்கை கொண்டவர் பௌதீக மற்றும் இவ்வுலக நடவடிக்கைகளை மட்டுமே முழுமையாக நம்பி இருக்க மாட்டார். ஆயினும், துஆக்கள் [அல்லாஹ்விடம் பிரார்த்தனை] செய்வதன் பக்கமும் கவனம் செலுத்துவார். இறைவனது நாட்டமில்லாமல் எதையும் பெற முடியாது என்று அவர் நம்புகிறார். அல்லாஹ்(தபாரக)விடம் மன்றாடுவதன் மூலம் அவர் அதிக நம்பிக்கையையும் வலிமையையும் பெறுகிறார். துஆவில் ஈடுபடுவதனால் உள்ள அதிகப்படியான நன்மை என்னவென்றால் அல்லாஹ் (தபாரக்)வுடனான ஒருவரது உறவை வலுப்படுத்திக் கொள்வதாகும். அல்லாஹ்(தபாரக)வுடனான நேசத்தின் வலுவான பிணைப்பே அமைதி மற்றும் அனைத்து ஆறுதலுக்கும் அடிப்படையாக உள்ளது.

தக்தீரின் மீது நம்பிக்கை கொண்டவர் வெற்றி, சாதனை மற்றும் மகிமையை அவரது (சொந்த) முயற்சிகளுக்கு உரியதாக கருதமாட்டார். அவர் எல்லாவற்றையும் அல்லாஹ் (தபாரக)வின் நாட்டத்திற்கும் மகிழ்ச்சிக்கும் உரியதாகவே கருதிக் கொள்வார். இதனால் அவர் பணிவு மனப்பான்மையுடனேயேத் திகழ்வார். அப்படிப்பட்ட ஒரு நபர் ஆணவத்துடனும் கர்வத்துடனும் இருக்க மாட்டார்.

தக்தீர் மற்றும் தவக்கல் மீது நம்பிக்கை உடையவர் வெற்றி மற்றும் செழிப்பான (நற்பேறுடைய) காலங்களிலும் சந்தர்ப்பங்களிலும் நன்றியுடையவராகவே இருப்பார். தோல்வியும் துன்பமும் அவரை கடந்து செல்லும் போது அவர் பொறுமையாக இருப்பார். பின்வரும் வசனத்தில் அல்லாஹ் (தபாரக) சுட்டிக்காட்டும் பெரிய நன்மை இதுவாகும்:

لِّكَيْلَا تَأْسَوْا عَلَىٰ مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوا بِمَا آتَاكُمْ

….ஆகையால் நீங்கள் துக்கப்பட்டு இழந்தவற்றின் மீதான நம்பிக்கையை இழந்து விடாமல் இருக்கவும், அல்லது நீங்கள் எதனைப் பெற்றுக் கொண்டீர்களோ அவற்றிற்காக நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான். (57:24)

தக்தீரின் இஸ்லாமியக் கருத்தாக்கம் தவறாக புரிந்து கொள்ளப்படுதல் கூடாது, மேலும் உலக விவகாரங்களுக்கான இன்றியமையாத சரியான வழிகளும், வழிமுறைகளும் தக்தீரை கைவிட்டுவிடும் சாக்குப்போக்கில் நிராகரிக்கப்படுதலும் கூடாது.உலக விவகாரங்களுக்காக அல்லாஹ் (தபாரக) உருவாக்கியுள்ள அனுமதிக்கப்பட்டுள்ள (ஹலாலான) வழிமுறைகளையும், அமைப்புகளையும் கைவிடுவது பலவீனமானதும் அது போன்றே தவறானதும் ஆகும். பின்வரும் ஹதீஸில் இத்தகைய தவறும், பலவீனமும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

ஹஸ்ரத் அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சர்ச்சைக்கு தீர்ப்பளித்த போது, தீர்ப்பு யாருக்கு எதிராகச் சென்றதோ, அவர் உரத்த குரலில் கூறினார்: “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன் மேலும் அவனே நல்ல பாதுகாவலன் ஆவான். "அவர் பாதிப்படைந்த (இந்த தீர்ப்பின்) பின்னடைவுக்கு அல்லாஹ்வின் திருப்தியே காரணம் என்பதை வெளிப்படுத்தும் நோக்கத்தில் இந்த கூக்குரல் இருந்தது. இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹ் (தபாரக) பலவீனத்தை விரும்பவில்லை. எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!” என்று கூறினார்கள். (அபு தாவூத்)

இங்கே ஒருவரின் வழக்கு மற்றும் செயல்பாட்டிற்கான சரியான வழிமுறைகளை ஒருவர் பயன்படுத்த வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இருப்பினும், சரியான நடையமுறைகளை செயல்படுத்தியப் பிறகும், முடிவுகள் தோல்வி அடைந்தால், பின்னர் ஒருவர் இவ்வாறு: “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன் மேலும் அவனே நல்ல பாதுகாவலன் ஆவான்" என்று கூறுவதில் நியாயப்படுத்தப் படுவார்.

இப்போது, நான் உங்களுக்கு ​​தக்தீர் பற்றிய‌ சில ஹதீஸ்களை எடுத்துக் கூறுவேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எது நடக்கவிருக்கிறதோ அது (நடைபெறாமல்) நின்று விடாது! எது நடக்கக் கூடாதோ அது நிகழ்ந்து விடாது! என்ற அளவிற்கு தக்தீரில் -அதன் நன்மை மற்றும் அதன் தீமையில் நீங்கள் நம்பிக்கை கொள்ளாதவரை நீங்கள் ஒரு போதும் ஒரு நம்பிக்கையாளராக (முஃமின்களாக) முடியாது (திர்மிதி)

ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்க டுத்து இருந்தபோது, அவர்கள் என்னிடம் கூறினார்கள்: 'மகனே! நான் உன்னிடம் சில விஷயங்களை கூறிக் கொள்கிறேன். அல்லாஹ்வை நினைவுகூருங்கள், அவன் உங்களைப் பாதுகாப்பான்!. அல்லாஹ்வை நினைவுகூருங்கள், நீங்கள் அவனை உங்களுக்கு அருகில் காண்பீர்கள் !

நீங்கள் எதையாவது கேட்க வேண்டியிருக்கும் போது, ​​அல்லாஹ் (தபாரக)விடமே கேளுங்கள்! உங்களுக்கு உதவி தேவைப்படும் போது, அவனுடைய உதவியை நாடுங்கள்! அனைத்துப் படைப்புகளும் உங்களுக்கு ஏதேனும் (ஒரு விஷயத்தில்)நன்மை செய்ய விரும்பினால், அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தவிர அவை உங்களுக்கு ஒருபோதும் எந்த பயனையும் அளிக்க முடியாது என்பதை உறுதியாக நம்புங்கள். அவை அனைத்தும் உங்களுக்கு தீங்கு விளைவிக்க ஒன்றுபட்டால், அல்லாஹ் உங்களுக்கு விதித்துள்ளதைத் தவிர அவைகளால் உங்களுக்கு எந்த (ஒரு விஷயத்திலும்) தீங்கிழைக்க முடியாது. (திர்மிதி)

ஹஸ்ரத் அபுதர்தா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அனைத்து மக்களுக்காகவும் அல்லாஹ் (தபாரக) ஏற்கனவே ஐந்து விஷயங்களை முன்னரே தீர்மானித்துள்ளான், அவைகள்: வயது [அதாவது. அவரது பிறப்பு மற்றும் இறப்பு], வாழ்வாதாரம், மற்றும் அடக்கம் செய்யும் இடம் மற்றும் இறுதி இரட்சிப்பு அல்லது தண்டனை. (அஹ்மத், பஜாஸ், கபீர், அவுசாத்)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "அல்லாஹ் (தபாரக) உங்களுக்கு எதையேனும் முன்னரே தீர்மானிக்காவிட்டாலும் கூட உங்கள் முயற்சியால் அதை பெற்று விடலாம் என்று நினைத்துக் கொண்டு அதனைப் பெறுவதற்கு முந்தாதீர்கள் அல்லது அல்லாஹ் (தபாரக) உங்களுக்கு எதையேனும் முன்னரே தீர்மானித்திருந்தாலும் கூட உங்கள் முயற்சியால் அதை நீங்கள் அகற்ற முடியும் என்று நினைத்துக் கொண்டு அதிலிருந்தும் பின்வாங்காதீர்கள்." (கபீர் மற்றும் அவுசாத்)

அல்லாஹ்(தபாரக) முன்னரே தீர்மானித்துவிட்டது எதுவாக இருந்தாலும், அதனைப் பெறவோ அல்லது தடுக்கவோ மனிதன் எந்த முயற்சிகளை மேற் கொண்டாலும் சரி அ(வன் தீர்மானித்த)து நிறைவேறும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "உங்களுக்கு நன்மை பயக்கக்கூடியதைப் பெறுவதற்கு கடும்முயற்சி மேற்கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் உதவியை நாடுங்கள்; தைரியத்தை இழந்து விடாதீர்கள்! பின்னடைவு ஒன்று உங்களுக்கு ஏற்பட்டால், நான் இதைச் செய்திருந்தால், அது இவ்வாறு நடந்திருக்குமே (என்று நடக்காத ஒன்றை) கூறாதீர்கள்!. அதற்கு மாறாக, 'அல்லாஹ் இதனையே விதித்துள்ளான், அவன் எதனை நாடியிருந்தானோ அதுவே நடந்துள்ளது!' என்று கூறுங்கள்." (முஸ்லிம்)

அல்லாஹ்(தபாரக்) திருக்குர்ஆனில் கூறுகிறான்:

فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ ‎

சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக, பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்திக் கொள்வீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். (ஆல இம்ரான் 3:160)

ஒருவர் அல்லாஹ்வின் திருப் பொருத்தை பெறுவதை விடவும் ஒரு மிகப் பெரிய செல்வம் என்ன இருக்கப்போகிறது? அல்லாஹ்வின் மீது நம்பிக்கையுறுதியுடனும், அவனை சார்ந்திருத்தலுடனும் இருக்கக் கூடியவர்கள், அவனது நேசத்தைப் பாதுகாத்துள்ளனர். மேலும் இப்படிப்பட்ட மக்கள் நிச்சயம் வெற்றிபெறுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அத்தகையவர்களின் வெற்றியில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வசனத்திலிருந்து தவக்குலுடன் தத்பீரும் (அதாவது நம்பிக்கை வைத்தலுடன், சரியான திட்டத்துடன் கூடிய முகாந்திரங்கள், வழி வகைகள் மற்றும் சரியான பாதைகளை பயன்படுத்துதலும்) கூட இருக்க வேண்டும் என்பது வெளிப்படுகிறது. இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனை மேற்கொள்ளுதல் உண்மையில் ஒரு விவகாரத்தை முடிவு செய்வதற்கான ஒரு வழியாகும். இருப்பினும், ஒருவர் தத்பீரை( செயல் முயற்சிகளை) மட்டுமே நம்பியிருக்கக் கூடாது. வழிகள் மற்றும் வழிமுறைகளை ஏற்பாடு செயத பிறகும் கூட, அல்லாஹ்(தபார)வின் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும்.

அல்லாஹ் (தபார) திருக் குர்ஆனில் கூறுகிறான்:

الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ ‎﴿﴾‏فَانقَلَبُوا بِنِعْمَةٍ مِّنَ اللَّهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوءٌ وَاتَّبَعُوا رِضْوَانَ اللَّهِ ۗ وَاللَّهُ ذُو فَضْلٍ عَظِيمٍ ‎﴿﴾

எதிரிகள் அவர்களிடம் வந்து உங்களுக்கு எதிராக மக்கள் (படையைத்) திரட்டியுள்ளனர். எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சுங்கள் என்று கூறினர். ஆனால் இது அவர்களின் நம்பிக்கையை மேலும் வளரச்செய்தது. மேலும் இறைவனே எங்களுக்குப் போதுமானவன். அவன் எவ்வளவோ நல்ல பாதுகாவலன் என்றும் அவர்கள் கூறினர். ஆகவே, அவர்கள் எந்த இழப்புமின்றி அல்லாஹ்விடமிருந்து பெரும் அருட்கொடையையும், பெரும் அருளையையும் பெற்றுத் திரும்பினர். அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தினைப் பின்பற்றிச் சென்றனர். அல்லாஹ் பெரும் அருள் செய்பவனாவான். (திருக்குர்ஆன் 3: 174-175 )

இந்த வசனங்கள் ஸஹாபா பெருமக்கள் ஆன்மீக ரீதியாகவும் அத்துடன் பௌதீக ரீதியாகவும் பயனடைந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தின் மேற்கோளாக இருக்கின்றது. அதாவது இங்கே அல்லாஹ் அவர்களின் தவக்கல் இன் விளைவாகவே இந்த (ஆன்மீக மற்றும் பௌதீகம் ஆகிய) இரண்டின் பயனையும் பெற்றனர் என்பதை குறிப்பிட்டு கூறுகின்றான்

மேலும் அல்லாஹ் திருகுரானில் அவனது திருத்தூதர்(ஸல்) அவர்களுக்கு இவ்வாறு கட்டளையிடுகின்றான்:

قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

நீர் (அவர்களிடம்) கூறுவீராக; அல்லாஹ் எங்களுக்கு விதித்திருப்பதுதான் எங்களுக்கு ஏற்படும். அவன் எங்கள் பாதுகாவலனாவான். மேலும் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்விடத்திலேயே நம்பிக்கை வைத்தல் வேண்டும். (திருக்குர்ஆன் அத் தவ்பா 9: 51)

இன்னும் அல்லாஹ் நமது அரசனாக இருப்பதால் அவனது அடிமைகளாகிய நாம், நமது எஜமானன் நமக்காக எதைத் தேர்வு செய்கிறானோ அதில் நாம் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். இதுவே அனைத்து முஸ்லிம்களின் நிலையாக இருக்க வேண்டும். மேலும், முஸ்லிம்களுக்கு நற்பேறு மற்றும் துன்பம் ஆகிய இத்தகைய இரண்டின் நிலையிலும் பயன் அளிக்கும். இன்னும் விளக்கமாக கூறவேண்டும் என்றால் கடினமான நேரங்களிலும், நிலைமைகளிலும் முஸ்லிம்களுக்கு இறுதி முடிவு நன்மை பயக்கக்கூடியதாகவே இருக்கும். இத்தகைய சோதனையான கஷ்டங்களை பொறுத்துக் கொள்வதன் மூலம் முஸ்லிம்களின் தகுதிகள் உயர்கின்றன, மேலும், பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. ஆகவே, ஒரு முஸ்லீம் எந்த நிலையில் இருக்கிறார் என்பது முக்கியமல்ல. நிகழ்வுகளாகிய செழுமை(நற்பேறு) அல்லது கடினமான நிலை ஆகிய இரண்டு நிலைமைகளுமே நம்பிக்கை கொண்டவர்களுக்கு நன்மையாகவே அமைகின்றது.

ஒரு முஸ்லீம் கஷ்டத்தினாலும் மற்றும் சிரமத்தினாலும் அவதிப்படும்போது, அவர் விரக்தி நிலைக்கும் மற்றும் ஏமாற்ற நிலைக்கும் ஆளாவதில்லை என்பதனை இது சுட்டிக்காட்டுகிறது, ஏனெனில் அவர் துன்பத்தின் நிலையும் அவருக்கு நன்மை பயக்கும். துன்பத்தின் பலன்கள் இவ்வுலகில் வெளிப்படாவிட்டால், நிச்சயமாக இவை மறுமையில் வெளிப்படும். நாம் செய்துவரும் நிரந்தரமான நன்மைக்காக நமக்கு மறுமையில் ஓர் உண்மையான மற்றும் நிரந்தரமான வீடு, நன்மைக்கான பலன்களாக நமக்குக் கிடைக்கும்.

அல்லாஹ் (தபாரக்) கூறுகிறான்:

وَقَالَ مُوسَىٰ يَا قَوْمِ إِن كُنتُمْ آمَنتُم بِاللَّهِ فَعَلَيْهِ تَوَكَّلُوا إِن كُنتُم مُّسْلِمِينَ ‎﴿﴾‏ فَقَالُوا عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ ‎﴿﴾‏

(“பனி இஸ்ரவேலர்கள் ஃபிர்அவ்னின் கொடுமையால் பயந்து துன்பப்படுவதைக் கண்ட மூஸா (அலை) அவர்கள் இவ்வாறு கூறினார்:) மூஸா (தமது சமுதாயத்தினரிடம்) என் சமுதாயத்தினரே! நீங்கள் அல்லாஹ்விடம் நம்பிக்கை கொள்பவர்களாயிருந்தால், நீங்கள் (உண்மையில்) கட்டுப்படுபவர்களாயின், அவனிடமே நம்பிக்கை வையுங்கள்! என்றார். இதற்கு அவர்கள் இவ்வாறு கூறினர்: நாங்கள் எங்கள் அல்லாஹ்விடமே நம்பிக்கை வைத்துள்ளோம். எங்கள் இறைவா! அநீதி இழைகின்ற மக்களுக்கு எங்களை ஒரு சோதனையாக ஆக்காதிருப்பாயாக. (யூனுஸ் 10: 85-86)

இந்த வசனத்திலிருந்து தவக்கல் -உடன் சேர்ந்து, துஆவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறியமுடிகின்றது. அல்லாஹ் (தபாரக்) இவ்வாறு கூறுகின்றான்: "யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறாரோ, அவர்களுக்கு அல்லாஹ்வேப் போதுமானவன் ஆவான்."

அல்லாஹ் (தபாரக்) தன் மீது நம்பிக்கை கொண்டவர்களின் அனைத்து விவகாரங்களையும், அவை பெளதீக அல்லது ஆன்மீக இயல்பு கொண்டதாக இருந்தாலும் சரி அதனைப் பகிர்ந்து கொள்கிறான். தவக்கல் -லை மேற்கொள்பவர்களுக்கு இது உண்மையிலேயே ஓர் அற்புதமான வாக்குறுதியாகும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக என்று ஹஸ்ரத் ஸஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு மனிதனின் அதிர்ஷ்டம் என்னவென்றால், அல்லாஹ் தனக்கு விதித்தவற்றில் திருப்தி அடைவதுதான். ஒரு நபரின் துரதிர்ஷ்டம் என்னவென்றால், அவர் அல்லாஹ்விடம் நன்மையைக் கேட்பதைத் தவிர்ப்பதும், அல்லாஹ் அவருக்கு விதித்ததில் அவர் அதிருப்தி அடைவதும் ஆகும். (அஹ்மத், திர்மிதி)

ஹஸ்ரத் அம்ர் பின் ஆஃஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மனிதனின் இதயம் எல்லாவற்றிற்கும் பிறகு சுணங்கிப் போய் விடுகிறது. எல்லாவற்றையும் தன் இதயத்தில் வைத்திருக்கும் மனிதனை அல்லாஹ் பொருட்படுத்துவதில்லை; அவர் வழியில் எந்த ஒரு இடத்திலும் (சந்தர்ப்பத்திலும்) அழிக்கப்படலாம் (அல்லாஹ் அவரைப் பற்றி கவலைப்படுவதில்லை). யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறாரோ, அவர்களுக்கு அல்லாஹ்வேப் போதுமானவன் ஆவான்." (இப்னு மாஜா)

இந்த ஹதீஸ் நம்பிக்கையை அல்லாஹ்வின் மீதே நிலைத்திருக்கச் செய்யும் அத்தகைய ஒரு மனிதர் மனச்சோர்வடையமாட்டார், கவலையினால் துவண்டு போவதுமில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஹஸ்ரத் இம்ரான் பின் ஹஸீன் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்: “யார் அல்லாஹ்வுடன் தனது இதயத்தை (இணைத்து) ஒருநிலைப்படுத்திக் கொள்கிறாரோ, அவர்களுக்கு அல்லாஹ் போதுமானவனாகவும் அல்லது அவனுடைய எல்லா காரியங்களிலும் அல்லாஹ்வே போதுமானவனாகவும் இருக்கிறான். அவன் நினைத்துக்கூடப் பார்க்காத அத்தகைய இடங்களிலிருந்து அல்லாஹ் அவனுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவான். எவன் உலகத்துடன் தன்னை (இணைத்து) ஒருநிலைப்படுத்திக் கொள்கிறானோ, அவனை அல்லாஹ் உலகத்திடமே ஒப்படைத்து விடுகிறான். (தர்கீப் வ தர்ஹீப்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் கூறினார்கள் என்று ஹஸ்ரத் அனஸ்(ரலி) அவர்கள் அரிவிக்கிறார்கள்: "உங்கள் ஒட்டகத்தைக் கட்டிவிட்டு, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்" (திர்மிதி)

எனவே, அல்லாஹ் (தபாரக்) செயல்பாடுகளைச் செயல்படுத்து வதற்காக உருவாக்கிய ஆகுமான வழிமுறைகள் மற்றும் முகமைகளை கைவிடுவதை 'தவக்குல்' கருதவில்லை. ஒருவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டுமென்றால், வழிமுறைகள் மற்றும் வழிகளில் (மட்டுமே) நம்பிக்கையும் வைத்திடக்கூடாது.

ஹஸ்ரத் அபு குஜாமா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "மந்திரங்களும் மருந்துகளும் தக்தீரை மாற்றுமா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: "இதுவும் கூட தக்தீரில் சேர்க்கப்பட்டுள்ளது." (திர்மிதி, இப்னு மாஜா)

இந்த ஹதீஸின்படி மருத்துவம் முதலியவற்றால் விளையும் நன்மையும் தக்தீரால் கூறப்பட்டுள்ளது. மருந்தை உட்கொள்வதன் மூலம் நீங்கள் குணப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள் கிறீர்கள், மேலும் நீங்கள் அல்லாஹ்வை நம்பியிருக்கிறீர்கள், ஏனெனில் அவனே உங்களை குணப்படுத்துகிறான் [ஷிஃபா].

தக்தீர் மற்றும் தவக்குல் பற்றிய ஒட்டுமொத்த கருத்து என்னவென்றால், கடினமான சூழ்நிலைகளிலும் முஸ்லிம்கள் ஒருபோதும் விரக்தியடைந்துவிடக்கூடாது என்பதே ஆகும். இந்த வசனங்கள் மற்றும் ஹதீஸ்களில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை புரிந்துகொள்ளுங்கள், உங்கள் தீனில் பலவீனமாகி விடாதீர்கள். உங்கள் முழு நம்பிக்கையையும் அல்லாஹ் (தபாரக்)வின் மீது வையுங்கள். அல்லாஹ் உங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்கின்ற போது, நீங்கள் சந்திக்கின்ற பல சோதனைகள் மற்றும் இன்னல்கள் இருந்தபோதிலும், உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சரியான வழியில் அமைந்து விடும். இன்ஷா அல்லாஹ், ஆமீன்.