சோதனையைக் கண்டுத் துவண்டு விடாதீர்கள் சகோதர்களே!

அல்லாஹ்வின் மஸீஹ் நமக்குக் கற்று கொடுத்ததை மறந்து விட்டோமோ?

உங்களின் ஒவ்வொரு காரியத்திலும் ஒவ்வொருக் "கஷ்ட நஷ்டங்களிலும் வேறு வழி முறைகளை நீங்கள் கடைப்பிடிப்பதற்கு முன்" உங்கள் (அறைக்) கதவை அடைத்து விட்டு, இறைவா! எங்களுக்கு வந்திருக்கும் இக்கஷ்டங்களை நீ உனது கருணையால் நீக்கியருள்வாயாக! என்று இறைவன் முன்பு சிரம்பணிய வேண்டும். இந்நிலை உங்களிடையே உருவானால் மட்டுமே நீங்கள் உண்மையாளர்களாக ஆக முடியும். அப்போதுப் "பரிசுத்த ஆவியானது" உங்களுக்கு உதவி புரியும். மேலும் மறைமுகமாக ஏதேனும் வழியும் உங்களுக்காகத் திறக்கப்படும். (நுஹ் நபியின் கப்பல்; பக்கம் - 44)

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (அல்குர்ஆன் : 3:200)

وَ لَا تَہِنُوۡا وَ لَا تَحۡزَنُوۡا وَ اَنۡتُمُ الۡاَعۡلَوۡنَ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ

நீங்கள் தளர்ச்சியடையாதீர்கள், துயரமும் அடையாதீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாயின் நீங்களே மேன்மையை அடைவீர்கள். (அல் குர்ஆன் 3:140)

யாஅல்லாஹ்! எங்களை மன்னிப்பாயாக! உன்னுடைய சோதனைகளைத் தாங்கும் சக்தியை வழங்குவாயாக! மறுப்போருக்கு மத்தியில் சிறந்த வெற்றியை வழங்குவாயாக! எங்கள் சோம்பலை நீக்கி பொறுமையைத் தந்தருள்வாயாக! உன்னையே வணங்கும் எங்களுக்கு அழகிய வணக்கஸ்தலத்தையும், அடக்கஸ்தலத்தையும் வழங்குவாயாக! இன்ஷாஅல்லாஹ் ஆமீன்