ஆன்மீக பிச்சைக்காரர்கள்!

ஹஸ்ரத் மஸீஹ் மவூது(அலை) கூறுகின்றார்கள்:-

இறைவனின் தூய உரையாடல் என்னும் அருளைப் பெற்றவர்கள் அவர்கள் மூலம் அசாதாரண நிகழ்ச்சிகள் நிகழ்கின்றன. அவர்களுடைய துஆக்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவர்கள் செய்யும் துஆக்களுக்கு இறைவனிடமிருந்து மிகுதியாக பதில்கள் கிடைக்கின்றன. இவ்விடத்தில் சில அறிவீனர்கள், தாங்களும் உண்மையான கனவுகள் காணுதலும், சில சமயங்களில் தங்களின் 'துஆக்களும்' ஏற்றுக் கொள்ளப்படுவதாலும், சிலவேளை, 'இல்ஹாம்' பெறுவதாலும், எங்களுக்கும் இறைத் தூதர்களான நபிமார்களுக்கும்என்ன வேறுபாடு உள்ளதென்றும் வினவுவார்கள். இதற்குக் காரணம் என்னவெனில், அவர்களின் கருத்தின்படி இறைவனுடைய நபி ஏமாற்றுகிறவராகவோ,ஏமாற்றப்பட்டவராகவோ இருக்கிறார். ஒரு சாதாரண விஷயத்தில் பெருமையடிக்கக் கூடியவர்;மற்றவர்களுக்கும் அவருக்குமிடையே எந்தவித வித்தியாசமுமில்லை. இந்த எண்ணமே ஆணவமுடைய ஒன்றாகும். இதனால் மக்களில் பலர் இக்காலத்தில் அழிவுக்குள்ளா கின்றனர். ஆயினும் உண்மையைத் தேடுகின்றவர்களுக்கு, இப்படிப்பட்ட ஐயங்கள் எழுமானால் தெளிவான பதில் தர முடியும். அதாவது, இறைவன் தன் தனிச்சிறப்பான அருளாலும் அருட்கொடைகளாலும் ஒரு கூட்டத்தை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தன் ஆத்மீக அருளின் பெரும்பகுதியைவழங்கியுள்ளான் என்பது ஐயத்துக்கிடமில்லாத ஒரு உண்மையாகும். எனவே எதிரிகளான இக்குருடர்கள், எப்பொழுதும் நபிமார்களை மறுப்பவர்களாக இருந்த போதிலும் அவர்களை இறைத்தூதர்கள் வென்றே வந்துள்ளனர். மேலும், அவர்களுக்கும்இறைத்தூதர்களுக்குமிடையே ஒரு மாபெரும் வேறுபாடு இருப்பதை, அறிவுடையார் இறுதியில் ஏற்றுக்கொள்ளும் அளவு நபிமார்களிடமிருந்து ஓர் அற்புத ஒளி வெளிவந்து கொண்டிருந்தது. அந்த வேறுபாட்டை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் கூற வேண்டுமாயின், "பிச்சை எடுக்கும் ஒருவனிடமும் சில நாணயங்கள் இருக்கும்; ஒரு மாமன்னரின் கருவூலத்திலும் நாணயங்கள் நிரம்பி இருக்கும். ஆனால் அந்த மாமன்னருக்கு ஒப்பானவராகத் தன்னை பிச்சைக்காரன் கூற இயலாது' (லெக்சர் ஸியால்கோட்