உம்மதி நபி - விளக்கம்

ஹஸ்ரத் மஸீஹ்(அலை) அவர்கள் கூறுகின்றார்கள் :-

“இக்காலத்தில் நபி என்ற சொல்லினால் இறைவனின் கருத்து, ஒருவர் முழுமையான முறையில் இறைவனுடன் உரையாடும் சிறப்பைப் பெறுகிறார் என்பதும் அவர் மார்க்கத்தைப் புதுப்பிப்பதற்காக இறைவனால் நியமிக்கப்படுகிறார் என்பதுமாகும். அவர் இன்னொரு ஷரீஅத்தைக் கொண்டு வருகிறார் என்று பொருள் அல்ல. ஏனெனில் ஷரீஅத் ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடன் முடிந்து விட்டது. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு உம்மத்தீ என்று சொல்லாதவரை எவர் மீதும் நபி என்ற சொல்லை பொருத்துவது ஆகுமானதல்ல - அதன் பொருள், அவர் ஒவ்வொரு அருளையும் ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பின்பற்றுவதனால் பெற்றாரேயொழிய நேரடியாகப் பெறவில்லை என்பதாகும்”.(தஜல்லியத்தே இலாஹிய்யா பக்கம் 9)