எது மார்க்கத்தின் அருள்?

உண்மையில் இஸ்லாத்தின் வெற்றி மற்றும் அருள் என்பது கூட்டம் கூட்டமாக மக்கள் பையத் செய்வதோ அல்லது அனைத்து நாடுகளிலும் பள்ளி கட்டுவது மட்டுமா? அல்லது பல்வேறு நாடுகளின் பார்லிமென்டில் உரையாற்றுவதா!? எது மார்க்கத்தின் அருள்?

ஹஸ்ரத் மஸீஹ்(அலை) அவர்கள் நமக்கு விட்டு சென்ற போதனையை கவனமாக கேளுங்கள் சகோதரர்களே!

இறைவா! உனது அருள்களை பெற்றவர்களின் நேரான உறுதியான பாதையை எங்களுக்கு காட்டித்தருவாயாக! (திருக்குர்ஆன் 1:6-7)

இங்கு இறைவன் குறிப்பிடும் "அருள்" என்பதன் பொருள் இல்ஹாம் மற்றும் கஷ்ஃப் போன்ற இறைஞானமே ஆகும்.

சகோதரர்களே! மஸீஹ் (அலை) கூறிய "அருள்" உங்களிடம் உள்ளதா? உங்கள் தலைவர்களையும் பொறுப்பாளர்களையும் விடுங்கள் தங்கள் வாழ்க்கையை இஸ்லாத்திற்காக அர்பணிப்பதாக கூறும் உங்கள் மௌலவிகளிடம் உள்ளதா? ஏன் சிந்திக்க மறுகின்றீர்கள்?

மேலும் இதற்கு நேர் எதிர் மாறாக மஸீஹ்(அலை) கீழ் காணும் இறை வசனத்திற்கு விளக்கம் அளிக்கும்போது:-

"எங்கள் இறைவன் அல்லாஹ் எனக் கூறி, இக்கொள்கையில் நிலைத்திருப்பவர்களிடம், நீங்கள் அஞ்சவும் வேண்டாம்; கவலையடையவும் வேண்டாம்; உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைப் பற்றிய நற்செய்திகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று (கூறியவாறு வானவர்கள் இறங்குவார்கள்)". (41:31)

இது நம்பிக்கை கொண்டோருக்கு இறைஅறிவிப்பை உறுதி செய்கின்றது, என்று அன்னார் நமக்கு போதித்தது மறந்தது ஏன்?

இந்த உண்மையை ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம் கேட்டால் அவர்கள் நயவஞ்சகர்கள், பொய்யர்கள், காய்த்து போன கிளைகள் (நஊதுபில்லாஹ்)

காலத்தின் இமாமை ஏற்றுக்கொண்டதன் மூலம் நாங்கள் உறுதியாக உங்களிடம் கூறுகின்றோம் இந்த "அருள்" எங்களிடம் உள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

இதற்கு பிறகும் எங்களை பொய்யர்கள் என்று நீங்கள் கருதினால் இன்னும் உங்களிடம் இந்த அருள் உள்ளது என்று நீங்கள் ஆணித்தரமாக நம்பினால் வாருங்கள். உங்கள் மௌலவிகளுடன் இறைவனின் நீதி மன்றத்திற்கு முன் சத்தியம் செய்வோம். இன்ஷாஅல்லாஹ்!

பொய்யர்களை அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலா அழிக்கட்டும். முடியவில்லை என்றால் இறைவனின் இந்த அருளை ஏற்றுகொள்ளும் பாக்கியத்தை பெறுங்கள். இன்ஷாஅல்லாஹ்! ஆமீன்