மஸீஹ்(அலை) அவர்களின் போதனைகளை மறந்த அஹ்மதிகள்!

ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்

சங்கங்களை நிறுவுவதும் பள்ளிக்கூடங்களை திறப்பதும் மார்க்கத்தை வளர்ப்பதற்கு போதுமானவை என்று சிலர் கூறுகிறார்கள். உண்மையில் மார்க்கம் என்னவென்றும் மனிதர்கள் எதற்காக படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் இவ்வுலகில் அந்த நோக்கத்தை எந்த வழிகளைக் கொண்டு எவ்வாறு அடைவது என்றும் அவர்களுக்குத் தெரியாது. இவ்வுலகில் நமது வாழ்வின் இறுதியான உறுதியான நோக்கம் யாதென்றால் "இறைவனோடு ஓர் உண்மையான உறவை உருவாக்குவதுதான்" என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதுவே நம்மை எல்லா தன்னல உறவுகளை விட்டும் விடுவித்து இரட்சிப்பு என்னும் ஊற்றுக்கு இட்டுச்செல்லும. இறைவனுடன் உள்ள இத்தகையத் தொடர்பு திடமான நம்பிக்கையில் இத்தகைய உறுதிப்பாடு ஆகியன மனிதன் உண்டாக்கிய அமைப்புகளால் வராது. மனிதனால் புனையப்பட்ட தத்துவங்கள் இங்கு பயன் தராது. இருள் படர்ந்த காலத்தில் உங்களுக்கு தேவையான ஒளியை இறைவன், தான் தேர்ந்தெடுத்த ஊழியர்கள் மூலம் வானத்திலிருந்து பூமிக்கு இறக்குகிறான் . வானத்திலிருந்து வருகிறவரால் மட்டுமே உங்களை வானத்திற்கு வழி நடத்தி செல்ல முடியும். (இஸ்லாத்தின் வெற்றி பக்கம் 67)