ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் ஸஹாபிகளின் அழகிய புரிதலுக்கும் தற்போதுள்ள அஹ்மதிகளின் புரிதலுக்கும் உள்ள வேறுபாடு!

ஹைருத்தீன் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் எனது பணிவின் காரணமாக இதைக் கூறவில்லை. மாறாக நான் கூறுவது உண்மையாகும். நான் பாவியாக இருந்தேன். இப்போது நான் கூறும் இந்த விஷயம் உறுதியாக ஆம் உறுதியாக நான் நபித்துவத்தின் ஒளியினாலேயே கூறுகின்றேன். என் தரப்பிலிருந்தும் இதை நான் கூறவில்லை. ஏனென்றால்

ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்.

நான் இறைவனின் ஒளியாக இருக்கின்றேன். அதன் மூலமே பகல் வெளிப்பட்டது என்று கூறியுள்ளார்கள். எனவே, இது மிக உறுதியான விஷயமாகும். எவர் ஒளியுடன் தொடர்பை ஏற்படுத்துவாரோ

அவருக்கு அந்த ஒளியிலிருந்து நிச்சயமாக பங்கு கிடைக்கும். இந்த விஷயமும் மிகவும் தெளிவாக

இருக்கின்றது. அந்த ஒளி ஒவ்வொருவரது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்பவே கிடைக்கும். ஹஸ்ரத் கைருத்தீன்(ரழி) சாஹிப் தொடர்ந்து கூறுகின்றார்கள்

நமக்கு இல்ஹாம் என்று நாம் எதைக் கூறுகின்றோம்? கஷ்ஃப் என்று எதைக் கூறுகின்றோம்?

உண்மையான கனவுகள் என்பது என்ன? என்பதெல்லாம் தெரியாமல் இருந்தது. இப்போது இறைவனின்

அருளால் இந்த இறைவனால் அனுப்பப்பட்ட தூதருடைய கைகளில் எமது கைகளைக் கொடுத்ததால் நமக்கு இல்ஹாம் பற்றிய அறிவு மட்டும் கிடைக்கவில்லை. கஷ்ஃப் பற்றிய அறிவு மட்டும் கிடைக்கவில்லை. உண்மையான கனவுகள் பற்றிய அறிவு மட்டும் கிடைக்கவில்லை. மாறாக, இந்த மூன்றையும் நாங்கள் பெற்றுக் கொண்டோம். அல்ஹம்துலில்லாஹ்!

ஆனால் இப்போது இந்த ஜமாத்தின் நிலைமை அந்தே பரிதாபம்!