நம்பிக்கையாளரின் சிறப்பம்சம்!

ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் போதிக்கின்றார்கள்:-

இது ஓர் அருட்கொடையாகும். அதாவது இறை நேசர்களுக்கு இறைவனது வானவர்கள் தென்படுகின்றனர். மறுமையின் வாழ்க்கை என்பது வெறும் நம்பிக்கையேயாகும். ஆனால் இறையச்சமுடைய ஒருவருக்கு மறுமையின் வாழ்க்கை இங்கேயே காட்டப்படுகிறது. அவர்களுக்கு இவ்வுலகிலேயே இறைவன் கிடைத்து விடுகின்றான். அவர்களுக்கு காட்சியளிக்கின்றான். அவர்களிடம் உரையாடுகின்றான். ஆக, இத்தகைய நிலை எவருக்கு கிடைக்கவில்லையோ அவர் மரணிப்பதும் மேலும் இங்கிருந்து சென்று விடுவதும் மிகத் தீயதாகும்.

ஒரு இறை நேசரின் கூற்று இவ்வாறு வருகிறது. அதாவது ஒருவர் தமது வாழ்நாளில் ஒரு உண்மையான கனவைக் கூட காண்பதற்கான பாக்கியத்தைப் பெறவில்லை என்றால் அவரது முடிவு அபாயகரமானதாகும். ஏனெனில் இதனை அல்லாஹ் இறையச்சமுடையவர்களின் அடையாளமாக திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான்.

அல்லாஹ்விடமிருந்து இல்ஹாம், கனவு, உரையாடுவதற்கான பாக்கியம் கிடைக்க வேண்டும். ஏனென்றால் இது நம்பிக்கையாளரின் சிறப்பம்சமாகும்.

(மல்ஃபூஸாத் :தொகுதி : 1, பக்: 12)

இந்த நூற்றாண்டின் தூது செய்தியை ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு அருளுக்குரிய மக்களுக்கும் அந்த ஏக இறைவன் அவனது மாபெரும் கருணையால் அருள்புரிவானாக ஆமீன்