எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும் இறைதூதர்கள் தோன்றியுள்ளார்கள்:

முனீர் அஹ்மது அஸீம் (அலை)
காலத்தின் இமாம் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜிம் (அலை) அவர்களின் வழிகாட்டல்:

இறைவன் எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும் தனது இறைதூதர்களை அனுப்பியுள்ளான். எவ்வாறு, சூரியன் ஒட்டு மொத்த உலகிற்கும் ஒளியை ஏற்படுத்துவதைப் போன்றே, இறைவெளிப்பாட்டின் ஒளியானது பூமியின் எல்லை வரை இருளை நீக்கி எப்போதும் ஒளியூட்டுகின்றன. அதாவது, இப்போது ஒரு குறிப்பிட்ட மக்களிடையே இறைவெளிப்பாட்டின் ஒளியை நம்மால் காணமுடியவில்லை என்றால் அதற்காக அவர்களுக்கிடையே எந்த நபிமார்களும் தோன்றவில்லை என்று பொருளல்ல. மாறாக, இந்த மக்கள் யாவரும் தங்களது பாரம்பரிய மரபுகளையும், நம்பிக்கையையும் தங்களிடையே வைத்து கொண்டு அவர்களின் (நபிமார்கள்) செய்திகளை தங்களிடமிருந்து காணாமல் அழிந்து போகவிட்டுவிட்டனர் என்பதே உண்மையாகும். மேலும், இத்தகைய கோட்பாட்டின் அடிப்படையில்தான் எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும் இறைதூதர்கள் என்ற அடிப்படையில் அந்த ஏக இறைவன் தூதர்களையும், நபிமார்களையும், சீர்திருத்தவாதிகளையும் இன்னும் குறிப்பாக கூறினால் இந்திய நாட்டில் தோன்றிய நபிமார்களான கிருஷ்ணர்(அலை), ராமர்(அலை), மற்றும் புத்தர்(அலை) போன்ற அனைத்து இறை நேசர்களின் உண்மைத்துவமும் அமைந்துள்ளது. இன்னும் உங்களுக்கு விளக்கமாக கூறுவதென்றால் அவர்களின் வாதங்களை நிராகரிப்பது என்பது, உலகளாவிய அளவில் இறைவனுடைய இருப்பையே நிராகரிப்பதற்கு சமமாகும். ஏன் சிலரை மட்டும் ஏற்றுக்கொண்டு சிலரை நிராகரிக்கின்றார்கள்? ஏன் அனைவரும் இறைவன் புறமிருந்து வருவதாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள்? மேலும், இத்தகைய கோட்பாடுகள், எந்தவொரு பிரிவின் போதனைகளிலோ, அல்லது எந்தவொரு மார்க்கத்தின் போதனைகளிலோ காணப்படும் கருத்தானது அல்ல. இருப்பினும் இம்மக்கள் இவ்வாறு நடப்பதற்கான காரணம், இறைவெளிப்பாடுகள்யாவும் அவர்கள் பின்பற்றும் அந்தந்த குறிப்பிட்ட மார்க்கங்களின் தோற்றுனர்களுடன் நின்று போய்விட்டதாகவே பெரும்பாலான மக்கள் நம்புவதே ஆகும். இத்தகைய வெளிப்பாடுகள், ஏனைய மார்க்கங்களில் உள்ள நல்லடியார்களுக்கு அருளப்படுவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். அது எவ்வாறெனில், இவ்வுலகில் இறைவனின் இருப்பு பற்றிய சித்தாந்தத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக, மனிதகுலத்தின் நலனுக்காக அந்த மார்க்கங்களின் தோற்றுனர்கள் ஆற்றியச் சேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களையே போற்றிப்புகழ்ந்து வணங்குகின்றனர்.

-ஜுமுஆ 06.02.2015