அல்லாஹ்வின் கலீஃபா!

இறைவன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தவ்ராத் வேதத்தை கொடுத்து அவர்களைப் பின்பற்றி வருவதற்கு கலீபாக்களை ஏற்படுத்தினான். அவர்களின் உம்மத்தில் தாவூது அலைஹிஸ்ஸலாம், சுலைமான் அலைஹிஸ்ஸலாம், இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் முதலான "நபிமார்கள் கலீபாக்களாக தோன்றி" இறுதியில் 14ஆம் நூற்றாண்டில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் கலீபாவாக தோன்றினார்கள். அதேபோன்று அல்லாஹ் காத்தமன் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு புர்கான் வேதமான இஸ்லாத்தை கொடுத்து அவர்களைப் பின்பற்றி வருவதற்கு கலீபாக்களை ஏற்படுத்தினான். அன்னாரின் உம்மத்தில் "பனி இஸ்ராயில் நபிமார்களுக்கு ஒப்பான" "முஜத்தித் மார்கள் கலீஃபாக்களாக" தோன்றி இறுதியில் 14ஆம் நூற்றாண்டில் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மஹ்தி ஹஸ்ரத் "அஹமத் அலைஹிஸ்ஸலாம்" கலீஃபாவாக தோன்றினார்கள். இதைப் பற்றியே திருக்குர்ஆன் 24:56ல் கூறுகின்றான். (தூதன் பிப்ரவரி 1960 கொழும்பு; மலர் 34, இதழ் 2 )