உண்மை இஸ்லாம்

இஸ்லாம் இரண்டு நிலைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது :-

ஒன்று மறைவான அம்சத்தையும், இரண்டாவதாக வெளிப்படையான நிலையையும் உள்ளடக்கியது. அதாவது முதல் நிலையை பொருத்தளவில், அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் மற்றும் அவனது திருத்தூதர் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களின் மீது ஈமான், நேசம், நம்பிக்கை மற்றும் உண்மைத் தன்மையை குறிக்கின்றது. இரண்டாவது நிலை, முதல் நிலையை வெளிப்படையாக பிரதிபலிக்கக் கூடிய, இன்னும் குறிப்பாக இதில் எந்த அளவிற்கு நாம் மதிப்பு மற்றும் பற்றுதலுடன் இருக்கின்றோம் என்பதை நமது தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற அமல்களும், மேலும் புனித திருக்குர்ஆன் கூறும் சுன்னத்துகள், ஹராம் மற்றும் ஹலால் ஆகியவற்றை பேணுவதையும் குறிக்கிறது. இங்கு நாம் உணர வேண்டிய விஷயம் என்னவென்றால் நாம் ஒரு போதும் மறைவானவற்றில் இருந்து வெளிப்படையான நிலையை பிரிக்க முடியாது. இன்னும் கூறவேண்டும் என்றால் இவ்விரண்டையும் சேர்த்துதான் முழுமையானதொரு இஸ்லாம் என்று அழைக்கப்படுகிறது

இத்துடன் எனது இந்த ஜும்ஆ குத்பாவை நிறைவு செய்கின்றேன். இன்ஷா அல்லாஹ்! அல்லாஹ் நாடினால் இதன் தொடர்ச்சியை அடுத்த வாரமும் தொடர்வேன், மேலும் அல்லாஹ் உங்களுக்கு இந்த ஜும்ஆ சொற்பொழிவை புரிந்து கொள்ளும் ஆற்றலை வழங்குவானாக.இதன் மூலம் மனித குலம் மட்டுமல்லாமல், அழகிய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லீம்களும், உண்மை இஸ்லாத்தின் மாண்பு மற்றும் மனிதகுலத்தின் மதிப்பை அறிந்து கொள்ள முடியும். நன்றாக புரிந்துகொள்ளுங்கள் .. வெறும் நாவினால் பேசுவதற்கும் அதை நடைமுறை படுத்துவதற்கும் அதிகமான வித்தியாசம் உள்ளது. ஏன் இவ்வாறு கூறுகின்றேன் என்றால் நீங்கள் உண்மையான முஸ்லீம்கள் என்று கூறினால் அந்த அழகிய இஸ்லாத்தின் மதிப்பு உங்களிடமிருந்து பிரதிபலிக்க வேண்டும் . வெறும் உதட்டளவில் நான் முஸ்லீம் அல்லது இந்த நூற்றாண்டின் கலீஃபத்துல்லாஹ்வை ஏற்றுக் கொண்டேன் என்று கூறுவதற்கு சில நொடிகள் போதும். ஆனால் அதை நடைமுறை படுத்துவதில் தான் அந்த மேலான சிறப்புள்ளது. அந்த ஏக இறைவன் உங்கள் மீது மேலான அருளை பொழிந்து இந்த நூற்றாண்டின் தூது செய்தியை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளான். மேலும் உங்களை இந்த நூற்றாண்டில் அந்த அழகிய இஸ்லாத்தை பிரதிபலிக்கும் ஆற்றலையும் ஒரு பேரருளாக வழங்கியுள்ளான். எனவே இப்போது உங்களின் கடமை நீங்கள் உங்களுடன் போராடி, உங்களுக்குள் இறைவன் நாடும் அந்த அழகிய இஸ்லாத்தை மிளிர செய்ய வேண்டும். இதன் மூலம் ஒரு உண்மையான முஸ்லீம் சகோதர, சகோதரிகளாக ஒரே அணியாக நின்று, இந்த அழகிய உண்மை இஸ்லாத்தை உலகத்தின் எல்லை வரை எட்ட வைத்து, இந்த மகிமை மிக்க இஸ்லாத்தை வெற்றியின் பக்கம் முன்னேற செய்ய வேண்டும் இன்ஷாஅல்லாஹ் ஆமீன்.

-ஜுமுஆ பேரூரை 21.01.2022-ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள்