நபிமார்களின் ஜமாஅத் மற்றும் உலகியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?

ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

சோதனைகள் இறைவனால் நியமிக்கப்பட்டவரின் ஜமாத்திற்கு நிச்சயம் வருகின்றன. சோதனை வராமல் எந்த மஃமூரும் (நியமிக்கப்பட்டவர்) வரவில்லை. ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். என்னென்ன கஷ்டங்கள் எல்லாம் தரப்பட்டன. ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களுடன் எப்படி நடந்து கொள்ளப்பட்டது. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுடன் சமுதாயம் எப்படி நடந்தது? விஷயம் என்னவென்றால், இந்த எல்லா துன்பங்களுக்குப் பிறகு இறுதி முடிவு நல்லதாக அமைகிறது. இதுவே இறைவனின் நடைமுறையாகும். நபிமார்களின் ஜமாத் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, சுவையான உணவு உண்டு கொண்டு, சொகுசாக வாழ்ந்து வருமாறு செய்வது தான் அல்லாஹ்வின் நடைமுறை எனில், பிறகு மற்ற உலகியல்வாதிகளுக்கும் மூஃமின்களுக்கும் என்ன வித்தியாசம்? நிம்மதி, சொகுசுகள் நிறைந்த வாழ்வு மட்டும்தான் மூஃமின்களுக்கு இருக்கும். எந்த துன்பமும் சகிக்க வேண்டியிராது என்றால், மற்ற உலகியல்வாதிகளும் இறைவனின் ஜமாத்திற்கு வித்தியாசம் இருக்காது. புலாவ் மற்றும் நெய் சோறு உண்டு அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுவது, இறைவனுக்கு நன்றி செலுத்துவது மிகவும் எளிய காரியமாகும்.

ஒவ்வொருவரும் எந்த சிரமமுமின்றி இதனைக் கூற முடியும்? ஆனால் துன்பத்தின்போதும் அதே உள்ளத்துடன் ஹம்து கூறுவது தான் சிரமமாகும். எனவே நிம்மதியான வாழ்வு வாழும் போது இறைவனுக்கு நன்றி கூறுவது போன்று, துன்பத்தின்போதும் நன்றி கூற வேண்டும்.