பொய்யாக நபிவாதம் செய்பவர்கள் இறைவனால் பிடிக்கப்படுவார்கள்!

பொய்யாக இறைவஹீ வருவதாக 18 ஆண்டுகளுக்குமேல் நபிவாதம் செய்ய முடியுமா அஹ்மதி நண்பர்களே! 

மஸீஹ்(அலை) அவர்களின் கூற்றுக்களும் மிகத் தெளிவான திருக் குர்ஆன் அடிப்படையிலான வழிகாட்டுதல் இருந்தும், நீங்கள் ஏன் அறியாதவர்களாகவும், புரியாதவர்களாகவும் இருக்கின்றீர்கள்.?

வஹீ வாதம் செய்பவரின் கால அவகாசத்தை கூட விட்டுவைக்காமல் மிகத் தெளிவாக நம்மிடம் மஸீஹ்(அலை) கூற்றுகள் இருந்தும், பின்பு ஏன் ஏனைய முஸ்லிம்கள் போன்று ஒரு நபியை நிராகரிப்பதில் முந்தி கொண்டீர்கள்?

வஹீ வந்த காரணத்திற்க்காக முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்களை 19 வருடங்களுக்கு முன் வெளியேற்றிய உங்களது கூட்டம் மஸீஹ்(அலை) அவர்களின் கூற்றுக்களை முதுகுக்கு பின்னால் தூக்கி எரிந்துவிட்டது ஏன்?

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ்(அலை) அவர்கள் கூறுகின்றார்கள்.

"நான் இதைக் கூறுகின்றேன். அதாவது எவர் ஒருவர் தமக்கு இல்ஹாம் வருவதாக இறைவன் மீது இட்டுக்கட்டி கூறி அதனால் உண்மையில் அந்த இல்ஹாம் அவருக்கு வரவில்லை என்றால் அவர் விரைவாக பிடிக்க படுவார். அவரது வயது நாட்கள் மிகக் குறைவாக இருக்கும். திருக்குர்ஆன், இன்ஜில் மற்றும் தவ்ராத் போன்றவை இந்த சாட்சியத்தையே வழங்குகின்றன. மேலும், அறிவும் இந்த சாட்சியையே வழங்குகின்றது.

இதற்கு நேர்மாறாக எவரும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் எந்த ஒரு சான்றையும் தர முடியாது. மேலும் இல்ஹாம் வருவதாக பொய்யாக வாதம் செய்யக்கூடியவர் 25 வருடங்கள் அல்லது 18 வருடங்கள் வரை பொய்யான இல்ஹாமை பூமியில் பரப்பிக் கொண்டு இருக்கின்றார்.

பொய்யாக தம்மை இறைவனால் நியமிக்கப்பட்டவர் என்றும் இறைவனால் அனுப்பப்பட்டவர் என்றும் தமது பெயரை வைத்துக்கொண்டு பல வருடங்களாக தமக்கு இறைவன் புறத்திலிருந்து வஹீ வருகின்றது என்று கூறுகின்றார் என்றால் பிறகு அத்தகைய நபர் தனது குற்றத்திற்குரிய செயலினால் பிடிக்கப்படாமல் இருந்தார் என்று ஒரு சான்றையாவது காட்ட முடியுமா? நமது எதிரிகளில் எவராவது இந்த கேள்விக்கான பதிலை தருவாரா?? தருவார் என்று நம்புகிறேன்.

இதற்கான பதிலை தர இயலாது என்பதே அவர்களது உள்ளம் அறியும். பிறகும் கூட நிராகரிப்பிலிருந்து அவர்கள் விலகுவதில்லை. மாறாக, பல ஆதாரங்கள் மூலம் அவர்கள் மீது அத்தாட்சிகள் முழுமையாகி விட்டன. ஆனால், அவர்களோ கவனமற்று நிலையில் கனவு காண்பவர்களாக தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். (அய்யாமுஸ் ஸுலஹ், ரூஹானி கஸாயின் தொகுதி 14 பக்கம் 267)

நிச்சயமாக நானும் எனது தூதர்களும் வெற்றி பெற்றே தீருவோம் என அல்லாஹ் விதித்துள்ளான். நிச்சயமாக அல்லாஹ் ஆற்றல் மிக்கவனும், வெற்றிக்குரியனுமாவான். (திருக்குர்ஆன் 58:22)