பொருள் தியாகத்தை பற்றி காலத்தின் இமாம் அவர்கள்

பொருள் தியாகத்தை பற்றி காலத்தின் இமாம் ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:

நமது ஜமாத்தை (ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்) சேர்ந்த மக்கள் எப்போதும் இந்த அருளின் பக்கம் நினைவு கூற்ந்தவர்களாக இந்த தியாகத்தின் அருள்களையும் பயன்களையும் புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும். எனது சகோதரர்களே நமது மறைவானவற்றை அவனை தவிர யார் அறிந்து கொள்ள முடியும்! எனவே நாம் இந்த தியாகத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்ற முழு விழிப்புணர்வு மற்றும் உண்மையான உணர்வும் நம்மிடையே உருவாக வேண்டும். நாம் உளப்பூர்வமாக நல்ல எண்ணத்தில் இந்த தியாகத்தில் ஈடுபடுத்திக் கொண்டால் அந்த ஏக இறைவனின் அருளுக்கும் அன்பிற்கும் பாத்திரமாகலாம். இதை சொற்களால் கூறுவது கடினமான விஷயமாகும். இன்னும் சில வேளைகளில் மக்கள் பிச்சைக் காரனுக்கு பிச்சை கொடுக்கும்போது நம்மை சிலர் தொந்தரவு செய்வதிலிருந்து தவிர்க்க அல்லது குழந்தைகள் அடம்பிடிப்பதை நிறுத்தும் நோக்குடன் அவர்களுக்கு ஏதாவது ஒன்றை கொடுப்பது போல பிச்சைக் காரனுக்கு பிச்சை கொடுக்கின்றனர், ஆனால், எனது அன்புக்குரியவர்களே! நீங்கள் பிறருக்கு கொடுக்கும் போது கூட மகிச்சியுடனும் உங்கள் இதயத்தை உருக செய்யும் மன உருக்கத்துடனும் மனநிறைவுடன் இந்த உலகம் நமக்கு தற்காலிகமானது என்றும் நமக்கு நிரந்தரமான மறுமை உள்ளது என்ற உண்மையை முழுவதும் உணர்ந்தவராக கொடுங்கள். இது உங்கள் மனிதாபிமானத்தை தட்டி எழுப்பக் கூடியதாக இருக்க வேண்டும். எனவே நீங்கள் இதை உளப்பூர்வமாக புரிந்து கொண்டு ஆத்மார்த்தமாக இறைவனுக்காக இவ்வகை நற்செயல்களை செய்தால் அந்த ஏக இறைவாகிய அல்லாஹ் சுபஹானஹு தாலா அதற்கு பகரமாக அந்த அடியானை அவனது தயவாளும் கருணையாலும் சிறந்த முறையில் பொருந்தி கொள்வான். அந்த வானங்களையும் பூமியையும் உங்களை படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வை தவிர உங்களை நேசிப்பவன் யார்? இன்னும் அவன் எப்படிபட்டவன் என்றால் அனைத்தும் அழிந்தாலும் அவன் ஒருவனே நம்முடன் என்றென்றும் இருப்பான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எனது அருமையானவர்களே!.
இஸ்லாம் ((ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்) என்ற இந்த உடல் ரூஹுல் குத்தூஸினாலும் உங்கள் அனைவரின் தியாகங்களாலும் ஒளிரூட்டப்பட்டு அந்த ஒளியூட்டப்பட்ட ஒளி பாய்ந்து வெளிச்சத்தை பரப்பும் போது அதன் முன்னேற்றத்தை எவராலும் தடுக்கமுடியாது இவ்வாறு செய்வதற்கு அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் நமக்கு உதவிபுரிவனாக! ஆமீன் சும்ம அமீன் யா ரப்புல் ஆலமீன்!!