இறைத்தூதர்களுக்கெதிராக பிரிவினர்களின் போலியான ஒற்றுமை

இறைத்தூதர்களுக்கெதிராக பிரிவினர்களின் போலியான ஒற்றுமை:

ஒரு புதிய இறைத்தூதரின் வருகையானது, எதிரிகளிடையே போலியானதாெரு ஒற்றுமை நிலையை உருவாக்குகிறது. அவர்கள் சில காலத்திற்குத் தங்களிடையேயான சொந்த வேறுபாடுகளை மறந்து விட்டு, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மார்க்க ஒழுங்கிற்கு எதிராக மாபெரும் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகத் தம் சக்திகளை ஒன்றுதிரட்டுகின்றனர். வன்முறையுடன் கூடிய பகைமையை வெளிப்படுத்தியவாறு ஒரு ஒன்றுபட்ட எதிர்ப்பை முன் வைக்கின்றனர். இறைத்தூதருக்காே எந்த விதமான மனித ஆதரவும் இருந்ததில்லை. பொதுமக்களின் ஆதரவும் அவருக்கு இருக்கவில்லை. சமூகத்தின் ஏதாவதொரு சக்திவாய்ந்த அமைப்பின் ஆதரவும் அவருக்கு இருக்கவில்லை. எந்தவொரு அரசியல் பதவியாலும் அவர் பாதுகாக்கப்படவில்லை. அவர் மறுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, தனிமையில் விடப்பட்டார்.

மூடத்தனமான போக்குகளின் அதிவேக வளர்ச்சியினால் கலப்படத்திற்கு ஆளான சமூகங்களுக்கு எதிராக இத்தகைய மனிதர்களே எழுந்தனர். புதிய ஒழுங்கிற்கு வழிகாட்டியாக இருக்கும் இறைத்தூதர்கள், எப்போதுமே இறை ஏகத்துவத்தைப் போதித்தனர். மேலும் சிலைவணக்கத்தின் நேரடியான மற்றும் மறைமுகமான ஒவ்வொரு வடிவத்தையும் அடியோடு அகற்ற முயன்றனர். அவர்களது எதிரிகள் எந்த ஒற்றுமையைத் தங்களுக்கிடையே உருவாக்கினரோ அது நபிமார்களுக்கு எதிரான போலியான ஒற்றுமையாக மட்டுமே இருந்தது. அதே சமயம் தங்களுக்குள் அவர்கள் எப்போதும் போல ஆழமாகப் பிளவுபட்டவர்களாகவே இருந்தனர். ஏகத்துவத்தை நிலைநாட்டுபவர்கள் வெறும் இட்டுக்கட்டுபவர்களாக இருந்திருந்தால், பிறகு அவர்களது பணி சாத்தியமற்றதாகவே இருந்திருக்கும். தனக்கு அப்பாற்பட்ட தொலைவில் இருப்பதாகத் தெளிவாகத் தெரியும் இத்தகைய இலக்குகளை அடையும் முயற்சியில் இட்டுக்கட்டுபவர் எவரும் நிலைத்திருக்க முடியாது. இவர்களைப் போன்றவர்களது நம்பிக்கை, இறைவனின் உண்மைத்துவத்தின் அடிப்படையில் ஆழமாக நிலை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறில்லையாயின் அவர் அழிக்கப்பட்டு துடைத்தெறியப்படுவர். இறைவன் என்று ஒருவன் இல்லையென்றால் பிறகு அத்தகைய வாதம் புரிபவர்களை பைத்தியக்காரர்கள் என்று கூறி சமூகம் எளிதாக மறுத்திருக்கும். இதைத் தவிர மூன்றாவதொரு வழி ஏதும் இல்லை. அவர்கள் பைத்தியக்காரர்கள் இல்லையென்றால், ஒரு உண்மையற்ற பலனற்ற நோக்கத்திற்காக, தங்களிடமிருந்த அனைத்தையும் தியாகம் செய்யும் அளவிற்கு தங்களது நம்பிக்கையை உறுதிப்பாடுடன் அவர்கள் எவ்வாறு பற்றிப்பிடிக்க முடியும்? ஆனால் பைத்தியக்காரர்கள் என்று கூறி அவர்கள் ஒதுக்கப்பட முடியாது, ஏனெனில் பைத்தியக்காரர்கள் தங்களது உளறல்களில் இங்குமங்குமாகத் தாவிக்கொண்டே இருப்பர். நபிமார்களைப் பொருத்தவரை, சமூக மக்கள் தங்களது பாதங்களுக்குக் கீழே நிலம் வெடித்துவிட்டது போல ஒரு வன்மையான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர். வன்முறையாளர்களாகிய எதிரகளின் ஒன்றுபட்ட கோபத்திற்கு எதிராக, ஏழை அல்லது செல்வந்தன், சக்திவாய்ந்தவர் அல்லது பலவீனர்களின் எந்த மனித ஆதரவும் அவர்களுக்கு ஒரு போதும் கிடைத்ததாகத் தெரியவில்லை. அவர்களது தூதுச்செய்தியின் உன்னதத் தன்மையும், அவர்களது நடத்தையின் கண்ணியமும், மிகக் கடினமான சூழ்நிலையிலும் கூட இறுதி வெற்றியின் மீது அவர்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை ஆகிய இவையே அவர்களது உண்மைக்குச் சாட்சி பகர்கின்றன.

(Revelation Rationality Knowledge and Truth)