அருளுக்குரிய ரமலான்!

காலத்தின் இமாம் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

நம்பிக்கை கொண்டோர்களே ரமலான் புனிதமிக்க மாதமாகும். மேலும், இது எத்தகைய மாதம் என்றால் இம்மாதத்தில் தான் அல்லாஹ் சுபஹானஹுதாலா தனது படைப்பினமான மனித குலத்திற்கு எல்லையற்ற மகிழ்ச்சியை வழங்குவதற்கு தொடர்ந்து முயற்சிக்கின்றான்.

மேலும், நோம்பு நம்மை முழுவதும் சுத்திகரிப்பதாகும். இன்னும் இதன் மூலம் அவனின் இருப்பை பற்றியும் அவனின் வெளிப்பாடுகள் எங்கும் நிறைத்திருப்பதை பற்றியும் அறிந்து

கொள்வதற்கான விழிப்புணர்வை உருவாக்க ஒரு சிறந்த வழிமுறையாகும். நோம்பு

நோற்பதால் ஒரு அடியானின் தக்வா (இறையச்சம்) அதிகமாகின்றது. இந்த

இறையச்சமே உண்மையில் ஷைத்தானின் தீய திட்டங்களினால் ஏற்படும் எல்லாவித துன்பகளிலிருந்து அந்த அடியானை பாதுகாக்கின்றது.

அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவருக்கு அவன் ஏதேனும் ஒரு வழியை ஏற்படுத்துவான். அவர் எதிர்பாராத இடத்திலிருந்து அவன் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்விடம் நம்பிக்கை வைப்பவருக்கு அவனே போதுமானவன் நிச்சயமாக அல்லாஹ் தனது நோக்கத்தை நிறைவேற்றுவான். அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் ஓர் அளவை நியமித்துள்ளான். (அல்புகரான் 65:3-4)

இன்றைய காலத்தில் அநேக முஸ்லிம்கள் நோம்பு சம்பந்தமாக குறிப்பாக அதை கடைபிடிப்பதன் சம்பந்தமாக ஒரு தவறான எண்ணத்தில் உள்ளார்கள்.

நோன்பாளியாக இருக்க இன்றைய காலகட்டத்தில் இவர்கள் ஒருவிதமான மந்தத்தன்மையுடன் எந்த வேலையும் செய்யாமல் அதிகமான நேரத்தை தூக்கத்தில் கழிக்கின்றனர். தங்களை படைத்த இறைவனாகிய அல்லாஹ்வின் மீது உண்மையிலேயே அச்சம் கொண்டவர்களாக நோம்பை கடைபிடிக்கும் முஸ்லிம்கள் இந்த நாட்களில் எப்போதும் உற்ச்சாகமாக திருக் குர்ஆனை ஓதுபவர்களாகவும், குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் தொழக்கூடியவர்களாகவும் மற்றும் இறைவனை அதிகமாக நினைவுகூர்ந்து "திக்ர் செய்பவர்களாகவும் இருப்பர்.

ஆனால், சிலரோ தொழுகைக்குரிய நேரத்தில் மட்டும் தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டு தொழுகை முடித்ததும் மீண்டும் தூங்க சென்றுவிடுகின்றனர். இவ்வகையான இரண்டாவது தூக்கத்தினால் இவர்கள் சோம்பேறியாகி அழகிய அமல்கள் மூலம் தங்களை தூய்மைப்படுத்தி அருள் பொழியும் பொன்னான மாதத்தை இழந்து நிற்கின்றனர். இறைவனின் பேரருளில் மகிழ்வதை விட்டு இந்த அருட்கொடையை இழக்கின்றனர். ஒரு நம்பிக்கையாளரை பொறுத்தளவில் ரமலான் மாதம் என்பது முன்பைவிட தீவிரமாக செயல்படும் மாதமாகும். ஏனென்றால், மாதத்தில் அந்த அடியான் உணவுக்கட்டுப்பாட்டில் இருப்பதாலும் இன்னும் உணவு

உண்ணும் நேரத்திலிருந்து விடுபட்டு அதிகமான நேரத்தை இறைவழியே செலவிட முடிவதாலும் அதிகமான நேரம் "திக்ரு" செய்வதற்கும், கடமையான வணக்கத்திற்கு

மேல் உபரியான வணக்கத்தில் ஈடுபடுவதற்கும் மிகுதியாக திருகுரான் ஓதுவதற்கும்

நேரம் கிடைப்பதாலும் அந்த அடியான் தனது அகங்காரம், தற்பெருமை மற்றும் தீய நப்ஸ்லிருந்து (கட்டுக்கடங்கா உணர்ச்சிகளிலிருந்து) விடுபட்டு ஒரு சிறந்த மனிதர் ஆகின்றார். மேலும், அவர் முன்பை விட அதிக அடக்கமுடையவராகவும் இன்னும் புறம் பேசுவது அடுத்தவர்களின் குறைகளை துருவித்துருவி ஆராய்வது போன்ற எல்லா விதமான பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றான். இந்த வாய்ப்பின் மூலம் தேவை இல்லாத வீண் பேச்சுகளிலிருந்தும் சண்டை சச்சரவுகளில்லிருந்தும் வெறுக்கத்தக்க செயல்களிலிருந்தும் பொறாமை மற்றும் சந்தேகங்களில்லிருந்தும்விட்டு விலகுகின்றான். இந்நாட்களில் நீங்கள் நன்மை செய்வதில் கவனத்தை செலுத்துவதன் மூலம் அந்த ஏக இறைவனிடம் இஸ்திபார் (பாவமன்னிப்பு) கேட்பதன் மூலமும் உங்கள் அனைத்து பாவங்களுக்கும் மன்னிப்பு கேட்கும்போது படைத்த உங்கள் இறைவன் உங்கள் நோன்பையும் உங்கள் வணக்கங்களையும் ஏற்றுக்கொண்டு உங்களுக்கு பாவமன்னிப்பை வழங்குகின்றான்.

-ஜுமுஆ உரை 11.05.2018