கலீஃபதுல்லாஹ், கலீபத்துல் மஸீஹ் - வேறுபாடு


கலீஃபா என்று வார்த்தையை வைத்து மக்களை குழப்பும் அஹ்மதி மௌலவிகளே! கலீஃபா என்றால் யார்?

இருள் சூழும் போது நம்மிடையே தோன்றுபவர் கலீஃபதுல்லாஹ்வா அல்லது கலீஃபதுல் ரஸுலா?

ஈஸப்னு மரியத்திற்கும் (வாக்களிக்கபட்ட மஸீஹ்) எனக்கும் இடையில் எந்த நபியோ ரசூலோ கிடையாது. நன்றாக நினைவில் கொள்ளுங்கள். அவர் எனக்கு பிறகு எனது உம்மத்தில் "கலீபாவாக" இருப்பார். (திப்ரானி அல் அவ்ஸத்துஸ் ஸகீர்)

முஸ்லீம்களே! நீங்கள் மஹ்தியைக் கண்டால் அவருடைய கையில் பைஅத் செய்யுங்கள். பனி மலைகளை உங்கள் முழங்கால்களால் தவழ்ந்து செல்ல நேர்ந்தாலும் நீங்கள் அவரிடம் செல்லுங்கள். ஏனெனில் அவர் அல்லாஹ்வுடைய கலீஃபாவா இருக்கிறார்! (அபூதாவுத், பாப் ஹுருஜுல் மஹ்தி)

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் : 2:43)