இறுதி காலங்களின் அடையாளங்களின் மீது (பாகம் 1)

 (24 செப்டம்பர் 2021~16 ஸஃபர் 1443 ஹிஜ்ரி)

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்துமுஸ்லிம்களுக்கும்) தனது ஸலாத்தை தெரிவித்தப் பின்னர் கலீஃபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷ்ஹது, தஅவூது மற்றும் சூரா ஃபாத்திஹா ஓதிய பிறகு “இறுதி காலங்களின் அடையாளங்களின் மீது என்ற தலைப்பில் தனது சொற்பொழிவை வழங்கினார்கள்..

فَهَلۡ يَنظُرُونَ إِلَّا ٱلسَّاعَةَ أَن تَأۡتِيَہُم بَغۡتَةً۬‌ۖ فَقَدۡ جَآءَ أَشۡرَاطُهَا‌ۚ فَأَنَّىٰ لَهُمۡ إِذَا جَآءَتۡہُمۡ ذِكۡرَٮٰهُمۡ ()

எனவே இவர்கள் அறிந்து கொள்ளாத நிலையில் தங்களின் மீது திடீரென்று (தீப்ப்புக்குரிய) அவ்வேளை வருவதை அன்றி (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா? அதன் அடையாளங்கள் திட்டமாக வந்து விட்டன ஆகவே அது அவர்களிடம் வந்து விட்டால், அவர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசம் எவ்வாறு பயனளிக்கும். (47:19)

ஒரு (குறிப்பிட்ட) காலத்திற்காக அல்லது ஒரு இடத்திற்காக என்று வரையறுக்கப்படாத தனித்தன்மை கொண்ட ஒரே வேதம் திருக் குர்ஆன் மட்டுமே; (திருக் குர்ஆன்) பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே ஹஸ்ரத் எம்பெருமானார் நபி கரீம் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதும், என்றென்றும் நிலைத்திருப்பவனாகிய இறைவனின் வார்த்தையாக இருப்பதாலும், திருக்குர்ஆன் என்றென்றும் உண்மையானதாகும்.

இவ்வாறு, உலக முடிவு குறித்து அது [அதாவது திருக்குர்ஆன்] இந்த வசனத்தில் குறிப்பிடக்கூடிய (இறுதி)கால அடையாளங்களின் தோற்றம்-வெளிப்பாடு - இந்த பதினான்கு நூற்றாண்டுகள் முழுவதும் உண்மையாக நிகழ்ந்து

ள்ளது. இன்றும் உண்மையாக நிகழ்கிறது, மேலும் உலக முடிவு(நாள்) வரை எப்போதும் உண்மையாகவே இருக்கும். உண்மையில், இந்த அத்தாட்சிகளில் ஒன்று [பேச்சு வழக்கில் கூறுவதானால்] நேற்று எம்பெருமானார் திருநபி (ஸல்) அவர்களின் உறுதியான வருகையையும், பின்னர் அவர்களின் மரணத்தையும், பின்னர் (ஒட்டகப் போருக்கு அடுத்து (ஹிஜ்ரி 37இல்)) சிஃபினில் நடந்த நம்பிக்கையாளர்களுக்கிடையேயான மோதல், ஹிஜாஸில் உள்ள பயங்கரமான நெருப்பின் தோற்றம், மங்கோலிய படையெடுப்புகள், போன்றவற்றை உருவாக்கியது. இன்றோ அது அபரிமிதமான செல்வம் மற்றும் பொருட்களின் மிகுதி, உயரமான கட்டிடங்களை நிர்மாணித்தல், செல்வத்தை பெறுவதற்கு(பெருக்கிக் கொள்ள) போதைப்பொருள் பரிமாற்றம் (விற்பனைப்) போன்றவை(களின் வடிவிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது). உண்மையில் போதைப்பொருட்களின் கொடுமைகள் (அனைத்தையும்) சீர்குலைக்கின்றன. பல மக்கள், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) போதைப்பொருட்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். மரணத்தின் வியாபாரிகள் இந்த இளைஞர்களின் சடலங்களின் மீதும் அல்லது குடும்ப அங்கத்தினரின் பிரிவினைகளின் மீதும் கூட தங்களது செல்வத்தை பெருக்கிக் கொள்கின்றனர்.

நேற்றுத் தான்] - கடந்த நூற்றாண்டில் - ஈஸா (அலை), கிருஷ்ணர் (அலை) ஆகியோரின் இரண்டாவது வருகை நிகழ்ந்தது, அதைக் கூறுவதென்றால், வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் வருகை நிகழ்ந்தது. அவர்களது வருகையுடன் உலகளவிலும், நாட்டளவிலும் பல விஷயங்கள் நிகழ்ந்தன. இன்று அது முஹையுத்தீன், அல்-கலீஃபத்துல்லாஹ், அல்-மஹ்தி, அல்-மஸிஹ், னுடைய வருகையுடன் மிக பயங்கரமான பல சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. உண்மையில், இந்த நூற்றாண்டில் அல்லாஹ் இந்த எளிய அடியானை எழுப்பியுள்ளதால், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து அதாவது, 2001 ஆம் ஆண்டு முதல் இன்று வரை, பல விஷயங்கள் நிகழ்ந்துள்ளன, இன்னும் வரக்கூடியது மிகவும் பயங்கரமானதாகவே இருக்கும், உலகெங்கிலும் நிலைமை எல்லா விதத்திலும் மிகவும் கடுமையானதாகவும், அச்சத்திற்குறியதாகவும், கவலைக்குரியதாகவுமே இருக்கும்.

எனது பேருரையின் ஆரம்பத்தில் நான் மேற்கோள் காட்டிய வசனத்தில், (இறுதி) காலத்தின் அடையாளங்களில் சில ஏற்கனவே தோன்றிவிட்டதை, குர்ஆனில் இறைவன் அறிவித்துள்ளான் என்றால், இந்த அடையாளங்களின் தன்மை பற்றிய எந்த விவரங்களையும் அவன்

வழங்கவில்லை. இறைவனின் வார்த்தைகளின் விரிவுரையாளர்கள் என்ற முறையில் எங்களது தகுதிகளின் திறனுக்கேற்ப அனைத்து நபிமார்களின் தலைவரான, அவனது திருநபி(ஸல்) அவர்கள் மற்றும் அவனது மற்ற இஸ்லாமிய நபிமார்களே அதனை விளக்கவேண்டும், மேலும் நமது நேசத்திற்குரிய திருத்தூதர் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்கள் அவர்களின் ஹதீஸ்களில் (இறைவனின் வார்த்தையை முழுமையாகவும் விரிவாகவும் விளக்குகின்ற நபி(ஸல்) அவர்களின் வார்த்தை) இந்த அத்தாட்சிகளில் பலவற்றை குறிப்பிட்டுள்ளார்கள்.

பூமியின் மீது இவ்வுலகம் உருவாக்கப்பட்டதிலிருந்து, அனைத்து தூதர்களும் அந்தந்த மக்களுக்கு இந்த பயங்கரமான நாளை பற்றி அறிவித்துள்ளனர், ஆனால், எம்பெருமானார் திரு நபி(ஸல்) அவர்களோ, பூமியின் மீது தோன்றிய இறைவனின் தூதர்கள் அனைவருக்கும் அவர்களே முத்திரையாக இருப்பதால், தங்களது மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மனித குலத்திற்கும் உலகத்தின் (அந்த)முடிவு எந்த மாதத்தில், ஆண்டில் நூற்றாண்டில் நிகழும் என்பதை இறைவனை அன்றி வேறு யாரும் அறிய மாட்டார்கள் என்றபோதிலும், தற்போது அது அருகில் இருப்பதையும், அதற்கு முன்னோடியாக இருக்கக்கூடிய பல அத்தாட்சிகளும் அதனை அறிவிக்கும் என்பதையும் அறிவித்துள்ளார்கள். வேறு எந்த தூதர்களையும் விட, அவர்களே உலக முடிவின் இந்த அத்தாட்சிகளைப் பற்றி முடிந்தவரை தனது மக்களுக்கு கூறியுள்ளார்கள்.

மேலும் இன்று இந்த நூற்றாண்டின் கலீஃபத்துல்லாஹ்,அல்-மஸீஹின் [உங்களுக்கு முன்னால் இருக்கும் இந்த எளியவனின்] நோக்கம் என்னவென்றால் உலகம் முழுவதும் உள்ள தனது எல்லா ஸஹாபாக்களை மட்டுமே எச்சரிப்பதல்ல, மாறாக, அனைத்து மனிதகுலமும் அதாவது நீங்கள் அனைவரும் மரணத்திற்கு பிறகுள்ள வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட வேண்டும், உங்கள் செயல்களைத் திருத்திக்கொள்வதில் நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும், பூமியின் மீதான இன்பங்களின் பக்கம் உங்களது உடலையும் ஆன்மாவையும் வீழ்த்தி விடக் கூடாது என்(று எச்சரிப்)பதாகும். இவை அனைத்தும் மிகவும் முக்கியமானதாகும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஒரு ஹதீஸ் எனக்கு நினைவிருக்கிறது. இது அன்னார்(ஸல்) அவர்கள் இந்த அடையாளங்களைக் குறிப்பிடும் (அவர்களது) அக்கறையைப் பற்றிய ஒரு கருத்தை நமக்குத் தருகின்றது. ஹுஸைஃபா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நீண்ட நேரம் நின்று கொண்டு, யுக முடிவு நாள் ஏற்படும் வரையிலான எந்தத் தகவலையும் ஒன்றுவிடாமல் குறிப்பிட்டார்கள். அதை மனனமிட்டவர்கள் மனனமிட்டுக் கொண்டார்கள். அதை மறந்தவர்கள் மறந்து விட்டார்கள். இதோ இந்த என் தோழர்கள் அதை அறிந்துகொண்டனர். அவற்றில் ஏதேனும் ஒன்றை நான் மறந்துவிட்டிருந்தாலும் அதை நேரில் காணும்போது, அது என் நினைவிற்கு வந்துவிடும்; தம்மைவிட்டு மறைந்துவிட்ட ஒருவரது முகத்தை (மீண்டும்) பார்க்கும்போது அவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்வதைப் போன்று (முஸ்லிம்)

சில அடையாளங்கள் ஹதீஸ்களில் மிகச் சுருக்கமாக மட்டுமே குறிப்பிடப் பட்டிருந்தாலும் கூட, மற்றவை, மிக விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு தஜ்ஜால் தொடர்பான முன்னறிவிப்புகளை எடுத்துக் கொண்டால், அதற்கு காரணம் எளிமையானது ஆகும்: தஜ்ஜாலின் வருகை ஒரு நிகழ்வை உருவாக்குகிறது‌, அங்கு நம்பிக்கையாளர்கள் கடுமையாக சோதிக்கப்படுவார்கள், அதைக் குறித்து தனது மக்களை சரியான முறையில் எச்சரிக்கவும் அவர்களது தோழர்களிடம் அதைக்குறித்து தனிப்பட்ட அக்கறையுடன் பேசவும் நபி (ஸல்) அவர்களுக்கு இயல்பானதாக இருந்தது.

உதாரணமாக அல்-நவாஸ் இப்னு சமன் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: "புனித நபி (ஸல்) அவர்கள் ஒரு பகலில் தஜ்ஜாலைக் குறித்து பேசினார்கள். அவர்கள் சில நேரங்களில் (அவர்களது குரலை) உயர்த்தினார்கள் மற்றும் சில நேரங்களில் அதனை தாழ்த்தினார்கள்,எந்த அளவிற்கு என்றால் விரைவில், [அவர்களுடைய வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு], பக்கத்து பனை தோப்பில் தஜ்ஜால் இருப்பதாக (நினைத்து) நாங்கள் பயப்பட ஆரம்பித்தோம்! பின்னர் நாங்கள் புனித நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, "உங்களுக்கு என்ன நடக்கிறது? என்று அவர்களின் வார்த்தைகளின் விளைவை எங்களில் கண்டு, அவர்கள் எங்களிடம் வினவினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் புனித (ஹஜ்) இறுதி பயணத்தின் போது பிரசித்திப்பெற்ற இறுதிப் பேருரைகளுக்கு மத்தியிலும் கூட தஜ்ஜாலின் குழப்பம் குறித்து தனது மக்களுக்கு உரையாற்றினார்கள்.

இந்த குறிப்பிட்ட ஹதீஸ்களின் முக்கிய நோக்கம் என்னவென்றால் இந்த உலகிற்கு வரவிருக்கும் முடிவையும் மற்றும் மறுமை வாழ்க்கைக்காக தங்களை தயார் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் நினைவூட்டுவதாகும்.

இன்று இந்த நூற்றாண்டில் வாழ்வைக் குறித்து உங்களை அச்சமூட்டவோ அல்லது வெறுப்படையச் செய்யவோ நான் இங்கு வரவில்லை. என் படைப்பாளனுக்கு முன்னால் எனது நோக்கம் என்னவென்றால்

இந்த உலகம் நிலையற்றது என்பதையும் எதிர்கால வாழ்க்கையை நினைவில் கொள்ள வேண்டும் என்பதையும் உங்களுக்கு நினைவூட்டுவதாகும். உலகின் முடிவும் அதன் அடையாளங்களும் யதார்த்தமானவை, ஆனால் யார் இறந்தாலும், அவருடைய உலகின் முடிவு ஏற்கனவே நிகழ்ந்ததைப் போன்றதாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

[தனிப்பட்ட ஒருவரின் பார்வையில்] மரணம் என்பது உலகின் முடிவுக்கு சமமானது ஏனென்றால் யார் இறந்தாலும், அவரது உலகின் முடிவு ஏற்கனவே அங்குள்ளது.

இந்த அனைத்து அத்தாட்சிகளில் எவற்றிற்கும் எந்த தேதியையும் எந்த ஹதீஸும் குறிப்பிடவில்லை என்பதையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட இன்னின்ன அத்தாட்சிகள் இந்த வருடத்தில் நிறைவேறும் என்று முழு உறுதியுடன் அறிவிப்பது தவறானதாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

அடையாளங்களைப் பேசுகின்ற அனைத்து நிகழ்வுகளும் பாவங்கள் அல்ல என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். (அவற்றில்-சில பாவங்கள் என்பதும் உண்மைதான், ஆனால் மற்றவை புனித நபி (ஸல்) அவர்களால் கணிக்கப்பட்ட உண்மைகளே ஆகும். அவை உலக முடிவிற்கு முன்பு நிகழக்கூடியதும், (அது) அறிவிக்கக் கூடியதும் ஆகும். எனவே, ஹலாலானப் பொருட்களை அதிகரிப்பதோ அல்லது அரேபிய பாலைவனத்தில் பசுமையை நடவு செய்வதோ இஸ்லாத்தில் தவறானது என்று நினைக்காதீர்கள்.

நபி(ஸல்) அவர்கள் முன்னறிவித்த அத்தாட்சிகளில் பல ஏற்கனவே நிகழ்ந்துவிட்டதையும் அல்லது நம் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருப்பதையும் நீங்கள் உணரும் போது நீங்கள் குழப்பத்தில் இருப்பீர்கள், இல்லையென்றால் முற்றிலும் அதிர்ச்சியில் இருப்பீர்கள் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இன்றைக்கு நான் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இது மிகவும் பரந்த விஷயமாகும். இந்த விஷயத்தைக் குறித்து இன்னும் விரிவாக விவரிக்க,அல்லாஹ் எனக்கு தௌஃபீக்கையும் ஞானத்தையும் வழங்குவானாக!, ஏனென்றால் இன்றைய நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும். நிச்சயமாக, உலக முடிவின் வரவிருக்கும் அத்தாட்சிகளில் சிலவற்றைக் குறிப்பாக பேசுகையில்,அல்லாஹ் தனது தூய திருமறையில், உன்னத குர்ஆனில் கூறுகிறான்:

هَلۡ يَنظُرُونَ إِلَّآ أَن تَأۡتِيَهُمُ ٱلۡمَلَـٰٓٮِٕكَةُ أَوۡ يَأۡتِىَ رَبُّكَ أَوۡ يَأۡتِىَ بَعۡضُ ءَايَـٰتِ رَبِّكَ‌ۗ يَوۡمَ يَأۡتِى بَعۡضُ ءَايَـٰتِ رَبِّكَ لَا يَنفَعُ نَفۡسًا إِيمَـٰنُہَا لَمۡ تَكُنۡ ءَامَنَتۡ مِن قَبۡلُ أَوۡ كَسَبَتۡ فِىٓ إِيمَـٰنِہَا خَيۡرً۬ا‌ۗ قُلِ ٱنتَظِرُوٓاْ إِنَّا مُنتَظِرُونَ ()

"மலக்குகள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உம் இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உம் இறைவனின் அத்தாட்சிகளில் சில வருவதையோ அன்றி (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் சில வரும் அந்நாளில், இதற்கு முன்னால் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லது நம்பிக்கைக் கொண்டிருந்தும் யாதொரு நன்மையையும் சம்பாதிக்காமலுமிருந்து விட்டு, அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை எவ்வித பலனையும் அவர்களுக்கு அளிக்காது - ஆகவே அவர்களை நோக்கி “(அந்த அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பாருங்கள்; நாமும் எதிர்ப் பார்க்கின்றோம்” என்று (நபியே!) நீர் கூறும்." (அல் அன்ஆம் 6:159).

என்னைப் பின்பற்றுபவர்கள் அனைவரையும், அனைத்து நம்பிக்கை கொண்டவர்களையும் மற்றும் அனைத்து மனித இனத்தையும் அல்லாஹ் தனது நேர் வழியில் வைத்திருப்பானாக!, இந்த உலகில் அல்லாஹ்வின் வெற்றி ஓங்கி நின்று, தீமை அழியட்டுமாக!. எனவே நாம் நம் இலக்கை அடையவும் நமதுப் பணியை நிறைவேற்றவும் -நமக்கு செய்வதற்கு ஏராளமான பணிகள் உள்ளன. உட்புறம் மற்றும் வெளிப்புற சீர்திருத்தம் தேவைப்படுகிறது, அதனால் தஜ்ஜாலின் தீமைகளும் இந்த உலகின் அனைத்து மனவேதனைகள்\துயரங்களும் நம்மைத் தீண்டாது, இன்ஷா-அல்லாஹ். அல்லாஹ் தனது உண்மையான அடியார்கள் அனைவரிடத்திலும் மற்றும் அனைத்து மனிதகுலத்தின் மீதும் கருணை காட்டுவானாக!.

இன்ஷா-அல்லாஹ், ஆமீன்.