மறைவானவற்றின் ஞானம் நபி, மற்றும் ரஸுல்மார்கள் மூலமே கிடைக்கும்!

நபி ரசூல் நம்மிடையே தோன்றாமல் மறைவானவற்றின் ஞானம் எவ்வாறு கிடைக்கும்?

ஹஸ்ரத் மஸீஹ் மவூது(அலை) அவர்கள் போதிக்கின்றார்கள்:-

எங்களை நேரான பாதையில் நடத்துவாயாக. நீ அருட்கொடை அளித்தவர்களின் பாதையில்.

என்ற வசனத்தின் பொருள் தான் என்ன?(அடிக்குறிப்பு 1 காண்க)

கடந்த காலத்தில் நபி, சித்தீக் ஆகியவர்கள் பெற்றிருக்கும் எல்லா வகையான வெகுமதிகளும் இந்த உம்மத்தும் (முஹம்மதிய்ய உம்மத்) பெற்றுக் கொள்ளும் என்ற வாக்குறுதி இங்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நபித்துவமும், முன்னறிவிப்புகளும் இந்த வெகுமதிகளில் உள்ளவையாக இருக்கின்றன. இதனாலேயே எல்லாத் தீர்க்கதரிசிகளும் நபி என்று அழைக்கப்பட்டார்கள். நபி, ரஸுலை தவிர வேறு எவருக்கும் மறைவான விஷயங்கள் அறிவிக்கப்படுவதை திரு குர்ஆன் நிராகரிக்கின்றது. ஏனெனில்

தான் தேர்ந்தெடுத்த தூதரை தவிர இறைவன் தனது மறைவான ஞானத்தை எவருக்கும் வெளிப்படுத்துவதில்லை (72:27,28) என்ற வசனத்திலிருந்து விளக்குகின்றோம். எனவே இரகசியத்தின் தெளிவான ஞானத்தைப் பெறுவதற்கு நபியாக வேண்டியது மிகவும் அவசியம். மேலும் அன் அம்த அலைஹிம் (உன்னுடைய அருளைப் பெற்றவர்கள்) என்ற வசனம், இதற்கு சாட்சி பகர்கின்றது. அதாவது இந்த உம்மத் மறைவான விஷயத்தின் தெளிவான ஞானத்தைப் பெறுவதிலிருந்து விலக்கப்படவில்லை என்பதை உணர்த்துகிறது. மறைவான விஷயத்தின் செய்தியை நபியும் ரஸுலுமே பெற முடியும். (ஒரு தவறான எண்ணம் அகற்றப்படுகிறது. பக்கம் 12, 13)