"இன்னி மஅக யா மஸ்ரூர்" என்ற இல்ஹாம் பற்றிய விளக்கம்!

முதலில் இந்த வஹீயை பற்றி பார்ப்போம். இந்த வஹீ ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு 1907 ம் ஆண்டு இறங்கிய தொடர்ச்சியான வஹீயில் மூன்றாவதாக இறங்கிய அரபு மொழிலனான வஹீயாகும்.

இதன் பொருள்: ”மகிழ்ச்சிக்குரியவரே நான் உம்முடன் இருக்கிறேன்." என்று அல்லாஹ் சுபஹானஹுதாலா ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களைப் பார்த்து (இன்னிமாக்கா யா மஸ்ரூர்) கூறியிருக்கின்றான். [Badr, vol. 6, no. 35, August 29, 1907, p. 4 and al-Hakam, vol. 11, no. 31, August 31, 1907, p. 1]

இதே நாளில் அன்னாருக்கு இறக்கிய இறை வஹீயின் மற்றொன்றில் அல்லாஹ் அன்னாரை பார்த்து “இன்னிமாக்கா யா இப்ராஹிம்” என்றும் அழைத்துள்ளான். மேலும், இந்த வஹீ அன்னாருக்கு பல முறை இறங்கி உள்ளது. [Arabic] I am with you, O Ibrahim [al-Badr, vol. 7, no. 3, January 23, 1908, p. 4 and al-Hakam, vol. 12, no. 6, January 22, 1 1908, p. 10]

மேலும் அன்னாருக்கு இவ்வாறும் வஹீ இறங்கியுள்ளது; அதாவது,

“நான் உன்னை விரும்புகிறேன். நான் உம்முடன் இருப்பேன்.”
“I love you. I am with you”.
[Barahin-e-Ahmadiyyah, part 4, pp. 480–481 sub-footnote 3, Ruhani Khaza’in, vol. 1, pp. 571–572 sub-footnote 3]

ஆக இந்த அனைத்து வஹீகளும் அல்லாஹ் அன்னாரை பார்த்து கூறியதாகும். அல்ஹம்துலில்லாஹ்.. இப்போது நிஜாமிகள் இந்த வஹீயை ஐந்தாவது கலீஃபதுல் மஸீஹ் 'மிர்ஸா மஸ்ரூர் அஹ்மத் சாஹிப்' அவர்களுக்கான முன்னறிவிப்பு என்று கூறுகின்றனர். தவறில்லை. ஆனால், நிஜாமிகளின் எண்ண ஓட்டங்களும் கற்பனைகளும் சான்றாகாது. முதலில் அதற்குறிய விளக்கங்களை தனக்கான முன்னறிவிப்பு என்று யார் கூறவேண்டும்? என்பதே நமது கேள்வியாகும்?

ஒருவேளை மஸீஹ்(அலை) அவர்களுக்கு இறங்கிய அந்த வஹீ இன்னும் குறிப்பாக ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களை பார்த்து அல்லாஹ் கூறிய அந்த வஹீ என்னுடைய வருகையின் முன்னறிவிப்பு என்று அல்லாஹ் கூறினான் என்று மிர்ஸா மஸ்ரூர் சாஹிப் அவர்கள் கூறியுள்ளார்களா? அல்லது இந்த நிஜாமிகளின் சொந்த கூற்றா?

அல்லாஹ் திருகுர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்:

அந்த இரவை அது மூடிக் கொள்ளும் போது சான்றாகக் காட்டுகிறேன். அந்தப் பகலை அது ஒளி வீசும் போது சான்றாகக் காட்டுகிறேன். ஆணையும், பெண்ணையும் படைத்ததை சான்றாகக் காட்டுகிறேன். (திருக்குர்ஆன் 92: 2-4)

“Procreation of man depends upon the coming together of two individuals of opposite sexes. The characteristic quality of the one the (male) is to give and of the other (the female) is to receive. Like the physical world, there are in the spiritual world, males- God’s great prophets and Divine Reformers- who teach and guide, and there are also spiritual females- their followers- who receive and benefit by the Divine Teaching. The verse embodies a hint that by coming together of the perfect Teacher- the Holy Prophet- and the ideal pupils- his Companions- a new world is about to be born”. (HQ, 92: 2-4, pp. 2835)

முஜத்தித்மார்களும் நபிமார்களுமே வாதம் செய்யும் ஆன்மீக ஆண்கள் என்றும் மற்றவர்கள் அனைவரும் பெண்கள் என்று அழைக்கப்டுகின்றார்கள். ஏனென்றால் அவர்கள் அனைவருமே முஜதித்தமர்களுக்கும் நபிமார்களுக்கும் இறக்கும் வஹியை பெறக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று தெளிவாக விளங்குகின்றது. அதாவது, முஜத்தித்மார்களும், நபிமார்களுமே ஆன்மீக ஆண்கள் அதாவது வாதம் செய்யும் ஆன்மீக சந்ததி என்று தெளிவாக ஹசரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

எனவே கலிஃபதுல் மஸீஹ் அவர்கள் இது தனக்கான முன்னறிவிப்பு என்று வாதம் செய்யாத போது நிஜாமிகள் எவ்வாறு வாதம் செய்ய முடியும்? இதற்கு காரணம் "இறைவஹீயை பற்றியான அடிப்படை ஞானம் இல்லாததே ஆகும்."

இன்னும் சிலரோ கலீஃபதுல் மஸீஹ் அவர்களுக்கு இறை அறிவிப்பு கிடைக்கிறது ஆனால் அவர் வெளியே சொல்லமாட்டார் என்று கூறுகின்றனர். இத்தகைய கூற்றும் திருகுர்ஆனுக்கு மாற்றமான கருத்தாகும். சகோதரர்களே! இன்னும் கூறப்போனால் இது ஒரு பாவமாகும்.

அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:

அவன் வானவர்களை "வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறு எவனும் இல்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்" என எச்சரிப்பீராக என்ற வஹியுடன், அடியார்களுள் தான் விரும்பியோரிடம் தன் கட்டளை மூலம் இறக்குகிறான். (திருக்குர்ஆன் 16:3)

இந்த வசனத்திற்கு ஹசரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் விளக்கம் அளிக்கும்போது; "இங்கே الروح (அர் ரூஹ்-இறை வெளிப்ப்பா) ட்டினால் என்பதன் பொருள் இறைவனின் உயிர் வழங்கும் வார்த்தை என்பதாகும். இது ஒரு நபியின் செய்தியை அதன் உயிர் வழங்கும் குணங்களை குறிப்பதற்கும் கூட பயன்படுத்தப்படுகின்றது."

'மக்களை எச்சரிக்க' என்ற வார்த்தைகள் இங்கே சுட்டிக் காட்டுகின்ற ' இறை வெளிப்பாடு' என்பதன் பொருள் ஒரு இறைத் தூதருக்கு வழங்கப்படுகின்ற சிறப்பு வெளிப்பாடாகும். இறை வெளிப்பாடு பொதுவாக இரண்டு வகையானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்:

(1)பெறக்கூடிய நபரைப் பற்றிய அவருடைய சொந்த வெளிப்பாடு. பொதுவாக அதனை வெளியிடுவதற்கு எந்த 'சிறப்பு தடை'யும் இல்லை என்றாலும், அது அறிந்து கொள்ளப்பட்டு வெளியிட வேண்டிய தேவையில்லை.

(2)மனிதகுலத்திற்கான பரந்த (அளவிலான) இறை வெளிப்பாடு. பிந்தைய இந்த வகையிலான இறை வெளிப்பாட்டிற்க்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மேலும், அதனை (வலுக்கட்டாயமாக) அடக்குவது என்பது ஒரு உண்மையான பாவத்திற்கு சமமாகும்.

முதல் வகையான வஹீ பொதுவானதாகும் இதையே ஹஸ்ரத் மஸீஹ் அலை அவர்கள் கூறும்போது ஜிப்ராயீலிய ஒளியின் 46-ஆவது பகுதி முழு உலகிலும் பரவி இருக்கிறது. சொல்லப்போனால், வேசிகளின் குழுவைச் சேர்ந்த மிகவும் துர் நடத்தையுடைய- தன் இளமையை முழுவதும் தீய நடத்தையிலேய கழித்த ஒரு பெண், சில நேரத்தில் உண்மையான கனவைப் பார்த்து விடுகிறாள் என்பது அனுபவத்தில் அறிந்த உண்மை என்பது வரை நான் ஏற்றுக் கொள்கிறேன். இத்தகைய பெண் இரவில் குடித்து விட்டு அந்நிய ஆணுடன் படுக்கையில் கிடக்கும் போது கூட ஏதாவதொரு கனவைப் பார்க்கிறாள். அது உண்மையாகி நிறைவேறியும் விடுகின்றது என்பது இன்னும் ஆச்சரியமான விஷயமாகும். (குறிக்கோள் பற்றிய விளக்கம் பக்கம் 73)

ஆனால், இரண்டாவது வகை அறிவிக்கும்படியான வஹீயை மார்க்கத்தின் உயிர் ஆகும். இந்த அருள் இப்போது இஸ்லாத்தை தவிர வேறு எந்த மார்க்கத்திற்கும் கிட்டாது.

மேலும் அன்னார் (அலை) கூறுகிறார்கள்:-

இறைவனிடமிருந்து இல்ஹாமை (இறைவெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை உண்மையான மார்க்கமாகிய உம்மதே முஹம்மதிய்யாவில் நிலைத்து நிற்பவர்களுக்கு அவன் அளிக்கிறான். இறைவனின் சக்திக்கு மட்டும் உட்பட்ட, மறைவான செய்திகளை அவர்களுக்கு அறிவிக்கின்றான். எவர் உண்மையான உள்ளத்துடன் திருக்குர்ஆனை இறைவசனம் என உறுதி கொண்டு, உண்மையான பற்றுடன் அதிலுள்ள கட்டளைகளின்படி நடந்து, நபிகள் நாயகம் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களை இறைவனின் உண்மையான முழுமை பெற்ற நபி என்றும், எல்லா நபிமார்களையும் விட மிகச் சிறந்த நபி என்றும் காத்தமுன் நபிய்யீன் என்றும் உறுதி கொள்கின்றாரோ, அத்தகு நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே அந்தத் தூய்மையான இல்ஹாமைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை இறைவன் அளிக்கின்றான். யூதர்கள், கிறித்தவர்கள், ஆரியர்கள், பிராமணர்கள் ஆகியோருக்கு அந்த இல்ஹாம் ஒருபோதும் கிட்டாது. எனினும் திருக்குர்ஆனை முழுமையாகப் பின்பற்றுபவர்களுக்கு அது அப்போதும் கிடைத்தது; இப்போதும் கிடைக்கிறது; இனிமேலும் கிடைக்கும். புதியதொரு ரிஸாலத்தைக் கொண்டுள்ள வஹி அவசியமில்லாமையால் அது முடிவு பெற்று விட்டது. எனினும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் உண்மையான தொண்டர்களுக்கு அந்த இல்ஹாம் கிடைக்கிறது. அது ஒருபோதும் நிற்காது. நமக்குக் கிடைக்கும் இந்த இல்ஹாம் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் உண்மை நபி என்பதற்கு மிகப் பெரிய சான்றாகும். இந்த சான்றுக்கு முன்னால் இஸ்லாத்தை மறுப்பவர்களும், எதிர்ப்பவர்களும் இழிவும் அவமானமும் அடைகிறார்கள். (பராஹீனே அஹ்மதிய்யா தொகுதி 3 பக்கம் 216 அடிக்குறிப்பு 11)

ஆனால், இந்த அருள் இப்போது நிஜாமிகளிடம் கேள்விக்குறியாக்கிவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை. மேலும் அப்துல் கபார் ஜனாபா, மஸீஹ் (அலை) அவர்களுக்கு இறங்கிய வஹியை

இன்னீ மஅல் கஃப்பார்” -நான் கப்பார் உடன் இருக்கிறேன். (இதன் அர்த்தம் நான் கருணை உடையவர்களுடன் இருக்கிறேன் என்பதாகும்)

தனக்கானது என்று கூறி ஹஸ்ரத் மிர்சா பஷீரூத்தீன் மஹமூத் அஹ்மத்(ரலி) அவர்கள் ஒரு பொய்யர் (நஊதுபில்லாஹ்) என்று கூறுகிறார். இறை அறிவிப்பு இல்லாமல் இத்தகைய மனோ இச்சைகள் அருளுக்குரிய இந்த சமுதாயத்தை எங்கு அழைத்துச் செல்கின்றது என்று பாருங்கள். சகோதரர்களே!

ஆனால், இறைவன் அருளாக இந்த நூற்றாண்டில் தோன்றிய இறைத்தூதர் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் நமது எஜமானர் ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பையும் தனது முஜத்தித் வாதத்தையும் எவ்வாறு செய்கின்றார்கள் என்று சற்று சிந்தியுங்கள் சகோதரர்களே!

அன்னார் தனது வருகையை பற்றி கூறும்போது

…ஹிஜ்ரி 1400 லிருந்து 20 அல்லது 30 வருடங்களை கூட்டிக்கொள்ளுங்கள் அப்போது உங்களிடையே மஹதி தோற்றுவார். (ஆதாரம்:Qalda bin Zayd bin Baraka, Qalda bin Zayd bin Baraka, Asma Masalik Li Ayyam Al-Mahdi: Malik Li Kul Al-Dunya Bi Amr Allah El-Malik, p.216))

மேலும், இந்த ஹதீதின் அறிவிப்பாளர் அபூ ஹுரைரா (ரலி) ஆவார்கள். மேலும், இந்த நபிமொழி பற்றி கலீஃபத்துல்லாஹ் (அலை) அவர்கள் கூறும்போது:- நபி(ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பு எனது வருகையை உறுதி செய்கின்றது என்று வாதம் செய்து உள்ளார்கள். (https://sahih-al-islam.blogspot.com/2011/06/divine-manifestation-in-mauritius.html)

ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள், அன்னார் இந்த நூற்றாண்டின் இறைவஹீயின் மூலம் முஜத்தித் வாதத்தை இவ்வாறு செய்கின்றார்கள். அன்னாருக்கு இறங்கிய அறிவிக்கும்படியான இறைவஹீ (10.09.2010)

Bismillah hir rahman nir raheem

Ya Khalifathullah! Qul: “Annal Mujaddido” (O Khalifathullah! Tell them: ‘I am the Mujaddid’)

கலீபத்துல்லாஹ்வே! அவர்களுக்கு “நான் தான் முஜத்தித் என்று” கூறுவீராக!

எனவே! இந்த இரண்டு நிலையை பற்றி திருக்குர்ஆன் தெளிவாக நமக்கு எச்சரிக்கின்றது.

எனவே, எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளதோ, இன்னும் எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஓப்பாவாரா? (அல்குர்ஆன் : 47:14)

இந்த காலத்தின் இமாம் ஹஸ்ரத் முனீர் அஹமத்(அலை) அவர்கள் மேலும் கூறுகின்றார்கள்:-

மனிதன் மீதான இறை வெளிப்பாடுகளின் இறங்குதல்:

இந்த வனங்கள் மட்டுமல்லாது திருகுர்ஆனின் சூரா அந் நஜ்ம் 53 ஆம் அத்தியாயத்தில் "ரூஹுல் குத்தூஸ்" மிக அழகான மற்றும் மனம் கவர்கிற முறையில் இறங்குவதைக் குறித்து, அசாதாரணமான வழியில் அல்லாஹ் தனது சொந்த சாரத்தை(உள்ளியல்பை) வெளிப்பாடுகளின் வடிவில், தான் தேர்ந்தெடுத்த தூதரின் மீது இறக்குகின்றான் என்பதை விளக்குகின்றான். (அதனால்தான் நாம் அதனை இறை வெளிப்பாடு என்று கூறுகின்றோம்). ஹதீ ஸ்களிலிருந்தும் நாம் அறிவது போல நபி(ஸல்) அவர்களின் மிகப்பெரிய ஆன்மீக தரிசனமாகிய அதாவது இஸ்ரா மற்றும் மிஹ்ராஜ் நிகழ்வின்போது நபி(ஸல்) அவர்களுடன் தூய வெளிப்பாட்டின் உயர் வானவராகிய(மலக்கு) ஹஸ்ரத் ஜிப்ரீல்(அலை) அவர்கள் கீழ் வானத்திலிருந்து “சித்ரதுல் முன்தஹா” வரை சென்றார்கள். சூரத்துல் அந்நஜ்ம் லிருந்து ஹஸ்ரத் ஜிப்ரீல்(அலை) அவர்கள், ரூஹூல் குத்தூஸின் ஒரு பகுதி(சாராம்சம்) மட்டும்தான் என்றும் அதனுடைய முழுமையான சாராம்சம் அல்ல என்பதையும் நாம் அறிந்து கொள்கிறோம். ரூஹுல் குத்தூஸின் பல வெளிப்பாடுகளில் அவரும் ஒன்றாவார். அல்லாஹ் இதனை தெளிவான வார்த்தைகளில் குறிப்பிடுகிறான்:-

"நிச்சயமாக அவர்(அதாவது ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) மற்றொரு முறையும் அவரைக் கண்டார். மிகத் தொலைவிலுள்ள இலந்தை மரத்திற்கு(சித்ரதுல் முந்தஹா)ப் பக்கத்தில்..... மூடக்கூடிய ஒன்று இலந்தை மரத்தை மூடிய போது (அது நிகழ்ந்தது)" (அந் நஜ்ம் 53:14-17)

அல்லாஹ் திருக்குர்ஆனில் மனித இனத்தை (பஷர்) படைப்பது தொடர்பாக இன்னும் மிகக் குறிப்பாக அவனது பிரதிநிதியை(ஒரு கலீபத்துல்லாஹ்வை) அனுப்பி வைப்பதன் மூலம் மனித குலத்திற்க்கு அல்லாஹ் அவனது சிறப்புமிக்க நற்செய்தியினை (பஷர்) வழங்குவதாகக் கூறுகின்றான்:

"நான் அவனை முழுமையாக்கி என் ஆவியை(ரூஹ்) அவனுள் ஊதிய போது நீங்கள்எல்லாரும் அவனுடன் சிரம் பணிந்து விடுங்கள். "(அல் ஹிஜ்ர் 15:30; ஸஅத் 38:73)

இந்த விஷயத்தில் மனிதனுக்கு மிகக் குறைந்த அறிவே வழங்கப்பட்டிருக்கின்றது. அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

"அவர்கள் உம்மிடம் ரூஹ் (ஆன்மாவை)ப் பற்றி வினவுகின்றனர். நீர் அவர்களிடம் ரூஹ் (ஆன்மா) என் இறைவனின் கட்டளையினால் படைக்கப்பட்டுள்ளது, உங்களுக்கு அதுபற்றி மிகக் குறைந்த அறிவே கொடுக்கப்பட்டுள்ளது." எனக் கூறுவீராக. (அல் இஸ்ரா 17:86)

அல்லாஹ் திருக்குர்ஆனில் ரூஹைப் பற்றி குறிப்பிடும் போதெல்லாம், நம் கவனத்தை தெய்வீக வெளிப்பாட்டின் சாராம்சத்தின் பக்கம் அவனுக்ருகில் நம்மை அழைக்கின்றான். மனிதனுக்கு ஒரு ஆன்மா (நஃப்ஸ்) மட்டுமல்ல ஒரு ரூஹும் உள்ளது.. இந்த இரண்டு சொற்களில் உள்ள வித்தியாசத்தை உங்களுக்கு புரிய வைப்பதற்காக வேறு வகையில் இதுபற்றி கூறுவதானால், நஃப்ஸினை சீர்திருத்தவும், சீர்குலைக்கவும் முடியும். ஆனால், ரூஹினை சீர்குலைத்து விட முடியாது. மனிதன் அல்லாஹ்வுடன் இணைந்திருக்கும்போது, தொழுகைகள் (ஸலாத்), பிரார்த்தனைகள் (துஆக்கள்) மற்றும் திக்ருல்லாக்கள் (அல்லாஹ்வின் நினைவு / தியானம்) மூலம் அவனுடன் ஒரு நீடித்த உறவை தேடுகின்றான். ஆதலால் அவன்(அல்லாஹ்), அவனது (மனிதனின்) நஃப்ஸை ரூஹின் சாரத்துடன் ஒன்றிணைக்கும் வழியினை திறக்கின்றான். அதாவது, இறை வெளிப்பாடுகளை இறக்குவதன் மூலம் அல்லது உண்மையான கனவுகள் மற்றும் ஆன்மீக தரிசனங்களின் வாயிலாக , அல்லாஹ் அவனுடன் ஓர் அருளுக்குரிய தொடர்பைப் பெற்றுக்கொள்வதற்கான வழியைத் திறக்கின்றான்.

நஃப்ஸினைப் பொறுத்தவரையில், அதாவது ஆன்மா அல்லது உள்ளுணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக சுத்தீகரிக்கப்படும் போது, நஃப்ஸே அம்மாரா (தீமையை தூண்டும் ஆன்மா) மெதுவாக நஃப்ஸே லவ்வாமாவை (குற்றம்சாட்டும் ஆன்மாவை) அடைகிறது. இறுதியாக அவர் அல்லாஹ்வுடனான முழுமையான ஒரு உறவினை அடையும்வரை அவனது பரிசுத்த ஆவியினால் ஈர்க்கப்படுவார். அந்த நிலையினை அடைந்த நபரை, அல்லது அந்த நிலையினை அடைந்த ஆன்மாவை, நஃப்ஸே முத்மயினா (சாந்தியடைந்த ஆன்மா) என அழைக்கப்படுகிறது.

15 ஆகஸ்ட் 2011ல் அல்லாஹ் வெளிப்படுத்திய இறை வெளிப்பாட்டின் செய்தி:

அல்லாஹ்வின் தூதரின் ஆன்மா சாந்தி அடைந்த நிலையிலுள்ளது. பிற மக்களின் இதயங்களில் சாந்தியிணை நுழைய வைப்பதற்கான வழிமுறைகளை அவர் கற்பிக்கின்றார். நிச்சயமாக மனிதன், ஒருவருக்கொருவர் மற்றும் தனிப்பட்ட (ரீதியிலும்) நான் என்னும் அகந்தையில் இருந்து (விடுபட்டு) பல நிலைகளை கடந்து செல்ல வேண்டும்.

அப்போது (மட்டும்தான்) மனம் மற்றும் ஆன்மாவின் மிக அழகிய உயர் நிலையை அவரால் அடைய முடியும். மனது பெளதீகமாக உடலை வழி நடத்துகின்ற அதே வேளையில், ஆன்மா உடலை ஆன்மீக ரீதியில் வழிநடத்துகிறது.

திருமறையில் அல்லாஹ் கூறுகின்றான்:

நிம்மதி அடைந்த ஆன்மாவே! நீ உன் இறைவனிடம் திருப்தியடைந்தவாறும், அவன் உன்னிடம் திருப்தியடைந்தவாறும் அவனிடம் திரும்பி வருக! தேர்ந்தெடுக்கப்பட்ட என் அடியார்களுக்கு இடையே நுழைந்து விடுக! (என உன் இறைவன் உன்னிடம் கூறுகின்றான்.) (89:28-31)

மனித மனத்தால் புரிந்து கொள்ள முடியாத, அல்லாஹ்வுடனான ஓர் (மிக நெருங்கிய) உறவின் மூலம் ஆன்மா உயர் நிலையை அடைகிறது. உண்மையில் அது (தன்னை) அறியாமலேயே ஒரு குறிப்பிட்ட நிலையை பற்றி பிடிக்கின்றது. ஆன்மா அல்லாஹ்வுடனான அத்தகையதொரு உறவை அனுபவிக்கிறது; அது அல்லாஹ்விடமிருந்துள்ள இறை அருள் நிறைந்த செய்திகளையோ அல்லது இறை தண்டனை நிறைந்த செய்திகளையோப் பெறுகிறது. ஆன்மாவின் சுத்திகரிப்பானது, ஓர் கட்டம் வரும்போது மனதையும் சுத்தப்படுத்த (அது) உதவுகின்றது. தக்வா (பயபக்தி), இதயத்தின் ஆதிக்கத்திற்குள் நுழைந்து, இறை விருப்பத்திற்கு நறுமணத்துடன் கூடிய அடிபணிதலுடன் மனதை அடைந்து விடும்போது அதுவே மனத்தூய்மை' என்று அழைக்கப்படுகிறது.

அந்த ஆன்மாவே இறை வெளிப்பட்டினைப் பெறுகின்றது. அதனால் தான் ஆன்மா மட்டுமே இறை வெளிப்பாட்டின் நிலையில் அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்கின்றது. ஹஜ்ரத் நபி கரீம்(ஸல்) அவர்களுக்கு ஆன்மீக தரிசனத்தின் கதவு திறக்கப்பட்டபோதும் அதுவே நடந்தது. இதன் மூலம் அவர்களது ஆன்மா இறை வெளிப்பாடுகளின் ஒளியின் அமைதியைக் கண்டறிந்து, அவர்களை தனது இறைவனை நோக்கி வானவ தூதர் ஜிப்ரயில்(அலை) அவர்களின் துணையுடன் படிப்படியாக வழிநடத்திச் சென்றது. அவர்கள் அடைந்த அந்த ஒரு (உயர்) நிலையை இறைவனின் படைப்புகளில் வேறு எவராலும் அடையமுடியவில்லை., வானவர்களும் கூட (அடையவில்லை). ஆகையால், வானவர்கள் கூட தங்கள் ஒளியின் உடலால் இறைவனை அணுக முடியாத போது, பரிபூரணமற்ற பண்புகளைக் கொண்ட மனித மனமானது, ஹஜ்ரத் நபி (ஸல்) அவர்கள் பௌதீக உடலுடன் வானத்திற்கு அல்லாஹ்விடம் சென்றார்கள் என்றும், அவர்கள் கண்ட எல்லாவற்றையும் தனது தற்காலிக பௌதீகக் கண்களால் கண்டார்கள் என்ற கருத்தையும் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?

வானவர்கள் ஆன்மாவைப் பெற்றவர்களாக இல்லை; ஆனால் அவர்களின் அடிப்படை சாராம்சம் இறை ஒளியைக் கொண்டுள்ளது ஏனென்றால், அவர்களுக்கு ஒரே ஒரு அடையாளம் மட்டுமே உள்ளது. அதே சமயம் மனிதனுக்கு இரண்டு அடையாளங்கள் உள்ளன, அவை இரண்டு வெவ்வேறு (உலகங்களான) தற்காலிக மற்றும் ஆன்மீக உலகங்களில் இருக்க அனுமதிக்கின்றன. நாம் பூமியிலும் அதே நேரத்தில் (அதற்கு) இணையான, ஆன்மீக உலகிலுமாக இரு விதமான வாழ்க்கை வாழ்கிறோம். மனிதன் பூமியில் நடந்து கொண்டு வேலை செய்யும் போதும், கைகளைக் கொண்டு உழைக்கும்போதும், அவன் தற்காலிகமான (இவ்வுலகில்) வாழ்கிறான், அதேசமயம் அவனது தியானம், பிரார்த்தனை மற்றும் தூக்கம் ஆகியவற்றில் இறைவனை நினைவு கூர்தளின் பிரகாசத்தை கொண்டு நிரப்பும்போது, அவன் ஆன்மீக (உலகில்) வாழ்கிறான்.

ஆன்மீகத்தை உடல் மற்றும் ஆன்மா இரண்டினாலும் உணர்ந்து கொள்ள முடியும். ஆன்மீகம் என்பது நமது உண்மையான உணர்வு நிலையுடனான தொடர்பைக் குறிக்கிறது. அது நமது முழு கவனத்தையும் நம்முடைய படைப் பாளனான அல்லாஹ்விடம் வழிநடத்திச் செல்கிறது. பல்வேறு மதங்களும் ஆன்மீகத்தின் கருத்தை தங்களது சொந்த வழியில் வரையறுக்கின்றன. ஆனால் உண்மை என்னவென்றால், அவர்கள் தியானத்தில் ஈடுபடும்போது அல்லாஹ்வையே அவர்கள் கண்டு கொள்கின்றனர், அதுவே அவர்களின் வாழ்க்கையை தெய்வீக ஒளியால் நிரப்புகிறதே யன்றி, அவுலியாக்கள், தூதர்கள் மற்றும் பீர்மார்களின் (உதவியைக்) கொண்டு அல்ல. ஏக இறைவனிடமிருந்து அவர்கள் ஒளியை பெற்றிருந்தும் துரதிஷ்டவசமாக அவ்வொளி அவர்களின் பலதரப்பட்ட தெய்வங்கள் தங்களுக்கு வழங்கியது என எண்ணுகின்றனர். அதனால் அவர்கள் குழப்பம் என்ற ஒரு படு குழியில் வீழ்ந்து விடுகின்றனர். இதனால் அவர்கள் அவநம்பிக்கையில் தடுமாறி, இன்னும் அதிக அவநம்பிக்கையில் வீழ்ந்து விடுகின்றனர். ஆனால் அவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் பெறுகின்ற இந்த இறை ஒளியானது சர்வ வல்லமையுள்ள (ஏக) இறைவனிடமிருந்து கிடைத்ததல்ல என்றும் அது அவர்கள் சுயமாக எண்ணிக்கொண்ட அல்லது அவர்களின் கற்பனையில் வாழும் தெய்வத்திடமிருந்து கிடைத்தது என்று நம்புகின்றனர்.

இறை வெளிப்பாடு என்பது சிதைக்க முடியாத ஒன்று.. அதேசமயம் ஷைத்தானிய வெளிப்பாடுகளை எளிதில் சிதைக்க முடியும். மேலும், அதன் நிலை நிற்பு குறைவானதும், குறுகிய காலத்தை மட்டுமே.!(கொண்டுள்ளதுமாகும்). இறை வெளிப்பாடுகள் எத்தகையதொரு ஒளியைக் கொண்டுள்ள தென்றால், அது ஆன்மாவை அல்லாஹ்வின் மீது உறுதியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றது. (அதன் மூலமாக) அவன் தனது நேர்மையான அடியானுக்கே உரித்தான அமைதியினை வழங்குகின்றான். ஏனென்றால், அவர் வானம் மற்றும் பூமியின் இறைவனுடன் (ஆழமானதொரு உறவின் மூலம்) இணைந்திருப்பதால் ஆகும். (அதனால்) ஆன்மா அறியாமலேயே (தன்னுணர்வற்ற நிலையிலும்) சாந்தியடைவது மட்டுமல்லாமல் அந்த சாந்தியானது (அவரை மேலும் முன்னேற்றமடைய செய்யும்) உந்துதல் கருவியாகவும் மாறிவிடுகிறது. அது அவர்களின் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எதைச் செய்தாலும் அல்லது (எதனை)க்கடந்து சென்றாலும் அதனை முழுமையாக உணர வைக்கிறது. எனவே ஆன்மாவை ஏமாற்றி விட முடியாது. வேண்டுமானால், ஒரு நபர் மீது எப்போதெல்லாம் ஷைத்தானிய வெளிப்பாடுகள் இறங்குமோ (அப்போது) மனதை ஏமாற்றி விடுவதாக இருக்கலாம். மனம், அதன் சரியான நிலைப்பாட்டில் இல்லாமல், ஒரு ஷைத்தானிய வெளிப்பாட்டை பெறும்போது மனம் ஆன்மாவை முழுமையாக ஆக்கிரமிக்கும் போது, ஆன்மாவும் அதன் மீது நிலை பெற்று(கீழ்படிந்து) விடுகின்றது. அதுவே தீய மக்களை உருவாக்குகிறது. அதாவது அவர்களின் ஆன்மாக்களின் நிலையை மனது அத்தகைய அளவிற்கு கடந்து செல்லும் போது, அவர்கள் எளிதில் ஷைத்தானிய தாக்குதல்களுக்கு உள்ளாகி, தாய்மார்களின் கருவறைகளில் அவர்கள் இருந்ததிலிருந்து இயல்பாகவே அவர்களிடமிருந்துள்ள அந்த இறைப் பண்புகள் விலகி செல்கிறது. அதனால்தான் நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டுமே ஒரு மனிதனிடத்தில் இணைந்திருக்கின்றன. அந்த இரண்டு அம்சங்களும் அவருடையதாகும். ஆனால் அவருடைய சொந்தத் தூண்டுதல்களின் போது நல்ல வழிகளின் பக்கம் அல்லது அழிவின் பக்கம் ஆகிய எந்த திசையில் திருப்பி விட வேண்டும் என்பதைப்பற்றிய முடிவு எடுக்க வேண்டியது அவர்தான். அதனை தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கு உள்ளது. அது குறித்து அவர் செய்யவேண்டியதெல்லாம் அவர்( சுயமே) பகுப்பாய்வு செய்து, (அதைப்) புரிந்து கொண்டு அதனடிப்படையில் செயல்படுவது மட்டுமே. அது ஒரு தீமையான காரியம் என்றால், அது அவரிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு, அவரை வழி தவற செய்வதற்கு முன்பு அதிலிருந்து அவர் விலகி செல்ல வேண்டும். அதாவது அந்த எண்ணத்திற்கு முடிவு கட்ட வேண்டும். மிக நல்ல மனிதர்களின் சீரழிவை கூட நாம் அடிக்கடி பார்க்கிறோம். அது ஒரு நபியின் சீடருக்கோ அல்லது ஒரு இறை அடியாருக்கோ கூட அவ்வாறு நடை பெற்று விடலாம். அவர் பெற்று வரும் இறை ஒளியை தனக்கு மட்டுமே கிடைப்பதாக அந்த சீடர் நினைக்கின்றார். அது அவர் அவரது நபியை விட அல்லாஹ் (தன்னை)அதிகமாக நேசிப்பதாகவும்,(அதுவே) அத்தகைய வெளிப்பாட்டின் ஒளிகளை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும் என்று எண்ணி விடுகின்றார். ஆனால், இது ஒரு தவறான எண்ணமாகும். அதுவே அவரது நிரந்தர அழிவிற்க்கு காரணமாகி விடுகின்றது.

ஓர் அல்லாஹ்வின் தூதரின் காலகட்டங்களில் அவருக்கு விருப்பமானது அல்லாஹ் (அந்த) ஒளியினை மக்கள் மீது பரப்ப வேண்டும் என்பதாகும். அது உண்மையை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே. அந்த ஒளியை அதாவது இறை வெளிப்பாட்டினை மக்கள் பெறுவதன் மூலம் இறைத்தூதருக்கு கிடைக்கும் வெளிப்பாடுகள் உண்மையானது என அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். மேலும், அதனால் அம்மக்கள் (நெருக்கமாக) வநது, அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு அவர்களின் காலகட்டத்தில் தோன்றிய இறை தூதரின் கைகளில் (பை அத்தும்) செய்துவிடலாம்.

ஓர் அல்லாஹ்வின் தூதரின் முன்னிலையில், பரிசுத்த ஆன்மாவினால் மக்கள் ஞானம் பெறத் தொடங்கும் போது, அது இந்த தூதருக்கு ஆதரவாக விளங்கும் மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்றாகும். சாதாரண மக்கள் கூட தீர்க்கதரிசனம் செய்யும் ஒரு காலம் வரும் என்று இஞ்சீலில் (இயேசுவின் போதனை) எழுதப்பட்டிருக்கிறது. பிந்தைய(இறுதி) நாட்கள் இதோ உங்களிடத்தில் வந்தடைந்திருக்கிறது. உங்கள் மத்தியில் ஒரு இறைத்தூதர் தோன்றியுள்ளார். அவர் உலகளாவிய அல்லாஹ்வின் அதே தூதர் ஆவார். நான் பிரச்சாரத்திற்காகவோ அல்லது விளம்பரம் செய்யவோ வரவில்லை. மாறாக, நான் மக்களை அல்லாஹ்வை நோக்கி வழிநடத்த வந்திருக்கிறேன். அதாவது அவர்கள் தங்களைப் படைத்த இறைவனை புரிந்து கொண்டு அவனை பிரத்தியேகமாக நேசிக்கவும், அவனே வழிபடுவதில் எந்த ஒரு இணையையும் (அவனுக்கு)இணைவைக்காமல் இருப்பதையும் (போதிப்பதற்காகவே வந்துள்ளேன்).

திருக்குர்ஆன் வரையறுத்துள்ள அல்லாஹ் வழங்கியுள்ள எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படி வதன் மூலமும், அண்ணல் நபி(ஸல்) அவர்களின் நடைமுறையினை முழுமையாக பின்பற்றுவதனாலும், மேலும், அவருடைய(தமது) காலகட்டத்தில் தோன்றுகின்ற அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து (அவருக்குக்) கீழ்படிவதனாலும் மட்டுமே ஒருவர் அல்லாஹ்வை அறிந்து கொள்ள முடியும். உண்மையாகவே, இந்நூற்றாண்டில் வாழும் மக்களுக்கு ஒரு சாட்சியாகவே நான் தோன்றியுள்ளேன். நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே கணக்கு கொடுக்க வேண்டுமெயன்றி என்னிடம் அல்ல! உங்களுடைய இதயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த என்னால் இயலாது! என்னால் செய்ய முடிந்ததெல்லாம் அல்லாஹ்வின் செய்தியை உங்களிடம் எடுத்து வைப்பது மட்டுமே. எவருடைய இதயத்திற்கு அவன் ஒளியை வழங்குவான் என்பதை மிக நன்கு அறிந்தவன் அல்லாஹ் மட்டுமேயாவான். ஆன்மாவானது இறை தொடர்பின்(மீது கொண்ட) தாகத்தினால் (தானாக)முன் வந்து, அதன் உண்மையான இருப்பு மற்றும் அதன் அடிப்படை சாராம்சம் என்ற குளத்திற்குள் மூழ்கிவிட விரும்பும்போது, பிறகு அந்த ஆன்மா ஒரு குறிப்பிட்ட அளவிற்கு (ஞான ஒளியால்) பிரகாசத்தை பெறும்போது , அல்லாஹ்வின் வழியில் (உதவி) பணி செய்வதற்காக, அல்லாஹ்வின் தூதருக்காக அவனை(அல்லது அவளை) அல்லாஹ் பயன்படுத்துவான். மனம் ஏதோ சிலவற்றை விரும்பலாம்; ஆனால் உடல் பலவீனமாக இருக்கிறது. சிலவேளைகளில் உள்ளம்(மனம்) பலவீனமாக இருக்கும். ஆனால் ஆன்மா வலுவாக இருக்கிறது. (எந்த அளவிற்கென்றால்) மனதின் பலஹீனமான நிலையைத் தோற்கடிக்க போதுமான (அளவிற்கு) வலிமையானது.(அந்ந நேரத்தில் அது)ஒரு வேகமான தானியங்கி வாகனம் (ஆட்டோமொபைல்) போல எப்பொழுதும், அல்லாஹ்வினுடைய மற்றும் அல்லாஹ்வின் தூதருடையக் கட்டளைகளை நிறைவேற்றிட ஆயத்தமாகி செயல்பட ஆரம்பித்து விடுகின்றது

ஆன்மா (ரூஹ்) வானது அதன் முழுமை பெற்ற நிலையில் (எவ்வாறு) இருக்க வேண்டுமோ (அந்த பிரதிபலிப்பின்) உருவமைப்பாக சாந்தியில் இருக்கின்ற 'நஃப்ஸ்' விளங்குகிறது. சாந்தி அடைந்த ஆன்மா, மனித நிலையை மேம்படுத்துவதற்கு தூண்டுகிறது. அந்நிலையில் மனிதன் அல்லாஹ்வின் ஓர் முழுமையான ஊழியனாகி, உண்மையிலேயே அல்லாஹ்வுக்காக சிறந்த வழிகளில் சேவை செய்யக் கூடியவனாகி விடுகின்றான்.

'முத்மயினா' (சாந்தி அடையும் ஆன்மா)வின் காலகட்டத்தில் அதை பூர்த்தி செய்வதற்கு முன்பு, நான் என்னும் ஆணவம் (ஈகோ) வெவ்வேறு சோதனைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. உண்மையில் ஆன்மா என்பது, ஒருவர் இறை ஒளியை (மற்றும்) இறை வெளிப்பாடுகளைப் பெறுவதற்கான வழிமுறையாகும்.

மலக்குகள் மனிதர்களைப் போல இருந்திருந்தால், இறை வெளிப்பாடுகளை கொண்டு வரும் வானவரையும் அல்லாஹ், மனிதன் அடிப்படை இயல்பில் கொண்டுள்ள நஃப்ஸின் (பெயரிலேயே) அழைத்திருப்பான். ஆனால் எஞ்சியுள்ள உண்மை என்னவென்றால், இறை வெளிப்பாட்டின் வானவர் இறங்குவதை அல்லாஹ் தெளிவாக “ரூஹ்” (சூரா அல்-கத்ரில்) என்ற வார்த்தையால் அழைக்கிறான். இதன் மூலம் மனிதனுக்கு தெளிவாக சுட்டிக்காட்டுவது, அவர்கள் பெற்றிருக்கின்ற ' ரூஹ் ' எத்தகையதென்றால் அவர்கள் இறைவனின் எல்லாக் கட்டளைகளுக்கு இணங்கியும், அத்தகைய வரத்தைப் பெறுவதற்கு அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டும் இருந்தால்,அவர்கள் எந்த நேரத்திலும் இறை வெளிப்பாடுகளைப் பெறக் கூடியவர்களாகிவிட முடியும் என்பதுமாகும்.

ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களது விஷயத்தைப் பொறுத்தவரை,' மிஃராஜ் ' மற்றும் இறை வெளிப்படுகளைக் கொண்டு வரும் வானவரைக் காட்டிலும் அவர்களது மேன்மைக்குமான மற்றொரு விளக்கம் தெளிவாக்குகின்றது. அதில், ஏன் அவர்கள் இறைவெளிப்பாடுகளைப் பெறக் கூடியவராக ஆக்குகின்ற' ரூஹை 'மட்டும் கொண்டிருக்காமல் (அத்துடன்) நஃப்ஸ்-ஏ-முத்மயின்னா" இன் (அடிப்படை)சாரத்தையும் கூட முழுமையாக நிறைவு செய்திருந்தார்கள்? (நபி(ஸல்))அவர்கள் பெற்றிருந்த ரூஹ் மற்றும் அவர்கள் வெளிப்படுத்திய நஃப்ஸ் ஆகியவை ஒன்றிணைந்து ஒரே எண்ணங்களின் வரிசையில் இருந்தன. நான் அதை அப்படியே கூறுவதாக இருந்தால், ஆன்மா மற்றும் மனதின் அவ்வாறான மிகச்சரியான ஒத்திசைவை(ஒன்றிணைதலை) வேறு எந்த மனிதரும் அடைந்து வெற்றி பெறவில்லை என்றும் கூறலாம். (நான் என்னும் எண்ணத்தை கட்டுப்படுத்துவதில்). அல்லாஹ்வின் மற்றத் தூதர்களாலும் அதைப் பெற முடியும். ஆனாலும், புனித நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அடைந்ததைப் போன்ற(ஆன்மா மற்றும் மனதின்) சரியான பொருத்தத்தை அவர்களால் அடைய முடியாது. அவர்களுடைய மேன்மையின் அளவு ஒவ்வொரு விஷயத்திலும் எல்லையற்றது. எந்த அளவிற்கென்றால், அல்லாஹ் அவர்களிடம் “நீர் உண்மையிலேயே உயரியப் பண்புகளைக் கொண்டவராக இருக்கின்றீர்.” என்று கூறியிருக்கின்றான். இப்படிப்பட்ட குணங்கள் அவரது மனத்தின் விழிப்புணர்வு நிலை பூமியில் தனது சொந்த இருப்பை மேம்படுத்த இறை விருப்பத்துடன் கைகோர்த்து செயல்படுவதன் மூலம் அவருடைய நான் என்னும் எண்ணத்தை சுத்திகரிப்பதிலிருந்து வருகின்றன. (அந்த நற் பண்புகளை அடைய முடியும்).வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், இறை விருப்பத்திற்கு அடிபணிதல், இறை கட்டளைகளுக்கு அடிபணிதல் என்பதாகும்.

வானவர்கள் ஒரு நஃப்ஸையோ அல்லது ஒரு ரூஹையோ கொண்டிருக்கவில்லை. ஆனால், அவர்கள் சிறப்பாக உருவாக்கப்பட்ட ஒரு ரூஹ் ஆவார்கள். மனிதர்கள் தன்வசம் உள்ள நஃப்ஸால் மகிழ்ச்சியடைகிறார்கள், ஆனால் அந்த நஃப்ஸ் தோண்டி எடுக்கப்பட்ட மூல வைரங்களைப் போன்றது. அவை ஆயத்தம் செய்யப்பட்டு மெருகூட்டப்பட வேண்டும். இதனால் அது அதன் அனைத்து ஒளியுடனும் பிரகாசிக்கவும், அல்லாஹ்வின் பார்வையில் விலைமதிப்பற்றதாகவும் இருக்கும்! ஷெய்த்தான் மனிதனின் கடுமையான எதிரியாவான். அவனுடைய படை நமக்குள் இயல்பாகவே இருக்கிறது. நம் இரத்தத்தோடு கலந்து நாம் வந்த ஆன்மீக ஊற்றிலிருந்து நம்மை விலகிச் செல்ல வைக்கின்றான். தங்களது நஃப்ஸையும் ரூஹையும் சுத்தீகரிக்காமலும், ஆன்மீகத்தின் சாந்தியை பெறுவதற்கு அவற்றை(நஃப்ஸையும் ரூஹையும்) ஒன்றிணைத்து செயல்படாதவர் மீதும் மட்டுமே ஷெய்த்தானின் படை வெற்றிபெறும். சமாதானம் (சாந்தி) தான் மனிதனை இறைவனிடம் அழைத்துச் செல்கிறது. சாந்தி இல்லாமல் அவர் தனது ஈமானை மேம்படுத்தவோ, அல்லாஹ்வின் திருமறையின் ஞானங்களை பெற்று தனது இலக்காகிய அல்லாஹ்வை அடையவோ முடியாது. அதனால்தான் சூரா அல்-கத்ரில் அல்லாஹ் விடியற்காலை வரை அமைதி இருக்கும் என கூறுகிறான்.

ஒருவர் இந்த பௌதீக உலகிற்கு என்ன நடக்கிறது என்பதையும் அவரின் அன்றாட பிரச்சினைகளையும் உண்மையில் அறியாமலேயே. பொதுவாக(அவர்) இரவில் உறங்கும் போது அமைதி அல்லது சாந்தி ஏற்படும். ஆனால், இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமைதி (அல்லது சாந்தி) என்னவென்றால், அல்லாஹ்வின் அடியான் தான் எந்நிலையில் இருந்தாலும், அல்லாஹ்விடமிருந்து வரும் இந்த அமைதியை அவர் நிச்சயமாகக் கொண்டிருக்கிறார் என்பதாகும். இந்த அமைதியுடன் அல்லாஹ் அவரை பலப்படுத்திய பிறகு, அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் அவர் இவ்வுலகில் தனது கடமைகளை நிறைவேற்ற முடிகின்றது. அவரது ரூஹிலிருந்து வருகின்ற அவர் உணரும் அமைதி அவர் மீதான ரூஹுல்-குத்தூஸின் தொடர்பின் காரணத்தால் ஆகும். இந்த விளக்கம் இறைத் தூதரின் காலகட்டத்தில் நிச்சயமாக உண்மையாகின்றது. அதன்படி அவருடைய பரிசுத்த ஆவியின் தொடர்பு ஒரு முறை நிகழ்வாக அல்லாமல், பூமியில் அவரது முழு வாழ்க்கையுமே பரிசுத்த ஆவியின் தொடர்பில் பங்கெடுத்து இறை சக்தியின் ஆதாரமான அல்லாஹ் (swt)வுடன் அவரை இணைக்கிறது.

தெய்வீக ஊற்றிலிருந்து இறை மனிதர் வரும்போது, அவர் ஷெய்த்தானால் சோதிக்கப்படுகிறார், ஏனென்றால் அவருக்குள் உள்ளார்ந்த ஷெய்த்தான், அவரது தூதுத்துவப் பணியிலிருந்து அவரை வழி தவற செய்ய முயற்சிக்கிறான். அல்லாஹ்வின் ஒரு தூதர் ஷைத்தானின் இனிமையான பேச்சுகளை இறைவனின் பேச்சு என்று நினைத்து தடுமாறலாம். ஆனால்(அவ்வாறு) நீண்ட காலத்திற்கல்ல. ஏனென்றால், அல்லாஹ்வின் உண்மையான தூதர் அவரை அனுப்பியவனுடன் விரைவாக ஒன்றிணை க்கப்படுகிறார். எனவே, அவர் தனது பணியை அமைதி, நம்பிக்கை, பொறுப்பு மற்றும் அல்லாஹ்வின் அன்புடன் தொடர முடிகின்றது.

நிச்சயமாக, அல்லாஹ்வின் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களை ஷெய்த்தானால் ஒருபோதும் வழி தவற செய்ய முடியாது. ஷெய்த்தான் ஒருவரைத் திசை திருப்பி, அவர் ஷெய்த்தானிய நிலையில் இறந்துவிட்டால், ஆட்சேபனைக்குரிய அந்நபர் உண்மையில் அல்லாஹ்வின் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியாரின் அடிப்படை சாராம்சத்தில் இருந்ததில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் தனது மிகக் கடுமையான எதிரிகளை அவர்களின் சுவடே இல்லாமல் அழித்து விடுகின்றான் என்பதை நிரூபிப்பதற்குரிய கடந்த கால எடுத்துக்காட்டுகள் நம்மிடம் உள்ளன. அவர்கள் மனந்திரும்பினால், இந்த விவகாரம் அல்லாஹ்விடம் உள்ளது. ஆனால் அவர்கள் அல்லாஹ்வின் சாபத்தின் நிலையில் இறந்தால், அல்லாஹ் அவ்வாறு தீர்மானித்து விட்டால், அந்த இடத்திலேயே அல்லாஹ்வால் பிடிக்கப்படுவதிலிருந்து அவரை எதனாலும் தடுத்து விட முடியாது.

அல்லாஹ் நமது அறிவாற்றலை தூய்மைப்படுத்தி, அவனது படைப்புகளின் உண்மைகளையும், புனித குர்ஆனில் உள்ள உண்மைகளையும் புரிந்துகொள்ள உதவுவானாக!. ஜமாஅத் உல் சஹிஹ் அல் இஸ்லாத்தின் உங்கள் ஒவ்வொருவருக்கும் புனித குர்ஆனின் உள்ளடக்கங்களை பிரதிபலிக்க அல்லாஹ் நுண்ணறிவை வழங்குவானாக! - குர்ஆனே எல்லையற்ற அறிவின் நீரூற்றாகும் – மற்றும் அதன் தூய்மையான அடிப்படை சாராம்சத்தையும், உண்மையான விளக்கங்களையும் கொண்டு உங்கள் வாழ்க்கையையும் வரவிருக்கும் எல்லா காலத்து மக்களின் வாழ்க்கையையும் விழிப்பூட்ட முடியும். இன்ஷா அல்லாஹ்

இறுதியாக ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களுக்கு பலவேறு முறை இறங்கிய இறைவஹீ இதுவாகும் “நான்(அல்லாஹ்) என் நபியுடன் நிற்பேன் அவரை எதிர்ப்பவர்களை நானும் எதிர்ப்பேன்”

என்று எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை எச்சரிக்கின்றான். [al-Hakam, vol. 6, no. 16, April 30, 1902, p. 6–7]