மனித குலத்திற்கு மீண்டும் மிகப்பெரிய எச்சரிக்கை!

காலத்தின் இமாம் ஹஸ்ரத் முஹையூதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் மீண்டும் மனித குலத்தை எச்சரிக்கின்றார்கள்:-

நான் ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு,

எனக்கு தஹஜ்ஜுத் நேரத்தில் இறங்கிய இறைவெளிப்பாட்டைப் பற்றி நிறைய சிந்தனை செய்தேன். தொடர்ந்து நான் துஆக்கள் செய்தபின், திருக்குர்ஆனையும் ஹதீஸ்களையும் படித்த பிறகு, நான் தியானம் அதாவது திக்ருல்லாஹ் செய்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தபோது, அல்லாஹ் எனக்கு இதனை வெளிப்படுத்தி, பின்வரும் வசனத்தின் மூலம் எனக்கு புரியவைத்தான்.

நாள் :-27.03.2020

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

குல்ல ஷெய்இன் ஹாலிகுன் இல்லா வஜ்ஹ்ஹ லஹுல்-ஹுக்மு வ இலைஹி துர்ஜஊன்.

அவன் முகத்தை தவிர அனைத்தும் அழியக் கூடியவையே. தீர்ப்பு அவனுக்கே உரியது. மேலும் நீங்கள் யாவரும் அவனிடமே திரும்பப்படுவீர்கள்

அவர்களின் விளக்கம் : இந்த செய்தி என்னை நடுங்க வைத்துவிட்டது. நான், வெளிப்படையாகவே உங்களுக்குக் கூறிவிடுகிறேன், அதாவது நான் கவலை அடைந்தவனாக, எனது ஆரோக்கியத்தையும் இழந்து போனேன். எனது உடலானது அடித்து நொறுக்கப்பட்டுவிட்டதைப் போன்று உணர்ந்தேன். நான் என்னிடத்தில் இவ்வாறு கேட்டுக்கொண்டேன்: மீண்டும் என்ன நிகழப்போகின்றது; என்ன அழிவு வரப்போகின்றது.

மீண்டும் அல்லாஹ் கூறுகிறான், அவனது முகத்தைத் தவிர அனைத்தும் அழிக்கப்படும்.

இந்த எல்லா வகையானத் தீய செயல்களின் காரணமாக அல்லாஹ் எந்த அளவு கோபமாக இருக்கிறான்? என்பதை இது காட்டுகின்றது. எல்லாத் தீர்ப்புகளும் அவனது கைகளிலேயே உள்ளது. இன்னும், நீங்கள் யாவரும் அவனிடமே திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.

மனித குலத்திற்கு தீங்கு விளைவித்துக்கொண்டிருப்பவர்கள், சக மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணத்துடன் இருப்பவர்கள், அது நாடு மற்றும் உலக அளவில் இருந்தாலும், அது குடும்ப மற்றும் தனிப்பட்ட அளவில் இருப்பினும், நீங்கள் என்னென்ன வழிகளில் தீங்கு செய்கிறீர்களோ, வரவிருக்கும் அழிவு பற்றி நான் கேள்விபட்டபோது, அல்லாஹ் அனைவரையும் அழித்துவிடுவான் என்று கூறுகின்றபோது அவனது முகம் மட்டுமே எஞ்சியிருக்கப் போகின்றது. ஒருவர் (அதாவது இந்த தாழ்மையான எளியவன்) இதைப் பெற்றுக்கொண்டும், இந்த உலகத்திற்கு என்ன நேரிடப் போகின்றது என்பதை அவர் அறிந்திருக்கையில், மறுபுறமோ, பலரும் இதனை அபாயகரமானதாக எடுத்துக் கொள்ளாதவர்களாக உள்ளனர்.

இந்த பேருரை மற்றும் நான் உங்களுக்கு வழங்கியுள்ள இச் செய்திகளின் மூலம் நீங்கள் என்னை நம்பியாக வேண்டும் என்று நான் கூறிக் கொள்ளவில்லை. இதற்காக நான் உங்களிடம் எந்த ஊதியத்தையும் இழப்பீட்டையும், ஊதிய உயர்வையும் கேட்கவில்லை. நான் உங்களுக்கு இறை செய்தியை மட்டுமே தந்துகொணடிருக்கின்றேன், அதனால், நீங்கள் பச்சாதாபப்பட்டு அல்லாஹ்வின் பக்கம் முழுமையாகத் திரும்பி விடலாம் என்பதற்காக.. நம் அனைவருக்கும் பலவீனங்கள் உள்ளன. ஆகவே எல்லாம் வல்ல இறைவனின் பக்கம் திரும்பி, அவனிடம் மன்னிப்பைக் கோருங்கள். இந்த அழிவுகளை மனிதர்களாகிய நம் மீது கொண்டு வர வேண்டாம் என்று அவனிடம் மன்றாடுங்கள். அவனுடைய கோபம் நம்மீது விழுந்து விடக்கூடாது. “

அல்லாஹ்வே! உனது கோபம் எங்கள் மீது விழுந்து விட்டால், நாங்கள் மண்ணோடு மண்ணாகி விடுவோம்!”.

அல்லாஹ் நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வானாக! இன்ஷா அல்லாஹ்!