கேள்வி: இஸ்லாமிய கடமைகள் யாவை பதில்: தொடர் 6 (இறுதி தொடர்)

மேலும் வாக்களிக்கபட்ட மஸீஹ் (அலை) நம்மை பார்த்து எச்சரிக்கின்றார்கள் :-

"சூரா பாத்திஹா வில்" இறைவன் எது குறித்து துஆ செய்யும்படி கற்ப்பித்துள்ளானோ அதையே அவன் உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறான். அந்த துஆ "நீ எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக; அதாவது நீ அருள் புரிந்த மக்களின் வழி". எனவே நபிமார்களிடத்திலும் இறைத் தூதர்களிடத்திலும் இருக்கின்ற அந்த அருட்கொடைகள் உங்களுக்கும் கிடைக்க வேண்டுமென ஐங்காலத் தொழுகையிலும் 'துஆ' செய்யும்படி வற்ப்புறுத்திக் கூறப்பட்டிருக்க நபிமார்களும் ரஸுல்மார்களும் இல்லாமல் அந்த அருட்கொடைகளை எவ்வாறு உங்களால் பெற இயலும்?* எனவே அந்த அருட்கொடைகளை நீங்கள் அடையவும் உறுதி, நம்பிக்கை ஆகிய தகுதிகளை நீங்கள் பெறவும் அவ்வப்போது இறைத் தூதர்கள் வரவேண்டியது கட்டாயமாகிறது. ஆகவே இறைவனுடன் போரிட்டு அவனின் தொன்மையான இச்சட்டத்தை முறியடித்து விடுவீர்களா? நான் ஒரு தந்தையின் மூலமாக பிறக்க வரும்பவில்லை என்று விந்து கூற முடியுமா? காற்றின் உதவியால் கேட்க விரும்பவில்லை என்று காதுகளால் கூற முடியுமா ? மேலும், இறைவனின் ஒரு தொன்மையான சட்டத்தை தாக்குவதைவிட வேறு அறிவீனம் என்ன இருக்க முடியும்?.

அன்னாரின் வருகைக்கு பிறகு இந்த கதவு விசாலமாக திறக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்..

ஆனால், இப்பொது இந்த அருளை மீண்டும் சில சாக்குபோக்குகள் கூறி அடைக்க முற்படும்போது இறைவனின் அருளாக நாம் வாழும் இதை காலத்தில் ஹஸ்ரத் முனீர் அஹமத் (அலை) அவர்கள் தன்னை சூரத்துல் ஃபாத்திஹா கற்றுக்கொடுக்கப்பட்டுள்ள துஆவின் படி உங்களுக்கு அருளாக அந்த ஏக இறைவன் அனுப்பியுள்ளான் என்று வாதம் செய்கின்றார்கள்.

https://sahih-al-islam.blogspot.com/2014/08/surah-al-fatiha-on-divine-guidance.html?m=1

அன்னார் கூறும்போதும் இறைவன் அவனது இருப்பை தனது நபிமார்கள் மூலமாக அடியார்களுக்கு உணர்த்துகின்றான்.

உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை; இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும். (அல்குர்ஆன்: 6:106)

என்று திருமறையும் நமக்கு தெளிவாக உணர்துகின்றது .

மேலும், மஸீஹ் மஊது (அலை ) அவர்கள் கூறும்போது :-

ஏக இறைவனின் இரட்சிப்பை அடைய விரும்பும் சகோதரர்களே! இஸ்லாத்தின் கடமையின் உண்மையான அர்த்தத்தை புரிந்து நம்மை படைத்த இறைவனின் வாரிசு ஆகுங்கள் ஒருவேளை உங்கள் நமபிக்கை சரி என்றால் "ஓரிறை கொள்கை கொண்ட ஒரு யகூதி கூட இறைஇரட்சிப்பை பெறமுடியம்" ஒரு சிலை வழிபடுபவர் அதை இறைவன் என்றும் அது பேசாது என்று கூறுகின்றான் அதே போலவே உருவமற்ற இறைவன் பேசாமல் இருக்கின்றான் என்பதை எவ்வாறு எடுத்துகொள்வது? சற்று சிந்தியுங்கள்..!

இதை பற்றி மஸீஹ் (அலை) கூறும்பொழுது:-

இறைவனை மண்ணில் புதையுண்ட ஒரு உயிரற்ற சடலமாகக் அவனைக் கண்டு பிடிக்கும் பொறுப்பு மனிதனிடமே இருப்பதாக கருதுவது மாபெரும் தவறாகும். ஒரு மனிதனின் முயற்சியால் கண்டுபிடிக்கப்படுகின்றவன் தான் இறைவன் என்றால் அத்தகைய இறைவனிடமிருந்து நம்மால் எதையும் எதிர்பார்க்க முடியாது ஆனால் உண்மையில் இறைவன் இத்தகைய மகத்துவம் உள்ளவன் என்றால் அவன் ஆதிகாலம் தொட்டே என்றென்றும் "நான் இருக்கின்றேன்"என்று மக்களை தன் பக்கம் அழைத்துக் கொண்டே இருக்கின்றான்.

ஆகவே சகோதர்களே உண்மை இஸ்லாத்தின் இந்த கருத்தை ஆழ்ந்து சிந்தியுங்கள்!

இஸ்லாத்தின் கடமை எவை என்ற கேள்விக்கு ஒரு பள்ளி சிறுவனின் பாட புத்தகத்தில் இருப்பதை போன்று நாம் கருத்தில் கொண்டால், மஸீஹ் (அலை)அவர்களின் அவர்களின் இந்த போதனைகளை என்ன செய்வது இது கவலை கூறிய விஷயம் அல்லவா?

எனவே இஸ்லாத்தின் கடமைகளை ஆன்மிக ரீதியாக "லா இலாஹ இல்லல்லாஹ்" என்பது உண்மையான உயிருஉள்ள இறைவன் மீது நம்பிக்கை கொண்டு அதில் நிலைத்து நின்று பிறகு அமல்களுக்கான கடமைகள் செய்வதாகும். இன்ஷாஅல்லாஹ்.. ஆமீன்!

நீங்கள் எந்த முஸ்லீம் பிரிவு சகோதரராக இருந்தாலும் அல்லது மாற்று மத சகோதர்களாக இருந்தாலும் இந்த கட்டுரையால் உங்கள் மனம் வருத்த பட்டால் தயவு செய்து இறைவனுக்காக எங்களை மன்னியுங்கள்! ஒரு வேலை இதில் உண்மை உள்ளது என்று நினைத்தால் உங்கள் ஆன்மிக சகோதரகளுக்கு பகிருங்கள்., இன்ஷாஅல்லாஹ்.. உங்கள் மீதும் எங்கள் மீதும் அந்த ஏக இறைவன் அருள்புரிவானாக! ஆமீன் சும்ம ஆமீன். யா ரப்புல் ஆலமீன்.

-ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம் -தமிழ்நாடு